செல்லக்குட்டி திரை விமர்சனம்

ரேட்டிங் 3/5

ஸ்ரீ சித்ரா பெளர்ணவி ஃபிலிம் சார்பில் வி.மணிபாய் தயாரிப்பில், சகாயநாதன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘செல்ல குட்டி’. புதுமுகங்கள் டாக்டர்.டிட்டோ மற்றும் மகேஷ் நாயகர்களாக நடித்திருக்கும் இப்படத்தில் புதுமுக நடிகைகள் தீபிக்‌ஷா, சிம்ரன் ஆகியோர் நாயகிகளாக நடித்திருக்கிறார்கள். இவர்களுடன் சாம்ஸ், ஜாங்கிரி மதுமிதா, திடியன், சாப்ளின் பாலு, மணி, லக்‌ஷ்மி, புஷ்பதா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருக்கிறார்கள்.

இப்படத்தின் பாடல்களுக்கு டி.எஸ்.முரளிதரன் இசையமைத்துள்ளார். பிரபல இசையமைப்பாளர் சிற்பி பின்னணி இசையமைத்துள்ளார். பால் லிவிங்ஸ்டன் மற்றும் பாலா பழனியப்பன் ஒளிப்பதிவு செய்திருக்கிறார்கள். ஓம்பிரகாஷ் சண்டைக்காட்சிகளை வடிவமைக்க, பாபி ஆண்டனி நடனக் காட்சிகளை வடிவமைத்துள்ளார்
“செல்ல குட்டி படத்தில் கதாநாயகி ஹோம்லியாக நன்றாக நடித்திருக்கிறார நாயகர்கள் டிட்டோ, ஸ்ரீ மகேஷ், நடித்திருக்கிறார்கள் பாடல்களும் சரி, பாடல்களை காட்சியமைத்த விதமும் சரி ரசிக்கும்படி இருந்தது.

நீண்ட நாட்களாகிறது இதுபோன்ற காதல் படங்களை பார்த்து, காதல் படங்கள் எப்போதும் ரசிக்கும்படி இருக்கும், அந்த வகையில் இந்த செல்ல குட்டி படமும் ரசிக்கும்படி இருக்கிறது. , இயக்குநர் சோகமான காட்சிகளில் பார்வையாளர்களை கண்கலங்க வைத்து விட்டார் அது தான் இயக்கம். . இயக்குநர் சகாயநாதன் சிறப்பாக இயக்கியிருக்கிறார்
அவருக்கு வாழ்த்துக்கள்

பாடல்கள் சிறப்பு, குறிப்பாக , “அவள் தொலைந்து போனாளே பாடல் அருமையான பாடல் ரசிக்க வைக்கிறது

கதை களம்

கடலூர் மாவட்டம் ஒரு கிராமத்தில் 1998 ல் பள்ளி சிறுவர்களுக்கு இடையே நடக்கும் காதல் கதையாக படம் ஆரம்பமாகிறது

சிவா, இவரின் அம்மா அப்பா இடி மின்னல் தாக்கி இறந்து விட தன் தம்பியை தாயும், தந்தையுமாக பார்த்துக் கொள்கிறார்
இவரது நண்பன் சூர்யா இவர்கள் படிக்கும் பள்ளியில் செந்தா, காயத்ரி, சுப்பராயன், பூமி, என்ற நண்பர்கள்
பள்ளி வாழ்க்கை ஜாலியாக போகிறது படம் பார்ப்பவர்களுக்கு சந்தோஷமாக இருக்கிறது

சிவா வின் கவிதை அவர் வரையும் ஓவியம் கண்டு செந்தா, பாராட்டுகிறார் இதனால் சிவா, செந்தா, தன்னை காதலிக்கிறார் என்று அவர் மீது மையம் கொள்கிறார்
ஒரு தலையாக…

ஆனால் செந்தாவின், பார்வை சூர்யாவின் மீது ஒரு கட்டத்தில் செந்தா, தன்னை காதலிக்கவில்லை என்று சிவா அறிந்ததும் அவன் மீது பைத்தியம் ஆகிறான்

நண்பனுக்காக சூர்யா, தூது போகிறான் அப்போது செந்தா நான் உன்னைத்தான் விரும்புகிறேன் என்று சொல்கிறார் குழப்பத்தில் சூர்யா என்ன செய்வது என்று தெரியாமல் விழிக்கிறான்

சூர்யாவின் வீட்டில் செந்தாவுக்கும், சூர்யாவிற்கும், திருமண ஏற்பாடு நடக்கிறது.

நண்பனுக்காக சூர்யா, செந்தாவின் காதலை ஏற்க மறுக்கிறார்

இப்போது சூர்யாவிற்கும், செந்தாவுக்கும், திருமணம் என்று அறிகிறான் சிவா இதனால் நண்பன் மீது ஆத்திரம் அடைகிறான்

ஆனால் சூர்யாவோ நண்பன் காதலித்த பெண்ணை நான் திருமணம் செய்து கொள்ள முடியாது என்று மறுத்து விட செந்தாவுக்கு, வேறு ஒருவருடன் திருமணம் நடக்கிறது அதன் பின் என்ன நடந்தது ?

சிவா செந்தா வை மறந்ததானா? சூர்யா என்ன ஆனார்?
செந்தா அடுத்தவன் மனைவி ஆனால் அவர் வாழ்க்கையில் என்ன நடந்தது? இதுதான் இந்த படத்தின் கதைக்களம்!

சூர்யா வாக நடித்திருக்கும் டிட்டோ

சூரியாவாக நடித்திருக்கும் டிக்டோ ,நடிப்பு சூப்பராக இருக்கிறது கதாபாத்திரமும் நன்றாக இருக்கிறது நண்பனுக்காக அவர் விட்டுக் கொடுக்கும் அந்த மனோபாவம் ரசிக்க வைக்கிறது இவர் இதற்கு முன் மூன்று படங்களில் நடித்திருக்கிறார் அந்த நடிப்பின் அனுபவம்
நன்றாகவே தெரிகிறது

நடன காட்சி, சோக காட்சி, என எல்லாமே ரசிக்க வைக்கிறது இந்த படத்தில் முதல் கவனம் பெறுகிறார்

சிவாவாக நடித்திருக்கிறார் ஸ்ரீ மகேஷ்

ஸ்ரீ மகேஷ் இவர்தான் சிவா என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் செந்தாவை ஒருதலையாய் காதல் கொண்டு பைத்தியமாய் திரியும் நல்ல நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார் தனக்கு கிடைக்காத செந்தா வேறு யாருக்கும் கிடைக்கக்கூடாது என்று இவர் செய்யக்கூடாத செயலை செய்து செந்தாவிடமும், சூர்யாவிடமும், கெட்ட பெயரை வாங்கிக் கொள்கிறார்
படம் பார்க்கும் நமக்கும் அவரை வெறுக்க வைக்கிறது கிளைமாக்ஸ் ல் நல்லவராக காட்டியிருந்தால் இன்னும் கொஞ்சம் சிறப்பாக இருந்திருக்கும்.

மற்ற கலைஞர்கள்

காமெடி க்கு சுப்பராயன் பூமி, என்ற இரண்டு கதாபாத்திரங்கள் சிரிக்க வைக்க முயல்கிறார்கள்
ஓகே ஓகே மதுமிதா கரஸ்பாண்டாக வருகிறார் சாங்ஸ் கல்லூரி ஆசிரியராக வருகிறார் இவர்களும் வசந்த் மட்டும் பேசி விட்டு போகிறார்கள் அடுத்து….

அடுத்து செந்தாவின் தந்தையாக சிந்து நதி பூவே” படத்தை இயக்கிய இயக்குனர் நடித்திருக்கிறார் அவர் நடிப்பு மிக எதார்த்தமாக இருக்கிறது

தயாரிப்பாளர் @நடிகர்

சூர்யாவின் அண்ணனாக தயாரிப்பாளர் மணி பாய் நடித்திருக்கிறார் சண்டைக்காட்சிகளில் வெளுத்து வாங்குகிறார் தம்பிக்காக என்ன வேண்டுமானாலும் செய்யும் கேரக்டர் நன்றாக இருக்கிறது சூர்யா அண்ணியாக தயாரிப்பாளர்
மனைவியாக தயாரிப்பாளர் மனைவியும் நடித்திருக்கிறார் இவர் வரும் காட்சிகள் நன்றாக இருக்கிறது
மணி பாய் தன்னுடைய தம்பி சூர்யா, செந்தாவுடன் திருமணம் செய்ய மறுக்கும் காட்சியில் அதிர்ச்சி அடைகிறார் எப்படியாவது இருவரையும் சேர்த்து வைக்க துடிக்கிறார் சூர்யாவை கல்லூரியில் ஓட்டு போடாததுக்காக அடித்தவனை போட்டு துவம்சம் செய்கிறார் இப்படி மணி பாய்
எல்லா காட்சிகளிலும் சிறப்பாக நடித்திருக்கிறார். ஒரு நல்ல கதையை தேர்வு செய்து படமாக எடுத்திருக்கிறார் அவர் முயற்சிக்கு வாழ்த்துக்கள்

நாயகி தீப்ஷிகா

படத்தின் மைய புள்ளி செந்தா, அழகான முகம், கலையான பார்வை, ஸ்டைலாக
கூந்தலை ஒதுக்கி யோசிக்கும் நடிப்பு என அழகு புயலாக வருகிறார் “தீப்ஷிகா” நடிப்பு நன்றாக இருக்கிறது கிளைமாக்ஸ் காட்சியில் பரிதாபத்தை அள்ளிக் கொண்டு போகிறார்

ஒளிப்பதிவு, படத்தொகுப்பு, சன்டை பயிற்சியாளர், நடனம்

படத்தின் ஒளிப்பதிவு கடலூர் மாவட்டத்தில் பச்சை பசேல் என்ற அழகையும் பாடல் காட்சிகளில் சூப்பரான லொகேஷன்களையும் அள்ளிக் கொண்டு வந்திருக்கிறது
காதல் காட்சிகளிலும் சோக காட்சிகளிலும் லைட்டிங் சூப்பராக இருக்கிறது பசுமையான ஒளிப்பதிவு பார்த்துக் கொண்டே இருக்கலாம் ஒளிப்பதிவு செய்துள்ளனர் பவுல் லிவிங்ஸ்டன் மற்றும் பால பழனியப்பன் இருவருக்கும் வாழ்த்துக்கள்

படத்தின் எடிட்டிங் காட்சி கட்சிதமாக இருக்கிறது படத்தொகுப்பு விறுவிறுப்பாக இருக்கிறது படத்துக்கு தேவையில்லாத காட்சிகளை நீக்கி கச்சிதமாக படத்தை எடிட்டிங் செய்திருக்கிறார் எடிட்டர் டி எஸ் முரளி இசையமைத்திருக்கிறார் பாடல்கள் இனிமையாக இருக்கிறது கண்டேன் மழை” என்ற பாடல் செம மெலோடி

அடுத்து தொலைந்து போனாளே” என்ற சோகப்பாடல் மனதுக்குள் சிம்மாசனம் போட்டு உட்கார்ந்து கொள்கிறது

புன்னகையில் பூ பூக்கும்” என்ற பாடலும் மெலோடியில் அருமையாக இருக்கிறது இசையமைப்பாளர் நம்மோடு இல்லாத மிகப்பெரிய குறை!

பின்னனி இசை சிற்பி அருமையாக இசைத்து இருக்கிறார் அவருக்கு நமது வாழ்த்துக்கள்

ஓம் பிரகாஷ் சண்டை பயிற்சி அமைத்திருக்கிறார் இரண்டு சண்டை காட்சிகளும் செம விறுவிறுப்பாக இருக்கிறது

நடன காட்சிகள் சிறப்பாக இருக்கிறது
பாபி ஆண்டனி ஒரு பாட்டுக்கு குத்தாட்டம் போட்டு இருக்கிறார் மெலோடி கானா பாடல்கள் நன்றாக நடனம் அமைத்திருக்கிறார்

இயக்குனர் சிறப்பான இயக்கம் பாராட்டுக்கள்

இந்த படத்தை இயக்கியிருப்பவர் சகாய நாதன்

எதார்த்தமான, ஒரு தமிழ் சினிமாவை தரமாக கொடுத்திருக்கிறார் பள்ளியில் நடக்கும் அந்த காதல் காட்சிகள் ஆகட்டும் கல்லூரியில் நடக்கும் காதல் காட்சிகளும் கிராமத்தில் நடக்கும் காட்சிகளும் நிஜத்தில் பார்ப்பது போல இருந்தது பெண்ணை பெற்றவர்கள் அக்கம் பக்கத்தினர் கேலிக்கும் கிண்டலுக்கும் ஆளாகும்போது காதலை யார் ஏற்பார்கள் ?என்ற கருத்தில் சொல்லும் பொழுது சிறப்பாக சொல்லியிருக்கிறார்

சிவா கதாபாத்திரம் அம்மா அப்பா இல்லாததால் அவன் பொறுக்கி ஆகி விட்டான் என்று காட்டி இருக்க வேண்டாம் அவனும் படித்து முன்னுக்கு வந்து செந்தாவை ,வாழ்த்தி இருக்கலாமே

சூரிய கதாபாத்திரம் வடிவமைத்திருப்பது நன்றாக இருக்கிறது நண்பனுக்காக காதலை விட்டுக் கொடுப்பது காதலியிடம் நண்பனுக்காக தூது போவது கடைசியில் நண்பன் துரோகி என்று அவனை வெளுத்து வாங்குவது இப்படி எல்லா காட்சிகளிலும் சூர்யா நம் கவனம் பெறுகிறார்

செந்தாவின் அம்மா, அப்பா, நடிப்பு இயல்பாக இருக்கிறது

மொத்தத்தில் இந்த செல்ல குட்டி “வெல்ல கட்டியாக” இனிக்கிறது.

கிராமத்துக் காதலை எதார்த்தமாக சொல்லி நம் மனதில் இடம் பிடிக்கிறார் இயக்குனர்

தரமான படைப்பு ஆபாசமில்லாத நல்ல காதல் கதை அனைவரும் பார்க்க வேண்டிய ஒரு அற்புதமான படைப்பு

மக்கள் தொடர்பாளர் கார்த்திக்

இந்த படத்தை நல்ல முறையில் மக்களிடம் கொண்டு சேர்த்து இருக்கிறார் அவருக்கு நமது வாழ்த்துக்கள்

டெக்னீஷியன்கள்

Director: Sagayanathan
Music Director : T.S. Muralidharan
Background Music: Sirpy
Producer : V. Manibhai
Sri Chitra Pournami Film
Casting :
Dr.Ditto
Magesh
Deepshika
Simran
Chaams
Madhumitha
Thidiyan
Chaplin Sundar
Mani
Lakshmi
Pushpatha
Cinematography: Paul Livingston & Bala Palaniyappan‌‌. : Stunt Master : Om Prakash (yathisai)
Dance : Bobby Antony

அனைவருக்கும் வாழ்த்துக்கள் தமிழ் சினிமாவில் தரமான படமாக வந்திருக்கும் செல்ல குட்டி வெற்றியடைய கிளாசிக் சினிமா வாழ்த்துகிறது 🙏