ரஜினிகாந்த்,மஞ்சு வாரியர்,அமிதாப் பச்சன்,ஃபஹத் ஃபாசில் நடிப்பில் உருவாகியுள்ள படம் வேட்டையன் இந்த படத்தின் விமர்சனம் பார்க்கலாம் வாங்க
தாமதமான நீதி மறுக்கப்பட்ட நீதி என நம்புபவர் எஸ்.பி. அதியன்(ரஜினிகாந்த்). மனித உரிமைகள் முக்கியம் என சொல்லும் நீதிபதி சத்யதேவ்(அமித்பா பச்சன்) என்கவுன்ட்டருக்கு எதிரானவர். இந்த இரண்டு துருவங்களுக்கு இடையேயான கருத்தில் எது வெற்றி பெற்றது !
என்பது தான் கதை களம்
கதை களம்
அரசு பள்ளியில் பணி புரியும் துஷாரா(சந்தியா) ஏழை மாணவர்கள் படித்து முன்னேற வேண்டும் என்று ஆசைப்படுகிறார் ஆனால் அவர் சமூக விரோதிகளால் கொலை செய்யப்படுகிறார் அந்த கொலையை செய்தது யார்?
ரஜினிகாந்த் ஒரு போலீஸ்காரராக என்கவுன்டர் அதிகாரியாக நடித்துள்ளார்.
சமுதாயத்துக்கு நல்லது செய்ய நினைக்கிறார் துஷாரா என்று சூப்பர் ஸ்டாரும் அவர் மனைவி மஞ்சு வாரியாரின் ஆரும் துஷாராவை பாராட்டுகிறார்கள்
ஆனால் துஷாரா எதிர்பாராத விதமாக கொலை செய்யப்படுகிறார்
அவரை கொலை செய்தது யார் ?
,
குணா தான் குற்றவாளி என ரஜினி என் கவுண்ட்டர் செய்கிறார் ஒரு கட்டத்தில் குணா நல்லவர் என்று தெரிகிறது
துஷாரா கொலை வழக்கில்குணாவை மாட்ட வைத்தது யார்? அப்பாவியான குணாவை ரஜினிகாந்த் என்கவுண்டர் செய்தது ஏன்?
இதை ஆட்டி வைக்கும் அந்த வில்லன் யார்? என்பதை கண்டுபிடிக்கும் துப்பறியும் இன்வெஸ்டிகேஷன் படமாக வந்திருக்கிறது வேட்டையன்.

: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் என்கவுண்டர் ஸ்பெஷலிஷ்டாக கலக்கினாரா?
ரஜினி மொமண்ட் என்பது படத்தின் வெற்றிக்கு முக்கியத்துவம் என்பதை உணர்ந்து சப்வே பைட், லிப்ட் சீன் என பல காட்சிகள் கைத்தட்ட வைக்கிறது
ரஜினியின் ரசிகர்களுக்கு தேவையான விஷயத்தையும் கலந்து ஒரு பக்கா படத்தை கொடுத்திருக்கிறார் இயக்குநர் .
மேலும் ரஜினி கடைசியாக ஹீரோவாக நடித்த ஜெயிலர் படம் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தது. அந்தவகையில் வேட்டையனும் மெகா ஹிட்டாகிவிடும்.
தனக்கு குழந்தை இல்லை என்று சொல்லும் போது துஷாராவை எண்ணி கலங்கும் போதும்,
.
பகத் பாசில் மகனா என்று பிணவறையில் கேட்கும் போது தலையாட்டி கண்கலங்கி நிற்பது,
எந்த பொண்டாட்டி புருஷன் சொல்லி கேட்டிருக்கா, என்று வில்லன் கும்பல் இடம் சொல்லும் போது அசத்தியிருக்கிறார் சூப்பர் ஸ்டார்.
கிளைமாக்ஸில் ராணா டகுபதி இடம் பேசும் அந்த வசனம் கைதட்டல்.

படம் முதல் பாதி கிரைம் திரில்லர் போல் செல்கிறது அடுத்து, அப்படியே சமூக பிரச்சினையை எடுத்த விதம், அதிலும் ரஜினி போல் ஒரு உச்ச நட்சத்திரம் மூலம் இந்த கதையை சொல்ல வைத்தது சபாஷ்.
*அமிதாப்,துஸாரா, பகத் பாசில்,மஞ்சு வாரியர்,கிஷோர் ரித்விகா சிங் , ரோகிணி*
அரசு பள்ளி ஆசிரியையான சந்தியாவின்(துஷாரா விஜயன்)
நடிப்பு படத்திற்கு மிகப்பெரிய பலம் அந்த கதாபாத்திரமாக மாறி இருக்கிறார் அரசு பள்ளி ஆசிரியராக கருணையுள்ள மனம் கொண்ட துசாராவை சமூக விரோதிகள் கொலை செய்யும் போது மனசு பதறுகிறது
இந்த படத்தில் சூப்பர் ஸ்டார்க்கு அடுத்த இடத்தில் துஷாராக இடம் பெறுகிறார்

படத்தின் மிகப்பெரிய பலம். பேட்டரியாக ஜொலிக்கிறார் ஃபஹத் ஃபாசில்.
தொழில்நுட்ப விஷயங்களில் உதவி செய்ய திருடனான பேட்டரியை தன்னுடன் வைத்துக் கொள்கிறார் அதியன். ஹார்லிக்ஸ் சாப்பிடும் பழக்கம் உள்ள பேட்டரி ரசிகர்களை சிரிக்க வைப்பதுடன் பல காட்சிகளுக்கு உயிர் கொடுத்திருக்கிறார்.
போலீஸ் ஆவதற்கு மூளை தேவையில்லை திருடனுக்கு தான் மூளை தேவை என்று சொல்லும் காட்சி சூப்பர்!
இப்படி பல இடங்களில் ரசிக்க வைக்கிறது அவர் கதாபாத்திரம் சிறப்பாக நடித்திருக்கிறார் பகத்
அமிதாப் பச்சன் தனித்து தெரிகிறார். ஆனால் அமிதாப் பச்சன், ரஜினி சேர்ந்து வரும்போது யார் மாஸ் என்று கேட்க தூண்டுகிறது இரண்டு சிங்கங்கள் ஒரே பிரேமில் பார்க்கும் போது பிரமிப்பு!
அதியன் ரஜினியின் மனைவியாக நடித்திருக்கிறார் மஞ்சு வாரியர். யூடியூப் சேனல் நடத்தும் மஞ்சுவுக்கு படத்தில் பெரிதாக வேலை இல்லை. ஆனால் ஒரு மாஸ் காட்சியில் தூள் கிளப்பியிருக்கிறார்
வில்லன் கும்பலை துப்பாக்கி எடுத்து விரட்டி அடித்துவிட்டு டயலாக் பேசி கைதட்டல் வாங்குகிறார்
ஓப்பனிங் சாங் மாஸ் காட்டுகிறார்.
கல்வியை வைத்து காசு பார்க்கும் தொழில் அதிபரான ராணா படத்தின் இறுதியில் வருகிறார்.
அவர் வரும் காட்சிகள் சிங்கத்தின் கர்ஜனை கம்பீரமான பார்வை பணக்கார தோற்றம் ஏழை மக்களை ஏமாற்றி, அதில் துட்டு சேர்க்க கூடிய மனம் கொண்ட கதாபாத்திரத்தில் மிரட்டி இருக்கிறார்
ரஜினியிடம் என்னை உன்னால் ஒன்றும் செய்ய முடியாது என்று கொக்கரிக்கும் போது ,என் லிப்ட்டை விட்டு கூட உன்னால் என்னை வெளியே அழைத்துச் செல்ல முடியாது என்று சொல்லும் பொழுது, அவர் எஜுகேஷனல் மேடையில் பேசும்போது,
பலத்த கைதட்டல் சரியான வில்லத்தனம் சரியான தேர்வு
அபிராமி ராணா டகுபதிக்கு உதவும் கதாபாத்திரம் கோட்டு சூட்டு என மிடுக்கோடு வந்து சரியான பார்வையாலும், செயலாலும் மிரட்டுகிறார். சரியான தேர்வு
கிஷோர் துஷாராவின் கொலை வழக்கை கண்டுபிடிக்க வந்து கடைசியில் அவரும் ஒரு மோசமான கதாபாத்திரமாக சித்தரிக்கப்பட்டிருக்கிறது.
அவர் நடிப்பு நன்றாக இருக்கிறது
அடுத்து ரித்விகா சிங் அவரும் ஒரு போலீஸ் அதிகாரியாக நடித்திருக்கிறார் பகத் பாஸில் கிண்டல் செய்யும்ரசித்தபடி மற்ற காட்சிகளில் மிடுக்காக நடித்திருக்கிறார் சண்டைக்காட்சியில் அசத்தி இருக்கிறார்
ரோகிணி டிஎஸ்பியாக வருகிறார் ராணா டகுபதி வீழ்த்தும் கதாபாத்திரத்தில் இவர் பங்கும் அருமை

மிரட்டல் இசை தெரிக்க விட்ட அனிருத்
அனிருத்தின் பி.ஜி.எம். பெரிய பலம். நான்கு பாடல்களில் மனசிலாயோ மற்றும் ஹன்ட்டர் வந்தார் பாடல்கள் மட்டுமே மனசில் நிற்கிறது.
பின்னணி இசை மிரட்டி இருக்கிறார் ரஜினி வரும் போதெல்லாம் தீம் மியூசிக் போட்டு அவரை இன்னும் அச்சத்தை கொண்டு சென்றுள்ளார் அனிருத் தவிர இந்த படத்திற்கு வேறு யாராலும் சிறப்பான விஷயத்தை தந்திருக்க முடியாது அப்படி ஒரு இசையை கொடுத்து படத்தை தூக்கி நிறுத்திருக்கிறார் வாழ்த்துக்கள் அனிருத்
ஒளிப்பதிவு, படத்தொகுப்பு, மற்றும் சன்டை பயிற்சியாளர்
கதிர் அவர்களின் ஒளிப்பதிவு கன்னியாகுமரியை அழகாக காட்டி இருக்கிறது
மற்றும் ஆந்திரா, டெல்லி ,என எல்லா இடங்களிலும் பளிச்சென்று கேமரா மூலம் படத்திற்கு உதவி இருக்கிறது
அடுத்து படத்தொகுப்பாளர்
பிலோமின் ராஜ் கச்சிதமான படத்தொகுப்பு
எந்த இடத்திலும் படத்தின் விறுவிறுப்பு குறையாமல் படத்தை செதுக்கியிருக்கிறார்
சண்டை பயிற்சியாளர் அன்பறிவு
சூப்பர் ஸ்டார் ரசிகர்களுக்கு செம தீனி கொடுத்து இருக்கிறார் மூன்று சண்டை காட்சிகளும் முத்தாய்ப்பாக இருக்கிறது
இயக்குனர் சமுதாய பார்வை
அது எப்படி என்கவுன்ட்டரில் பணக்காரர்கள் அல்ல மாறாக ஏழைகள் தான் குறி வைக்கப்படுகிறார்கள் என கேள்வி கேட்டிருக்கிறார் ஞானவேல். கல்வி முறையில் இருக்கும் ஓட்டைகள் குறித்து கேள்வி கேட்டிருக்கிறார்.
சுவாரஸ்யமான கதையை கையில் எடுத்திருக்கிறார் ஞானவேல். ஆனால் சூப்பர் ஸ்டார் எனும் பெரும் சக்தி அதை மேலும் மாசாக கட்டி கைதட்டல் வாங்குகிறார்
முதல் பாதியை விறுவிறுப்பாக கிரைம் திருவிழா பாணியில் கொண்டு சென்றது ரசிக்க வைத்தது

துஷாராவை கொன்றது குணா தான் என்ற கோணத்தில் கதையை சென்று இண்டர் வெல் பிளாக் கில் ஒரு திருப்பத்தை ஏற்படுத்துகிறார் இடைவேளைக்கு பிறகு கதை செல்லும் பாணி விவரிக்க முடியாத அளவிற்கு இருந்தாலும் சமுதாயப் பார்வையில் அவர் வெற்றி பெற்று இருக்கிறார். அரசு பள்ளியில் படிக்கும் மக்களும் மருத்துவராக வேண்டும் இன்ஜினியராக வேண்டும் என்று அவரின் கனவு சூப்பர் ஸ்டார் என்ற மாபெரும் சக்தியின் மூலம் சொல்லப்பட்டிருப்பதால் நாடு முழுவதும் இதை விவாதமாக எடுத்து இனி பேசுவார்கள் ஏழை மக்களின் கல்வி உயர் கல்விக்கு தடையாக இருப்பது தனியார் நடத்தி வரும் நீட் சென்டர் போல நாட் சென்டர் என்று சொல்லி படத்தை தூக்கி நிறுத்தி இருக்கிறார் இயக்குனர்.
ஜெய் பீம் படம் பார்த்துவிட்டு மனசு உருகி வந்தவர்கள் இந்த படம் பார்த்துவிட்டு நல்ல கருத்தை சொல்லி இருக்கிறார் இயக்குனர் என்று பாராட்டி விட்டு வருவார்கள் ஒவ்வொரு இயக்குனருக்கும் இது போல சமுதாய பார்வையோடு சமுதாயம் நன்றாக இருக்க வேண்டும் என்ற கவனத்தோடு கதை வசனம் எழுதினால் சமுதாயம் முற்படும் சினிமாவும் தழைக்கும்
கிளைமாக்ஸ் காட்சியில் செம்மரக் கடத்தலில் அப்பாவி மக்கள் கொல்லப்படுவதை அப்படியே போகிற போக்கில் சொல்லி இருக்கிறார்
மற்ற டெக்னீசியன் கள் பங்களிப்பு
தயாரிப்பாளர்
Lyca Productions
Subaskaran Presents
ஒரு நல்ல படத்தை சமுதாயத்துக்கு தேவையான கருத்துள்ள படமாக கொடுத்ததற்காக தயாரிப்பாளரை பாராட்டலாம்
Screenplay: B Kiruthika
Art Director: Sakthee Venkatraj M.
Choreographer: Dinesh
Makeup: Banu, Pattanam Rasheed, Jeetendra Sawant
Costume Design: Perumal Selvam, Anu Vardhan, Veera Kapur Ee, Dinesh Manoharan, Liji Preman
Stills: S.R Murugan
Production Controller (Tharu Creations): Kimberly Senthil
Co Directors: Mahendran, Senthilkumar Kesavan
Casting Director:
Surendra Thanu Murthy
Project Coordination: Whale Tale
First Associate Directors – R. Manikandan Valarmathi, Arunprakash Samiaiah
Associate Directors – Muhammed Yasar Arafath, Manasvini Boovarahan, Saroja
மக்கள் தொடர்பாளர் ரியாஸ் அஹமது அவர்கள் படத்தை மக்களிடம் கொண்டு சேர்த்தமைக்கு அவருக்கு வாழ்த்துக்கள்
இப்படி அனைவரும் பங்களிப்பு படத்திற்கு மிக அற்புதமாக வந்திருக்கிறது அனைவருக்கும் பாராட்டுக்கள் ஒரு வெற்றி படத்தை தயாரிப்பாளரும், இயக்குனரும் கொடுத்ததற்காக பாராட்டலாம்.நல்ல கதையை தேர்வு செய்து நடித்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுக்கு வாழ்த்துக்கள் வேட்டையன் ரசிகர்களின் மனதை வேட்டையாடு வான்
