மலைகளின் இளவரசி படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு

சென்னையில் உள்ள நுங்கம்பாக்கம் 4 பிரேம் திரையரங்கில் மலைகளின் இளவரசி இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது விழாவில் விநியோகிஸ்தர் சங்கத் தலைவருமான கே ராஜன் மற்றும் பயில்வான் ரங்கநாதன், படத்தின் இயக்குனர் விஸ்வநாத்
நாயகி ராஷ்மிகா, வில்லனாக நடித்த ஹரிகேசவ பெருமாள், இயக்குனர் அனு மோகன், இசை அமைத்துள்ளார் சங்க தலைவர் தீனா,, இசையமைப்பாளர் சௌமியன் பலர் கலந்து கொண்டனர்

மற்றும் மக்கள் தொடர்பாளர் பாலன் அவர்கள் அனைவரையும் வரவேற்று பேசினார்

இவ்விழாவில் பேசிய பயில்வான் ரங்கநாதன்…..

நான் வருவதற்கு கொஞ்சம் தாமதம் ஆகிவிட்டது இந்த படம் ஒரு முக்கோண காதல் கதை என்று சொன்னார்கள் படத்தின் நாயகன் ஐடி கம்பெனியில் வேலை செய்கிறார் ஐடி கம்பெனியில் வேலை செய்பவர்கள் எல்லோரும் மர்டர் சம்பந்தமான கதைகளை தான் தேர்வு செய்து நடிப்பார்கள் இயக்குவார்கள் இவர் முக்கோண காதல் கதையை எடுத்திருக்கிறார் படம் நன்றாக வர வேண்டும் என்று வாழ்த்துகிறேன் இப்பொழுது சினிமாவில் புரோக்கர் கூட்டம் அதிகமாகி விட்டது அதனால் சின்ன பட்ஜெட் படங்களை நாங்கள் ரிலீஸ் செய்து தருகிறோம் என்று நிறைய பேர் ஏமாற்றுகிறார்கள். விநியோக ஸ்தர் சங்கம் தலையிட்டு படத்தைரிலீஸ் செய்ய வேண்டும் என்று ராஜன் அவர்களை பார்த்து கேட்டுக்கொண்டார்

அடுத்து பேசிய தயாரிப்பாளர் கே.ராஜன்

சின்ன பட்ஜெட் படங்கள் வெளியாகி வெற்றி பெற்றால் மீண்டும் அவர்கள் சினிமா தான் எடுக்க வருவார்கள் பெரிய படங்கள் வெற்றி பெற்றால் அவர்கள் பணத்தை வேறுமுதலீடு செய்து விடுவார்கள் இந்த மலைகளின் இளவரசி தமிழ் டைட்டில் கேட்பதற்கு நன்றாக இருக்கிறது பாடல்கள் நன்றாக இருந்தது

நடிகரும் இயக்குனருமான விசுவநாத்துக்கு வாழ்த்துக்கள் என்று கூறினார்

அடுத்து இசையமைப்பாளர் சௌமியன் பேசும்பொழுது இந்த படத்திற்கு இசையமைத்தது மறக்க முடியாத அனுபவம் பத்திரிகையாளர்கள் தான் கொண்டு போய் இந்த படத்தை சேர்க்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்

நாயகி ராஸ்மிகா பேசும் பொழுது இந்த படம் கொடைக்கானல் படமாக்கப்பட்டது எனக்கு வீடு ரோல் கொடுத்து நன்றாக பார்த்துக் கொண்டார்கள் அனைவருக்கும் நன்றி என்று கூறினார்

நாயகனும் படத்தின் இயக்குனருமான விஸ்வநாத் பேசும்பொழுது

இந்த படம் மற்றும் இல்லாமல் இன்னும் மூன்று படங்களை தயாரித்துக் கொண்டிருக்கிறேன் அடுத்த படம் காந்தா இன்ஸ்டாகிராம் என்ற படத்தை எடுத்து விட்டோம் எனக்கு பக்கத்துணையாக ஹரிகேசவப் பெருமாள் தான் இருக்கிறார். சின்ன பட்ஜெட் படங்கள் வெற்றியடைய பத்திரிகையாளர்கள் உதவ வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

அடுத்து தமிழ் ஆசிரியர் பேசும் பொழுது படத்தை வாழ்த்தி பேசினார்

அடுத்து சித்தா படத்தில் வில்லனாக நடித்த தர்ஷன் அவர்கள் பேசும் பொழுது இந்த படம் எனக்கு மிகவும் பிடித்த படம் படம் வெற்றி அடைய வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்

அடுத்து மக்கள் தொடர்பாளர் பாலன் அவர்கள் பேசும்போது அனுமோகன்

அவர்கள் என்னுடைய படம் என்று பவானி ஊராட்சி கோட்டையில் நடந்தது
அழைத்தேன் வந்து நடித்திக் கொடுத்துவிட்டு போனார் இசையமைப்பாளர் தீனா அவர்கள் எப்பொழுது கூப்பிட்டாலும் வந்து விடுவார். எனவே இது போன்ற சின்ன படங்கள் வெற்றியடைய வேண்டும் என்று கூறினார்

அடுத்து இசையமைப்பாளர் சங்கத் தலைவர் தீணா அவர்கள் பேசும் பொழுது

படத்தின் இசையமைப்பாளர் எனக்கு மிகவும் நெருங்கிய நண்பர் அவர் அழைத்தால் வந்தேன் இந்த படத்தின் பாடல்கள் கேட்பதற்கு இனிமையாக இருந்தது இஸ்லாம் பலருக்கும் வாழ்த்துக்கள் ஏ ஆர் ரகுமான் 10 வருட காலமாக தொலைத் தொடர்புக்கு அப்பால் இருப்பதைப் போல நான் உணர்ந்தேன் ராயன் படத்தில் ஒரு பாடல் என்னை உலுக்கி விட்டது இன்று இசையும் பாடல்களும் அதன் வரிகளும் புரியவில்லை இப்படத்தின் பாடல் வரிகளும் நன்றாக இருந்தது.

இப்படம் மிகப்பெரிய வெற்றியடையும் என்று வாழ்த்தி பேசினார்

அடுத்து பேசிய கதைஆசிரியரும் இயக்குனருமான அனு மோகன் பேசும் பொழுது படையப்பா படத்தில் பாம்பு பொந்துக்குள் கையை விட்டீர்களே கடித்ததா என்று சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இடம் நான் கேட்கும் வசனத்தை இயக்குனர் கே எஸ் ரவிக்குமார் என்னையே பேசி நடிக்க வைத்தார் இன்று வரை மிகப் பெரிய அளவில் அது பேசப்படுகிறது அதேபோல இந்த படமும் நன்றாக பேசப்படும். இன்று ஒரு படத்தை எழுத்து ரிலீஸ் செய்வதே பெரிய சாதனைதான்

இப்படம் வெற்றி பெற வாழ்த்துகிறேன் என்றார்

அனைவரும் வாழ்த்து பேசினார்கள் இப்படம் வெற்றி அடைய வேண்டும் என்று கிளாசிக் சினிமா வாழ்த்துகிறது