போகி திரை விமர்சனம்

ரேட்டிங் 4-/5

V I குளோபல் நெட்வொர்க்ஸ் பட நிறுவனம் தயாரித்திருக்கும் “போகி “ உண்மை சம்பவத்தை தழுவி எடுக்கப்பட்டுள்ள படம் வெற்றி பட்டியலில் 🌷

இந்தப் படத்தில் நபி நந்தி, சரத், லப்பர் பந்து படத்தில் சிறப்பான தோற்றத்தில் நடித்த சுவாசிகா, பூனம் கவூர், வேலாராமமூர்த்தி, சங்கிலி முருகன், மொட்டை ராஜேந்திரன், எம். எஸ்.பாஸ்கர், முரு ஸ்டார் மற்றும் பலர் நடித்திருக்கின்றனர்.

கதை களம்

சுமார் 6000 அடி உயரத்தில் எந்த தொழில்நுட்ப வளர்ச்சியும் இல்லாத மலை கிராமத்தில் நூற்றுக்கணக்கான குடும்பங்கள் வசித்து வருகின்றனர் சைக்கிள் கூட செல்ல முடியாத இந்த மக்களுக்கு கல்வியும் மருத்துவமும் கனவாக இருக்கிறது அப்படிப்பட்ட சூழ்நிலையில் நாயகன் அழகர், தனது தங்கை கவிதா மூலமாக தனது கிராமத்தின் மருத்துவ தேவையை சரி செய்ய விரும்புகிறான் சில கிலோமீட்டர் மலையில் கால்நடையாக சென்று படித்துவிட்டு வீடு திரும்பி மாநிலத்திலேயே முதல் மதிப்பெண் பெற்று சென்னை மருத்துவக் கல்லூரிக்கு செல்ல அந்த மலை கிராமமே பெரும் கனவோடு வழி அனுப்பி வைக்கிறார்கள்.

இறுதியில் கவிதா மருத்துவம் படித்து கிராம மக்களுக்கு சேவை செய்தாரா?

தான் காதலித்த திவ்யாவும், அழகரும் ஒன்று சேர்ந்தார்களா?

கவிதாவின் மருத்துவ படிப்பு அந்த மலை கிராம மக்களுக்கு பயன் தந்ததா?

பெண்களை வைத்து ஆபாச படம் எடுக்கும் அந்த கொடூர கும்பல் சட்டத்தின் பிடியில் சிக்கினார்களா?

என்பதை படம் துவங்கி கிளைமாக்ஸ் வரை விறுவிருப்பான, திரைக்கதையில் சொல்லி இருக்கிறார்கள். சமூக விழிப்புணர்வு மிக்க படமாக வந்திருக்கிறது.

இன்றைய சூழ்நிலையில் பெற்றோர்கள் பொதுமக்கள் அனைவரும் இந்த படத்தை பார்க்க வேண்டும். ஒரு நல்ல விழிப்புணர்வு மிக்க படமாக பரபரப்பாக வந்திருக்கிறது. இந்த படம் வெற்றி பட்டியலில் இடம் பிடிக்கும். கிரைம், திரில்லர் படமாக வந்துள்ளது வாழ்த்துக்கள் இயக்குனருக்கு 🌷
.
சுவாசிகா

அந்த மலைவாழ் கிராமத்தில் படு சுட்டியாக, அண்ணனுக்கு ஏற்ற தங்கையாக கவிதா என்ற கதாபாத்திரத்தில் அருமையாக நடித்திருக்கிறார். கலகலப்பான பாடல் காட்சியில் சென்னை வந்த பிறகு மருத்துவக் கல்லூரியில் படிக்கும் பொறுப்பான மாணவியாகவும், நல்ல நடிப்பை வழங்கி இருக்கிறார். அவர் வரும் காட்சிகள் சிறப்பாக இருக்கிறது.

வேலா ராமமூர்த்தி

வேள்பாரி என்ற கம்பீரமான போலீஸ் அதிகாரியாக நியாயத்தை நிலைநாட்டும் வேடத்தில் சிறப்பான பங்களிப்பை கொடுத்திருக்கிறார். இதுவரையில் இவர் போலீஸ் அதிகாரியாக நடிக்க வில்லை இந்த படம் நிச்சயமாக இவருக்கு பொருந்தி இருக்கிறது

மற்றும் நபி நந்தி, வாட்டசாட்டமான கவிதாவின் அண்ணனாக அழகாக திவ்யாவின் காதலராக நல்ல நடிப்பை வழங்கி இருக்கிறார்.

ஒரு ஹீரோவுக்கு உண்டான அத்தனை அம்சமும் பொருந்தி இருக்கிறது. ஆக்ஷன் காட்சிகளில் வெளுத்து வாங்குகிறார். தங்கைக்காக வெகுண்டு எழுந்து பழி வாங்கும் காட்சிகளில் ஆக்ரோசம் தெரிகிறது.

மற்றும் சரத், நாயகனுடன் முழுக்க வந்து உதவி செய்கிறார் அவர் நடிப்பு நன்றாக இருக்கிறது.

மொட்டை ராஜேந்திரன்

இதுவரை பார்த்திடாத ஒரு புதிய கெட்டப்பில் மிரட்டுகிறார். மார்ச்சு வரியில் வேலை செய்யும் அம்மாவாசை என்ற கதாபாத்திரத்தில் பெண்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் வில்லனாக அருமையாக வில்லனாக நடித்திருக்கிறார்

மற்றும் பூனம் கவர், ஒரு பாடலுக்கு வருகிறார் கிளுகிளுப்பு ஏற்றிவிட்டு போகிறார். எம்.எஸ். பாஸ்கர் ஒரே காட்சியில் வந்தாலும் கலகலப்பை ஏற்படுத்துகிறார். சங்கிலி முருகன், அவர்கள் சுவாசிகா படிக்கும் பள்ளியில் தலைமை ஆசிரியராக வந்து தன் மாணவி மாநிலத்திலேயே முதல் மார்க் எடுத்ததை கண்டு பெருமை பட்டு அவர்களுக்கு சென்னை செல்ல உதவி செய்கிறார் இவர் நடிப்பு நிறைவு ஏற்படுத்துகிறது .

மற்றும் மலேசியாவை சேர்ந்த நிறைய வில்லன்கள் இந்த படத்தில் மிரட்டி இருக்கிறார்கள்.

கவிஞர் சினேகன், ஒரு பாடலுக்கு வந்து கெத்தாக ஆடி விட்டுப் போகிறார் மலைவாழ் பகுதியைச் சேர்ந்த அந்த மக்களும் இந்த படத்தில் நடித்திருக்கிறார்கள் அவர்கள் நடிப்பு நன்றாக இருக்கிறது.

ஒளிப்பதிவாளராக– ராஜா C சேகர் பணி புரிந்து இருக்கிறார். 6500மீட்டர், உயரத்தில் உள்ள மலை கிராமத்தில் 19 நாட்கள் தங்கி இருந்த அழகாக படம் ஆக்கி இருக்கிறார் பசுமையான காட்சிகள், பார்ப்பதற்கு கண்கள் குளு குளு என்று இருக்கிறது பல கிலோமீட்டர்கள் கேமராவை சுமந்து சென்று சிரமப்பட்டு படம் ஆக்கி இருக்கிறார்

இடை வேளைக்கு பிறகு வரும் அந்த பிளாஸ்பேக் காட்சியில் கேமராமேன் கைவண்ணம் அற்புதமாக இருக்கிறது.

அதே சமயம் பாடல் காட்சியில் மலேசியாவை அருமையாக படமாக்கி இருக்கிறார். ஒளிப்பதிவு , படத்துக்கு மிகப்பெரிய பலம்

மரியா மனோகர்

இசையமைத்து இருக்கிறார் பின்னணி இசை செம்ம மிரட்டலாக இருக்கிறது. பரபரப்பான இசையை கொடுத்திருக்கிறார். பாடல்கள் எல்லாம் ரசிக்கும் வண்ணம் இருக்கிறது.

முதல் பாடல் வேகம், விறுவிறுப்பு, மலை கிராமத்தில் வாழும் அந்த குழந்தைகள் பாடும் காட்சி , பாடல்கள் அற்புதமாக இருக்கிறது இசை இந்த படத்தை தூக்கி நிறுத்தி இருக்கிறது.

பாடல்களை– சினேகன் அனுபவித்து ரசித்து, ருசித்து, எழுதி இருக்கிறார். பாடல்கள் அவ்வளவு கேட்பதற்கு இனிமையாக இருக்கிறது.

படத்தின் வசனம் எழுதி இருக்கிறார் S.T. சுரேஷ்குமார் வசனங்கள் அவ்வளவு ஷார்ப்பாக இருக்கிறது.

சுரேஷ் அர்ஸ்

படத்தொகுப்பாளரா பணி புரிந்திருக்கிறார் இடைவேளை வரை படம் பரபரவென செல்கிறது. ஒரு மணி நேரம் சென்றதே தெரியவில்லை இடைவேளைக்கு பிறகு பசுமையான மலைகளும் ,அந்த காட்சிகளும் படத்தை தூக்கி நிறுத்தி இருக்கிறது .படத்தின் எடிட்டர் படத்தின் வெற்றிக்கு உதவி செய்திருக்கிறார்.

ஆர்ட் டைரக்டராக– A. பழனிவேல்

பணி புரிந்து இருக்கிறார். நாயகனின் வீடு, திவ்யாவின் வீடு, மருத்துவமனை ,என எல்லா இடங்களிலும் ஆர்ட் டைரக்டரின் கைவண்ணம் அற்புதமாக இருக்கிறது.

சண்டைக் காட்சிகளை – அன்பறிவ், மிராக்கிள் மைக்கேல்,

அமைத்திருக்கிறார்கள் மொட்டை ராஜேந்திரன் போடும் அந்த சண்டை கட்சியும், நாயகன் எதிரிகளுடன் சண்டை போடும் அந்த சண்டை காட்சிகளும், கிளைமாக்ஸ் சண்டைக்காட்சிகளும், விறுவிறுப்பு ,
செம பரபரப்பு , சண்டை பயிற்சியாளர்களுக்கு வாழ்த்துக்கள்.

அசோக் ராஜா

நடனம் அமைத்திருக்கிறார் பூனம் கவர் வரும் காட்சியில் அந்த பாடல் காட்சி நடனம் செம சூப்பர் ! அதேபோல சினேகன் ஆடும் அந்த நடனமும் பாடலும் செம ரசிக்க வைக்கிறது.

மக்கள் தொடர்பாளர்கள் சதீஷ் &சிவா

படத்தை தயாரித்து இருக்கும் தயாரிப்பு – V i குளோபல் நெட்வொர்க்ஸ் க்கு வாழ்த்துக்கள் நல்ல ஒரு தரமான படம் கொடுத்ததற்காக

கதை, திரைக்கதை எழுதி இயக்கியுள்ளார் – S. விஜய் சேகரன்

இன்று பெண்களுக்கு ஏற்படும் ஆபத்து எந்த வகையிலும் வரலாம் என்பதை திரைக்கதை ஆக்கி, அதற்கேற்ற நடிகர் நடிகைகளை தேர்வு செய்து, நல்ல படத்தை கொடுத்திருக்கிறார்.

மலை கிராம மக்களின் வலி, வேதனையை அழகாக சொல்லி இருக்கிறார் .

ரோடு வசதி இல்லாத அந்த பாவப்பட்ட மக்கள் மருத்துவமனைக்கு செல்ல வேண்டும் என்றால் அறுபது கிலோ மீட்டர் கடந்து வர வேண்டும் அப்போது அவர்களின் உயிருக்கு ஆபத்து ஏற்படும் சூழ்நிலை உள்ளது.

என்பதை அரசு கவனத்திற்கு கொண்டு சென்றிருக்கிறார். அதேபோல மருத்துவமனையில் நடக்கும் மெகா மோசடிகளை தோலுரித்துக் காட்டுகிறார். பெண்கள் எல்லா இடத்திலும் விழிப்புணர்வோடு இருக்க வேண்டும் என்பதையும் சொல்லி இருக்கிறார். பக்கா கமர்சியல், ஆக்சன், மசாலா கிரைம், திரில்லர் படம் கொடுத்து ஒரு நல்ல வெற்றி படத்தை கொடுத்து இருக்கிறார் தயாரிப்பாளரும், இயக்குனருமான விஜய் சேகரன் அவர்களுக்கு கிளாசிக் சினிமாவின் வாழ்த்துக்கள்🌷