மீஷா திரை விமர்சனம்

ரேட்டிங் 4/5

நடிகர்கள்: கதிர், ஜியோ பேபி, ஷைன் டாம் சாக்கோ, சுதி கொப்பா, ஹக்கிம் ஷா, ஸ்ரீகாந்த் முரளி, இயக்குனர்: எம்சி ஜோசப், திரைக்கதை எழுத்தாளர்: எம்சி ஜோசப்

காலம்: 2 மணி 12 நிமிடங்கள்

மிதுன் (கதிர்)அனந்து(ஹக்கீம் ஷா) இருவரும் பால்ய கால நண்பர்கள் இந்த இருவரின் அன்பும் ஒருவர் மீது ஒருவர் உயிரையே வைத்திருக்கிறார். ஆனால் ரகு என்னும் அரசியல்வாதி ஒருவரால் இவர்கள் நட்பு பிரிக்கப்படுகிறது. இதில் மிதுன் காலனியைச் சேர்ந்த ஒடுக்கப்பட்ட சாதி அமைப்பைச் சார்ந்தவர் ஆனந்து உயர்ந்த சாதியை சார்ந்தவர் இந்த சாதி வர்க்கம் அரசியல் வாதிகளால், நட்புகள் துரோகம் ஆகிறது .

இந்த நட்பை மீண்டும் புதுபிக்கஅனந்து வை காட்டு பகுதிக்கு அழைக்கிறார் மிதுன் படம் அங்கிருந்து தொடங்குகிறது ஆனந்து, மிதுன், இவர்கள் உடன் இம்மது
என்ற மூன்று நண்பர்களின் கதையைச் சுற்றி இப்படம் நகர்கிறது.

பிரிந்த நண்பர்கள் ஒன்று சேர்ந்து விடுவார்கள் என்ற நம்பிக்கை ஊட்டி திரைக்கதை வசனம் எழுதி இயக் கி இருக்கிறார் இயக்குனர் ஆனால் நடப்பது அதுவல்ல ஹக்கீம் ஷா, மற்றும் கதிர் ஆகியோரின் நடிப்பு பாராட்டத்தக்கது, குறிப்பாக கதாநாயகனின் மனநிலை பாதிக்கப்பட்ட கதாபாத்திரம், பார்வையாளர்களுக்கு பரிதாபத்தை ஏற்படுத்துகிறது.

நட்பின் முக்கியத்துவத்தையும், துரோகத்தின் விளைவுகளையும் இப்படம் சொல்லி இருக்கிறது திரைக்கதை வசனம் இயக்கம் சீராக இருக்கிறது வாழ்த்துகள்

இயக்குனர் படத்தில் சமூக-அரசியல் காலனி மக்கள் பற்றி தொட முயற்்சி செய்கிறது அதைப்பற்றி ஆழமாக கதை செல்லாமல் இரண்டு நண்பர்களின் மன உணர்வுகளை போராட்டங்களை துரோகங்களை பற்றி அதிகம் பேசுகிறது ‘

நட்பை ஒரு புதுமையான கண்ணோட்டத்தில் இயக்குனர் இயக்கியிருக்கிறார், துரோகத்தின் தாக்கத்தையும் சொல்லி இருக்கிறார்

கதை அடர்ந்த காட்டுப்பகுதி , நண்பர்கள் மான் வேட்டை . அரசியல்வாதிகளின் துரோகங்கள், என எல்லாவற்றையும் கலந்து சமகால அரசியலையும் உள்ளே வைத்து இயக்குனர் இயக்கியிருக்கிறார் இது பார்வையாளருக்கு புது அனுபவத்தை கொடுக்கிறது.

நாயகன் கதிர்: மலையாள சினிமாவில் அறிமுகமாகும் கதிர்’ மிதுன் என்ற கதாபாத்திரத்தில், நன்றாகவே நடித்திருக்கிறார். அவரின் உடல் மொழி, நண்பன் செய்த துரோகம் இவை எல்லாம் மனதில் சுமந்து கொண்டு நண்பனை மான் வேட்டைக்கு அழைப்பது, காட்டுக்குள் நடக்கும் அந்த வன்மமும், காலனி மக்களுக்கு அவர் ஏற்படுத்தி தரும் நன்மைகளும், ரகு, நாகராஜன், என்ற அரசியல்வாதிகளால் அவருக்கு எதிராகவே திருப்பி போடும் அந்த ஆயுதம் கதிருக்கு ஆபத்தாகவே முடிகிறது. அவர் நடிப்பு நன்றாக இருக்கிறத

நாயகன் ஹக்கிம் ஷா

சில நேரம் மௌனம் கூட இவர் நடிப்பின் உக்கிரத்தை காட்டுகிறது.

தனது நண்பன் காலனி மக்களுடன் சேர்ந்து விட்டான் என்று பொறாமைப்பட்டு, அரசியல்வாதி ரகு, நண்பனை கொலை செய்ய துடிக்கும் பொழுது அதை தடுக்க நினைப்பது, காட்டுக்குள் நடக்கும் அந்த விபரீத விளையாட்டில் நண்பனா ? அனந்துவா? என்ற கேம் ஷோவில் கடைசியில் நட்புதான் ஜெயிக்கிறது நண்பனுக்காக கதறும் கட்சியில் நன்றாக நடித்திருக்கிறார்.

டாம் சாக்கோ

என்ன நடிப்பு, என்ன டயலாக் டெலிவரி, மனுஷன் பின்னி பெடல் எடுத்து விட்டார் .தன் அப்பா தொம்மையப்பன் சாக கிடக்க மிதுன் அழைத்தார் என்று காட்டுக்குள் சென்று சரக்குமானை வேட்டையாடி, காட்டுவாசிகளின் கோபத்துக்கு ஆளாகி உயிருக்கும் மன்றாடும் அந்த நடிப்பும், தெனாவட்டாக ஜீப் டிரைவருடன் பேசும் அந்த டயலாக் டெலிவரி, சீக்கோ வாட்ச்சை,

சைக்கோ வாட்ச் என்று சொல்லும் அந்த காமெடியும் ரசிக்க வைக்கிறது. சரியான தேர்வு மற்றும் இவருடன் பஷீர் பாயாக வரும் டயானாடிக் , டிரைவர், இம்மதுவாக நடித்திருப்பவர்,

கதிர் அப்பாவாக நடித்திருப்பவர், அரசியல்வாதி ரகு, நாகராஜன், மற்றும் துணை கதாபாத்திரங்களாக வரும் அனைத்து நடிகர் ,நடிகைகள் அம்மா அனந் து வின், காதலி | என எல்லா கதாபாத்திரங்களும் நெஞ்சில் இடம் பிடிக்கும் கதாபாத்திரங்கள் எல்லோரும் நன்றாக தங்கள் பங்குக்கு சிறப்பு சேர்த்து இருக்கிறார்கள்.

ஒளிப்பதிவு படத்திற்கு மிகப்பெரிய பலம் சுரேஷ்ராஜன், அடர்ந்த காடுகளை நள்ளிரவு நேரத்தில் திகில் ஊட்டும் வண்ணம் படமாக்கி இருக்கிறார்.

கழுகு மலையில், இருந்து கதிர் விழும் காட்சி திகில் ஊட்டுகிறது. மற்றும் ஆங்காங்கே யானைகள், ஜீப்புகளை வழி மறைப்பது ” டாம் கோ சரக்குமான வேட்டையாடுவது, என ஒலிப்பதிவு மிரட்டி இருக்கிறது

இசை சூரஜ் . எஸ்.குரூப் ஆரம்பக் கட்சியிலே டைட்டில் சாங்கில் இருந்து நம்மை படத்துக்குள் ஒன்றை வைத்து விடுகிறது இசை. ஆங்காங்கே வரும் பின்னணி இசை மிரட்டி காட்டுக்குள்ளே என்ன நடக்கப் போகிறது என்பதை இசைக்கருவிகள் கோர்த்து இருக்கிறார் சூப்பர்

மற்றும் ஒப்பனையாளர் , ஆர்ட் டைரக்டர், காஸ்ட்யூமர், பட தொகுப்பாளர் மனோஜ . என எல்லோரும் இந்த படத்தின் வெற்றிக்கு உதவி இருக்கிறார்கள். படத்தொகுப்பாளர் பற்றி சொல்ல வேண்டும் என்றால் நிகழ்கால காட்சியும் பிளாஸ்பேக் காட்சியும் இணைத்து படமாக்கி இருப்பது பாராட்டுக்குரியது

மொத்தத்தில் இந்த படம் இரு நண்பர்களின் , மன உணர்வுகளை, துரோகங்களை, வன்மங்களை, தியாகங்களை, பட்டியலிட்டு காட்டுகிறது. நல்ல கதை தானாகவே வெற்றியைத் தேடிக் கொள்ளும் அந்த வகையில் இந்த படம் வெற்றி பட்டியலில் இணையும்.

தொழில்நுட்ப கலைஞர்கள்

Costume Designer: Sameera Saneesh
Sound Designer: Arun Rama Varma
Colorist: Jayadev Tiruveaipati
DI: Poetic
VFX: IVFX
Publicity Designs: Thought Station and Roxstar
Promo Designs: Illuminartist
Digital Marketing: Entertainment Corner and Invertd Studio
Marketing

மக்கள் தொடர்பாளர்கள்

திரு.சுரேஷ் சந்திரா, திரு அப்துல் நாசர் ஆகியோர் களுக்கும் வாழ்த்துக்கள்💐

இப்படத்தை வெளியிடுகிறது . AP international