🕵️ கதை என்ன?
ராமநாதபுரத்தைச் சேர்ந்த தமிழ் வழிக் கல்வி படித்த இளைஞன் இலந்தேவன், சென்னையில் கல்லூரி சேர்ந்த பிறகு, (ராகவ் )அவனுக்கு ஒரு பிரபல நடிகை நயன் கபூரை, சந்திக்க வேண்டும் என்ற ஆசை ,கனவு லட்சியம்.
கல்லூரி மாணவர்கள் ஆறு பேர் நண்பர்கள் ஆகிறார்கள்.
நாயகனுக்கு (கால் கேர்ள்)
யாமினி இடம் ஒரு தொடர்பு இருக்கிறது. அழகான அந்த யாமினியும், நாயகனும் இருவரும் நட்போடு பழகுகிறார்கள்.
கல்லூரியில் நடக்கும் ஒரு கல்ச்சுரல் ப்ரோக்ராமுக்கு யாமினியை வைத்து நடன பயிற்சி நண்பர்களுக்கு கொடுத்து போட்டியில் கலந்து கொள்ள நாயகன் முயற்சி செய்ய, கல்லூரியின் தாளாளர் “லயா அதற்கு தடை போடுகிறார்.
அங்கு வினோத் என்ற கதாபாத்திரம் யாமினி மீது வண்மம் கொள்வதாக அமைக்கப்பட்டுள்ளது.
அதே சமயம் லயாவின், கணவர் ப்ரொபசர், யாமினி உடன் தொடர்பு வைத்திருக்கிறார். இந்த சூழ்நிலையில். ஒரு நாள் லயா வீட்டிலிருந்து, மூன்றாவது மாடியில் இருந்து
யாமினி கீழே விழுந்து,
இறந்து போக,
அவரை யாராவது தள்ளி விட்டார்களா? அல்லது கொலை செய்தார்களா? அவரே கீழே இறங்கும் பொழுது தவறி விழுந்தாரா? என்ற கோணத்தில்
அதை விசாரிக்கும் போலீஸ் அதிகாரி(நித்திஷ் வீரா)பாதையும் , நாயகன் பாதையும் ஒன்றாகிறது. அதன் பின்னர் உண்மை என்ன, கொலையாளி யார்? என்ற மர்மம் விரிகிறது
படத்தின் சுவாரஸ்யமான ஐடியா என்னவென்றால், கதாநாயகனுக்கு புகைப்படத்துக்குள் சென்று, அந்தச் சூழலில் நடந்தவற்றை வேறு கோணத்தில் உணரக்கூடிய திறன் இருப்பது இதனால் விசாரணைக் காட்சிகளுக்கு ஒரு வித்தியாசமான அணுகுமுறை கிடைக்கிறது.
யாமினி யைகொலை செய்தது யார்? ஏன் கொன்றார்கள்? என்ற மர்மத்தை நோக்கி கதை செல்கிறது
துப்பாக்கிகள் மற்றும் இரத்தம் சிந்தும் காட்சிகள் இல்லாத ஒரு கிரைம் படமாக உருவாகி இருக்கிறது
Crime thriller மட்டும் அல்ல.
Psychological thriller மட்டும் அல்ல.
Fantasy மட்டும் அல்ல.
இந்த மூன்றையும் இணைத்து, “ஒரு மனிதன் மற்றவர்களின் சொல்லப்படாத உண்மையை எவ்வாறு கண்டுபிடிக்கிறான்?” என்பதையே மையமாக வைத்திருக்கும் high-concept படம்.
திரைக்கதையின் சுவாரஸ்யமான பகுதி இடைவேளை வரை நண்பர்கள், யாமினி ,என்று கலகலப்பாக செல்லும் படம், இடைவேளைக்குப் பிறகு, கொலையை கண்டுபிடிக்க நாயகன் போடும் யுக்தி, இன்ஸ்பெக்டர் வகுக்கும் யுக்தி, என்று படம் ரெக்கை கட்டி பறக்கிறது.
மேலும், பார்வையாளர்களும் கதையுடன் சேர்ந்து கணக்குப் போட்டு குற்றவாளியை கண்டுபிடிக்க முயலும் வகையில் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது.அதுதான் சிறப்பாக இருக்கிறது.
கல்லூரி குழுவின் chemistry-யும், அவர்களுக்குள் உருவாகும் சந்தேகங்களும் கதையின் suspense-ஐ நகர்த்துகின்றன.
🔥ராகவ் – வழக்கமான ஹீரோ இல்லை
‘BeeP’ படத்தில் ராகவின் கதாபாத்திரத்தின் முக்கியமான விஷயம், அவரிடம் இருக்கும் “சூப்பர் பவர்”. ஆனால் அது பறப்பது, அசாத்திய பலம் போன்ற வழக்கமான சினிமா சக்தி அல்ல. ஒரு புகைப்படத்தை வைத்து அதில் மறைந்திருக்கும் மனிதர்களின் எண்ணங்களையும் சம்பவங்களையும் pattern recognition / psychoanalysis மூலம் புரிந்துகொள்ளும் திறன் மிக்க கதாபாத்திரத்தில்
பவர் புல் கதாபாத்திரத்தில் வருகிறார்.
புகைப்படங்களை அல்லது காட்சிகளைத் துல்லியமாக உள்வாங்கும் திறன் கொண்ட ஒரு திறமையான இளைஞனாக
அவரை காட்சி படுத்தியிருப்பது தமிழ் சினிமாவில் புதிய முயற்சி.
யாமினி உடன் கலகலப்பாக பழகும் பொழுதும் நடிகை நயன் கபூரை சந்திக்க வேண்டும் என்றுஏங்கும் பொழுது, போலீஸ் அதிகாரி நித்திஷ் வீராவுக்கு,
சொல்லித் தரும்பொழுது,
அவரது ஆறு நண்பர்கள் கொண்ட குழுவான
சாண்டா, காவ்யா
இவருடன் சேர்ந்து குற்றவாளியை கண்டு பிடிக்கும் போதும் ராகவ் நடிப்பு சூப்பராக இருக்கிறது. அவரின் கதாபாத்திரம் ரசிக்க வைக்கிறது.
👩 பிரேர்ணா கன்னா – வெறும் ஹீரோயின் அல்ல
இப்படத்தில் பிரேர்ணா கன்னாவின் கதாபாத்திரம் கதைக்கு பக்கத்தில் நிற்கும் காதல் கதாபாத்திரமாக ரசிக்க வைக்கிறது.
லயவாக பிரியதர்ஷினி தவறு செய்த கணவனை கண்டிக்கும் கதாபாத்திரத்தில் நல்ல நடிப்பை வழங்கி இருக்கிறார்.
சுனைனா, என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் யாமினி ,அழகான ஏஞ்சல்ஸ் தோற்றத்தில் இருந்து ,படம் பார்ப்பவர்களை கிறங்கடித்திருக்கிறார்.
மற்றும் புரபசர் வேடத்தில் இயக்குனரே ஒரு அற்புதமான நடிப்பை கொடுத்திருக்கிறார்.
மற்றும் லக்ஷ்மணன், ராஜ்குமார், உள்ளிட்டவர்கள் முக்கியமான பாத்திரங்களில் நன்றாக நடித்திருக்கிறார்கள் .
🎬 ‘பீப்’ படத்தின் கதையை எழுதி இயக்கி இருக்கிறார்
இயக்கம் – எல். சண்முக சுந்தர்
‘கட்டு’ என்ற குறும்படம் மூலம் கவனம் பெற்ற சண்முக சுந்தருக்கு இது முதல் முழுநீள திரைப்படம். துப்பாக்கி, கத்தி, ரத்தம் போன்ற வழக்கமான கிரைம் பட அம்சங்களை குறைத்து, கதாபாத்திரங்களின் மனநிலையையும் அவர்களின் பயணத்தையும் மையமாக வைத்திருக்கிறார். .
ஒரு புகைப்படம் → ஒரு மனிதனின் மனநிலை → ஒரு மறைந்த சம்பவம் → ஒரு கொலை மர்மம்
என்ற chain-ஐ உருவாக்கியிருப்பதுதான் இயக்குனரின்‘BeeP’-ன் high-concept.
college + cop + mind-bending crime drama என்று வகைப்படுத்திஇருக்கிறார்45 நாட்கள் படப்பிடிப்பு, 75-க்கும் மேற்பட்ட locations, 45-க்கும் மேற்பட்ட கலைஞர்கள் பயன்படுத்தி இயக்குனர் புதிய பாணியை சொல்லி இருக்கிறார். சொல்லக்கூடாத அல்லது சொல்லப்படாமல் விடப்படும் விஷயங்களை ‘beep’ ஒலி மறைப்பது போல, இந்தப் படத்திலும் பல விஷயங்கள் வெளிப்படையாகச் சொல்லப்படாமல் கதைக்குள் மறைத்திருக்கிறார்இயக்குனர்.
இயக்குநரின்
மிகப்பெரிய முயற்சி — கொலைக் கதையை வெறும் violence-ஆக காட்டாமல் psychological mystery-ஆக சொல்ல முயன்றிருப்பது.
சபாஷ்போட வைக்கிறது.
இருப்பினும் இயக்குநர் பாலியல் குற்றத்திற்கு ஒருவகையில் காரணமாக இருக்கும் சமூகப் பிரச்னைகள் குறித்து ஒரு பக்குவமான ஆரோக்கியமான உரையாடலை முன்வைத்திருப்பது பாராட்டுக்குரியது. அதைத் பிரதான பாத்திரங்கள் வழியேவும் பேசியிருப்பது புத்திசாலித்தனம்.
கொலை செய்தது யார்? என்ற “டிவிஸ்ட்”செம!!…
🔥ஒளிப்பதிவாளர் பிரதீப் பத்மகுமார், college காட்சிகளுக்கு energetic lighting-லிருந்து mystery பகுதிகளில் high-contrast lighting-க்கு மாறும் வகையில் visual treatment செய்திருக்கிறார்.
இவரின் ஒளிப்பதிவு மற்றும் படத்தின் வித்தியாசமான visual concept-கள் கதையின் மர்ம உணர்வை வலுப்படுத்துகின்றன.
🔥படத்தின் runtime 2 மணி 15 நிமிடங்கள்
படத்தொகுப்பாளர், இடைவேளைக்குப் பிறகு, காட்சிகளை விறுவிறுப்பாக கொண்டு சென்று அடுத்து என்ன நடக்கும் !!என்று ஆவலை உண்டாக்கி, படத்தின் வெற்றிக்கு வழி வகுத்திருக்கிறார்.
படத்தொகுப்பாளர் அபிஷேக் மல்லப்பன்
🔥பிரசாந்த் விஹாரியின் பின்னணி இசை
படத்தில் பாடல்கள் குறைவாக — இரண்டு பாடல்கள் மட்டுமே இருக்கிறது ஆனால் பின்னணி இசை முக்கிய பங்கு வகிக்கிறது; குறிப்பாக இடைவேளைக்குப் பிறகு கதையை நகர்த்துவதில் இசை முக்கியமாக இருக்கிறது.
☘️மக்கள் தொடர்பாளர் A ஜான் அவர்கள்.
🔥மொத்தத்தில்
படத்தின் திரைக்கதை
BeeP-ன் பலம்:
வித்தியாசமான one-line concept
வழக்கமான crime படங்களிலிருந்து மாறுபட்ட அணுகுமுறை
கதாபாத்திரங்களை மையப்படுத்திய suspense
psychological + fantasy
படம் முழுக்க வேகமான commercial thriller எதிர்பார்ப்பவர்களுக்கு, இதன் mind-game மற்றும் character-driven narration என தூள் கிளப்புகிறது.
மதிப்பீடு 4-/5
