வெள்ள குதிர”திரை விமர்சனம்

ரேட்டிங் 4 -5/5

கதை களம்

நாயகன் ஹரிஷ் ஓரி , திருப்பூரில் ஜவுளிகளை வாங்கி வியாபாரம் செய்து கடன்காரன் ஆகிறார். கடன் கொடுத்தவர் அவருடைய மனைவி அபிராமி போஸ் வேண்டும் என்று கேட்க, அவரை தள்ளிவிட கீழே விழுந்து விட இறந்துவிட்டார் என்று ஓடி போய் தனது பூர்வீகமான போகர் மலை பகுதிக்கு, மனைவி, குழந்தை விஸ்வா, உடன் மலை ஏறுகிறார்.

மனைவி அபிராமி போஸ், குமற,”உன்னால்தான் இது நடந்தது” என்று கண்ணீர் வடிக்க, இனி இது போன்ற தவறுகள் நடக்காது என்று மனைவிக்கு சத்தியம் செய்து கொடுக்கிறார் ஹரீஸ்.

மலையிலிருந்து மக்களுக்கு பொருட்களை வாங்கி தரும் முருகனுடன் சேர்ந்து பொருட்கள் சுமந்து உதவி செய்கிறார்.

ஊர் திருவிழாவின் போது அல்லது ஊர் நல்லதுக்கு என்றால் மூலிகை ரசம் காய்ச்சி அந்த மலை மக்களுக்கு கொடுக்கும் செம்மலை சந்தித்த பிறகு கதையின் போக்கு மாறுகிறது..

அப்போது நாயகன் ஹரிஷ், வாழ்க்கையில் ஒரு திருப்பம் ஏற்படுகிறது.

இந்த மூலிகை ரசத்தை மலையில் இருந்து கீழே கொண்டு போய் கொடுத்தால் நல்ல விலை கொடுக்கிறார்கள். என்பதை அறிந்து செம்மலை மகன் செம்பனுடன் சேர்ந்து சாராயம் காய்ச்சுகிறார் .
ஆனால் பகை கொண்ட பாரஸ்ட் ஆபிஸர் இருவரையும் வளைத்து பிடிக்க முயற்சி செய்ய தப்பியோடுகிறார்

அதே சமயம் அபிராமி போஸ், அந்த ஊரில் எழுத படிக்க தெரியாத மக்களை ஏமாற்றி பிழைக்கும் எழுவனை எதிர்த்து
கேள்வி கேட்கிறார். எழுவனும் ,ஒரு வக்கீலும், அந்த ஊருக்கு பாதை வரக்கூடாது என்று போடும் மோசடியை அம்பலப்படுத்துகிறார் ,பஞ்சாயத்து தலைவி பூரணியுடன் இணைந்து அக்கிரமத்தை தட்டி கேட்கிறார்.

கள்ளச்சாராயம் விற்க்கும் நாயகன் ஒருபுறம்,
அவனைத் தேடி கடன்காரர்கள் அலைவது ஒரு புறம்,
எழுவன் இடம் பகைசம்பாதித்த மனைவி ஒருபுறம்,
இப்படி மீண்டும் அவர்கள் குடும்பம் புயலில் சிக்குகிறது அதிலிருந்து அந்த குடும்பம் மீண்டதா!? இல்லையா? என்பதே
கதை களம்.
படம் எடுத்த விதம் திரைக்கதை அமைத்த விதம், படத்தின் மேக்கிங், இசை, ஒலிப்பதிவு, பாடல்கள், அந்த மலை கிராமத்து மக்கள் ,அனைவரும் சிறப்பாக நடித்திருக்கிறார்கள்.

சாலை மற்றும் மருத்துவமனை வசதி இல்லாத அங்கே வாழும் மலைவாழ் மக்கள் துணிவும் உடலுரமும் மிக்கவர்கள் சின்னாயி தொட்டில் கட்டித் தூக்கிக் கொண்டு கிராம வாசிகள் மலையிறங்குகிறார்கள். ஆனால் உயிர் போய் விட்டது அடிப்படை வாழ்வாதார வசதியைப் பெற முடியாத சிக்கலான மலைக்கிராமம் ஒன்றின் வாழ்வா – சாவா போராட்டத்தை ரத்தமும் கண்ணீரும் வழிந்தோடும் சர்வைவல் த்ரில்லராகக் கொடுத்திருக்கிறார் அறிமுக இயக்குநர் சரன்ராஜ்செந்தில்குமார். இது போன்ற சாலை வசதியற்ற மலைக் கிராமங்களுக்குப் பகலே பெரும் போராட்டமாக இருக்கும்போது, ஒவ்வொரு இரவும் அவர்களுக்கு எவ்வளவு பெரிய சவால் என்பதை உணர்த்தும் விதமாக, கதையல் அமைத்திருப்பது பார்வையாளர்களைப் பெரிய மன அழுத்தத்துக்குள் தள்ளி விடுகிறது.
பல குடிசைகள்போட்டு ஆர்ட் டைரக்டர் பணி புரிந்திருக்கிறார்.
மூலிகை ரசம் என்பது
மலை கிராமங்களில் பயன்படுத்தப்படுவது தான்.
எழுவன் போன்ற கிராம மக்களை சுரண்டி பிழைக்கும் மனிதர்கள் இன்னமும் இருக்கிறார்கள்.
கடனுக்காக ஊரை விட்டு ஓடும் மக்கள் இன்னமும் இருக்கிறார்கள்.
எப்படியாவது பிழைத்து விட மாட்டோமா ?என்று தவறு செய்யும் மனிதர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்.
நடுக் கோம்பை ஊரில் ஒரு பத்திரம் இருந்தால் சாலை போட்டு விடலாம் என்று தாசில்தார் சொல்ல, அதை கதிர் ஏற்படுத்தி தருவது, படத்திற்கு சிறப்பு செய்திருக்கிறது.
மகன் கேட்ட வெள்ளை குதிரையை கொடுக்க முடியவில்லை, என்றாலும் மண் குதிரையாவது கொடுத்து மகனின் ஆசையை நிறைவேற்றுகிறார் தந்தை.
முருகன் செய்த உதவி, செம்மலை செய்த உதவி, மிகப்பெரிய உதவி அதை நாயகன் மறந்து விடும் பொழுது, சாதாரண மனித இயல்புகளை அப்பட்டமாக காட்டி இருக்கிறார்.

நாயகன் கொஞ்சம் திக்கி திக்கி, பேசினாலும் முகத்தில் ஏகப்பட்ட பாவனைகள், ஏமாற்றம், கடன் தொல்லை, மனைவியைவாழ வைக்க முடியவில்லை என்ற அவமானம், குழந்தை கேட்பதை கூட வாங்கித் தர முடியவில்லை என்று அவலம்,
மூலிகை ரசம் காட்சி விற்ற பிறகு கையில் கிடைக்கும் பணத்தை வாங்கிய பிறகு ஏற்படும் திமிர், தெனாவெட்டு,
ஊர் மக்களிடம் அடி வாங்கி உதை வாங்கி அழும் சீன் ,
பணம்வந்ததும் அந்த அகம்பாவம்
தவறு செய்யமாட்டேன் என்று சொல்லிவிட்டு மீண்டும் தவறு செய்து சம்பாதிக்கும் அந்த தீய குணம் ,
என ஒவ்வொரு காட்சியிலும் அல்டிமேட் ஸ்டார்ஆக நடிபபை தந்திருக்கிறார். அவரே தயாரிப்பு என்பதால் மிக சிரமப்பட்டு படத்தை எடுத்திருக்கிறார். நிச்சயம் அவருக்கு இதுவரை 60 விருதுகள் கிடைத்து இருக்கிறது.
தேசிய விருது கிடைக்கும் மேலும் மேலும் அவர் நல்ல படங்களை தருவார் என்று நம்பலாம்.
: இவர்களோடு ரோஸ், மெலடி,
உதிரி விஜய் குமார்
இவர்கள் அனைவரின் நடிப்பும் சிறப்பாக இருக்கிறது.

கதை வசனம் எழுதி இயக்கி இருக்கிறார்
சரண் ராஜ் செந்தில்குமார்.
மலைவாழ் மக்களின் துன்பத்தை சாலை வசதி இல்லாமல் அவர்கள் படும் அவஸ்தை, உயிர்கள்ப்பு போன்றவை தத்துரூமாக படமாக எடுத்திருக்கிறார் தரமான படம். நல்ல மேக்கிங், சிறந்த இயக்குனர் பட்டியலில் இவர் பெறுவார்.என்பது உறுதி.
ராமதேவின் ஒளிப்பதிவு
கண்களுக்கு குழுமையாகவும் அதேசமயம் மலைவாழ் மக்களின் துயரத்தையும், அருமையாக பதிவு செய்திருக்கிறது. உயர்ந்த மலை மேல் இருந்து நாயகன் பார்க்கும் அந்த காட்சிகள் கண்கொள்ளா காட்சி.
பரத் ஆசீவகனின் இசை படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறது. உயிரோட்டமான இசை, மனதை கரைய வைக்கும், பாடல்கள் ,இசை அமைப்பாளரு க்கு வாழ்த்துக்கள்.
குரு ,அம்பிகா, தமிழ்மணியின் பாடல் வரிகள்
மனதை ஈரப்படுத்துகிறது. உருக்கி விடுகிறது.

பிரதீப்,& சரண் ராஜ் செந்தில்குமார், படத்தொகுப்பு
கச்சிதமாக இருக்கிறது.
இரண்டு மணி நேரம் படம் போனதே தெரியாமல் அவ்வளவு இயல்பாக இருக்கிறது.

ஆர்ட் டைரக்டராக
கண்ணன் ஆர்ட்ப்பணி செய்திருக்கிறார் மலை மேல் ஒரு குட்டி கிராமத்தையே அழகாக வடிவமைத்து ,மிகவும் கஷ்டப்பட்டு அற்புதமாக உருவாக்கி இருக்கிறார்.
வசனத்தை சரண்ராஜ் செந்தில்குமார், மற்றும் அருளானந்தம்
எழுதி இருக்கிறார்கள் சிறப்பாக இருக்கிறது.

மற்றும்…..
Sound Design & Mixing : Antony Thomson
Confirmist: Vijay Shiva
Special MakeUp – Anusuya K
Di & Colourist: Balagangadharan
Dubbing & Mixing :Malini Jeyaraj, Arun kumar (Black & White Studio)
Sound Effects: D. Narayanan
Audiography (SFX & 5.1 Mixing): Tony J Antony
Executive Producer: Harish Ori, Saranraj Senthilkumar
Co – Director: Prabha Alles
Associate Director: Azhaguselvan GR
Assistant Directors: Vasu, Agni, S. Sakthivel
Produced: Harish Ori Arthanari
Production: Nijam Cinema
Presented by : Dream Warrior Pictures

மக்கள் தொடர்பாளர் சாவித்திரி அவர்கள். படத்தை மக்களிடம் நல்ல முறையில் சேர்த்து இருக்கிறார் அவருக்கு வாழ்த்துக்கள்.🌷

.