கருப்பு பல்சர்”திரை விமர்சனம்

ரேட்டிங் 3-7/5

Yasho Entertainment சார்பில், Dr. சத்யா முரளி கிருஷ்ணன் தயாரிப்பில், கெத்து தினேஷ் நடிப்பில், அறிமுக இயக்குநர் முரளி கிரிஷ் இயக்கத்தில், கமர்ஷியல் கொண்டாட்மாக உருவாகியுள்ளது “கருப்பு பல்சர்

அட்டகத்தி தினேஷ், ரேஷ்மா வெங்கடேஷ், மதுனிகா, சரவணன் சுப்பையா, மன்சூர் அலிகான், கலையரசன், பிரின்ஸ் அஜய், மற்றும் ராகுல் ஆகியோர் நடித்துள்ளனர்.

கதை களம்

ஆவி புகுந்த வீடு, ஆவி புகுந்த கார், இந்த படத்தில் ஆவி புகுந்த கருப்பு பல்சர்,

காளைமாடு ஆவியாக பல்சருக்குள் புகுந்து என்ன செய்தது என்பது ஒன் லைன். அதன் கண்கள்தான் காரின் ஹெட்லைட், காதுகள்தான் ஹாரன், கால்கள்தான் சக்கரங்கள் என்ற உருவகம் சுவாரஸ்யம். கொலையின்போதும் காளை பல்சர் வடிவில், வில்லன்களைக் முட்டிமோதுவதும் படத்தில் ஆங்காங்கே வரும் கிராஃபிக்ஸ் காட்சிகளும் அசத்துகின்றன. பிளாஷ்பேக் கதையில் ,கருப்பன் மீதான சாதிய வன்முறையைச் சொல்லியிருப்பது சமகாலத்தை நினைவூட்டுகிறது.

வாடிவாசல் களத்தில், பட்டியலின மக்களை சேர்க்காமல் அவர்கள் போராடியது ஞாபகத்துக்கு வருகிறது.

இந்த படத்தில் தினேஷ் இருவேடங்களில் நடித்துள்ளார். அதில் ஒருவர் சென்னையை சேர்ந்தவராகவும் மற்றொருவர் மதுரை சேர்ந்த ஜல்லிக்கட்டு வீரராகவும் நடித்துள்ளார். ஜல்லிக்கட்டு போட்டியால் ஏற்படும் முன்விரோதத்தில் மதுரை சேர்ந்த தினேஷ் கொலை செய்யப்பட அவருடைய பல்சர் பைக் சென்னையை சேர்ந்த தினேஷிடம் வந்து சேர இதன்பின் நடைபெறும் சம்பவங்களே கதை.

ஆனால் இந்த விஷயங்களைத் தாண்டி படத்தில் ஏகப்பட்ட சுவராஸ்யமான பகுதி உள்ளது. இன்டர்வெல்லில் பழிவாங்கும் காளை கதை யில்தான் தொடங்குகிறது.

அதற்கு முன்பு பிரான்ஸ்டர் ராகுல் காமெடிகள், அட்டகத்தி தினேஷ் ரேஷ்மா காதல், பிறகு பெண் பார்க்கும் படலம், என்று முதல்பாதி ஏகத்துக்கு ம்கலகலப்பான ஏரியா!!

சரவண சுப்பையா அந்த பல்சரையும், அட்டைக்கத்தி தினேஷ்வை, நீ தசரத ராஜா இல்லை.என்று விசாரிக்கும் காட்சிகள் விறுவிறுப்பாக இருக்கின்றன. பல்சரைவைதது, அதை க்ளைமாக்ஸ் வரை தெளிவாக கொண்டு சென்றதும் சூப்பர். மன்சூர் அலிகான் அந்த சி.சி.டி.வி ஃபுட்டேஜ், அதன் மூலம் கருப்பு பல்சர் விஷயத்தை கண்டுபிடிப்பது. அதற்கு பிறகு படத்தின் களமும் , விறுவிறுப்பானது.

பிரின்ஸ் அஜய் மதுரையில் பைனான்ஸ் செய்து வருகிறார் .

சென்னையில் இருந்து மதுரைக்குச் சென்ற மன்சூர் அலிகான். அவரிடம் பைனான்ஸ் வாங்கும் பொழுது அஜய் கருப்பு பல்சரையும் மன்சூர் அவர்களிடம் கொடுத்து விடுகிறார்.

சென்னையில் மன்சூர் அலிகானுக்கும், அட்டைக்கத்தி தினேஷுக்கும், தண்ணீர் கேன் பிரச்சனைக்கும் ,

அந்தக் கருப்பு பல்சருக்கும் ,என்ன காரணம்?

தான் காதலித்த காதலியை தினேஷ் கருப்பு பல்சரில் கூட்டிக்கொண்டு செல்லும் பொழுது நடந்தது என்ன?

அட்டைக்கத்தி தினேஷ் இடமகருப்பு பல்சரை, வாங்கிக்கொண்டு ராகுல் தன் மனைவியுடன் திரும்பும் பொழுது அவர்களுக்கு நடந்தது என்ன?

அட்டைக்கத்தி தினேஷின்,அவரது தங்கையும், அவரது கணவரும் ,அந்த கருப்பு பல்சரில் வரும் பொழுது நடந்தது என்ன?

மன்சூர் அலிகானிடம் ,வந்து சேர்ந்த அந்த கருப்பு பல்சர் வில்லன் செல்வத்தின் அடியாளை கொலை செய்தது ஏன்?

சரவணா சுப்பையா வேல்ராஜ் ,என்ற கதாபாத்திரத்தில் அந்த கருப்பு பல்சரை பற்றி கூறும் பின்னணி என்ன?

அந்த கருப்பு பல்சரின், ஆவியை ஒரு இஸ்லாமிய மந்திரவாதி அடக்குவது எப்படி?

இதுபோன்ற கேள்விகளுக்கு பரபரப்பாகவும், விறுவிறுப்பாகவும், கமர்சியலாகவும் சொல்லியிருக்கிறார் இயக்குனர்.

நடிகர்கள் & நடிகைகள்
அட்டகத்தி தினேஷ்

கருப்பன் ,தசரதராஜா என இரண்டு வேடத்தில் நடித்திருக்கிறார். மதுரையில் ஜல்லிக்கட்டு காளை அடக்கும் வீரனாக, சென்னையில் வாழும் தசரத ராஜா வாக, கேன் விற்பனை செய்யும் ஆர்டினரி மேனாக நடித்திருக்கிறார்.
காதல் காட்சிகளில் நவரசம் காளயை அடக்கும்போது வீரம், கிளைமாக்ஸ் காட்சியில் மாடு போல வில்லன் அஜயை முட்டி முட்டிக் கொள்வது, ராகுலிடம் காமெடி, என நடிப்பில் பன்முகம் காட்டி நடித்திருக்கிறார் தினேஷ்.

இப்படத்தில் ரேஷ்மா வெங்கடேஷ்,

ஜானகி தேவி என்ற வேடத்தில் மேட்ரிமோனியல் மூலம் தினேஷை கண்டுபிடித்து, காதலித்து, படம் முழுக்க இளமை துள்ளும் வகையில் வருகிறார். நன்றாகவும் நடித்திருக்கிறார். தமிழுக்கு ஒரு நல்ல புதுமுகம் வரவு.

அட்டைக்கத்தி தினேஷ் தங்கையாக வருபவரும் நன்றாக நடித்திருக்கிறார்.

சரவணன் சுப்பையா,

வேல் ராஜ் என்ற காவல்துறை அதிகாரி வேடத்தில் கதையின் திருப்புமுனைக்கு உதவியாக வருகிறார்.

மன்சூர் அலிகான்,

காவேரி, என்ற கதாபாத்திரத்தில் காமெடி கலந்த வில்லனாக ,இவரின் கதாபாத்திரம் கலகலப்பு ஏற்படுத்துகிறது. அவருக்கு துணையாக வரும் கலையரசன் கலகலப்பு ஏற்படுத்துகிறார் .

பிரின்ஸ் அஜய் வில்லத்தனத்தில் மிரட்டி இருக்கிறார். பிராங்ஸ்டர் ராகுல், மொட்டை மாடியில் தினேஷ் உடன் சரக்கு அடித்துக் கொண்டு கலாய்ப்பதும்,
கருப்பு பல்சர் எடுத்துக்கொண்டு தன் மனைவியுடன் சென்று அவஸ்தை படுவதும், கலகலப்பு

தயாரிப்பு & டைரக்டர்

டாக்டர் சத்ய முரளி கிருஷ்ணன் தயாரித்த இந்தப் படத்தை பிரபல இயக்குநர் எம் ராஜேஷ் அவர்களிடம் உதவி இயக்குநராகவும், அவரது படங்களில் திரைக்கதையிலும் பணியாற்றிய முரளி கிரிஷ் இப்படதை இயக்கி இருக்கிறார்

விளையாட்டுக்குள் கூட ,சாதி எப்படி ஒரு வீரனை துவம்சம் செய்கிறது.என்பதை மனதை தொடும்படி சொல்லி இருக்கிறார்.

கிராமத்து ஜல்லிக்கட்டு காட்சி நன்றாக இருக்கிறது மிகவும் சிரமப்பட்டு எடுத்திருக்கிறார்கள்கருப்பு பல்சர் பலி வாங்குவதாக காட்டப்படுவது புதிய யுக்தி.
இடைவேளை வரை காமெடியாக கொண்டு சென்றுள்ள இயக்குனர். இடைவேளைக்குப் பிறகு கதை, திரைக்கதையில் சீரியஸ் ,அமானுஷ்யம் கலந்து மிரட்டி இருக்கிறார்.

இசை

இன்பராஜ் ராஜேந்திரன் இசையமைத்து பாடல் வரிகளை எழுதியுள்ளார்.

இவர் இசையில் ‘கானா பாலா, சத்திய பிரகாஷ், வேல்முருகன் பாடிய பாடல்கள் சூப்பர்!!. பின்னணி இசை பலம்.

ஒளிப்பதிவு

பாஸ்கர் ஆறுமுகம் ஒளிப்பதிவு, மற்றும் காட்சியமைப்பு ஆகியவை கவனம் ஈர்க்கும் வகையில் அமைந்துள்ளன. குறிப்பாக இருண்ட நிறங்கள், ராவான காட்சிகள், நகர்ப்புற மற்றும் கிராமப்புற பின்னணிகள் கலந்த காட்சியமைப்பு, படத்தின் மையக் கருத்தை வலுவாக வெளிப்படுத்துகிறது

ஒளிப்பதிவு மூலம் படத்தின் திகிலைக் கூட்ட முடிந்தவரை முயற்சி செய்திருக்கிறார். பல்சர் மூலம் அதற்குள் இருக்கும் ஆவி யாருடையது? என சொன்ன ஐடியாவும், அந்த கிராஃபிக்ஸும் செம அந்த சூனியக்காரர் வாயிலிருந்து, வரவழைக்கிற அந்த காற்று எப்படி பல்சரை அடக்குகிறது. என்பதும் அவர் யார் என்பதும் மர்மமாக இருக்கிறது.

ஆர்ட் டைரக்டர்

படத்தின் ஆர்ட் டைரக்டர், ஜல்லிக்கட்டு காட்சிகளுக்கு நன்றாக அரங்கம் அமைத்திருக்கிறார் .

படத்தின் ஒப்பனையாளர் ,பட தொகுப்பாளர், அனைவரும் தங்கள் பணிகளை கச்சிதமாக செய்து இருக்கிறார்கள்.

மொத்தத்தில் விளையாட்டுகளில் சாதி பார்க்கக் கூடாது ,என்ற சமூக அக்கறை யோடே படம் எடுத்து இருக்கிறார் இயக்குனர் .

தமிழ் சமூகத்தின் பண்பாடுகளையும், ஜல்லிக்கட்டு வீரத்தையும், பறைசாற்றும் படமாக வந்திருக்கிறது. இதுபோன்ற நல்ல தரமான படங்களை மக்கள் கொண்டாட வேண்டும். அப்போதுதான் தமிழில், நல்ல தரமான படைப்புகள் வெளிவரும். காதல், வீரம், பழிவாங்குதல் போன்ற எல்லா அம்சங்களையும் கொண்டுள்ளது இந்த படம் ஜனரஞ்சகமான பட,பட்டியலில் இடம் பிடிக்கும்.

மக்கள் தொடர்பாளர்கள்

தியாகராஜன் ,மற்றும் மதன், இருவரும் படத்தை மக்களிடம் நல்ல முறையில் கொண்டு போய் சேர்த்திருக்கிறார்கள் அவர்களுக்கும் வாழ்த்துக்கள்💐