மெல்லிசை”திரை விமர்சனம்

ரேட்டிங் 4/5

கீஷோர், நடிப்பில், ஷங்கர் ரங்கராஜன் இசையமைப்பில், திரவ் “இயக்கத்தில் வெளியாகி உள்ள படம் ‘மெல்லிசை” இப்படத்தை ஹேஷ்டேக் FDFS புரொடக்ஷன்ஸ் தயாரிக்க, இந்த படத்தில் கிஷோர், சுபத்ரா ராபர்ட், ஹரீஷ் உத்தமன் ஜார்ஜ் மரியன் மற்றும் ஜஸ்வந்த்,தணன்யா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

கதை களம்

கிஷோரின் மகன் தீபக், மகள் யாழினி, இருவரும் தங்களின் சொந்த வீடு குணா என்னும் நபரிடம் கடனில், அது பறி போவதை கண்டு அந்த வீட்டை ஒரு முறை பார்த்துவிட்டு வந்து விடலாம் என்று புறப்படுவதாக கதை ஆரம்பிக்கிறது.
2009ல் பிளாஷ்பேக் விரிகிறது.

தமிழ் சினிமாவில் தொடர்ந்து கதாநாயகனுக்கு துதி பாடும் படங்கள் வந்து கொண்டிருந்தாலும் ஒருசிலரைத் தவிர அனைத்து இயக்குநர்களும் அந்தப் பாதையில் ஓடிக் கொண்டிருக்க, அந்த ஒருசிலரில் ஒருத்தராக கதையை நம்பிப் படமெடுத்து இருக்கிறார் இயக்குநர். எப்படிப்பார்த்தாலும் கதையை நம்பி எடுக்கப்பட்ட திரைப்படங்கள்தான் காலம் கடந்து எல்லோராலும் ரசிக்கப்படுகின்றன .இந்தப்படமும் என்றும் தமிழ் ரசிகர்கள் தூக்கி வைத்துக் கொண்டாடுவார்கள் . அதன் ஈர்ப்புக் குறையாமல் இருப்பதற்கு முக்கிய காரணம், உயிரோட்டமான திரைக்கதைதான். இந்தத் திரைப்படத்தின் திரைக்கதையை மிகச் சிறப்பாக அமைத்துள்ளார் இயக்குநர் தீரவ்

கிஷோரின் அற்புதமான நடிப்பு தூக்கி நிறுத்துகிறது .

குடும்ப காட்சியமைப்புகள் படத்தின் மிகப்பெரிய பலம். . அமைதியாக, மிக அழகாக வில்லத்தனம் பண்ணுவதில் பிரின்சிபால் கண்ணன் கதாபாத்திரம் .

கிஷோரின் மனைவியாக யதார்த்தமான நடிப்பைக் காட்டும் சுபத்ரா,என அசத்தியிருக்கிறார்கள்.

இந்த படத்தின் இயக்குனர் ஒரு பெரும் மாயாஜாலத்தையே நிகழ்த்திய இருக்கிறார் . படத்தின் கிளைமாக்ஸ்சில கொடுக்கும் பாடல் விவரிக்க வார்த்தைகளே கிடையாது. படத்தில் வரும் ஒவ்வொரு வசனங்களும் மிகவும் அருமையாக இருக்கிறது. யதார்த்தமும் அழகியலும் கலந்த இப்படம், .’மெல்லிசை” அப்பாவின் கனவை நிறைவேற்றும் மகள், மகனின் எதிர்காலத்தை நிர்ணயிக்கும் அம்மா,என ஒரு அன்பான குடும்பம். அழகான குடும்பம். நம் கண் முன்னே விரிகிறது.

பி .டி மாஸ்டர் ராஜனாக கிஷோர், மேக்ஸ் டீச்சர் வித்யாவாக சுபத்ரா, இவரது மகனாக தினேஷ், மற்றும் யாழினி ,இவர்களைசுற்றி சொல்வதும் கதை தான் மெல்லிசை” ஒவ்வொரு ஆணும் பெண்ணும் உள்ளே மறைத்து வைத்திருக்கும் திறமையையும் ஆசையையும் தங்களுடன் இணைத்து பார்க்கும்படியான திரைப்படம் தான் ‘மெல்லிசை’” –

மனதை தொடும் நல்லுணர்வுகளுடன் வாழ்க்கையின் ஒரு பகுதியை திரையில் காட்டி இருக்கிறது இருக்கும் ‘மெல்லிசை’ மகளின் ஆசைக்காக ரியால்ட் டி,ஷோவில் கலந்து கொண்ட கிஷோர் ,அங்கும் தோல்வி அடைகிறார். பி .டி மாஸ்டராக வேலை செய்யும் பள்ளியில் இருந்தும் விரட்டப்படுகிறார். தோல்வியடைந்த சோர்ந்து போன தனது தந்தையை பார்க்க விரும்பாத அவனது எட்டு வயது மகள், உலகம் கொண்டாடும் ஒரு ஹீரோவாக அவனது வாழ்வை மாற்றுகிறாள்.

அது எப்படி ? தந்தையும் மகளும் இணைந்து உணர்வுப்பூர்வமாக தொடங்கும் இந்த கதை படம் முடியும் வரை அந்த பந்தத்தை இயக்குனர் அற்புதமாக சித்தரிக்கிறார்.

நடிகர் கிஷோர். பெரும்பாலும் அவரை கடினமான, வலுவான கதாபாத்திரங்களில்தான் பார்த்திருக்கிறோம். அதில் இருந்து முற்றிலும் வேறுபட்ட கிஷோராக அவரின் மிருதுவான, அமைதியான பி டி மாஸ்டர் ராஜனாக சூப்பராக நடித்திருக்கிறார் நடிகர்கள் தங்கள் நடிப்பால் கதைக்கு உயிர் கொடுத்துள்ளனர்.

எல்லா கதாபாத்திரங்களையும் இயல்பாக வடிவமைத்து இருப்பது இயக்குனரின் திறமை

நடிகர் & நடிகைகள்
கிஷோர்

ஒரு சாதாரண மனிதனின் உணர்வுகளைச் சிறப்பாக வெளிப்படுத்தியுள்ளார். 22 ஆண்டுகளுக்கும் மேலாக குணச்சித்திர மற்றும் கதையின் நாயகனாக சிறப்பான நடிப்பை வழங்கி வரும் இவர் இந்த “மெல்லிசை” படத்திலும் அவரது பங்களிப்பு மிகவும் ரசிக்க வைத்தது சாதாரண மனிதர்களின் வாழ்க்கையை மையமாகக் கொண்ட ஒரு கதையாக அமைந்துள்ளதால். இந்தத் கதாபாத்திரத்தில் சாதாரண மனிதர்களின் உணர்வுகளை எதார்த்தமாக பிரதிபலித்துள்ளார்.
நம் கண் முன்னே பி.டி மாஸ்டர்ராஜன் தான் தெரிகிறார்.

பி .டி மாஸ்டர் ராஜன் என்ற கதாபாத்திரத்தில் ஒரு நடுத்தர மக்களின் பிரதிநிதியாக இந்த படத்தில் ஸ்கோர் செய்துள்ளார். சின்ன வயதில் அவர் பாடகர் ஆக வேண்டும் என்ற கனவை புதைத்து விட்டதால், தன் மகள் கிஷோரின் திறமையை உணர்ந்து ,ஒரு ரியாலிட்டி ஷோவில் பாட வைக்கிறார். அதன் மூலம் பிரபலமாகும் கிஷோருக்கு, பி.டி மாஸ்டராக இருக்கும் பொழுது புதிதாக வரும் கண்ணன் பிரின்ஸ்பால் இடைஞ்சல் ஏற்படுகிறது.

அதைஎல்லாம் தாண்டி அவர் ஜெயித்தாரா? தன் மகளின் கனவை நிறைவேற்றினாரா? தன் மனைவிக்கு நல்ல கணவனாக வாழ்ந்தாரா? தன் மகன் தீபக்கு நல்ல தந்தையாக இருந்தாரா? என்பதை நவரசத்துடன் கலந்து சொல்லி இருக்கிறது இந்த “மெல்லிசை” ராஜன் என்ற கதாபாத்திரத்திற்கு பொருந்தி இருக்கிறார் கிஷோர்.

சுபத்ரா

பல படங்களில் துணை வேடங்களில் நடித்துள்ள, சுபத்ராவுக்கு இந்த படத்தில் நல்ல ஒரு கதாநாயகி வேடம் கிடைத்திருக்கிறது. மிடில் கிளாஸ் குடும்பத்து தலைவியாக வித்யா என்ற கதாபாத்திரத்தில் நல்லதொரு நடிப்பை வழங்கி இருக்கிறார். மகன் தீபக்கை, ஐ .டி கம்பெனியில் சேர வைப்பதும், கிஷோருக்கு வேலை போன பிறகு அவரை பொறுப்பான கணவனாக திருத்துவதும், பள்ளியில் பிரின்ஸ்பால் கண்ணனிடம் சென்று ராஜன் மறுபடியும் பி.டி மாஸ்டராக வரவேண்டும் என்ற கண்டிஷன் போடுவதும் ,என சிறந்த நடி ப்பால் கொடி கட்டி பறக்கிறார் சுபத்ரா .

ஜஸ்வந்த்

தீபக், என்ற கதாபாத்திரத்தில் கிஷோரின் மகனாக வந்து சின்ன வயதிலேயே பிரில்லியண்டாக ஐ.டி கம்பெனியில் சேர்ந்து மாதம் 45 ஆயிரம் சம்பாதித்து, அம்மா சொல்வதை மட்டும் கேட்டுக் கொண்டு நடக்கும் அந்த தீபக்அப்பா இறந்த பிறகு உருகுவது, அப்பா, அம்மாவும், வாழ்ந்த வீட்டை மீட்க நினைப்பது, குணாவிடம் இரண்டு வருஷம் டைம் கேட்டு அதை மீட்கும் அந்த கதாபாத்திரம் சிறப்பாக இருக்கிறது ஜஸ்வந்துக்கு பாராட்டு .

தணன்யா

மெல்லிசை படத்தில் மிகப்பெரிய முக்கியமான கதாபாத்திரம் தனன்யா, படத்தில் யாழினியாக, உருண்டை விழிகள், அழகான நடிப்பு அப்பாவுக்கு மகளுக்குமான அந்த பந்தம். அப்பாவின் பாடலைக் கேட்டு அப்பாவை ரியாலிட்டி ஷோவில் பாட வைப்பது,அம்மா அப்பா இறந்த பிறகு அந்த வீட்டை மீட்க குணாவிடம் இரண்டு வருடம் டைம் கேட்கும் அந்த மகளின் பாசம் குடும்பத்தில் ஒற்றுமை, என யாழினி இந்த படத்தில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகிறார். ஒவ்வொரு வீட்டிலும் மகள் என்பது இறைவன் கொடுத்த வரம் .அவள் அப்பாவின் கனவை நிறைவேற்ற எப்படி துடிக்கிறார் .படத்தின் கடைசியில் தன் அப்பாவின் பாடலை பாடி நிறைவு செய்யும் அந்த காட்சிகள் அற்புதமாக இருக்கிறது. தணன்யாவுக்கு சிறப்பான எதிர்காலம் இருக்கிறது.

ஹரிஷ் உத்தமன் குணா ,என்ற கதாபாத்திரத்தில் அமைதியாக வந்து கடைசியில் கிஷோர் வீட்டை தன் மகளுக்கு இரண்டு வருடம் பொறுத்திருந்து உதவி செய்யும் கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்திருக்கிறார்.

மற்றும் கண்ணன் பாரதி, ரவி ஏழுமலை ஆகியோரும் சிறப்பாக நடித்திருக்கிறார்கள்.

இயக்குனர்

வெப்பம் குளிர் மழை’ படத்தை அடுத்து திரவ் இயக்கி உள்ள’மெல்லிசை’ படம், சாதாரண மனிதர்களின் கனவுகள் மற்றும் உண்மையான உணர்வுகளைப் பேசியிருக்கிறது. ஒரு உணர்வுபூர்வமான படைப்பாக வந்திருக்கிறது. 2026-ன் தொடக்கத்தில் இந்த படம், சிறப்பான நடிப்பையும், அழுத்தமான கதைக்களத்தையும் கொண்ட, மெல்லிசை ஒரு அற்புதமான வாழ்வியல் சார்ந்த படத்தை சிறப்பாக கொடுத்திருக்கிறார் இயக்குனர் . அப்பா, மகன், மகள், மனைவி என ஒரு குடும்பத்தைச் சார்ந்த கதையை அதில் ரியாலிட்டி ஷோ, ஐ.டி கம்பெனி, விபத்து, மகளின் கனவு, அம்மாவின் கனவு, என அனைத்தையும் ரசிக்கும்படி கொடுத்திருக்கிறார். தெளிவான திரைக்கதை, படத்திற்கு மிகப்பெரிய பலம்.

இசையமைப்பாளர்

மனதை கவரும் பாடல்களையும், பின்னணி இசையையும், சங்கர் ரங்கராஜன் கொடுத்துள்ளார். இவரின் பாடல்களில் சின்ன சின்ன சிறகுகள் பாடலும், கண்ணம்மா பாடலும் , முதல் மொட்டு பாடலும் ரசிக்க வைக்கிறது சங்கர் ரங்கராஜன் இசையும், திரவத்தின் பாடல் வரிகளும் ரசிக்க வைக்கிறது.

தேவராஜ் புகழேந்தியின் ஒளிப்பதிவு படத்தைரிச்சாக காட்டி இருக்கிறது. அற்புதமாக படமாக்கி இருக்கிறார்.

இயக்குனர் திரவ் பட தொகுப்பாளர். படத்தை கச்சிதமாக செதுக்கி இருக்கிறார்

Sound design: Shamanth Nag, Dhirav

Sound Mixing: M Ramesh Kumar

பிரேம் நடன இயக்குனராக பணிபுரிந்து இருக்கிறார் . பாடல் காட்சிகளில் நடனம் சிறப்பாக இருக்கிறது.

DI: Firefox

Colorist: Rajesh, Srikkanth Raghu

Stunt: Stunner Sam

Direction team: Jacob Sambath, Aswath, Shivaramkrishnan

படத்தில் ஆர்ட் டைரக்டர் ,பணி அற்புதமாக இருக்கிறது .அந்த ரியாலிட்டி ஷோ அரங்க அமைப்புகளும், கிஷோர் வாழ்ந்த வீடு ,சிதைந்த பிறகும் , காட்டப்படும் காட்சிகள் கண் முன்னே நிற்கிறது.

மற்றும் படத்தின் ஒப்பனையாளர், ஆடை வடிவமைப்பாளர், தயாரிப்பு நிர்வாகி, என அனைவரும் படத்திற்காக உழைத்திருக்கிறார்கள் அவர்களுக்கும் வாழ்த்துக்கள்.

மக்கள் தொடர்பாளர்கள் திரு.சுரேஷ் சந்திரா அவர்கள் திரு.அப்துல்நாசர் அவர்கள் .நல்ல முறையில் படத்தை மக்களிடம் கொண்டு போய் சேர்த்து இருக்கிறார்கள் அவர்களுக்கு வாழ்த்துக்கள்🌷

வெப்பம் குளிர் மழை’ புகழ் திரவ் இயக்கத்தில், ‘மெல்லிசை’ படம், அப்பா, மகள் அம்மா, மகன், உறவுகளை மெல்லிய வசந்தமான உணர்வுகளை தூண்டி இருக்கிறது. தரமான படைப்பு. குடும்பத்தோடு காண வேண்டிய படைப்பு. இந்தப் படம் ஒவ்வொரு மனிதனுக்குள் இருக்கும் கனவுகளைப் பற்றி பேசுகிறது. குடும்ப உறவுகளைப் பற்றி பேசுகிறது. அன்பைத்தான் இந்த உலகம் போற்ற வேண்டும். நேர்மறையான எண்ணங்களை விதைக்க வேண்டும் எதிர்மறையான எண்ணங்களை விளக்க வேண்டும். என்று சொல்கிறது இந்த” மெல்லிசை” குடும்ப உறவுகள் இருக்கும் பொழுது கண்டு கொள்ளாமல் இருந்துவிட்டு பிரிந்த பிறகு கண்ணீர் விட்டு என்ன பயன் அதனால் இருக்கும் பொழுதே ஒவ்வொரு உள்ளங்களையும் நேசியுங்கள் இல்லங்களில் வசந்தம் தலைக்கும் என்பதை சொல்கிறது இந்த படம். இயக்குனருக்கு பாராட்டுக்கள் 🙏