ராட்ட திரை விமர்சனம்

ரேட்டிங் 4-5/5

விசைத்தறி நெசவாளர்களின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு, உருவாக்கபட்ட திரைப்படம். “ராட்ட”

சக்திவேல் நாகப்பன் எழுதி இயக்கி, ஹெலனுடன் இணைந்து நடிக்கும் இந்தப் படத்தை FMS Medias தயாரிக்கிறது. இது ‘U’ சான்றிதழ் பெற்ற, குடும்பத்துடன் பார்க்கக்கூடிய திரைப்படமாகும்.
ராட்ட (Raatta)

கதை களம்:

விசைத்தறி தொழிலை மையமாக வைத்து ஒரு வாழ்வியல் திரைப்படத்தைக் காதலோடு கண்ணியம் கலந்து கர்வத்தோடு எடுத்திருப்பது இது திரைச்சமூகம் பெருமைக் கொள்ள வேண்டிய விஷயம்.

திருமணத்திற்கு முன் சேமிப்பு என்ற பழக்கம் இல்லாத நாயகன் திருமணத்திற்கு பின் அத்தியாவசிய தேவைக்கு கடன் வாங்க, அதன் மூலம் அவன் வாழ்வில் வரக்கூடிய மாற்றம், தன் கணவனின் சிரமத்தை புரிந்த மனைவி கணவனை எவ்வாறு தேற்றி வாழ்க்கையில் வெற்றி பெற இணைந்து பயணிக்கிறார்கள்.
இறுதியில் வெற்றி பெற்றார்களா? இல்லையா? என்பது தான் இத்திரைப்படத்தின் மையக்கரு.

“நாயகன் சக்திவேல் நாகப்பன்

கதிர் என்ற கதாபாத்திரத்தில் தறிபட்டறையில் வேலை செய்யும் தொழிலாளியாக வெள்ளந்தியாக நடித்திருக்கிறார். காதல், அழுகை, முதலாளியிடம் பணிவு , அம்மாவிடம் பாசம், மனைவியை நேசி என்று கதாநாயகனுக்குரிய அத்தனை . அம்சங்களை வெளிக்காட்டி இருக்கிறார்.

நாயகி ஹெலன்

“வேணி” என்ற கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்திருக்கிறார். கணவன் சோர்ந்து இருக்கும் போதெல்லாம் அவருக்கு தைரியம் சொல்லி உற்சாகமூட்டும் அவர் நடிப்பு எதார்த்தமாக இருந்தது. பாடல் காட்சிகளில் கலக்கலாக நடித்திருந்தார்.

சித்தா தர்ஷன்,

நாயகனும், நாயகியும் வேலை செய்யும் பட்டறைக்கு ஓனராக வருகிறார்.
நாயகி ஹெலன் மீது காம பார்வை செலுத்துகிறார். அவர்தான் வில்லனாக வருவார் என்று நினைத்திருந்தால் அவரை நல்லவனாக காட்டி, நாயகன் சோர்ந்து இருக்கும் பொழுது நாயகனுக்கு உதவி செய்யும் கதாபாத்திரத்தில் சித்தா தர்ஷன் நடித்திருக்கிறார். அவர் நடிப்பு சிறப்பு.

சாப்ளின் பாலு,

மேனேஜராக வந்து நன்றாக புரனி பேசுகிறார். பிறகு நாயகனுக்கு ஆறுதல் சொல்கிறார். அவர் வரும் காட்சிகளில் கலகலப்பாக இருக்கிறது.

மற்றும் சந்திரன், கிருஷ்ணன், முத்துராஜா, பம்பாய் சுப்ரமணி,கல்பனா, வசந்தி, ஜெயஸ்ரீ , ரத்னா, செல்லம்மா மற்றும் பலர் நடித்துள்ளார்கள்.
அனைவரும் சிறப்பாக நடித்திருக்கிறார்கள்.

குமாரபாளையம் சுற்று வட்டார பகுதியில் படமாக்கப்பட்டுள்ளது .
லொகேஷன்கள் கண்களுக்கு குளிர்ச்சியாக இருக்கிறது .

படம் முழுக்க, கிராமத்து மனிதர்களின் இயல்பான நடிப்பும், வெள்ளந்தியான பேச்சும் ,ஒரு சிரமம் வந்தால் உதவி செய்யும் நல்ல எண்ணமும் ,படம் முழுக்க பரவி கிடந்தது.

படம் பார்ப்பவர்களுக்கு ஒரு பாசிடிவ் வைப் கிடைக்கும்படி
குடும்பப்படமாக இந்த “ராட்ட” திரைப்படம் வெளிவந்துள்ளது.

இந்த படத்தில் அரசியல் பேசல.. ஆன்மீகம் பேசல … ஜாதி மதம் பேசல … வன்முறை பேசல… மது போதை பீடி சிகரெட் கலாச்சார சீர் கேடு பற்றி பேசல…

சண்டை சச்சரவை பேசல.. போலீஸ் அடிதடி பேசல.. துப்பாக்கி கத்தி இதுபோன்று ஆயுதம் காட்டல…
இரத்தம் தெறிக்கல… கொலை கொள்ளை கற்பழிப்பு நடக்கல….

ஆனால்…வாழ்வியலை நயம்பட பேசி தற்போதுள்ள வாழ்க்கை நெறிமுறையை யதார்த்தமான திரைக்கதையில் காட்டும் திரைப்படம்தான் “ராட்ட”

இத்திரைப்படத்திற்கு கேமரா வெற்றி,
எடிட்டிங் லோகேஷ், மணிகிருஷ்ணன் இசையில்
பாடல்கள் இரசிக்க வைக்கிறது .
வாடா மல்லி பாடல்,
செவ்வரளி பாடல் இனிமை!

இந்த திரைப்படத்தின் நிருவாகத் தயாரிப்பாளர்
முனைவர் மூதுரை பொய்யாமொழி உலகமெங்கும் வெளியிடும் பணிகளில் மும்முரமாக செயல்பட்டு படத்தின் வெற்றிக்கு மிகபெரிய அளவில் பலம் சேர்த்து இருக்கிறார்.

இந்த படம் மாபெரும் வெற்றியடைய, கிளாசிக் சினிமா வாழ்த்துகிறது🙏🌷