ரெட் லேபிள்”திரை விமர்சனம்

ரேட்டிங் 4/5

Banner: REVGEN FILM FACTORY

கே.ஆர்.வினோத் இயக்கத்தில், ரெவ்ஜென் பிலிம் பேக்டரி சார்பில் லெனின் தயாரித்துள்ள படம் “ரெட் லேபிள். கதாநாயகனாக லெனின், நாயகியாக அஸ்மின் நடித்துள்ள இப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் இயக்குநர் ஆர். வி. உதயகுமார், முனிஷ்காந்த் . ,இயக்குநர் அனுமோகன், தருண், கெவின், கார்மேகம் சசி,அனுஷா ஆகியோரும் நடித்துள்ளனர்.

கதை களம்

பாண்டி, என்கிற அந்த ரவுடி மாணவனைப் பார்த்து கல்லூரியே அஞ்சி ஒதுங்குகிறது. அவன் செய்யும் அட்டூழியங்களைக் கண்டு தேர்வு எழுதும் போது காப்பி அடித்த பாண்டியை “யசோதா டீச்சர்” மனம் கொதித்து நடவடிக்கை எடுக்கிறார்.

மற்றவர்கள் தேர்வு பேப்பரை பிடுங்கி டீச்சரையை தேர்வு எழுத வைக்கலாம் பாண்டி”என்ன ஒரு வில்லத்தனம்.

யசோதாவை மீண்டும் வம்புக்கு இருக்கிறான் பாண்டி. அங்கு வந்த ரோஹித் தட்டி கேட்க, இருவருக்கும் மோதல் ஏற்படுகிறது

பாண்டியன் அப்பா எம்எல்ஏ உதயகுமார் மகனுக்கு நல்ல புத்திமதி சொல்லித் தராமல் நீ தான் என் அரசியல் வாரிசு கல்லூரியில் நல்லவனாக நெடி என்று காப்பீடு நாடகம் சொல்லித் தருகிறார் “என்ன ஒரு தந்தையின் உபதேசனை”

பாண்டியன் கூட்டத்தை ஒடுக்க எச். ஓ. டி பாரதி இதற்கு முன்பு கல்லூரியில் இருந்த கதிர் உதவியை நாடுகிறார்.

கதிர் மீது காவல்துறையால் பதிவு செய்யப்பட்ட வழக்குகள் இருப்பதால் கதிர் மறுக்கிறார்.

அதற்குப் பிறகு பாண்டியனின் கூட்டத்தை அளக்க ரோகித்தை கல்லூரி தேர்தலில் நிற்பதற்கு தைரியம் கொடுக்கிறார்..

கல்லூரி தேர்தலில் கதிர், பாண்டி கொட்டத்தை அடக்க, ரோஹித் கல்லூரியில் சேர்மன் ஆகிறார்.

அதற்கு பிறகு கதிர்,பவி காதலிக்க பவியின், அப்பா ஈரோடு MLA உதயகுமார் சதிசெய்து, மகள் பவி”யை கஞ்சா குடிக்கு அடிமையான கார்மேகத்துக்கு நிச்சயம் செய்கிறார்.

நான்கு வழக்குகளில் சிக்கி இருக்கும் நாயகன் கதிர், இன்னும் ஒரு வழக்கில் சிக்கினால் அடுத்து குண்டாஸில் போட துடிக்கும் இன்ஸ்பெக்டர் கெவின் .

கார்மேகம் பாண்டியன் ஆலோசனைப்படி,கதிரை தீர்த்து கட்ட நினைக்கிறான்.

கார்மேகம் ஈரோடு எம்எல்ஏ பாண்டி இவர்கள் சூழ்ச்சி வலையில் கதிர் சிக்கினாரா?

அல்லது அந்த மூன்று பேரையும் இவர் தீர்த்து கட்டினாரா?

இதன் பிறகு கதிர் பவி, இருவரும் இணைந்தார்களா?

கதிர் ஐந்தாவது வழக்கில் சிக்கினா ரா?

என்பதை விறுவிறுப்பாக சொல்லியுள்ளார் இயக்குனர்.

நாயகன் லெனின்

படு ஸ்டைலான ஹீரோக்களில் ஒருவராக லெனின் அறிமுகமாகி, அவர் கண்களின் வழியாக நடிப்பு இறுக்கமான முகபாவம், படத்தின் கேரக்ட்டருடன் கச்சிதமாகப் பொருந்திப் போகிறது .

தன் நண்பன் HOD பாரதி, யசோதா இருவருக்காக, ரோஹித்தை கல்லூரி தேர்தலில் வெற்றி பெற வைக்க வரும் போது, செம கெத்து,ஜீனியர் ரோஹித் கட்டி பிடிக்க வரும் போது, கை கொடுக்கும் தெனாவட்டு, இண்டர் வெல் பிளாக் கில் வரும் சண்டை காட்சி, கார் மேகம், அவரது ஆட்களும் சுத்து போட வரும் போது ஊர் மக்கள் காப்பாற்றும் காட்சி, இன்னும் ஒரு கேஸ்ல மாட்டினா குண்டாஸ் என்று இன்ஸ்பெக்டர் மிரட்டும் போது பார்க்கலாம் என்று ஸ்டைலாகபோவது, பிரன்ட்ஸிப்புக்காக என்ன வேணும் ணாலும் பண்ணுவான் இந்த கதிர் ,என்று நடிப்பில் கொடிகட்டி பறக்கிறார்.

இடைவேளைக்கு பிறகு அவர் வழக்கில் இருந்து தப்பிப்பதற்கு போடும் ஐடியாக்கள், அவர் நடிப்பிலும், படத்தின் கதைக்களமும் விறுவிறுப்பாக இருக்கிறது.

நாயகி அஸ்மின்

பவி”என்ற கதாபாத்திரத்தில் எம்.எல்.ஏ உதயகுமார் மகளாக, அடாவடி பாண்டியன் சகோதரியாக, நடித்திருக்கிறார். காதலனுக்காக ,அவர் செய்யும் தியாகம். காதலனை கைப்பிடித்தே தீருவது, என்று உறுதியாக இருப்பது இப்படி எல்லா இடங்களிலும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்.

ஆர். வி உதயகுமார்

ஈரோடு எம்.எல்.ஏவாக சிறந்த வில்லத்தனத்தை வெளிப்படுத்தி இருக்கிறார்.
வீடு தேடி வரும் சைக்கிள் கம்பெனி ஓனர் சிவனேசனை,ஸ்வீட் எடுக்க சொல்லி போலீஸ் கிட்ட மாட்ட வைப்பது ,மகளை கதிரிடமிருந்து பிரிக்க நயவஞ்சகத்தனம் செய்வது ,என அமைதியாக இருந்து அருமையான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்.

அனு மோகன், எம்.எல்.ஏ பிஏவாக வந்து குஞ்சு ,என்ற கதாபாத்திரத்தில் கலகலப்பை ஏற்படுத்துகிறார். மற்றும் முனீஸ் காந்த் சிறப்பு தோற்றத்தில் அசத்தியிருக்கிறார் .

கெவின், இன்ஸ்பெக்டர் வேஷத்தில் வந்து கதிரை, எப்படியாவது ஐந்தாவது கேஸில் மாட்ட வைப்பது, குண்டாஸில் போடலாம் .என்று துடிக்கும் சிறப்பான நடிப்பும்,

பாண்டியாக நடித்திருக்கும் அஜயும், கார்மேகமாக நடித்திருக்கும் சசிகுமாரும் ,சரியான வில்லத்தனத்தை பதிவு செய்திருக்கிறார்கள்.

யசோதா” சைக்காலஜி கல் புரொபஸர் வேடத்தில் அனுஷா சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்.

பொன் பார்த்திபன் கதை எழுதி இருக்கிறார். முதல் பாதியில் வழக்கமான கல்லூரி தேர்வு, என்றாலும் இடைவேளைக்கு பிறகு படம் ஜெட் வேகத்தில் பறக்கிறது.

வெறுமனே பார்வையாளர்களைப் பயமுறுத்துவதை மட்டுமே குறிக்கோளாகக் கொள்ளாமல் குற்றத்தையும், குற்றத்துக்கு முந்தைய குற்றவாளியின் மனநிலையையும் ஆராய்கிற விதத்தில் இவரின் பொறுப்புள்ள எழுத்து பாராட்டுக்குரியது.

காவல்துறை அதிகாரி யாக சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்.

கே.ஆர் .வினோத் இயக்கி இருக்கிறார். இவர்” தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும்” என்ற படத்தில் உதவி இயக்குனராக இருந்து, பல படங்களில் உதவி இயக்குனராக இருந்த அனுபவம் நன்றாக கை கொடுத்திருக்கிறது. படத்தை நேர்கோட்டில் கொண்டு சென்று, கதாபாத்திரங்களை சிறப்பாக நடிக்க வைத்து, கிளைமாக்ஸ் எதிர்பாராத திருப்பத்தை ஏற்படுத்தி, படத்தை வெற்றியடைய செய்திருக்கிறார்.
இடைவேளைக்கு பிறகு, நாயகன் செய்யும் தந்திரமும், புத்திசாலித்தனம் படத்தின் விறுவிறுப்புக்கு, கை கொடுக்கிறது.

இடை வேளைக்கு பிறகு, தொடங்கும் காட்சியிலிருந்தே கணிக்க முடியாத காட்சியமைப்பும், பரபரப்பான திரைக்கதையும் சுவாரஸ்யமான பார்ட்னர்ஷிப்பை போட்டுக் கொண்டு படம் முழுக்கவே நம்மை இருக்கையின் நுனியிலேயே அமர வைத்திருக்கிறது.

காலிஸ் மேனன் இசையில் பாடல்கள் ரசிக்க வைக்கிறது
காட்சியின் தன்மையைப் பிரதிபலித்து, எப்படி தப்பிப் பார்கள் தெரிவதற்கு முன்பே வில்லனாக அலற வைத்திருக்கிறது பின்னணி இசை. இசை தேவையில்லையென நிசப்தமாக அவர்விட்ட இடங்களும் காட்சியின் அழுத்தத்தை மேலும் கூட்டி இருக்கின்றன. திடீர் திடீரென வரும் சவுண்ட் எஃபெக்ட்ஸ் பதற்றமடையச் செய்கிறது.

சதீஷ் மாரியப்பன் ஒளிப்பதிவு, கல்லூரி உள்ளே நடக்கும் கதைக்களம் என்றாலும், அதை கண்ணுக்கு குளிர்ச்சியாக காட்டியிருக்கிறார், கதையின் சூழல் தெளிவாக மனதில் பதியும் வகையில் கதையோடு ஒன்ற வைத்திருக்கும் ஒளிப்பதிவு சிறப்பு.

லாரன்ஸ் கிஷோர் படத்தொகுப்பு இரண்டு மணி நேரத்துக்குள் கச்சிதமாக படத்தை தொகுத்திருக்கிறார். எந்த இடத்திலும் படம் லேக்ஆகவில்லை.
படத்தொகுப்பு திரைக்கதையின் வேகத்தைக் கூட்டியிருக்கிறது

பின்னணி பாடி இருக்கும் சின்மயி,
ஸ்ரீ பட ,வேல்முருகன்,
கவிதா கோபி குரல்கள் ரசிக்க வைக்கிறது.

பிரகதீஸ்வரன், ஆர்ட் டைரக்டராக பணிபுரிந்து இருக்கிறார், கல்லூரி தேர்தல் களம், மற்றும் கிளைமாக்ஸ் ல் -நடக்கும் காட்சி கல்லூரி கல்சுரல் விழா, என்றுஆர்ட் டைரக்டர் பணி நன்றாக இருக்கிறது.
போந்தம் பிரதீப், சண்டை பயிற்சி அமைத்திருக்கிறார்,
கிளைமாக்ஸ் சண்டைக்காட்சி அசத்தல்.

மக்கள் தொடர்பாளர்கள் ஸ்ரீதர் ராஜு ,உதய் குமார், ஹரி பாபு
மூவரும் படத்தை சிறப்பாக மக்களிடம் கொண்டு போய் சேர்த்திருக்கிறார்கள் இந்த படம் ஒரு வெற்றி பட்டியலில் இடம் பிடிக்கும்

கிளாசிக் சினிமாவின் வாழ்த்துக்கள்🌷