உயிருள்ள வரை உஷா*ரீ ரீலீஸ்

சகலகலாவல்லவன்’டி ராஜேந்தர் இயக்கத்தில் நளினி நாயகியாக அறிமுகமான படம், ‘உயிருள்ளவரை உஷா’. கங்கா, ராதா ரவி, எஸ்.எஸ்.சந்திரன், கவுண்டமணி, சரிதா உள்பட பலர் நடித்திருந்தனர். 1983-ம் ஆண்டு வெளியான இப்படம் சூப்பர் ஹிட்டானது.

படத்தில் இடம் பெற்ற இந்திரலோகத்து சுந்தரி, வைகைகரை காற்றே நில்லு, இதயமதை கோவிலென்றேன் உள்பட அனைத்து பாடல்களும் வெற்றிபெற்றன. இந்நிலையில், இப்படம் 43 வருடங்களுக்குப் பிறகு 4கே டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் பிப்.13-ம் தேதி மீண்டும் ரிலீஸ் ஆகிறது. இதற்கான விழா சென்னையில் நடைபெற்றது.

இந்த விழாவில்
தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு, இயக்குநர் விக்ரமன், ஆர்.கே.செல்வமணி, ராதாரவி, நளினி ஆகியோர் கலந்து கொண்டனர். விழாவில் டி.ராஜேந்தர் பேசும்போது, “இப்படத்தின் படப்பிடிப்பை முடித்துவிட்டு ஒரிஜினல் காப்பியை பைனான்சியர்களுக்கு போட்டு காண்பித்தேன்.

ஜெமினி லேபில் படத்தைப் பார்த்து விட்டு, நளினி, கதாநாயகியாக சரியாக வரமாட்டார்; அவருக்கு ‘நீட்டு முகம்’ என்று அவரை மாற்றச் சொன்னார்கள். ஆனால், அவரை கதாநாயகியாக்கி படம் எடுத்தேன். 4 ஆயிரம் அடி பிலிம் வாங்கி, நீட்டு முகம் என்ற சொன்னவர்களிடம் அவரை ‘நீட்’ முகமாக மாற்றினேன். நளினியின் தலைமுடியை விரித்துப் போட வைத்து, பேக் லைட்டில் வைத்து படமாக்கினேன்.

அந்த பேக் லைட் தான் என் கதாநாயகியின் ஹைலைட். பிறகு அவர்களுக்கு மீண்டும் படம் போட்டுக் காண்பித்தேன். படத்தைப் பார்த்து விட்டு, நீட்டு முகம் என்று யார் சொன்னார்களோ, அவர்களே கைதட்டினார்கள்.

இதை என் திறமைக்காகவோ, என் தலைக் கணத்துக்காகவோ சொல்லவில்லை. வாழ்க்கையில் யார், எப்போது, எப்படி வருவார்கள் என்பது யாருக்கும் தெரியாது, ஆண்டவனுக்குத்தான் தெரியும் என்பதற்காகத்தான் சொல்கிறேன்” என்றார்.

செயின் ஜெயபால்
கதாபாத்திரத்துக்கு சூப்பர் ஸ்டார் ரஜினி சார் நடிக்க கேட்டேன்
அவர்” ஸாரி டி.ஆர்
நான் பெரிய கம்பெனியில் மட்டும் தான் நடிப்பேன்
என்று சொல்லிவிட்டார்.
அநனால் நானே நடித்தேன்.
ரஜினி சார் மட்டும் நடித்திருந்தால்.
. சும்மா ஷ்ஷ் என்று இருக்கும்.

என் மகன் சிம்பு,
அதனால் எனக்கு தெம்பு,
நான் தேடிபோக மாட்டேன் வம்பு,
என்று பேசினார்

இப்படத்தின் நிகழ்வில் ஆர்கே செல்வமணி பேசும் போது….

“நான் இயக்குனராக இருந்து தயாரிப்பாளராக மாறி ‘செம்பருத்தி’ படத்தைத் தயாரிக்கிறேன். இந்த திரையுலகம் எப்படி என்றால், ஒருவர் மாட்டினால் அவரைக் காலி செய்துவிடும். நான் அந்தப் படத்தை சிட்டி, என்எஸ்சி, டிடி ஆகிய ஏரியாக்களுக்கு ஐடி பாலகிருஷ்ணன் என்பவரிடம் 40 லட்ச ரூபாய்க்கு எம்ஜி போட்டு டிஸ்டிரிபியூஷன் கொடுத்தேன்.

40 லட்சத்தில் பப்ளிசிட்டி 4 லட்சம் போக திரும்ப 36 லட்சம் தொகை எனக்குக் கொடுத்திருக்கிறார். ஆனால், படம் வசூல் செய்யவில்லை, 6 லட்சம் திருப்பித் தர வேண்டும் என்று கேட்டார். அடுத்த படம் செய்வதற்கு எனக்கு ‘ரெட்’ என்ற செக் வைத்திருந்தார்கள். அது குறித்த பஞ்சாயத்து வினியோகஸ்தர் அலுவலகத்தில் நடந்தது. அப்போது அங்கு வேறு வேலைக்காக வந்திருந்த டி ராஜேந்தர் எனக்காகப் பேசினார்.

என்ன பிரச்னை என்று கேட்டவரிடம், பிரச்னையைச் சொன்னேன். உடனே டி ராஜேந்தர், “ஒரு கலைஞனை ஏமாற்றாதீர்கள், உருப்பட மாட்டீர்கள் என்றார். மேலும், ‘எங்க வீட்டு வேலன்’ படமும் ‘செம்பருத்தி’ படமும் ஒரே நாளில் வெளியானது. ஒரு தியேட்டர்ல என்னோட ‘எங்க வீட்டு வேலன்’ படம் இரண்டு லட்சம் முதல் இரண்டரை லட்சம் வரை வசூல் செய்தது. ‘செம்பருத்தி’ சில இடங்களில் இதை விட அதிகமாவும், சில இடங்களில் குறைவாகவும் வசூல் செய்திருக்கும்.

‘எங்க வீட்டு வேலன்’ படம் சிட்டி, செங்கல்பட்டு, டிடி ஏரியாக்களில் இரண்டே கால் கோடி ரூபாய் வசூல் செய்திருக்கிறது. ‘செம்பருத்தி’ படம் இரண்டு கோடி அல்லது இரண்டரை கோடி வசூல் செய்திருக்கும். இவரை ஏமாற்றினால், வாழ்க்கையில் உருப்பட மாட்டீர்கள், என்று சொன்னார்.

அப்போது வினியோக சங்கத் தலைவராக இருந்த சிந்தாமணி முருகேசனிடம் இந்த பிரச்சனையிலிருந்து விடுவியுங்கள் என்று கேட்டேன். கடைசியில் படம் லாபமும் இல்லை, நஷ்டமும் இல்லை என்று முடித்து வைத்தார்கள்.

ஆனால், அதன் பின் இரண்டு வருடங்களில் அந்த வினியோகஸ்தர் இறந்துவிட்டார். அந்த பாலகிருஷ்ணன் என்எஸ்சி ஏரியாவின் மிகப் பெரிய டிஸ்ட்ரிபியூட்டர். எனது ‘புலன் விசாரணை’ படத்தை வினியோகித்தவர் அவர்தான். என் மீது தவறு இல்லை நியாயம் இருக்கிறது என்று தெரிந்ததும் எனக்காகக் குரல் கொடுத்தவர் டி ராஜேந்தர்,” என்று பேசினார்.

2 கோடி வசூலுக்கு 30 லட்சம் மட்டுமே கணக்கு சொன்னது அந்தக் காலத்தில் நடந்திருக்கிறது.
என்றார்.

இப்படம் மீண்டும் வசூலில் சாதனை படைக்கும் என்பது உண்மை.

கிளாசிக் சினிமாவின் வாழ்த்துக்கள் 🙏🌷