சிம்ம மூர்த்தி சினிமாஸ் சார்பில் ஆர். எம் ஜெயராமச்சந்திரன் தயாரித்துள்ள, இந்த படம் ஒரு வெற்றி படமாக, தரமான படமாக, உருவாகியுள்ளது . வித்தியாசமான காதல் ,காமெடியை கொண்ட இந்த படத்தை அரவிந்தராஜ் இயக்கி உள்ளார்
கதை களம்
நாயகன் கார்த்திக் (பப்பு) நாயகி சுமித்ரா (அனுபமா) இருவரும் ஒரே அலுவலகத்தில் பணிபுரிகிறார்கள். சில காலகட்டங்களில் இருவரும் வெவ்வேறு இடங்களுக்கு மாறி செல்கிறார்கள்.
ஒரே இடத்தில் பணி புரியும்போது, கதாநாயகியின் மீது கதாநாயகனுக்கு ஒரு கிரஷ் இருந்த விஷயம் கதாநாயகிக்கு தெரிய வருகிறது. எதிர்பாராத சூழ்நிலையில், கதாநாயகனுக்கு பெண் பார்க்கும் சூழ்நிலை உருவாகிறது .
அப்படி பெண்பார்க்க சென்ற நாயகனுக்கு, மணப்பெண்ணாக சுமித்ரா வந்து நிற்கிறார். மகிழ்ச்சியில் துள்ளி குதிக்கிறார் நாயகன். ஆனால் நாயகியோ!! யாரையும் திருமணம் செய்து கொள்ள மாட்டேன் என்று அடம் பிடிக்கும் தகவல் வருகிறது. இவ்வளவு சிக்கலான சூழலில் நாயகன், நாயகி திருமணம் நடந்ததா? திருமணத்திற்கு முன்பே ஆறு மாதம் இணைந்து குடும்ப நடத்தலாம் எனும் நாயகன் திட்டம் பலித்ததா? ஆறு மாதத்திற்கு பிறகு இருவரும் விவகாரத்து வாங்கிக் கொள்ளலாம் என்று திட்டமிட்டது !!நடந்ததா? அதன்பிறகு இரு வர் வாழ்க்கையில் புயல் வீசியதா? வசந்தம் வீசியதா? என்பதை சொல்லி இருக்கும் படம் தான் “மைடியர் டாலி’
நாயகியின் கடந்த கால வாழ்க்கை இருவரின் காதலுக்கு, வில்லங்கமாக வருவது ,என்பதை இயக்குனர் சஸ்பென்ஸ் ஆக கொண்டு வந்து, முடிச்சை அவிழ்கிறார் .அது படத்திற்கு மிகப்பெரிய பலமாக இருக்கிறது.
நடிகர்கள் & நடிகைகள்
– 90s கிட் கார்த்திக், 2k கிட் சுமித்ரா வை உயிருக்கு உயிராக விரும்புகிறார் .
இடையே போலி திருமணம், காதல், மற்றும் மேனெக்வினுடன் (mannequin) வாழும் நாயகனாக பப்பு நடிப்பில் அசத்தியுள்ளார் அசட்டுத்தனமாக, உயிருக்கு உயிராய் விரும்பும் காதலி தனக்கு இல்லை என்று தெரிந்த பிறகு இடைவேளைக்குப் பிறகு அவர் செய்யும் செயல் படம் பார்ப்பவர்களை இதயத்தை நெகிழச் செய்து விடுகிறது.
தனியாக புலம்பும் புலம்பல், அழுகை, கோபம், தாபம் ,என்று நடிப்பில் புதிய பரிமாணத்தை தொட்டுஇருக்கிறார் வி.ஜே.பப்பு ., நாயகி அனுபமா சுமித்ரா என்ற கதாபாத்திரத்தில் ஐடி ,கம்பெனியில் தலைமை நிர்வாக பொறுப்பில் கம்பீரமாக வருகிறார். பிறகு தன் கணவன் கார்த்திக் ,தன்னை நெருங்கி வரும் பொழுதும், உடைமாற்றுவதை பார்த்து விட்டான் என்று பிரியும் பொழுதும், கார்த்திக் தன் மீது உயிருக்கு உயிராக இருக்கிறான் என்று தெரிந்த பிறகு, அவனுக்காக உருகுவது, என்று அனுபமா , மிக அற்புதமான நடிப்பை கொடுத்திருக்கிறார்.
இவர்கள் உடன் கே.பி.ஒய் ராஜவேலு, தேக்ஷிதா, சந்தோஷ்குமார் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். அனைவர் நடிப்பும் சிறப்பாக இருந்தது
தொழில் நுட்ப கலைஞர்கள்
இயக்குனர் அரவிந்த் ராஜ், இந்த படத்தை மிகச் சிறப்பாக இயக்கி இருக்கிறார். இன்று இளைஞர்களுக்கு எதுமிகவும் பிடிக்கும் என்று இந்த கதையை தேர்வு செய்து, அவர் இயக்கி இருப்பது பாராட்டத்தக்கது.
சிறிய பட்ஜெட்டில் தரமான படம் கொடுத்த இயக்குனருக்கு வாழ்த்துக்களும். பாராட்டுக்களும் .
பாலாஜி சேகர் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். காட்சிகள் துல்லியமாகவும், கண்ணுக்கு குளிர்ச்சியாகவும், ரசிக்கும் படி இருக்கிறது.
இந்த படத்துக்கு பாசில் இசையமைத்து இருக்கிறார். பாடல்கள் ,ரசிக்கும் படி இருக்கிறது. பின்னணி இசை மிகவும் நன்றாக இருக்கிறது.
Producer: R.M.Jayaramachandran
Production: Simhamurthi Cinemas
Co producer: M. J Sivaramakrishna
சித்தார்த், படத்தொகுப்பாளராக இரண்டு மணி நேரம் கச்சிதமாக செதுக்கியிருக்கிறார்.
படத்தின் ஆடை வடிவமைப்பு, மற்றும் ஒப்பனை, கலரிஸ்ட் எல்லாமே கச்சிதமாக இருக்கிறது .
ஒரு வெற்றி படத்துக்கு தேவையான அத்தனை அம்சங்களும் இந்த படத்தில் இருக்கிறது. இளைஞர்களை கவரும் வண்ணம் படம் சிறப்பாக வந்திருக்கிறது.
2026 ல் வெற்றி பட்டியலில் இந்த படம் இடம் பெறுகிறது. 🌷
மக்கள் தொடர்பாளர் சதீஸ்வரன்
