தாய் கிழவி திரை விமர்சனம்

ரேட்டிங் 4-5/5

Banner: Passion Studios – Sivakarthikeyan Productions
Produced By: Sudhan Sundaram – Sivakarthikeyan
Co-Produced By: Kalai Arasu
Written & Directed By: Sivakumar Murugesan

தாய் கிழவி , கிராமத்து வாழ்க்கை, குடும்ப உறவுகள், மனித ஆசைகள் மற்றும் அதனால் உருவாகும் மோதல்கள் குறித்து விரிவாக பேசுகிறது

கிராமத்தில் நடக்கும் சின்ன சின்ன விஷயங்கள் அருமையாக சொல்லி இருக்கிறது.

பவுனுத்தாயி, மறுமணத்தை சர்வ சாதாரணமாக நடத்தி வைக்கிறார். அந்த கிராமத்து பெண் “பெரியாராக” கன்முன் தோன்றுகிறார்.

சொத்தை பிரித்துக் கொடு என்று கேட்டுவிட்டு நான்கு வருடங்களாக பிரிந்து போன மகன்கள்.

மூன்று பவுன் நகைக்காக மனைவியை விட்டுவிட்டுப் போன மருமகன்.

கிழவி எப்பொழுது சாவால் நாம் நிம்மதியாக இருப்போம் .என்று ஏங்கும் அந்த ஊர் மக்கள் .

தங்களுக்கு நகை கிடைக்க போகிறது என்று தெரிந்தவுடன் மருமகள்கள் போட்டி போட்டு மன் சோறூ சாப்பிடுவது ,விரதம் இருப்பது ,தீச்சட்டி ஏந்துவது , ஆஸ்பத்திரியில் சிங்கம் புலி, அருள்தாஸ் ,பால சரவணன் ,மூவரும் படிப்பறிவு இல்லாமல் டாக்டர் எதை சொன்னாலும் தவறாக புரிந்து கொண்டு, காது இருந்தும் செவிடாக இருந்தோமே என்ற சிங்கம் புலி,வருந்தும் அளவுக்கு கல்வியின் தரத்தை உயர்த்தி சொல்வது , கருப்பனுக்கு தீபம் ஏற்றினால் பவுனு தாய்பிழைத்துக் கொள்வாள் என்று பால சரவணன் அதற்காக ஒரு ஆளை வைத்து தீபத்தை பாதுகாக்க சம்பளம் கொடுப்பது. என்று பல இடங்களில் சமூக அக்கறையுடன் பேசியிருக்கிறார் இயக்குனர் .

ராதிகா சரத்குமார்

திரைப்படத்தில் ராதிகா சரத்குமார் அவர்களின் நடிப்பு மிகவும் வலுவானதும் உணர்ச்சிமிக்கதுமாக இருந்தது. குடும்ப உறவுகள், பெண்கள் தியாகம், மனஉளைச்சல் போன்ற உணர்ச்சிகளை மையமாக கொண்ட இந்தக் கதையில்.

ராதிகாவின் நடிப்பின் சிறப்பான உணர்ச்சி வெளிப்பாடு:

தாயாக வரும் காட்சிகளில் அவரது கண்களில் தெரியும் வலி, கவலை, கோபம் ஆகியவை மிகவும் இயல்பாக இருந்தது. மிகைப்படுத்தல் இல்லாமல் ஆழமான உணர்வை வெளிப்படுத்தினார்.

உறுதியான பெண் பாத்திரமாக அவரது கதாபாத்திரத்தை இயக்குனர் எழுதியிருக்கிறார் இயக்குனர்.

குடும்பத்தை காப்பாற்றும் வலுவான பெண்ணாக அவரை காட்டிய மனதிடம் சிறப்பாக இருந்தது.அவரின் டயலாக் டெலிவரி, கிராமத்து பின்னணிக்கு ஏற்ற இயல்பான உச்சரிப்பு, பேசும் விதம் கதாபாத்திரத்தை நம்பத்தகுந்ததாக மாற்றியது.

கிளைமாக்ஸ் காட்சியில் படத்தின் உச்சக்கட்டத்தில் அவர் காட்டிய உணர்ச்சி வெடிப்பு நம்மைநெகிழ வைத்தது.

மொத்தத்தில், இந்த படத்தில் ராதிகாவின் நடிப்பு அந்தக் கதையின் உணர்ச்சி நெடுவெளியை தாங்கிச் சென்ற முக்கியமான நடிடிப்பாக கருதப்படுகிறது.

அவருக்கு எத்தனை விருதுகள் கிடைக்கப் போகிறது என்பதை நாம் பொறுத்திருந்து பார்ப்போம்!!

ஒரு சாதாரண குடும்பத்தில் நடக்கும் சிறிய சம்பவம், . அன்பும் அகம்பாவமும் கலந்த உறவுகள், மகன் கள் பழிவாங்கும் மனநிலை, தாயின் மௌன வேதனை ஆகியவை கதையின் மைய அம்சமாக உள்ளது. அவரின் முகபாவனைகளே பல இடங்களில் வசனங்களை விட வலிமையாக பேசுகின்றன.

கதாபாத்திரத்தின் மனநிலையை அழகாக வெளிப்படுத்தியுள்ளார்.

துணை நடிகர்களும் கிராமத்து நிஜத்தன்மையை உணர்த்துகின்றனர்.

உப்பிலியப்பனாக சிங்கம்புலி ,கமல் ரசிகராக வந்து அடிக்கடி கமல் பாட்டை போடுவது, மனைவியிடம் சிரித்துக்கொண்டே அடி வாங்குவது, ஆஸ்பத்திரியில் டாக்டர் ஆங்கிலத்தில் பேசும் பொழுதும் அசடு வழிவதும், என படம் முழுவதும் ஸ்கோர் செய்திருக்கிறார் .

விஜயன் என்ற கதாபாத்திரத்தில் வரும் ,அருள்தாஸ் கோபக்கார அண்ணனாக பால சரவணனின் இடம் சண்டை ககு செல்வது, அம்மாவிடம் வாக்குவாதம் செய்வது ,ஒரு ரூபாய்க்கு ஆசைப்பட்டு ஐம்பது ரூபாய் சாக்கடையில் விட்டு விழிப்பது, ஆட்டோவை வித்து அம்மாவுக்கு செலவு செய்வது, என அவரும் இந்த படத்தில் இயல்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார் .

பால சரவணன் செல்வா , என்ற கதாபாத்திரத்தில், ஒரு பூமாலை கட்ட தெரியாதவராக, எட்டாவது வரை, படித்துவிட்டு ஆங்கிலத்தில் பேசும் டாக்டரிடம் தப்பு தப்பாக புரிந்து கொண்டு தன் அண்ணன்களிடம் அடி வாங்கிக் கொண்டு, கருப்புசாமிக்கு ,தீபம் ஏற்ற ஆள் வைத்து சம்பளம் வைத்து பார்ப்பது ,என அவர் வரும் காட்சிகள் அத்தனை கலகலப்பாக இருந்தது .

முனீஸ் காந்த், இந்த படத்தில் முக்கியமான கதாபாத்திரம் ஏற்று நடித்திருக்கிறார். அவர் இந்த படத்திற்கு மிகப்பெரிய பலம். நடிப்பு இயல்பாக இருந்தது. பென்னிகுக் ,என்ற கதாபாத்திரத்தில் அவர் செய்யும் செயல்கள் படத்திற்கு படம் பார்ப்பவர்களுக்கு ஒரு நம்பகத்தன்மையை ஏற்படுத்தியது. தனக்கு ஏன் திருமணம் செய்ய வேண்டும்? என்று அவர் சொல்லும் இடத்தில் மனைவியைப் பற்றி அவர் உயர்வாக சொல்வதும்! கோமாவில் படுத்திருக்கும் ராதிகா கண்ணில் கண்ணீர் வருவதும், படத்தின் சிறப்பான காட்சிகள் .

இளவரசு கோல்டு குமார் ,என்ற கதாபாத்திரத்தில் இரண்டு மூன்று காட்சிகள் வந்தாலும் படத்தின் திருப்பு முனைக்கு அவர்தான் பக்கபலமாக நிற்கிறார் .

ரேச்சல் ரெபாக்கோ, கிராமத்து பெண்ணாக அப்படியே மாறி இருக்கிறார், சுருளி என்ற கதாபாத்திரத்தில் ராதிகா சரத்குமாரின் மகளாக ஒரு தன்னம்பிக்கை பெண் மணியாக, இந்த படத்தில் உயர்ந்து நிற்கிறார், அவர் கதாபாத்திரம் எழுதப்பட்ட விதம் மிகச் சிறப்பு .

ஜார்ஜ் மரியம் ,ஒரு காட்சியில் வந்தாலும் கலக்கி விடுகிறார்.

மற்றும் அந்த ஊர் கிராம மக்கள். அனைவரும் இயல்பாக நடித்திருக்கிறார்கள்

ராதிகாவின் மருமகளாக வரும் அந்த மூன்று பேர் நடிப்பும் செம சிறப்பு

கங்காரு அடிகளார் என்று வரும் அந்த கதாபாத்திரம் மிகச் சிறப்பு அவர் நடிப்பும் அருமை.

முத்துக்குமார், தன் மனைவியிடம் மூன்று பவுன் நகை கேட்டுவிட்டு கோபித்துக் கொண்டு செல்லும் அவர், கிழவி சாகப் போகிறார் என்று தெரிந்து ஆட்டம் பாட்டத்தோடு வந்து அசத்தி ,கடைசியில் மனைவியும் கிடைக்காமல் ஏமாந்து போகும்போது ,அவர் நடிப்பு அட்டகாசமாக இருக்கிறது

அவர் மகனாக வரும் ராஜீவ் காந்தி சின்ன வயதிலேயே ஜொள்ளு விட்டுக்கொண்டு சிறப்பான நடிப்பை கொடுத்திருக்கிறார்.

இப்படி எல்லா பத்திரங்களும் தங்கள் தன்மைக்கேற்ப அற்புதமான நடிப்பை வழங்கி இருக்கிறார்கள்.

தொழில் நுட்ப அம்சங்கள்

இயக்குனர்

🧶பெண்களுக்கு எதிரான வரதட்சணை பெருங்கொடுமையின் பழக்கத்தை சுட்டிக்காட்டி சாடிய இயக்குனர் .

ஆண் – பெண் உயர்வு தாழ்வு என்ற பாகுபாடு காலம் காலமாக இருந்து வைத்தாலும் பெண் எதற்கும் லாயக்கில்லை ,என்ற கொடூரமான மனிதநேயமற்ற வழக்கம் 21 ஆம் நூற்றாண்டின் தொடக்கம் வரை இருந்து வந்துள்ளது. இப்படிப்பட்ட பெண்களுக்கு எதிரான பெருங்கொடுமையின் பழக்கத்தை சுட்டிக்காட்டி சாடிய
இயக்குனரை எவ்வளவு வேண்டுமானாலும் பாராட்டலாம்.
அந்த கிராமத்தை கண்முன்னே காட்டியது பவுனுத்தாயை ,ஒரு தன்னம்பிக்கை மிக்க, பெண்ணாக காட்டியது.

சொத்துக்காக தாய் தந்தையரை கொள்ள துடிக்கும் மகன்கள் .என்று உண்மையை உருக்கமாக சொன்னது.

கணவன் சரியில்லை என்றால் பெண்கள் வாழாவெட்டியாக வீட்டிலேயே முடங்கி இருக்க வேண்டாம் மறுமணம் செய்து நிம்மதியாக வாழலாம் என்று நெத்தியில் அறைந்தது போல் சொன்னது.
பவுனுதாய் படுத்தப்படுக்கையாக இருந்த போது அவரின் உயிரை காப்பாற்றியது,
அவரை மட்டுமல்ல படத்தையும் காப்பாற்றி இருக்கிறது.

இயக்குனரின் வித்தியாசமான சிந்தனை, இயல்பான கிராமத்து மனிதர்களின் வாழ்வியல், அவர்களிடம் இருக்கும் மாறுபட்ட குணங்கள், இவை அனைத்தையும் அற்புதமான பாத்திரப்படைப்பில் காட்டி இருக்கிறார் நிச்சயம் இவருக்கு விருது கிடைக்கும்.

🎶 பிரசன்னா நிவாஸ் இசையில் பின்னணி இசை திரைப்படத்தின் உணர்ச்சி மற்றும் பதட்டமான தருணங்களை மேலும் உயர்த்தி பிடிக்கிறது. பல காட்சிகளில் இசை கதைக்கு உயிரூட்டுகிறது.
பவுணுதாயி, வர்றா போன்ற பாடல்கள் மூலம் கவனம் பெறுகிறார்

🎥
ஒளிப்பதிவு விவேக் விஜய் குமார், கிராமத்தின் இயற்கை அழகையும் சாமான்ய வாழ்க்கையின் கடினத்தையும் நன்றாகப் பதிவு செய்கிறது.
காட்சியமைப்பு எளிமையானது, ஆனால் அதுவே படத்தின் நிஜத்தன்மையை உயர்த்துகிறது.
உணர்ச்சியை ஆழமாக பதிக்கிறது.

ஷான் லோகேஷ் படத்தொகுப்பு கச்சிதமாக இருந்தது ஷார்ப்பாக இருந்தது

ஒப்பணையாளர் செல்லதுரை ஆலங்குடி, இவரின் ஒப்பனை மிகவும் பிரமாதம் ராதிகா சரத்குமாருக்கு ஒரு 75 வயது பாட்டியாக மாற்றி இருந்தார் நிச்சயம் இவருக்கு விருது கிடைக்கும்
Prosthetic Makeup: Vineesh Vijayan

முருகானந்தம் ஆடை வடிவமைப்பாளராக பணியாற்றி இருக்கிறார். கிராமத்தில் உள்ள மனிதர்கள் உடை ,
தத்ரூபமாக கொடுத்து இருக்கிறார்.

தயாரிப்பு நிர்வாகி ராமு தங்கதுரை.

சவுண்ட் டிசைன் சுரேன் .ஜி

மற்றும் இந்த படத்தின் வெற்றிக்காக உழைத்த தொழில்நுட்ப கலைஞர்கள்

Stills: Maniyan
DI: Promo Works
Colorist: Adithya Krishnan
VFX: Focus VFX
VFX Supervisor: V.Rajkumar

அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

மக்கள் தொடர்பாளர் திரு. சுரேஷ் சுந்தரா அவர்கள் ,திரு. அப்துல்லா நாசர் அவர்கள். படத்தை நல்ல முறையில் மக்களிடம் கொண்டு போய் சேர்த்திருக்கிறார்கள் அவர்களுக்கும் வாழ்த்துக்கள்.

மொத்தத்தில்
சிவகார்த்திகேயன் தயாரிப்பாளராகவும் தரமான படங்களை கொடுத்துவருகிறார். இதுவரை அவர் தயாரித்திருக்கும் கனா, கொட்டுக்காளி உள்ளிட்ட படங்கள் பெரிய வரவேற்பை பெற்றிருக்கின்றன. சிவா இப்படிப்பட்ட படங்களை தயாரிப்பதன் மூலம் கோலிவுட்டுக்கு தரமான படங்களை கொடுக்கிறார். பல திறமைகளை அறிமுகப்படுத்துகிறார்; இதேபோல் தொடர்ந்து அவர் செய்ய வேண்டும் என பலரும் வாழ்த்திவருகிறார்கள். நாமும் வாழ்த்துவோம்
வெற்றி பட்டியலில்
“தன்னம்பிக்கை மிக்க”தாய் கிழவி 🌷