யார்றா அந்த பையன் நான்தான் அந்த பையன் திரை விமர்சனம்

ரேட்டிங் 3-5/5

இயக்குனர். தயாரிப்பாளர், நடிகர்
என் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் பால் ராஜ் அவர்கள் இயக்கி, தயாரித்து, ‘விஜய்’ என்ற முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ள படம் இது
இந்த படத்தில், காதல், துரோகம், த்ரில்லர் அம்சங்கள் கலந்துள்ளது. இக்கதையில்,

காயத்ரி ரெமா (ஷாலினி), ஸ்வேதா ஸ்ரீ (தீபிகா), மற்றும் ரவி மரியா (ஊழல் காவல் உதவி ஆய்வாளர் சிவகுமார்) என முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
எல்லோர் நடிப்பும் ரசிக்க வைக்கிறது.

கதை களம்

விஜய்-ஷாலினி
கணவன் மனைவி
விஜய், கார் மெக்கானிக் ஷாப் வைத்து இருக்கிறார்.
மனைவி ஷாலினி மீது அன்பை பொழிகிறார்.
அவருக்கு ஆறு குழந்தைகள் பெற்றுக் கொள்ள வேண்டும் என்று ஆசை.
ஆனால் மனைவி ஷாலினி ஒரு குழந்தை போதும் என்று கணவர் அருகில் வரும் போது எல்லாம் சிடு சிடு வென எரிந்து விழுகிறார்.இதனால்
திருமண உறவில் விரிசல் ஏற்படுகிறது.

இன்னொரு பக்கம்
குடிகார கணவன் மணிகண்டன் தீபிகா இருவருக்கும் குடி பிரச்சனையாக வருகிறது. தினமும் குடித்துவிட்டு வரும் கணவனை கண்டு எரிச்சல் அடைகிறார் தீபிகா, திருமணமான ஐந்து வருடத்தில் கணவன் மணிகண்டன் ஒரு ஆக்ஸ்டென்டில் இறந்து விடுகிறார். தனிமையில் வாடுகிறார்.தீபிகா
விஜய் மனைவி இழந்து வாடுகிறார் தீபிகா கணவனை இழந்து வாடுகிறார். இருவரின் வாழ்க்கையும் எதிர்பாராத விதத்தில் இணையும்போது, சமூகத்தால் ஏற்றுக்கொள்ளப்படாத ஒரு ரகசியக் காதல் விஜய்க்கும் தீபிகாவுக்கும் இடையே மலர்கிறது.
ஆனால், இந்தத் தடை செய்யப்பட்ட காதல் வெகுவிரைவில் பேராபத்தாகிறது. தீபிகா, மீது தீராத மோகம் கொண்ட ஊழல் காவல் ஆய்வாளர் சிவகுமாரின் வருகை பெரும் திருப்பத்தை ஏற்படுத்துகிறது. அதிகார பலம் கொண்ட அவர், தீபிகாவைத் தன் விருப்பத்திற்கு இணங்க வேட்டையாடத் தொடங்குகிறார்.

நிம்மதியற்ற குடும்ப வாழ்வு, வெளிவர முடியாத காதல் ஒருபுறம்; அதிகார வெறிபிடித்த போலீஸ் அதிகாரியின் கொடூர வேட்டை மறுபுறம். இவ்விரு நெருக்கடிகளுக்கு நடுவே தீபிகா படும் போராட்டமே படத்தின் மையக்கரு. குற்ற உணர்வும் சந்தேகமும் சூழ, ஆபத்திலிருந்து காதலர்கள் தப்பிப்பார்களா? ரகசிய காதலின் உண்மை எவ்வளவு காலம் மறைக்கப்படும்?

இக்கேள்விகளுக்கான விடைகளைத் தேடி நகரும் திரைக்கதை, பார்வையாளர்களை இருக்கையின் நுனியில் அமரச் செய்யும்.

இந்த படத்தை
தயாரிப்பு , எழுத்து, இயக்கம்,
மற்றும் கதையின்
நாயகனாக
பால்ராஜ் நடித்துள்ளார். இரண்டு பாடல்கள் பாடி இருக்கிறார். சோகக் கட்சியில், மனுஷன் வெளுத்து வாங்கி இருக்கிறார். மனைவியிடம் ஆசையாக நெருங்கும் பொழுது, மனைவி உதாசீனப்படுத்தும் பொழுது, மனம் விரக்தியில் செல்லும் காட்சியில் இவர் நடிப்பை சிறப்பாக வெளிப்படுத்துகிறார் .புதிய காதலி கிடைத்தவுடன் அவருடன் உற்சாகமாக, மீண்டும் தன்னை புதுப்பித்துக் கொண்டு, உலா வருகிறார். கிளைமாக்ஸ் காட்சியில் ,அநீதியை கண்டு வெகுண்டு எழுந்து, தன் காதலிக்காக செய்யும் அந்த சம்பவம் கைதட்ட வைக்கிறது. மொத்தத்தில் நடிப்பில், பாடல் கட்சியில், பாஸ் மார்க் வாங்கி இருக்கிறார் பால்ராஜ்.

கதாநாயகியாக
காயத்ரி ரேமா ,
நாயகன் மனைவியாக ஷாலினி, என்ற கதாபாத்திரத்தில் ஒரு குழந்தை போதும், அதை வளர்த்து பெரியவராக்கலாம் என்று கனவு காணும் சராசரி குடும்பப் பெண்ணாக அற்புதமாக நடித்திருக்கிறார். தன் கணவன் இன்னொரு பெண்ணுடன் பைக்கில் செல்வதை பார்த்து கொதித்து எழும் கட்டம் இன்றைய குடும்ப பெண்களுக்கு உண்டான நடிப்பு சூப்பராக நடித்திருக்கிறார்.

சுவேதா ஸ்ரீ
தீபிகா, என்ற கதாபாத்திரத்தில் அழகு பதுமையாக வருகிறார். கணவன் மணிகண்டன் குடித்துவிட்டு வரும்பொழுது, எரிச்சல் அடைந்து மெக்கானிக் ஷாப்பில் நாயகனை பார்த்துவிட்டு காதலுக்காக ஏங்குவதும், என நடிப்பில் ஸ்கோர் செய்திருக்கிறார். ரவி மரியா தன், வீட்டுக்கு வந்து தொந்தரவு செய்யும் காட்சிகளில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். ரவி மரியா காவல்துறை அதிகாரியாக நடித்திருக்கிறார். இந்த படத்தின் பலமே அவர்தான் அவர் வந்த பிறகு காட்சிகள் செம விறுவிறுப்பு. அடுத்து என்ன நடக்கும்? என்று சீட்ஙனியில் உட்காரும் அளவுக்கு அவர் கதாபாத்திரம். நடிப்பு, காமத்தால் ஏங்கும் ஒரு காவல்துறை அதிகாரியின் நடிப்பால் கவனம் பெறுகிறார்.
அம்பானி சங்கர்,
மெக்கானிக் ஷாப்பில் வேலை செய்யும் சங்கராக அவ்வப்போது வந்து கலகலப்பை ஏற்படுத்துகிறார். பசங்க சிவக்குமார்
நாயகனின் மாமனாராக பொருந்தி போகிறார். மகள் வாழாவெட்டியாக இருப்பதை கண்டு களங்கும் இடம் சிறப்பு. எல்லோருடைய நடிப்பும் சிறப்பாக இருக்கிறது.

கே.உதய குமார் ஒளிப்பதிவில், காட்சிகள் மிகச் சிறப்பாக இருக்கிறது. வீடு, மற்றும் மெக்கானிக் ஷாப் ,நாயன், நாயகி காதலியுடன் ஊர் சுற்றும் அந்த லொகேஷன், ஏரிக்கரை, பூங்கா என எல்லா இடங்களிலும் ஒளிப்பதிவாளர் சிறப்பாக பணிபுரிந்து இருக்கிறார்.

விஜய் பிரபுவின்
இசை படத்திற்கு பலம். நாயகன் பாடும் பாடல்கள் மெலோடி சாங் காதல் பாட்டு ரசிக்க வைக்கிறது. பின்னணி இசை நன்றாக இருக்கிறது.

கே சங்கரின்,
படத்தொகுப்பு கச்சிதமாக இருக்கிறது. எந்த இடத்திலும் படம் லேக்காகாமல் செதுக்கி இருக்கிறார். படத்தொகுப்பாளர்.

சந்த்ருவின்
நடனப் பயிற்சி ரசிக்க வைக்கிறது. பைட் மாஸ்டர் ஜாக்கி ஜான்சன் சண்டைக் காட்சிகளை விறுவிறுப்பாக அமைத்திருக்கிறார். இப்படம் மனித உணர்வுகளின் இருண்ட பக்கங்களையும் அதிகாரத் துஷ்பிரயோகத்தையும் தோலுரித்துக் காட்டுகிறது.!

அவசியம் மக்கள் காண வேண்டிய படம். ஒவ்வொரு பெண்ணும் படிப்பினை கற்றுக் கொள்ள வேண்டிய படம். ஒவ்வொரு ஆணும், தன் குடும்பத்தை விட்டு வேறொரு பெண்ணுடன் தொடர்பு கொண்டால் அவர்கள் வாழ்க்கை என்னவாகும் என்பதை இன்றைய தலைமுறையினர் கற்றுக் கொள்ள வேண்டிய படமாக வந்துள்ளது. நிச்சயம் பார்க்கலாம் ரசிக்கலாம்.

மக்கள் தொடர்பாளர் விஜய் கார்த்தி.