அனோமி திரை விமர்சனம்

ரேட்டிங் 4/-5

கதை களம்

தடயவியல் நிபுணராக வரும் பாவனா(சாரா) தனது தம்பி(ஜியான்) உடன் வசித்து வருகிறார். இவரது தந்தையும், தாயும் இறந்த பிறகு, தனது தம்பி மனநலம் பாதிக்கப்படுகிறார். பல முறை அவர் தற்கொலைக்கு முயற்சிக்கிறார். இப்படி இருக்கையில் தம்பி ஒருநாள் காணாமல் போய்விடுகிறார்.

தம்பியை தேடிக் கொண்டிருக்கும்போது, அவர் தனது தாய், தந்தை இறந்த இடத்திலேயே தம்பியும் இறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சியாகிறார்.
தம்பி ஜியான் கொலை வழக்கை தோண்டும் பொழுது அதைப்போலவே நீரஜ், மற்றும் ஷெபி, சாகினா, என, இறந்து போய் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைகிறார் பாவனா

தொடர் கொலைகளை விசாரிக்கும் காவல் அதிகாரி ரஹ்மான்
(ஜிப்ரான்) இந்த கொலைகள் எல்லாம் தற்கொலைகள் என்று முடித்து வைக்கிறார். ஆனால் பாவனா நீதிமன்றத்திற்கு சென்று வழக்கு தொடுத்து, இது தற்கொலை அல்ல கொலை வழக்கு என்று மீண்டும் காவல்துறையினருக்கு உத்தரவிடுமாறு நீதிபதியை கேட்டுக் கொள்கிறார்.
மீண்டும் பாவனாவின் தம்பி மரணம் குறித்து விசாரிக்கிறார்.ஜிப்ரான்.

தன் தம்பியின் தற்கொலையில் மர்மம் இருப்பதாக நம்பும் தடயவியல் நிபுணர் பாவனா, உண்மையை கண்டறிய களமிறங்குகிறார். அப்போது, ரஹ்மானுடன் பாவனா இருவரும் ஒரே நேர்கோட்டில் பயணிக்கிறார்கள் ஒருவர் ஒருவரை சந்திக்காமல்.

ஒரு கட்டத்தில் தற்கொலைக்கும், இந்த மர்மக் கொலைகளுக்கும் இடையே உள்ள ‘அறிவியல் பின்னணி’ மற்றும் ‘மரணத்தின் சமன்பாடு’ (Equation of Death) என்ன என்பதை விவரிக்கிறது படத்தின் மீதிக்கதை.
படத்தின் மேக்கிங், திரைக்கதை, வலுவான கதை அமைப்பு, அனைவரின் நடிப்பு அற்புதமாக இருக்கிறது.

நடிகர்கள்

நீண்ட இடைவேளைக்குப் பிறகு மலையாளத்தில் ஒரு அழுத்தமான பாத்திரத்தில் பாவனா மிரட்டியிருக்கிறார். ஒரு அக்காவாக பாசம் காட்டுவதும், விசாரணையில் உறுதி காட்டுவதுமாக பாவனா, கதாபாத்திரத்திற்கு உயிர் கொடுத்துள்ளார்.
தம்பிக்காக ஏங்குவதும், கொலையாளியை தேடி கண்டுபிடிப்பது,
என்ன நடிப்போடு படத்தின் தயாரிப்பாளராகவும் ஒரு நல்ல படத்தை கொடுத்திருக்கிறார் பாவனா
தடயவியல் நிபுணராக, தனது காணாமல் போன சகோதரனின் மர்மத்தை ஆழமாக தோண்டி அந்தப் பகுதியில் சமீபத்திய சம்பவங்கள் தொடர்பான வடிவங்களை அவர் எப்படி கண்டுபிடித்தார் என்று சொல் கிறது அவர் கதாபாத்திரம்.

ரஹ்மானின் அனுபவ நடிப்பு திரையில் பிரதிபலிக்கிறது. முதலில் சோர்ந்து இருந்தாலும் பிறகு கொலையாளியை நெருங்கும் அவரின் நடிப்பு, முயற்சி பாராட்டத்தக்கது. மற்றும் பாவனா, ரஹ்மான், உடன் அர்ஜுன் லால், ஷெபின் பென்சன், விஷ்ணு அகஸ்தியா என அனைவரும் நன்றாக நடித்திருக்கிறார் கள்: .

ஹர்ஷவர்தன் ரமேஷ்வரின் பின்னணி இசை படத்திற்கு ஒரு ‘ஹாலிவுட் த்ரில்லர்’ தரத்தைக் கொடுக்கிறது.

மலையாள சினிமாவில் ‘சைக்கோ த்ரில்லர்’ கதையுடன் ‘அறிவியல் புனைவை’ (Sci-Fi) இணைத்த விதம் ஒரு புதிய முயற்சியை எடுத்திருக்கிறார் இயக்குனர் ரியாஸ் மரத். ஒரு தரமான சைக்காலஜிக்கல் த்ரில்லர் படம்.
அடுத்து என்ன? அடுத்து என்ன? என்று கேட்கும் வகையில் விறுவிறுப்பாக பயணிக்கிறது. இந்த படம்.

ஒளிப்பதிவு & இசை

சுஜித் சாரங்கின் ஒளிப்பதிவு அருமை.

ஆர்ட் டைரக்டர், அற்புதமாக பணி புரிந்திருக்கிறார் .
காஸ்ட்யூம், மற்றும் ஒப்பணையாளர் ,
டி .ஐ .கலர் கரெக்ஷன் செய்தவர்கள். எல்லோருடைய பணியும் சிறப்பாக இருக்கிறது.

படத்தொகுப்பில் இடைவேளைக்குப் பிறகு கொஞ்சம் தொய்வு ஏற்படுகிறது அதை சரி செய்திருக்கலாம்.

மொத்தத்தில்
மூன்று வருட இடைவெளிக்குப் பிறகு மலையாளப் படத்தில் நடிக்கும் பாவனா, உணர்ச்சி ரீதியான எழுச்சிகளைக் கடந்து செல்ல வேண்டிய கதாபாத்திரத்தை எளிதில் கையாளுகிறார். , அவரது கதாபாத்திரம்
சிறப்பாக இருக்கிறது.
காவலரின் பின்னணிக் கதை அவரது பொதுவான அணுகுமுறை
எல்லாம் நன்றாக வடிவமைப்பு செய்யப்பட்டுள்ளது.
அனோமி” ஒரு ஈர்க்கக்கூடிய அறிவியல் புனைகதை த்ரில்லர் என்ற அதன் லட்சியங்களை
துல்லியமான முறையில் கவர்ந்தது என்று சொல்லலாம்.

மக்கள் தொடர்பாளர் ஸ்ரீ வெங்கடேஷ்

அனோமி”வெற்றி பட்டியலில்

இந்த படத்தை ட்ரைன்ட் ஆர்ட்ஸ் ரவீந்திரன் வெளியிடுகிறார்
அவருக்கும் வாழ்த்துக்கள்🌷🙏