Written & Directed by: Vijay Ranganathan
Music Director: Vaisakh Somanath
Additional Screenplay: Harish Rajagopal
Producers: Vennky, Anand S Shah, Vijay Ranganathan & Nisha Patial
Production Banner: Anthill Cinema
Co-Produced by: Palampur Talkies
நிவேதிதா சதீஷ், அதுல் ,மற்றும் சிபி நடிப்பில், விஜய் ரங்கநாதன் இயக்கத்தில் உருவாகியுள்ள காதல்-திகில் திரைப்படமான ‘ஓ பட்டர்ஃபிளை’ (Oh Butterfly) ஆண்ட்ஹில் சினிமா தயாரித்துள்ளது இதில் நாசர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
கதை களம்
ஆர்ப்பரிக்கும் கடல் அலைகள், நாயகி வெறித்த பார்வை, எதையோ சொல்லும் கண்கள் .என்று தொடங்குகிறது படம்.
ரஞ்சனி (லட்சுமி பிரியா)
தன் தங்கை கௌரியிடம் என்ன நடந்தது? ஏன் இப்படி ஒரே அறையில் அடைந்து கிடக்கிறாய்.
என்று நாயகியின் கடந்த காலத்தை விவரிக்க சொல்லுமாறு கேட்கிறார் .
அதன்பின் கதை விரிகிறது வியப்பும் கூடுகிறது.
நாயகன் அதுல், (அர்ஜுன்) நாயகி நிவேதா ,(கௌரி)
இருவரும் தனிமையில் இனிமை காண குறிஞ்சி மலைப் பகுதிக்கு செல்கின்றனர். அந்த எஸ்டேட் பங்களாவை
சகாயம் (நாசர்)
பரா மரித்து வருகிறார்.
பட்டாம்பூச்சிகளை தன் மகனாக நினைத்து 15 நாளில் இறந்து விடும் அந்த உயிரினங்கள் மீது பாசம் காட்டுகிறார்.நாசர்
தன் கணவனிடம் கடந்த கால காதலை சொல்ல துடிக்கிறாள் நாயகி கௌரி, அதற்குள் அவளது பழைய காதலன்
சூர்யா குமரவேல்
பைக் ரிப்பேராகி, அவர்கள் தங்கி இருக்கும் வீட்டுக்கு கணவர் அழைத்து வருகிறார்.
அதற்குப் பிறகு நடக்கும் மூன்று பேரின் மனப்போராட்டங்களை மிக அழகாக சொல்லி இருக்கிறது இந்த ஓ.. பட்டர்பிளை”
இன்றைய காலகட்டத்தில் ஒரு புதிய பாய்ச்சலை நோக்கி தமிழ் சினிமாவை நகர்த்திய நவீன அடையாளமாக இப்படத்தை சொல்ல முயற்சி செய்து இருக்கிறார் இயக்குனர். கதை சொல்லும் முறை, ஒளிப்பதிவின் தரம், திரைக்கதையின் மெனக்கெடல், காட்சிக்கோர்வைகளை உருவாக்கும் நேர்த்தி, ‘சுருக்’ வசனம் என்று தமிழ் சினிமாவின் முகத்தை அப்படியே தலைகீழாக புரட்டி போட்டு இருக்கிறது இந்த ஓ..பட்டர்பிளை”
நடிகர்கள் & நடிகைகள்
வேலை போய் விட்டது என்று புலம்பும் நாயகன் அர்ஜுன் (அதுல்)
சிறப்பான நடிப்பை வழங்கியிருக்கிறார். அவருடைய பயந்த முகம், நண்பனை கண்டதும் உற்சாகம்,
வெள்ளந்தியாக மனைவியை, நண்பன் உடன் மூவரும் சரக்கு அடிப்பது, கஞ்சா அடிப்பது ,என்று ஒரு புதுமை கணவராக வருகிறார். ஆனால் முடிவு பரிதாபம்.
பழைய காதலை சொல்ல தவிக்கும் கௌரி வேடத்தில் ,
நாயகி நிவேதிதா ஒரு புதுமை பெண்ணாக நடித்திருக்கிறார். படம் முழுக்கவே குழப்பமான மனநிலையை, தன்னுடைய உடல் மொழி நடிப்பால் வெளிப்படுத்தி இருக்கிறார்.
படத்தில் அவருக்கு மூன்று காட்சிகள் தான் புன்னகை பூக்கும் காட்சிகள் மற்ற இடங்களில் எல்லாம் கணவனா? காதலனா? என்ற குழப்பத்திலும், கணவனை நான் தான் கொலை செய்து விட்டேன் என்று புலம்பும் இடத்திலும், கணவனுடன் சேர்ந்து மது, குடிப்பது கஞ்சா குடிப்பது ,பழைய காதலன் கிடைத்துவிட்டான் என்று இரவில் தனிமையில் சந்திப்பது, இப்படி எல்லா இடங்களிலும் நடிப்பில் ஸ்கோர் செய்திருக்கிறார் நிவேதிதா.
சூரியா, என்ற வேடத்தில் நடித்திருக்கும் சிபி அழகான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார் .தன் காதலியிடம் மன்னிப்பு கேட்பது, நண்பனுக்கு துரோகம் செய்யக்கூடாது என்று நினைப்பது அவர்கள் இருவரும் நன்றாக வாழட்டும் என்று நினைப்பது, இப்படி எல்லா காட்சிகளிலும் இளமை ஊஞ்சலாடுகிறது சூப்பர் ஸ்டார் ரஜினியை ஞாபகப்படுத்துகிறார் சாயலும் அப்படியே ஒத்துப் போகிறது.
சகாயம் என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் நாசர் அவர்கள் தன்னுடைய அனுபவத்தின் பேரன்பில், அருமையான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். பட்டாம்பூச்சி பிறந்த குழந்தைக்கு ஜெபமணி என்று பெயர் வைப்பது ,அது காணாமல் போன பிறகு தவிப்பது ,சாவின் வாசம் பற்றி எனக்கு தெரியும் என்று சொல்லி வருத்தப்படுவதும்,
சூப்பர் நடிப்பு !!
மரம் என்று நினைத்தால், அது மரம் ,சிலுவை என்று நினைத்தால் அது சிலுவை, என்று அவர் சொல்லும் டயலாக் நன்றாக இருக்கிறது.
மற்றும் நாயகியின் அக்கா ரஞ்சனியாக, லட்சுமி பிரியாநடிப்புசூப்பர் நாயகி, மனக்குழப்பத்திலிருந்து வெளியே கொண்டு வர முயற்சி செய்கிறார் சிறப்பு .
சோடா புட்டி கிழவி, ஜோசியக்காரியாக கீதா கைலாசம் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்.
புத்தகத்தின் கடைசி பக்கமும், ஒரு கதாபாத்திரமாக வந்து போகிறது.
புதிதாக பூத்த பட்டாம்பூச்சி ஜெபமணி ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் வந்து போகிறது.
தொழில் நுட்ப கலைஞர்கள்.
தயாரிப்பு: ஆண்ட்ஹில் சினிமா & பாலம்பூர் டாக்கீஸ்
இயக்குனர் :
விஜய் ரங்கநாதன்
கணவன் ,மனைவி, காதலன் மூவரின் மனப்போராட்டத்தை அழகாக சித்தரித்து இருக்கிறார்.
ஒவ்வொரு பெண்ணுக்குள்ளும் இருக்கும் பழைய காதலை, கணவனிடம் சொல்லலாமா? வேண்டாமா? என்று இந்த படத்தின் மூலம் ஒரு பட்டிமன்றமே நடத்தியிருக்கிறார்.
தமிழ் சினிமா இயக்குநர்களின் வரிசையைக் கவனியுங்கள். அவர்கள் உருவாக்கும் படங்களில் அவர்களின் தனித்தன்மை இருக்குமே ஒழிய, முன்னோர்களின் பாதையில் தடம் பிசகாமல் பயணிப்பார்கள். .
ஆனால், இந்த மரபை உடைத்த அரிதான இயக்குநர்களும் உண்டு. இதற்கு சரியான உதாரணங்களில் ஒருவர் விஜய் ரங்கநாதன்
மென்மைக்கு எதிராக, இருண்மையான உலகங்களை, காட்சி படுத்தி இருக்கிறார்
புத்தகங்களின் மூலம் காதலை சொல்லி இருக்கிறார். பட்டாம்பூச்சியின் பயணம் ரசிக்க வைக்கிறது .
காதலனை மனதிலிருந்து இறக்க முடியாமல், திருமண வாழ்வில் ஓர் இளம்பெண் தவிப்பதும், பிறகு தன் கணவனின் நல்லியல்புகளைப் புரிந்து கொண்டு மனம் மாறுவதும் திரைப்படத்தின் மையப்படுத்தி இருக்கிறார்.
இந்த நோக்கில் ஏற்கெனவே சில தமிழ் சினிமாக்கள் வந்துள்ளன. மகேந்திரனின் ‘நெஞ்சத்தைக் கிள்ளாதே’ திரைப்படமும் இதே கருதான். வெவ்வேறு இயக்குநர்கள் கையாளும் முறையில் அதிக வித்தியாத்தை காட்டி இருக்கிறார் இயக்குனர்.
Cinematographer: Vedaraman Sankaran
பல வசீகர உத்திகளைப் பயன்படுத்தி ஒவ்வொரு பிரேமையும் ஜொலிக்க வைத்து விடுகிறார் .
அவுட்டோர் காட்சிகளை அழகாக படம்பிடிப்பது கூட வழக்கமானது. ஆனால் ஒரு படத்தின் இன்டோர் காட்சிகள் அத்தனை அழகியலுடன் பதிவானது இந்தப் படத்தில்தான். அந்த எஸ்டேட் பங்களா வீட்டின், ஒவ்வொரு கோணமும் அத்தனை அட்டகாசமாக பதிவாகியிருக்கிறதுதாஜ்மஹாலை எத்தனையோ படங்களில் பார்த்திருப்போம். ஆனால் கிளைமாக்ஸ் காட்சியில், பார்வை வழியாக ஒரு ‘வித்தியாசமான’ கோணத்தில் இதில் பார்க்க வைத்திருக்கிறார்.
ஒளிப்பதிவாளர்.
வைசாக் சோமநாத்.
இசையில்
தீராதேபாடல்,
சூர்யா பாடும்
எது வரை பாடல்,
போகாதே மெலடி பாடல் வரிகள் .
ரசிக்க வைக்கிறது பின்னணி இசை நன்றாக இருக்கிறது.
Editor: Bhuvanesh Manivannan
கச்சிதமாக செதுக்கியிருக்கிறார் விறுவிறுப்பான படத்தின் வெற்றிக்கு படத்தொகுப்பு உதவி செய்திருக்கிறது.
Consulting Producers: Chaitanya Hegde & Datta Dave
Consulting Producer: Tulse
Production Designer: Saranya Ravichandran
Costume Designer: Tina Rosario
என அனைவர் பங்களிப்போடு
இந்த படம், புதிய கதைக்களம் மற்றும் சிறப்பான நடிப்பால் கவனம் ஈர்த்துள்ளது. குடும்பம் முழுவதும் ரசிக்கக்கூடிய உணர்ச்சி, எமோஷனல் கலந்த விறுவிறுப்பான அனுபவம் காத்திருக்கிறது!
.
பட்டாம்பூச்சி போல பறக்கும் ஒரு புதிய திரை அனுபவத்துக்கு தயாராகுங்கள்! ✨
#OhButterFly
மக்கள் தொடர்பாளர்கள். திரு, ரியாஸ் அஹமது அவர்கள்.
திரு பாராஸ்
அஹ மது, அவர்கள் படத்தை நல்ல முறையில் மக்களிடம் கொண்டு சேர்த்து இருக்கிறார்கள் அவர்களுக்கும் வாழ்த்துக்கள்.
வெற்றி பட்டியலில் 🌷
