” 99/66 தொன்னூற்று ஒன்பது அறுபத்தியாறு திரை விமர்சனம்

ரேட்டிங் 4/5

கதை களம்

. எம்.எஸ். மூர்த்தி இயக்கத்தில் ரச்சிதா மகாலட்சுமி நடித்துள்ள திகில் திரைப்படம் ’99/66′ (தொண்ணூற்று ஒன்பது அறுபத்தியாறு) சென்னையில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் நடக்கும் அமானுஷ்ய சம்பவங்களை மையமாகக் கொண்ட இப்படம், suspense மற்றும் சைக்காலஜிக்கல் பயத்தை அடிப்படையாகக் கொண்டு உருவானக்கி இருக்கிறார்கள்
திகில் படமான இந்த படத்தை (Horror/Thriller)
இயக்கம்/கதை: எம்.எஸ். மூர்த்தி
சிறப்பாக இயக்கி இருக்கிறார்.
ரச்சிதா மகாலட்சுமி,
சங்கீதா, என்ற வேடத்தில் அழகு புயலாக வந்து அனைவர் மனதையும் கவருகிறார்
99 அபார்ட்மெண்ட் வீடுகள் கொண்ட குடியிருப்பில் நடக்கும் மர்மமான மற்றும் அமானுஷ்ய சம்பவங்களைச் சுற்றி கதை நகர்கிறது.
: இந்தப் படத்தின் சில காட்சிகள் புத்த மடாலயங்களில் படமாக்கப்பட்டுள்ளன. இதை ஸ்ரீலங்கா தாய்லாந்து பகுதிகளில் படம் ஆக்கி இருக்கிறார்கள் அவ்வளவு அற்புதமாக இருக்கிறது
சங்கீதா குணா காதல் தம்பதிகள்
66 வீட்டுக்கு குடி வருகிறார்கள்
அங்கு ஒரு நல்ல ஆத்மா ரஞ்சிதா வாழ்ந்து வருகிறது
அவரை கொன்றது யார் எதற்காக அந்த வீட்டில் குடியிருக்கிறார் என்பதெல்லாம் சஸ்பென்ஸ்
ரஞ்சிதா என்கிற தோழியுடன் தனது நட்பை புதுப்பித்துக் கொண்டு, அந்த அப்பார்ட்மெண்டில் வலம் வரும் இவர். ரஞ்சிதா இறந்துவிட்டார் என்று கேள்விப்பட்டவுடன் அதிர்ச்சி அடைகிறார் .
அதே சமயம் தனது கணவர்தான் கொலைகாரன் என்று தெரிய வருகிறது. சரியான முடிவு எடுக்கிறார். அவருக்கு தனியாக பாடல்கள் இல்லை படம்முழுக்க தாங்கிப் பிடித்திருக்கிறார் ரக்சிதா.

எல்லா குழப்பங்களுக்கும் ஆறுதல் தரும் ஒரு சாமியாரிணி வேடத்தில் கே ஆர் விஜயா வருகிறார். அந்தக் காலத்தில் தெய்வமாகவே வந்தவர் இப்போது தெய்வ வாக்கு சொல்லி வருவது பொருத்தம்தான்
கண்களை மூடி தியானம் செய்து அந்த நல்ல ஆத்மாவை பற்றி சொல்லிவிட்டு புறப்பட்டு போகிறார்.

சிங்கம் புலி, புஜ்ஜிபாபு, சாம்ஸ் அம்பானி சங்கர், முல்லை கோதண்டம் எல்லாம் நம்மை சிரிக்க வைக்க முயற்சி செய்கிறார்கள்

சித்தராக வரும் பி.எல். தேனப்பனுக்கு ஓரளவு முக்கியத்துவம் இருக்கிறது. ஆனால்
ஒரு வசனம் மட்டுமே பேசுகிறார்.

மூதாட்டி ஸ்ரீலேகாவுக்கு கண்களை உருட்டி மிரட்டி பயமுறுத்தும் வகையில் நடித்திருக்கிறார்.

தன் மகள் ரஞ்சிதா மீது பாசம் காட்டும் தந்தையாக, வாழ்ந்திருக்கிறார்
ஃபிளாஷ் பேக் காட்சி மனதை தொடும் வகையில் இருக்கிறது.
ஆரம்பத்தில் சிறிய பாத்திரத்தில் வந்து, போகப் போக பெரிதாகி படத்தை முடித்து வைக்கிறார் பிளாட் ஓனராக வரும் இயக்குனர் எம் எஸ் மூர்த்தி.
கருப்பு சாமியாக கிளைமாக்ஸ் காட்சியில் தீயவர்கள் தலை கொய்து ,சபதத்தை நிறைவேற்றுகிறார்.
நல்ல கதை, தெளிவான திரைக்கதை, பண்பட்ட வசனம்,
பெண்கள் மீது திணிக்கப்படும் அநீதிக்கு எதிராக அவர் குரல் கொடுத்து சிறப்பாக நடித்து இயக்கி இருக்கிறார் வாழ்த்துக்கள் சார்
ஸ்வேதாவின்(ரஞ்சிதா) தந்தையாக வரும் அவர் தன் மனைவி, மகள் பற்றி சொல்லும் கதை, கண்ணீர் காவியம்.
இயக்குனர், நடிகர் என்பதை எல்லாம் தாண்டி படத்தின் தயாரிப்பாளராகவும் இசையமைப்பாளராகவும் மட்டுமல்லாமல் எல்லா பாடல்களையும் எழுதி இருக்கும் பாடலாசிரியராகவும் இருப்பது ஆரோக்கியமான பங்களிப்பு.
அந்தப் பாடல்கள் கேட்கும் ரகமாகவும் அமைந்திருக்கின்றன. அதிலும் ‘புத்தம் சரணம் கச்சாமி’ பாடல் மெய்சிலிர்க்க வைக்கிறது.

சேவிலோ ராஜாவின் ஒளிப்பதிவு வண்ணமயமாக பயமுறுத்துகிறது.

முதல் பாதிப் படத்தில் காமெடி ,இரண்டாவது படம் தெளிவாகவும், மனதை நெகிழ வைக்கவும் செய்கிறது.

சபரி ( குணா ) என்ற கதாபாத்திரத்தில்
பணத்துக்காக மனைவியை கொலை செய்ய துடிக்கும் கணவனாக நடித்திருக்கிறார்
இரண்டாவது நாயகன் – ரோகிந்த் (கரண் ), நல்ல மனைவி கிடைத்தும்
தவறான பாதையில் போவதைக் காணும் போது மனம் பதறுகிறது.
இரண்டாவது நாயகி – ஸ்வேதா ( ரஞ்சிதா )
இவர் வரும் காட்சிகள் மிகச் சிறப்பாக இருக்கிறது
அன்பே வடிவான முகம் அருமையான கதாபாத்திரம்.
சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார் வாழ்த்துக்கள்

பவன்கிருஷ்ணா ( விக்கி),
என்கிற வேடத்தில் கலக்கி இருக்கிறார்
மற்றும்…
கே.எஸ்.வெங்கடேஷ்
எஸ்.சினேகா
குமாரி கனிஷ்கா, ஸ்ரீலேகா பி.எல்.தேனப்பன்
சிங்கம் புலி, புஜ்ஜிபாபு,
சாம்ஸ்
அம்பானி சங்கர்
முல்லை, கோதண்டம்,
தயாரிப்பாளர், இயக்குனர் எம்.எஸ்.மூர்த்தி (மூர்த்தி ) என அனைவரும் தங்கள் பங்குக்கு சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்கள்.

தொழில்நுட்ப கலைஞர்கள் :

ஒளிப்பதிவு – சேவிலோ ராஜா ( எம்டன் மகன் )
ஒரு வீட்டில் நடக்கும் சம்பவங்களை விறுவிறுப்பாக படமாக்கி இருக்கிறார் ரசிக்க வைக்கிறது கேமரா

படத்தொகுப்பு – மீனாட்சி சுந்தரம்
சிறப்பான படத்தொகுப்பு கச்சிதமாக செதுக்கி இருக்கிறார்

கலை இயக்குனர் – ஜெய் முருகனின்
அரங்க அமைப்புகள் பாராட்டும்படி இருந்தது

நடன இயக்குநர்கள் – ஸ்ரீதர் -அக்ஷயா ஆனந்த் இவர்கள் நடனம் ரசிக்க வைக்கிறது- பயர் கார்த்திக்கின் சன்டை பயிற்சி
மக்கள் தொடர்பு – புவன் செல்வராஜ்.
தயாரிப்பு ஒருங்கிணைப்பு – மஹேந்திரன்
கிரியேட்டிவ் டைரக்டர் – ரவி பார்கவன்
தயாரிப்பு நிறுவனம் -மித்ரா பிக்சர்ஸ் பிரைவேட் லிமிடெட்.
இணை தயாரிப்பு – சுஜாதா மூர்த்தி
கதை,திரைக்கதை, வசனம், பாடல்கள் எழுதி, இசையமைத்துத் தயாரித்து இயக்கியுள்ளார் எம்.எஸ். மூர்த்தி.
இன்றைய காலகட்டத்திற்கு தேவையான ஒரு கதையை எழுதி, இயக்கி பெண்கள் எந்த வகையிலும் ஏமாறக்கூடாது. என்று ஒரு படமாக ஒரு பாடமாக சொல்லி இருக்கிறது இந்த படம். வெற்றி பெற வாழ்த்துக்கள் கிளாசிக் சினிமா 🌷