கதை களம்
ஐந்து உயிரெழுத்துகள்! ஐந்து கதைகள்!! ஒரே காதல் உலகம்!!!
ராஜு ஷெரேகர் தயாரிப்பில், காதலின் பல பரிமாணங்களை பேசும் தனித்துவமான திரைப்படமாக உருவாகியுள்ளது இந்த VOWELS* – An Atlas of Love’
இந்த படத்தில் ஐந்து கதைகள் , இந்த ஐந்து கதைகளை இயக்குனர்கள் திலிப் குமார், சங்கீத், ஹேமந்த் குமார், சந்தோஷ் ரவி மற்றும் ஜெகன் ராஜேந்திரன்
இயக்கியுள்ளனர்.
நடிகர்கள்: யூகி சேது, சின்னி ஜெயந்த், சம்யுக்தா விஷ்வநாதன், ராஜ் அய்யப்பா, தீபக் பரமேஷ், நந்து (தெலுங்கு புகழ்), பரத் போபண்ணா, ஷரத் ரவி, விஜயஸ்ரீ, காஜல் சௌத்ரி, சித்து குமரேசன், விஜ்யேதா வசிஸ்ட், பீட்டர் கே, அக்ஷிதா போபையா, பரத் மைலாரி, ஹேமந்த் குமார், தர்ஷினி, பிரியங்கா சந்திரசேகர் மற்றும் அருள் குமார் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
ஐந்து கதைகளும், ஒவ்வொன்றும் ஒவ்வொரு மாதிரியான உணர்வு களை ஏற்படுத்துகிறது.
மார்ட்டின், நட்சத்திரா
இரு வரும் நல்ல சினிமாவை, பேச தொடங்கி, நல்ல நல்ல படங்களை பற்றி பேசி, முடிவில் மார்ட்டின் நட்சத்திராவை கொலை செய்வது திகில் ஊட்டும் வண்ணம் காதல் கொலையில், முடிவது போல இயக்கியிருக்கிறார்.
அடுத்து,
ராஜ் ஐயப்பா அவர் பிறந்தநாளன்று மனைவி ஐஸ்வர்யா வாங்கி தந்த அந்த பைக் எடுத்துக் கொண்டு டிரிப் போகிறார். முன்னாள் காதலி,மீரா மீது மோதி விபத்துக்குள்ளாகிறார்.
ராஜ் ஐயப்பா மீரா இருவரும் பிரிவதற்கு பைக் ரேஸ் தான் காரணம். அதே காதலி மீது ராஜ் ஐயப்பா பைக்கில் மோதுவது திருப்பத்தை ஏற்படுத்துகிறது.
மீண்டும் ஒரு பயணம் புதிய அனுபவம்.
தன் காதலிக்கு, ரத்த தானம் செய்த நண்பன் ,பைக் எடுக்கும் பொழுது ஹெல்மெட் போட்டுக் கொண்டு போ “என்று சொல்லுவது இடம் டச்”
அடுத்து “ஈரோஸ்”
யூகி சேது சின்னி ஜெயந்த், விஜய் ஸ்ரீ இவர்கள் காதல் பற்றி சொல்ல,
சின்னி ஜெயந்த் மகன் “மார்கெண்டேயன்
காதல் பிரிவில் தற்கொலை செய்து கொள்ள போகும் போது அவனை திருத்தும்”ஈரோஸ் கதை அற்புதமான நெகிழ்வான தருணங்கள்.
இந்த எபிசோட் வசனம் எழுதி இருக்கிறார்கள் இயக்குனர் மற்றும் யூகி சேது அவ்வளவு ரசிக்க வைத்தது.
அடுத்து வர்ணஜாலம்
நோய்வாய்ப்பட்டு வாழ்க்கையை அவ்வளவுதான் இன்று படுத்துக் கிடக்கும் அஸ்வதிகா
அந்த சிண்ட்ரெல்லா, ஆஸ்பத்திரி காதல் அவ்வளவு ரசிக்க வைத்தது.
தன்னம்பிக்கை ஊட்டி கடலோரக் காதல் அருமை!!
ஹேப்பி என்டிங் மனதுக்குள் பட்டாம்பூச்சி பறப்பது போன்ற உணர்வை தந்தது.
அடுத்து,ராண் சாரா,
டேவிட் மூவரின் கதை, யாரை யார் சாகடிப்பார்கள், என்றஎதிர்பார்ப்பு திரைக்கதையில் புகுத்தி, வித்தியாசமான ஒரு கிரைம் ,ஜானரை கொடுத்து இருக்கிறார் இயக்குனர்.
இதுவரை நாம் உணர்ந்திடாத ஆழமான, ஐந்து காதல் கதைகள் ரசிகர்களை மெய்மறக்க செய்ய வருகிறது. உயிரில் இருந்தும், உணர்வில் இருந்தும், சுவாசத்தில் இருந்தும் பிறப்பதுதான் காதல்! அதுதான் ’Vowels’.
‘VOWELS – An Atlas of Love’ திரைப்படம் காதலின் பல பரிமாணங்களை பேசும் தனித்துவமான திரைப்படமாக உருவாகியுள்ளது. கற்பனையிலிருந்து குற்றம் வரை, காதலில் இருந்து ஆசை வரை, உணர்வுகளில் இருந்து அதற்கு அடிபணிவது வரை என இனிமை-ஆபத்து, தியாகம்-கொடூரம், மாயை-இருள் ஆகிய காதலின் இருபக்கங்களை இந்த திரைப்படம் பேசுகிறது.
ஒலி, ஓசை, உணர்வு ஆகியவற்றின் மூலம் வார்த்தைகளுக்கு உயிரூட்டும் உயிரெழுத்துகளே மொழியின் அடிநாதம். அதுபோல், ’VOWELS’ திரைப்படம் ஐந்து தனித்துவமான கதைகள் மூலம் காதலை வெளிப்படுத்தும். ஒவ்வொரு கதையும் ஒரு உயிரெழுத்தை மையமாகக் கொண்டு ஒரு குறிப்பிட்ட உணர்வை பிரதிபலிக்கும்.
A – Attraction (ஈர்ப்பு): முதல் பார்வையிலேயே காதல்- உண்மை, இளமை, கட்டுப்பாடற்ற உணர்வு.
E – Emotion (உணர்ச்சி): ஆழமான பிணைப்பு- தியாகம், ஏக்கம், பிரிவு.
I – Intimacy (நெருக்கம்): உடல் மற்றும் மன நெருக்கம்- ஆசை, பற்றுதல், பலவீனம்.
O – Obsession (பிடிவாதம்): இருண்ட காதல்- குற்றம், தனக்கு மட்டுமே என்ற உணர்வு, த்ரில்லர்.
U – Unconditional (நிபந்தனையற்ற காதல்): கட்டுபாடுகளற்ற தூய காதல்- கற்பனை, ஆன்மீகம், அர்ப்பணிப்பு. இந்தத் திரைப்படத்தின் ஒவ்வொரு கதையும் தனித்துவமான உணர்வுகளை பேசும். நெருக்கம், ஆசை, இழப்பு, அர்ப்பணிப்பு, மாற்றம் என அனைத்து உணர்வுகளும் இணைந்து காதலை அழகான மொழியாக சித்தரிக்கிறது.
நடிகர் &நடிகைகள்
ஈரோஸ் ,என்னும் கடவுளாக யூகி சேது.
தற்கொலை செய்து கொள்ள போகும், மார்க்கண்டேயன் இடம்.சின்னி ஜெயந்த்,கதையை சொல்லி கலகலப்பான எபிசோடை கொண்டு போகிறார் யூகிசேது .அவர் பேசும் வசனங்களை இயக்குனர் திலீப் குமார் ,அவரும் சேர்ந்து எழுதி இருக்கிறார்கள்.
ஹைலைட்டான முத்தாய்ப்பான வசனங்கள்
ராஜ் ஐயப்பா , சம்யுக்தா விஸ்வநாதன், வரும் காட்சிகள் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்கள்.
தீபக் பரமேஷ் ,காஜல்
வரும் காட்சிகள் திரில்லர் பாணியில் அமைந்துள்ளது .
மற்றும் மருத்துவராக சரத் ரவி ,பிரியங்கா சந்திரசேகர் பீட்டர் கே ,அக்ஷிதா போபையா, நந்து
பரத் போபண்ணா,
விஜிதா வக்ஸிதா
ஆகியோர் நடிப்பு சிறப்பாக இருந்தது
தொழில் நுட்ப கலைஞர்கள்
இயக்குனர்கள்
திலீப் குமார் ஹேமந்த் குமார்
சங்கீத், சந்தோஷ் ரவி, ஜெகன் ராஜேந்திரன்
ஐந்து இயக்குனர்களும் சிறந்த படைப்பை
தந்து புதிய பரிமாணத்தை தொட்டு இருக்கிறார்கள்.
வாழ்த்துக்கள்.
தயாரிப்பாளர்: ராஜு ஷெரேகர்,
ஒளிப்பதிவு: கீர்த்தன் பூஜாரி மற்றும் சந்தீப் அல்லூரி,
இசை: சரவண சுப்பிரமணியம்,
படத்தொகுப்பு: ஹரிஷ் கொம்மே,
கலை இயக்கம்: எம். கே. மதி.
மக்கள் தொடர்பாளர்கள் திரு. சுரேஷ் சந்திரா அவர்கள் .
திரு .அப்துல் நாசர் அவர்கள்.
மொத்தத்தில் இந்த படம் வெற்றி பட்டியலில் இடம் பிடிக்கும் வாழ்த்துக்கள் 🌷
