கதைக்களம்
ராமநாதபுரத்தின் ஒரு வறட்சியான கிராமத்தில், தண்ணீர் தேடும் முயற்சியில் யோகி பாபு (மணிவாசகர்) மற்றும் ஊர் மக்கள் கிணறு தோண்ட, அங்கு டைனோசர் எலும்புக்கூடுகள் கிடைக்கிறது. இதனால் தொல்லியல் துறை கிராமத்தை கையகப்படுத்த, மக்கள் படும் அவஸ்தையே படத்தின் கதை அப்பாவி மக்களின் உழைப்பை சுரண்டும் ஊர் தலைவர், அந்த ஊரில் தண்ணீர் இல்லாததால் யோகி பாபுவுக்கு பெண் கொடுக்க மறுக்கும் நாயகி லவ்லின் அப்பா, நடக்க முடியாமல் ஊர்ந்து செல்லும் நத்தை, கதாபாத்திரம் . ஊர் மக்கள் கேட்கும் தண்ணீர் தர மறுத்து அலைகழிக்கும் , அரசு அதிகாரிகள். கவிதை கிறுக்கன், திருவிழாவில் மோசமான படம் பார்க்கும் பெருசுகள். இப்படி ஒரு கிராமத்தையே கண்முன் நிறுத்துகிறார் இயக்குனர்.
கதை சொன்ன விதம், திரைக்கதை அமைத்த விதம் பரவசம் பாராட்டுக்கள்.
யோகி பாபு
யோகி பாபு வறண்ட கிராமத்தில் கோயில் பூசாரி யாக,
அரசியல் நையாண்டி செய்து கொண்டு சிறப்பாக நடித்திருக்கிறார் கோயில் அர்ச்சகராக நடித்து, பாசிட்டிவ் எண்ணங்களை விதைக்கிறார். கதாநாயகனாகப் பொறுப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்; குறிப்பாக கிராமத்து மக்களின் நீர் நெருக்கடியை நகைச்சுவை மற்றும் எமோஷன் கலந்த நடிப்பால் கடத்தியுள்ளார்.
நிச்சயம் விருதுக்குறிய நடிப்பு
அவர் டைமிங் காமெடி கலந்த நடிப்பு நன்றாக இருக்கிறது.
யோகி பாபு தன் கதாபாத்திரத்திற்கு ஏற்ற இயல்பான நடிப்பை வழங்கியிருக்கிறார். திருமணம் ஆகாமல் தவிப்பதும், தாத்தா மறைவு பிறகுஎன்ன முடிவு எடுப்பது என திணறுவதுமாக நன்றாக நடித்திருக்கிறார். அவ்வளவு பிரச்னைகளுக்கு மத்தியிலும் யாரும் பொண்ணு கொடுக்கல .என்று அவர் எகிறுவது செம கலாட்டா.
ஹீரோயினாக நடித்திருக்கிறார் லவ்லின் ,அலட்டிக் கொள்ளாமல் நடித்தாலும், எல்லா அதிர்ச்சிகரமான காட்சிகளின் போதும் ஒரே அளவிலான எக்ஸ்பிரஷன்கள் மட்டும் காட்டுவது கொஞ்சம் மைனஸ். விக்ரமாதித்யன், ஹலோ கந்தசாமி, கலெக்டராக வரும் ஜார்ஜ், தொல்லியல் துறை அதிகாரியாக
ராமகிருஷ்ணன்,
அமைச்சர் கவிதா பாரதி, மொட்டை ராஜேந்திரன்,
சப் கலெக்டர் ரெபோகா ரேச்சல் வயது வித்தியாசம் இல்லாமல் எல்லோரையும் வறுத்தெடுக்கும் கிராமத்து பெண்கள் , என அத்தனை கதாபாத்திரங்களையும் மனதில் பதிய வைக்கிறார் இயக்குநர்.
கிராமத்து பாணியிலேயே வசனங்கள், என காட்சிக்கு காட்சி ஏதேனும் ஒரு வசனத்தையாவது நினைவுகூராமல் இருக்கமுடியவில்லை
இயக்குனர்
கதை, திரைக்கதை:
வசனம் எழுதி இயக்கி இருக்கிறார்
‘ஒரு கிடாயின் கருணை மனு’ புகழ் சுரேஷ் சங்கையா, வறட்சி, தண்ணீர் பற்றாக்குறை மற்றும் அரசு நிர்வாகத்தின் அலட்சியத்தை ஆழமாகப் பேசியுள்ளார்.
பாராட்டுகள்
கிணறு தேடி டைனோசர் கிடைப்பது போன்ற வித்தியாசமான கதைக்களம், யோகி பாபுவை நாயகனாக
தேர்வு செய்தது பலராலும் பாராட்டப்படுகிறது. இது ஒரு சமூக விழிப்புணர்வு மற்றும் பொழுதுபோக்குத் திரைப்படம் .
கிராமத்து மனிதர்கள் பற்றிய தொடக்கப்பாடல், கிராமத்தை விவரிக்கும் தொடக்கக்காட்சி என ஆரம்பமே நம்மை இழுக்கிறது. கிராமத்து மனிதர்களின் இயல்பு, அவர்களின் நக்கல், நையாண்டி, பதட்டம், அப்பாவித்தனம் ஆகிய உணர்வுகளைப் பதிவுசெய்து அதை எதார்த்தத்துடன் இழைத்திருக்கும் இயக்குநர் சுரேஷ் சங்கையாவுக்கு பாராட்டுகளும் வாழ்த்துகளும். கதையை சொல்லியிருந்த விதம் படத்தின் முக்கிய அம்சம்.
நிவாஸ் கே. பிரசன்னா
இசையில் பாடல்கள் மூன்றுமே சிறப்பு. தமிழ் சினிமாவுக்குப் புதுசு, படத்தின் பின்னணி இசை சிறப்பாக இருக்கிறது. படத்தின் முதல் காட்சியில் கோயில் பார்வை வழியாக காட்டுவதில் ஆரம்பித்து பல இடங்களில் சுவாரஸ்யம் கூட்டுகிறது தியாகராஜன் ஒளிப்பதிவு. முக்கால்வாசி படத்தின் லொக்கேஷன் ஒரு பொட்டல் காட்டு மண்டபம்தான். அதில் சலிப்பு தராதபடி படம் பிடித்திருப்பது, ஊர்மக்களுக்குள் நடக்கும் சண்டை என பல இடங்களில் ஒளிப்பதிவு கவர்கிறது.
கிணறு விளைவுகளால் எடுக்கும் முடிவுகள் என விறுவிறுப்பாகக் கடக்க, இரண்டாம் பாதியில் கதை கொஞ்சம் அலைபாயத் தொடங்குவது சின்ன சலிப்பைத் தருகிறது. . சீரியஸான பிரச்னைகளை முழுவதும் காமெடியாகச் சொல்வது பலம் இருந்தாலும் ஒரு கிராமத்துக்குள் இறங்கி, அவர்களுடன் கிணறு வெட்டியஅனுபவ உணர்வைத் தந்த விதத்திலும் கிராமத்து மனிதர்களின் மொழியிலேயே சுவாரஸ்யமான வசனங்களைத் தந்த விதத்திலும் ஒரு நல்ல சிறுகதை வாசித்த அனுபவம் தருகிறது .
இந்த படத்திற்கு பாடல்கள் எழுதிய மதுரை முரளிதரன் ,
மோகன் ராஜா, மற்றும் ஜெகன் கவிராஜ் வரிகள் ரசிக்க வைக்கிறது.
படம் தொகுப்பாளர் ராமர்.கச்சிதம்
ஆர்ட் டைரக்டர் சுபைந்தர் சிறப்பு.
வசனம் எழுதி இருக்கிறார்கள்
குருநாதன் ,
சுரேஷ் சங்கையா
வசனம் ரசிக்கும்படி இருக்கிறது.
மக்கள் தொடர்பாளர்
ஸ்ரீ வெங்கடேஷ் ,
இந்தபடத்தை மக்களிடம் நல்ல முறையில் கொண்டு போய் சேர்த்திருக்கிறார் அவருக்கு வாழ்த்துக்கள்🌷
கெணத்தை காணோம் வெற்றி பட்டியலில் 🌷
