ஹபீபி’ “திரை விமர்சனம்

ரேட்டிங் 4 -5/5

🌸தமிழ் சினிமாவில் எப்பொழுதாவது இப்படி” குறிஞ்சி மலர்” போல நல்ல சினிமா வருவதுண்டு. அந்த வரிசையில் ,தரமான இயல்பான, கதை களத்துடன் வந்திருக்கும் படம் ஹபிபீ”

​கடையநல்லூரில் வாழும் கண்ணாடி வாப்பா” காக்குழி கைத்தொழில் செய்து மூன்றாவது தலைமுறையாக முகமது யூசுப், அவர்கள் குடும்பமும் அவர்கள் வாழ்வில் நெறியும் சொல்லும் படம் இந்த” ஹபிபீ”

அபுதாகீர்,நிலோபர் ​இருவர் காதலும் அதே எளிய தமிழ் வாழ்க்கைதான் என்பதை இத்தனை அணுக்கமாகக் காட்டும் முதல் தமிழ்ப் படைப்பு தான்”ஹபிபீ”

வெளிநாடு செல்லும் மனிதர்கள் அவர்கள் காலப்பரப்பையும், தொலைந்துபோன அக்காலத்தின் முகங்களையும் அத்தனை நுட்பமாக மீட்டெடுத்து வந்து இருக்கும் படம் “ஹபிபீ”

முகமது யூசுப் (கஸ்தூரி ராஜா)

​மண்ணின் வாசனையோடு, கைத்தறி நெசவின் உழைப்பை நம்பி வாழ்கிறார்.
அவர் தம்பி ஷேக் வெளிநாடுகளுக்குப் பிழைப்பு வேண்டி செல்லும் கனவோடு அவர்களைப் பிரிந்து செல்ல, அவர் மனைவி ஷாலியா,மற்றும் அவர்களது குடும்பத்தினரின் உணர்வுகள்,பேசபட இஸ்லாமிய குடும்பங்களுக்குள் இருக்கும் உறவுப் பிணைப்பு, முரண்கள், கால ஓட்டத்தில் இஸ்லாமிய வாழ்க்கை மீது உள்ளும் புறமும் நிகழ்ந்திருக்கும் மாற்றங்கள் என இவை அனைத்தையும் இணைத்துப் பின்னப்பட்ட திரைக்கதை பிரமாதம்.

​திரையில் விரியும் ஒவ்வொரு காட்சியும் நமது சிறுவயது காலத்து நினைவுகளை, குடும்பத்தில் கடந்துவந்த மனிதர்களை அச்சுப்பிசகாமல் கண்முன் நிறுத்தி மனதை நெகிழச் செய்கிறது.

​இங்கு வாழும் ஒவ்வொரு இஸ்லாமியருக்கும், அவரது வாழ்வின் சகல நிலைகளிலும் நிழலாய் உடன் நிற்கும் ஆகச்சிறந்த நண்பன், இஸ்லாமியர் அல்லாத ஒருவனாகவே இருப்பான். மதங்களைத் தாண்டிய அந்தப் பிரிக்க முடியாத மானுடப் பிணைப்பை, எவ்வித செயற்கைத்தனமுமின்றி இந்தப் படம் அத்தனை அழகாகப் பதிவு செய்திருக்கிறது.

கஸ்தூரிராஜாவின் நண்பனாக வரும், மயில் கதாபாத்திரம் இதற்கு ஒரு எடுத்துக்காட்டு.

​வாழ்வியலை அதன் அசல் தன்மையோடு பேசுகிறேன் என்ற முனைப்பில், ஒரு ‘இரண்டும் கெட்டான்’ படமாகச் சுருங்கி விடாமல் வெகுஜன ரசனையின் கச்சிதமான எல்லைக்குள் நின்று, ஒரு சிறந்த வணிகப் படைப்புக்கான அத்தனை தகுதிகளுடனும் நேர்த்தியாக உருவாகியிருக்கிறார் இயக்குனர்.

கதை களம்

🔥 கடையநல்லூர் பகுதியில் கண்ணாடி வாப்பா மூன்றாவது தலைமுறையாக, முகமது யூசுப் காக்குழி கைத்தறி தொழில் நடத்தி வருகிறார். அவரது தம்பி ஷேக் அண்ணன் செய்யும் தொழில் பிடிக்காமல் வெளிநாடு சென்று விடுகிறார் .மகன் அபு தன் அப்பாவுக்கு உறுதுணையாக இருக்கிறார் .

ஆனால் அபுவுக்கு அதே ஊரைச் சேர்ந்த நிலோ ஃபர் மீது காதல் ஏற்படுகிறது. அந்த காதல் நிறைவேறியதா? இல்லையா. என்பது கதைக்களம்.

🌸படத்தின் தலைப்பான, ஹபீபி என்பதற்கு அரபி மொழியில் அன்பு, காதல் என்று அர்த்தம். அதே போல ‘அன்பின் வழியது உயிர்நிலை’ என்ற திருக்குறள் வாசகமும் உள்ளது. ஆகவே மனிதர்களுக்கிடையேயான பாசம், அன்பு, காதலை, இஸ்லாமிய பின்னணியில் இன்​றைய ட்ரெண்ட், சமூக சூழ்​நிலைக்கு ஏற்ற வாறு வந்துள்ளது.

🌸இயக்குனர்

அவள் பெயர் தமிழரசி, விழித்திரு ஆகிய படங்கள் இயக்குநர் மீரா கதிரவன்
பெயர் சொல்லும் படமாக வந்திருந்தது ஹபீபி திரைப்படமும் கடையநல்லூரிலுள்ள இஸ்லாமியர்களின் வாழ்வியலைப் பேசும் படமாக உருவாக்கி இருக்கிறார். வாழ்​வா​தா​ரத்​துக்​காக நாடு விட்டு நாடு செல்​லும் ஆண்கள், அவர்​களைப் பிரிந்து தவிக்​கும் குடும்​பத்​தினர், இயந்திரமய​மாக்​கல் காரண​மாகத் தொழில் பாதிக்​கும் கைத்​தறி நெச​வாளர்​கள், கூட்​டுக் குடும்​பச் சிதைவு என பல விஷ​யங்​கள் இதில் பேசிஇருக்கிறார் உலக சினிமா தரத்தோடு..👍

இது தமிழ் சமூகத்​துக்​கான படம் இது. ஒரு கால​கட்​ட வாழ்​வியலை, பண்​பாட்டை இந்​தப் படம் ஆவணப்​படுத்தி இருக்​கிறது. தான் சார்ந்த முடிவு​களைத் தானே எடுக்​கும் ஹிஜாப் அணிந்த தற்சார்பு பெண்​ணின் கதா​பாத்​திரம்​ இந்​தப்​ படத்​தில்​ பர்வீன் ,என்ற கதாபாத்திரத்தின் மூலம் பேசி இருக்கிறார் இயக்குனர். பெரியார், அம்பேத்கரையும் சுட்டிக்காட்டும் பர்வீன் கதாபாத்திரம் படத்தின் எவரெஸ்ட் சிகரமாக நிற்கிறது. 👍

சிறப்பாக படமாக்கி இருக்கிறார். இயக்குனர் மண்மனத்தோடு.

🔥இடை வேளை காட்சி பதட்டமான சூழ்நிலை படத்தின் பரபரப்பாக விறுவிறுப்பாக இருக்கிறது.

வெளிநாடு சென்று விட்டு வந்தவர்கள் உள்ளூர் வாசம் தனி என உரையாடுவது, வேனில் போகும்போது காதலிக்காக டேப் ரிக்கார்டில் போடும் நிலவு பாடல் , கிணற்றில் குதிக்கும் இளைஞர்கள், காதலியின் குடத்தில் சோப் போடும் காதலும்,
குடும்ப தலைவர் சுமை என்னவென்று முகமது யூசுப் நடிப்பில் காட்டும் நெகிழ்ச்சி யும் நம்மை நெகிழச் செய்கிறது.

🔥ஈசா, நாயகனாக நன்றாக நடித்திருக்கிறார் காதலி பேச மாட்டாளா? என்றுஏங்குவது காதலிக்காக, திருட்டுப்பட்டம் சுமந்து ,அப்பா முன்னாள் ,கூனிக் குறுகி நிற்பது, இப்படி பல காட்சிகளில் உயிரோட்டமாக நடித்திருக்கிறார்.

👑 கஸ்தூரி ராஜா, முகமது யூசுப் ,என்ற கதாபாத்திரத்தில் கடையநல்லூர் கைத்தறி தொழில் செய்யும் எளிய மனிதராக வாழ்ந்திருக்கிறார். ஒவ்வொரு காட்சியும், நடிப்பில் உருக வைத்து விடுகிறார்.

🌸படத்தின் மிகப்பெரிய பலம்.மாளவிகா மனோஜ், பேசும் கண்கள். பேசாத மொழி, குடும்பத்துக்காக காதலனை தியாகம் செய்த கதாபாத்திரம் அழகான தேர்வு .

🌸தன ஸ்ரீ ,பர்வீன் என்ற கதாபாத்திரத்தில் பெண்ணியம் பேசி, கண்ணியமாக, நம் மனதில் “ஜம்” என்று அமர்ந்து கொள்கிறார். பெண்ணியம் பேசும் பர்வீன், காதலனின் அன்பை புரிந்து கொண்டு ,காதலன் நம்மைப் பற்றி தவறாக பேசவில்லை!! என்று பெருந்தன்மையோடு ,காதலனை ஏற்று சுபமாக முடித்து இருந்தால், இன்னும் அற்புதமாக இருந்திருக்கும் காதலியை பிரிந்து சோகமாய் இருக்கும் நாயகன், முடிவில் சுகமாக காட்டி இருந்தால் மனதுக்கு இதமாக இருந்திருக்கும்.

🌸மற்றும் சுதாகரன், அருள் குமார் சாலியாவாக , வரும் அனு ஸ்ரேயா ராஜன் கதாபாத்திரம் அவ்ளோ ரசிக்க வைக்கிறது. மற்றும் ராபியா , சிறுவயதில் வரும் அந்த சிறுவன், நாயகனின் நண்பர்கள் கடையநல்லூரில் வாழ்ந்த இஸ்லாமிய பெரியவர்கள், என அனைத்து கதாபாத்திரங்களும் மனதில் இடம் பிடிக்கிறார்கள்.

🪩*இசை அமைப்பாளர்*

இசையமைப்பாளர் சாம் சி.எஸ். பின்னணி இசை படத்தின் முக்கிய பலங்களில் ஒன்றாக எதிர்பார்க்கப்படுகின்றது. ஒவ்வொரு பாடலும் தேனாக இருக்கிறது.

🔥ஒளிப்பதிவு மகேஷ் முத்துசாமி

கடற்கரைப் பகுதியைச் சேர்ந்த அந்த பகுதியை அற்புதமான முறை யில்படமாக்கிஇருக்கிறார். ஒரு இஸ்லாமிய குடும்பத்தின் வாழ்க்கை பின்னணியில் ,கதை அதற்கு சரியான ஒளிப்பதிவு, .குடும்ப மரபுகள், மத நம்பிக்கைகள், காதல், தியாகம் மற்றும் மனித உறவுகளுக்கு இடையிலான மோதல்களை கேமரா அள்ளி வந்திருக்கிறது.

🔥ஒரு இளம் பெண்ணின் வாழ்க்கையில் காதல் மலரும்போது, குடும்பத்தின் எதிர்பார்ப்புகளுக்கும் அவளது மனதின் விருப்பத்திற்கும் இடையில் உருவாகும் போராட்டம் கதையை உணர்ச்சிகரமாக முன்னெடுக்கிறது. அதே நேரத்தில், பெரியவர்கள் எடுக்கும் முடிவுகள் இளைய தலைமுறையின் வாழ்க்கையை எவ்வாறு பாதிக்கின்றன என்பதையும் படம் திரைக்கதை மூலம் பேசி இருக்கிறது
மூன்று பேர் திரைக்கதை, எழுதி இருக்கிறார்கள்.

🌸பாடல்களை யுக பாரதி, கார்த்திக் நேத்தா ,மசூக் ரஹ்மான் எழுதி இருக்கிறார்கள்.

🎥கதை எழுதி இருக்கிறார் முகமது அமீன் காதல் கதையாக மட்டுமல்லாமல், சமூக மரபுகள் மற்றும் மனித உணர்வுகளைப் பேசும் படமாக உருவாக்கப்பட்டுள்ளது. புதிய முகங்களும் அனுபவமிக்க கலைஞர்களும் இணைந்து கொடுத்து இருக்கிறார்

🔥மதியின் படத்தொகுப்பு கச்சிதமாக இருக்கிறது.

🌸அப்புனிசாஜனின் ஆர்ட் பணி அற்புதம்.

🔥மக்கள் தொடர்பாளர்கள் : சுரேஷ் சந்திரா, அவர்கள் அப்துல் நாசர் அவர்கள்.

🔥படத்தின் பலம்

இயல்பான கிராமப்புற மற்றும் சமூக சூழல் குடும்ப உறவுகளை உணர்ச்சிப்பூர்வமாக சித்தரிக்கும் திரைக்கதை. சாம் சி.எஸ். இசையால் காதல் மற்றும் சோகக் காட்சிகளுக்கு கூடுதல் ஆழம் வணிக அம்சங்களை விட கதை மற்றும் உணர்வுகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து இயக்குனர் இயக்கி இருப்பது,
மொத்தத்தில் தமிழ் சினிமா கொண்டாட வேண்டிய திரைப்படம்”ஹபீபீ”

🌸வாழ்த்துக்கள் உடன் கிளாசிக் சினிமா