🌸ஆட்டி ,என்றால் ஆளுமை பெண்களுக்கு ஒரு பிரச்சனை என்றால் இப்பொழுது தமிழக அரசு ,சிங்கப்பெண் அதிரடி படை ஆரம்பித்திருக்கிறது. 1880 காலகட்டத்தில் நூறு வருடங்களுக்கு முன்பே, பெண்களுக்காக தனிப்படை அமைத்து போராடிய சிங்க பெண்களின்
மறைக்கப்பட்ட வரலாறை மீண்டும் ஞாபகப்படுத்தும் படம் தான் “ஆட்டி”
:இந்த படம் 1970களின் பின்னணியில் தேயிலைத் தோட்டப் பகுதிகளை ஐக் மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள ஒரு காலப்பின்னணி குற்றத் திரில்லர் திரைப்படமாகும்.
கதை களம்
பல என்கவுன்ட்டர் செய்து, பல ஊருக்கு மாற்றலான காவல் துறை அதிகாரி அமைதி ராஜ், எடக்கிஎஸ்டேட் செங்காடு”பகுதி க்குமாற்றபட்டு அங்கு வருகிறார்.
அந்த ஊரில் படித்த “அழகு” என்ற இளம் பெண் கிராமக் குழந்தைகளுக்கு கல்வி கற்பிக்கும் கிராமத்து பெரியாராக வாழ்கிறார். அங்கு NGO மூலம் ஆசிரியராக வருகிறார் செல்வம். அழகு மீது மையல் கொள்ளும் செல்வம். பல பெண்கள் வாழ்க்கையை சீரழித்தவன் என்பது பின்னால் தெரிகிறது.
அழகுவைசீண்டிப் பார்க்க, அடுத்த நாள் செல்வம் கொலை செய்யப்படுகிறார்!! அவரை கொலை செய்தது யார்? அழகுவா? அல்லது இரண்டு சிறுவர்களா? அல்லது காட்டு வேட்டைக்குப் செல்லும் கடம்பன் கோஷ்டியினரா?
அல்லது அந்த ஊரை காவல் காத்து நிற்கும் எஸ்டேட் முதலாளி கந்த மாறனா?
இந்த கேள்விகளுக்கெல்லாம் விடை தேடி புறப்படுகிறார் காவல் துறை அதிகாரி, அமைதி ராஜ். கொலைகாரனை கண்டுபிடித்தாரா? என்ன நடந்தது? என்பதுதான் “ஆட்டி” படத்தின் கதை களம்.
பழந்தமிழர் வரலாற்றில் பெண்கள் தங்கள் உரிமைகளுக்காக போராடி வெற்றி பெற்றதைப் பற்றியும், அதில் ஏற்பட்ட பல்வேறு பிரச்சினைகளையும் தாண்டி வந்ததைப் பற்றியும், அவர்கள் எதிர்நோக்கிய பாலியல் சீண்டல்களையும், அதைக் கையாண்ட விதம் பற்றியும் பேசுகிறது இந்த ஆட்டி”👍
.
🔥படத்தை இயக்கிஇருக்கிறார் டி. கிட்டு ,
பெண்களின் வீரத்தையும், மறைக்கப்பட்ட வரலாறையும், 1970களில் நடக்கும் திரில்லர் திரைப்படமாக இயக்குனர் கொடுத்து இருக்கிறார்.
காட்சியைசீராக கொண்டு சென்று இருக்கிறார்.
🔥கதாநாயகனாக எசக்கி கர்வண்ணன்,
அமைதி ராஜ் என்ற கதாபாத்திரத்தில், காவல்துறை அதிகாரியாக, கம்பீரமாக வருகிறார்.
பெட்டிக்கடை’, தமிழ்க் குடிமகன், ‘பரமசிவன் பாத்திமா’ உள்ளிட்ட படங்களைத் தயாரித்து இயக்கியவர் இயக்குநர் இசக்கி கார்வண்ணன். ஒரு நடிகராகவும் தன்னை அடையாளப்படுத்திக் கொண்டுள்ள இவர் லட்சுமி கிரியேஷன்ஸ் சார்பில் தயாரித்துள்ள இப் படத்தில்‘ அவருக்கு எப்படி நடித்தால் செட்டாகுமோ!! அதைக் கச்சிதமாக செய்து இருக்கிறார்.
🌸 கதாநாயகியாக அபி நக்ஷத்ரா நடித்துள்ளார் . பெண்களின் தைரியம், சமூக நீதி மற்றும் கிராமப்புறபெண்ணாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு கல்வியை வழங்க முன்னெடுக்கும் கதாபாத்திரமாக சிறப்பாக நடித்திருக்கிறார்.
🔥மற்றும் விடியல் என்ற கதாபாத்திரத்தில் கான்ஸ்ட்டபிளாக, வரும் காதல் சுகுமார் படம் முழுதும் தூங்கிக் கொண்டே இருக்கிறார் அவருடைய கதாபாத்திரத்தின் பெயர்” விடியல்” மற்றும், சௌந்தர், பிரவீன் பழனிச்சாமி, கரன் சக்கரவர்த்தி, அலன் கிருஷ்ணன், லெனின் என அனைவரும் சிறப்பாக நடித்துள்ளனர்.
🌸மறைக்கப்பட்ட பெண்களின் வீரமிக்க ,வரலாறை கண்டுபிடிக்கும் கதாபாத்திரத்தில் சிந்து குமரேசன், காளி என்ற கதாபாத்திரத்தில், கச்சிதமாக பொருந்தி இருக்கிறார். பெண்களை ஏன்? குலதெய்வம் என்று கொண்டாடுகிறார்கள் தெரியுமா? என்று கேட்டுவிட்டு!! அவர் ஆய்வு செய்ததை சொல்லும்போது கைதட்ட வைக்கிறது.
🔥இந்தப் படத்தின் திரைக்கதையை திருமுகம் எழுதியிருக்கிறார். சீராக செல்கிறது திரைக்கதை…
🔥இளங்கோவனின் படத்தொகுப்பு கச்சிதமாக இருக்கிறது.ஷார்ப்பாக, செதுக்கியிருக்கிறார்.
🪩சிபி சதாசிவம் ஒளிப்பதிவு ,1970 காலகட்டத்தை கண் முன் நிறுத்துகிறது. மலைகாடுகளை அற்புதமாக படமாக்கி இருக்கிறார். காட்டுக்குள் நடக்கும் சண்டை காட்சிகள் 🌸விறுவிறுப்பாக கேமரா அள்ளி வந்திருக்கிறது.
🔥முஜிபுர் ரஹ்மான் ஆட் டைரக்டராக பணி புரிந்திருக்கிறார்.
பழங்குடி மக்கள் வாழும் வீடுகள், பள்ளிச்சாலை, காவல் நிலையம், மஞ்ச மக்கா கோயில் ,என அவரின் கைவண்ணம் சிறப்பாக இருக்கிறது.
🔥தீசன் இசையமைத்திருக்கிறார் .பின்னணி இசை பிரமாதம்.
🌸சுரேஷ் ,சண்டை பயிற்சியாளராக சிறப்பாக பயிற்சி கொடுத்திருக்கிறார். சண்டை காட்சிகள் விறுவிறுப்பாக இருக்கிறது.
🌸ஒப்பணையாளராக அப்துல், பணி புரிந்திருக்கிறார் அபி நட்சத்திராவுக்கும், அவர்கள் கூட்டத்துக்கும், ஒப்பனை வெகு சிறப்பு👍
🔥அந்த காட்டு, மலை பகுதியில் வசிக்கும், அந்த பழங்குடி மக்களுக்கு சிறப்பான கவனத்தை பெறுகிறது.காஸ்ட்யூம். காஸ்ட்யூமராக
பூங்குயிலி கிட்டு பணிபுரிந்து இருக்கிறார்.
🔥மக்கள் தொடர்பாளர்:
ஏ. ஜான் அவர்கள், படத்தை சிறப்பாக மக்களிடம் கொண்டு போய் சேர்த்திருக்கிறார் அவருக்கும் வாழ்த்துக்கள்👍
🌸இந்த படம்
ஊட்டி மற்றும் குன்னூர் சுற்றுவட்டாரங்களில் இதற்கு முன் அதிகம் பயன்படுத்தப்படாத இயற்கை இடங்களில் படப்பிடிப்பு நடத்தியிருக்கிறார்கள்.
காட்சிகள் பிரமிப்பை ஏற்படுத்துகிறது. ஒரு திரில்லர், ஜானர், படத்திற்கு உண்டான அத்தனை அம்சங்களும், இந்த படத்தில் பொருந்தி இருக்கிறது. நிச்சயம் மறைக்கப்பட்ட தமிழ் பெண்களின் வீரம், அனைவரும் காண வேண்டிய வகையில் எழுதி படமாக்கி இருக்கிறார்கள். தயாரிப்பாளருக்கும் வாழ்த்துக்கள்.🌸
