மக்கள் தலைவா திரை விமர்சனம்

ரேட்டிங் 3-7/5

🔥சின்ன வயதில் பெருந்தலைவர் காமராஜர், பள்ளிக்கு அழைத்து சாப்பாடு போட்டு படிக்க வைத்ததால் அவர் மீது அபிமானம் கொண்ட பி.பி என்கிற பச்சமுத்து பழனிமாணிக்கம் அதாவது (ராதாரவி) பெருந்தலைவர் காமராஜர் தேர்தலில் தோல்வி அடைந்த பிறகு, நல்லவங்க ஏன் தோத்துட்டாங்க” என்று தன் அப்பாவிடம் கேட்டு
மனம் வருந்தி,பிறகு ஆரஞ்சு” என்று கம்பெனி ஆரம்பித்து மிகப்பெரிய கோடிஸ்வரனாக,
கார்ப ரேட் கம்பெனி முதலாளியாக,உயருகிறார்.

அவருக்கு பெருந்தலைவரை தோற்கடித்த , மக்களை அவர்கள் பாணியிலேயே தோற்கடித்து, ஒரு பைத்தியத்தை முதல்வராக்க வேண்டும் .என்று முடிவு செய்து ரவி மரியாவை உள்ளே வெளியே, என்ற ஒரு கட்சியை ஆரம்பிக்க சொல்கிறார். ஆரம்பித்து அரிசி என்ற சின்னத்தை தேர்வு செய்து டிஜிட்டல் மீடியா மூலம் அரிசியை லிங்க் அனுப்பினால் 5000 ரூபாய், ஒன்றிலிருந்து பத்து வரை செல்போன் நம்பர் செய்தால், அவர்களுக்கு ஒரு மாத இலவசம் ரீசார்ஜ், அதுபோல மதுவுக்கு எதிரான, போராட்டம் .மணல் மாபியா கும்பலுக்கு எதிராக போராட்டம். நடத்த சொல்கிறார் இப்படி மக்கள் மனதில் ரவி மரியா ,கஞ்சா கருப்புவும், அக்னி எஸ் வருணும் சேர்ந்து போராட்டம் நடத்தி ஆட்சியைப் பிடிக்கிறார்கள். ஆனால் கிளைமாக்ஸ்சில் ராதாரவி, ஆட்டம் உள்ளே வெளியே என்னும் மங்காத்தா ஆட்டம் மிகவும் அருமையாக உள்ளது. இது தான் கதை களம்

🧶 ரவி மரியா, தமிழ் குடிமகன், என்னும் கிராமத்தில் பிறந்து வளர்ந்து, ரீல்ஸ் போட்டு அரசியல்வாதி யாகும், கேரக்டரில் நடித்திருக்கிறார்.
வாயிலே வடை சுடுகிறார். எப்படி எல்லாம் பணம் வைத்திருக்கும் அரசியல்வாதிகளை ஏமாற்ற முடியுமோ? அவர்களை ஏமாற்றி ராதாரவியால், ஒரு கட்சி தொடங்கி இலவசங்களை அள்ளி வழங்கி, முதலமைச்சராகும் நேரத்தில் ஒரு விபத்து க்கு,ஆளாகி காணாமல் போகிறார் .
ரவி மரியா சிறப்பாக நடித்திருக்கிறார்.

🧶கஞ்சா கருப்புவும், அக்னி எஸ் வருணும், ரவி மரியாவுக்கு படம் முழுக்க துணை நிற்கிறார்கள். காமெடிக்கு கழக கலகலப்பு ஏற்றுகிறார்கள்

ராதாரவி ,கார்ப்பரேட் கம்பெனி வைத்திருக்கும் அவர் நேர்மையான அரசியலை கொடுக்க வேண்டும் என்று ஒரு அரசியல் நாடகத்தை அரங்கேற்றுகிறார். அதுதான் படத்தின் டிவிஸ்ட்.

பழ கருப்பையா, பாரம்பரியமிக்க கட்சி தலைவராக வந்து” பத்து ரூபாய் பாட்டிலுக்கு பதில் சொல்வதும், தன்னுடைய உதவியாளர் அமுதன் ஏடாகூடமாக செய்யும் போதெல்லாம் சலித்துக் கொள்வதும் , படம் முழுக்க கலகலப்பும் காமெடியும் கலந்து செய்கிறார். அவருடைய கதாபாத்திரம் சிறப்பு

🧶அக்ஷயா, ஒன்று இரண்டு காட்சிகள் வந்து போகிறார் ஓகே தான் .

🍩நாஞ்சில் சம்பத் இதிலும் அரசியல்வாதியாக வருகிறார் ரவி மரியாவுக்கு, அரசியல் கற்றுக் கொடுக்கும் இடம். பெட்டி பெட்டியாக வாங்கி ஒரு சூட்கேஸ் கடையை வைத்து நடத்தலாம் என்று சொல்லும்போது தியேட்டரில் சிரிப்பொலி .

🔥பொதுமக்களை
எப்படி எல்லாம் ஏமாற்றுபவர்கள்
எப்படி எல்லாம் நம்ப வைத்து அரசியல்வாதிகள் தங்கள் சுயநலத்துக்காக பணம் சம்பாதிக்கிறார்கள். என்பதை “கஞ்சா கருப்பு ஒரு மேடையில் சொல்லுவார் ஹனிமூன் செல்லும் தம்பதிகளுக்கு விமான டிக்கெட் ஃப்ரீ ,ஒவ்வொரு குழந்தை பிறக்கும் தம்பதி க்கும் தங்க காசு “என்று அல்லி விடுவார் இதெல்லாம் இன்றைய சமகால அரசியலை ஞாபகப்படுத்துகிறது .

ரீல்ஸ் போட்டே வளர்ந்திருக்கிறார்கள் என்று சொல்வதும், இன்றைய அரசியலுக்கு பொருந்தி போகிறது .

🔥கவிதாலயா சரவணன், தன்னுடைய கதாபாத்திரத்தில் கச்சிதமாக நடித்திருக்கிறார்

🔥 கார்த்தி நாயர் கேமரா கிராம மக்களோடு ஒன்றிப்போகிறது. பாடல் காட்சிகளிலும், மற்றும் அரசியல் கட்சிகளையும், அவர் கொடுத்த பட்ஜெட்டுக்கு சிறப்பாக செய்திருக்கிறார்

🧶இசையமைப்பாளர் துளசிராமன் பாடல்கள் குறைவுதான் என்றாலும் நிறைவாக ரசிக்க கொடுத்திருக்கிறார் .

🧶மற்றும் படத்தொகுப்பாளர், ஒப்பனையாளர் , ஆர்ட் டைரக்டர், என எல்லா டிபார்ட்மெண்டும் படத்தின் கலகலப்பு க்கு, உதவியிருக்கிறார்கள் .

🔥பயில்வான் ரங்கநாதனுக்கு யோக்கியன் ,என்ற பத்திரிகையாளர் வேடம் கச்சிதமாக இருக்கிறது.

🔥இயக்குனர் ராம்தேவ், இதற்கு முன் பழகிய நாட்கள், மூன்றாம் மனிதன், போன்ற படங்களை எடுத்தவர் .இந்த படத்தில் இந்த காலத்துக்கு பொருந்த, முன்னாலே யோசித்திருக்கிறார் என்பது அவருடைய சிந்தனையில் எவ்வளவு பெரிய வலுவான அமைப்பு இருக்கிறது.
என்று தெரிந்து கொள்ளலாம்.
இன்று தமிழ்நாட்டில் என்ன நடந்து கொண்டிருக்கிறது அதை அப்பொழுதே கதையாக யோசித்து படமாக எடுத்திருக்கிறார். கால சக்கரத்துக்கு அப்படியே பொருந்தி இருக்கிறது. குறிப்பாக அவர் வசனம் எழுதியிருப்பது சிறப்பாக இருக்கிறது.
🔥 நீ தனியாக திருடினால் திருடன் ஒரு கூட்டத்தோடு திருடினால் தலைவன் .

🔥அரிசி லிங்
அமுக்கினால் 5000 ரூபாய் .

🧶பாட்டிலுக்கு பத்து ரூபாய்னா ஒரு மாசத்துக்கு எவ்வளவு வருஷத்துக்கு எவ்வளவு என்று பேரரசு பேசும் வசனம் .
🔥அரசியல் வியாபாரம் ஆகி ரொம்ப நாள் ஆச்சு என்ற வசனமும், பழ கருப்பையா. பேசும் 🔥நான் கூட நம்பர் நடிகையின் உதட்டை கடிச்சேன்னு எழுதுறாங்க அதனால என்னால முடியுமா?
என்ற வசனமும்
🔥 வாய் மட்டும் இல்லைனா, என்று சொல்லும் ரவி மரியாதை இடம் வரும் வாய்ப்பே இல்லை ராஜா” என்று ஒரு தலைவரை சுட்டிக்காட்டுவதும்” 🔥குடிகாரர்கள் ஒருநாள் ஸ்ட்ரைக் செய்தால் என்னவாகும் தமிழ்நாடு என்பதையும் கற்பனையாக சித்தரித்திருக்கிறார்கள்.

🔥 கணவன் தீக்குளித்து இறந்தால் மனைவிக்கு, 20 லட்ச ரூபாய்
போன்ற வசனங்களும் 🔥தீப்பொறியாக பறக்கிறது ஒவ்வொரு வசனமும் மக்களை சாட்டை எடுத்து சுழற்றுவது போல எழுதப்பட்டிருக்கிறது.
🔥இப்படி படம் முழுக்க மக்கள் திருந்த வேண்டும். ஓட்டு போடும்போது சிந்திக்க வேண்டும் நல்ல தலைவர்களான பெருந்தலைவர் காமராஜர் ,கக்கன், ஜீவா புரட்சித்தலைவர் விஜயகாந்த், போன்றவர்களை தோற்கடித்த இந்த தமிழ் மண் இனிமேலாவது திருந்தி, மக்களுக்கு நல்ல தலைவர்களை தேர்ந்தெடுக்க வேண்டும் என்ற ஒரு நல்ல சிந்தனை யோடு உருவாக்கப்பட்டு இருக்கிறது. நிச்சயம் இந்த படம் பேசும் பொருளாகும் மக்கள் ரசிப்பார்கள். கொண்டாடுவார்கள் என்று நம்புகிறோம்
வெற்றி பட்டியலில் இடம் பிடிக்கும் கிளாசிக் சினிமாவின் வாழ்த்துக்கள் 🌷

🔥மக்கள் தொடர்பாளர் வேலு