🌸உயிரில்லாத பிளாஸ்டிக் பூவும் , உயிருள்ள துப்பாக்கி ஒன்றும் சேர்ந்த கதை டி .சி
கதை களம்
☘️தேவதாஸ், என்ற முரட்டுத்தனமான, சமூகத்தின் வழக்கமான கட்டுப்பாடுகளுக்கு வெளியே வாழும் மனிதனின் வாழ்க்கையில நடக்கும் சம்பவங்கள் தான் கதை இதில் நம்பிக்கை, துரோகம், உயிர் பிழைத்தல் ஆகியவற்றைச் சுற்றி நகர்கிறது. தேவதாஸ், சந்திராஇருவரின் உறவு வலுப்பெறும்போது அவர்களைச் சுற்றியுள்ள வன்முறை உலகமும் , அதை தேவதாஸ், சந்திராவும் எப்படி முறியடித்தார்கள்? எப்படி ஒன்று சேர்ந்தார்கள்? என்பது படத்தின் ஒன் லைன்….
படம் ஒரு dark romantic action drama / crime thriller வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. காதலும் ஆபத்தும் மோதும் உலகில் தேவதாஸ்–சந்திராவின் பயணம் நகர்கிறது
இந்தப் படத்தின் மிகப்பெரிய சுவாரசியம் ஒரு இயக்குநர் மற்றொரு இயக்குநரின் இயக்கத்தில் கதாநாயகனாக மாறியிருப்பது. அதுவும் அருண் மாதேஸ்வரனின் இருண்ட கதை சொல்லும் பாணியில் லோகேஷ் எப்படி நடிக்கிறார் என்பதுதான் படத்தின் முக்கிய ஈர்ப்பு கதைப் பகுதியை முழுமையாக ஸ்பாய்லருடன், அதாவது முதல் காட்சி முதல், கிளைமாக்ஸ் வரை என்ன நடக்கிறது, தேவதாஸ்–சந்திரா உறவு எப்படி மாறுகிறது, கிளைமாக்ஸ் என்ன சொல்கிறது என்று பார்ப்போம
.🧶தலைவாசல் விஜய் தலைமையிலான கூலிப்படையில் லோகேஷ் கனகராஜ் மற்றும் அவரது நண்பர்கள் இணைந்து குற்ற சம்பவங்களில் ஈடுபட்டு வருகிறார்கள்…
அரசு(தலை வாசல் விஜய்) தலைமையிலான குழுவில் இருக்கும் தேவதாஸ், போலீசாரிடம் இருந்து ஆயுதங்களை பறிக்கும் ஆபத்தான பணிகளில் ஈடுபடுகிறார். ஒருநாள், மகனின் கல்விக்காக நிலத்தை விற்று பணத்துடன் வீடு திரும்பும் ஒரு சாதாரண மனிதரை சில போலீசார் கொடூரமாக தாக்கி கொலை செய்து பணத்தை பறிக்கிறார்கள். இந்த சம்பவம் தேவதாஸின் குழுவை அதிர்ச்சியடையச் செய்கிறது. அநீதிக்கு காரணமான போலீஸ் அதிகாரியை அவர்கள் கொலை செய்ய, அதன் பிறகு முழு கும்பலையும் வேட்டையாடும் நடவடிக்கையை போலீசார் கொலை செய்து..
தப்பிச்செல்லும் தேவதாஸ், ஒரு இசைக்கலைஞரான பார்வதியை (சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி) சந்தித்து காதலிக்கிறார். ஆனால் எதிர்பாராத சம்பவத்தில் அவளை இழக்க நேரிடுகிறது. பின்னர் வாழ்க்கையில் சந்திரா (வாமிகா கப்பி) என்ற பெண் வருகிறார். அவளின் வாழ்க்கையையும் காப்பாற்றும் தேவதாஸ், இறுதியில் தன்னுடைய நண்பர்களின் மரணத்திற்கும், நடந்த அநீதிகளுக்கும் காரணமானவர்களை எப்படி பழிவாங்குகிறார் i
என்பது விறுவிறுப்பாகவும் சொல்லபடுகிறது: கேங்ஸ்டர் கதையை மையமாகக் கொண்டிருந்தாலும், அதன் பின்னணியில் சமூக அநீதி, ஏழைகளின் போராட்டம், மற்றும் மனித உணர்வுகள் அழுத்தமாக பதிவு செய்யப்பட்டுள்ளன. தொடக்கத்தில் கதையின் நகர்வு சற்று மெதுவாக இருந்தாலும், இடைவேளைக்குப் பிறகு திரைக்கதை வேகமெடுத்து சுவாரஸ்யத்தை அதிகரிக்கிறது. ஆக்ஷன் காட்சிகளும், உணர்ச்சிப்பூர்வமான தருணங்களும் சரியான அளவில் கலந்து இருப்பது படத்திற்கு பலமாக அமைகிறது. குறிப்பாக இடைவேளை மற்றும் கிளைமாக்ஸ் மோதல் காட்சிகள் ரசிகர்களுக்கு திருப்திகரமான அனுபவத்தை வழங்குகின்றன.
⭐ நடிப்பு
இப்படத்தின் மூலம் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கதாநாயகனாக நடிப்பில் அறிமுகமாகிறார். அவர் ஏற்கெனவே இயக்குநராக பிரபலமானவர் என்பதால், இந்த மாற்றம் படத்தின் முக்கிய எதிர்பார்ப்பாக அமைந்துள்ளது.
லோகேஷுக்கு இயக்குநராக இருப்பதைவிட கேமரா முன் நடிப்பது புதிய அனுபவம். இசை வெளியீட்டு விழாவில் மேடையில் பேசுவதற்கே தான் பதற்றமாக இருப்பதாக அவர் வெளிப்படையாகப் பகிர்ந்துகொண்டார் ஆனால் இப்படத்தில் துப்பாக்கியை சுடும் லாவகம், எதிரிகளைப் பந்தாடுவது, கருணை மிகுந்த மனிதராக நடித்திருப்பது, பாராட்டுகிறது ஆரம்ப எதிர்வினைகளில், அவர் ஆக்ஷன் காட்சிகளையும் அமைதியான நடிப்பையும் நன்றாக கையாண்டு இருக்கிறார்.
காவல் துறை கூட்டம் துரத்த, அதில் தப்பிப்பதில் இருக்கும் அவஸ்தைகளை ரத்தமும் கத்தியுமாக அவர் எதிர்கொள்வது மிகுந்த சவாலான சம்பவங்கள்.
பார்வதி கொலைக்கு, கொலையாக பழிக்குப் பழிவாங்கும். போது வாழ்க்கை கோடாரியால் புற மண்டையில் விளாசுகிறது. ஒதுங்கி ஓடுபவன் ஒரு ரகம்; ஓங்கித் திருப்பி அடிப்பவன் ஒரு ரகம். தேவதாஸ் இரண்டாம் ரகம் என்பதால் ஓங்காரக் கூச்சலுடன் ரத்தம் தெறிக்கத் தெறிக்க ரத்த சகதியில் அடுத்த அடுத்த காட்சிகள் நகர்கின்றன.
நாயகனை துரத்தும் காவல் துறை, ஓடும் நாயகனுக்கும் அவர் கூட்டாளிகள் இடையே கிட்டு, தாஸ், செபாஸ்டியன், கருப்பு, இவர்களுடன்
பயணிக்கிறார்.
சாதாரணமான ஏழை யிடம் பணத்தை பிடுங்கும் போலீசை, அவர் சம்பவம் செய்யும் காட்சி சிறப்பு. தன்னை காட்டிக் கொடுத்த ஒருநாள் இரவு அடைக்கலம் கொடுத்த ஏழைக்கு பணம் கொடுக்கும் பொழுது போலீசிடம் மாட்டிக் கொண்டாலும் அவன் கையில் பணத்தை திணிப்பது கதாபாத்திரத்தை மிகவும் உயர்த்தி இருக்கிறது.
நாயகி சந்திராவை எல்லோரும் தவறாக பேச நாயகன் மட்டும் அவளை மதிப்புக்குரிய பெண்மணியாக நினைத்துப் போற்றுவது, நாயகனின் கதாபாத்திரத்தின் மேல் தங்க மூலம் பூசியது போல இருக்கிறது.
தன் அப்பா, கடைசி வரை பேசாமல், கிளைமாக்ஸில் மனம் உறுகிப் பேசி கஸ்தூரி ராஜாவின் இதயத்தில் இடம் பிடிப்பது தனி ரகம்.
பார்வதியைக் கொலை செய்த போஜ ராஜனை போட்டுத் தள்ளும் இடம் வெகு சிறப்பு.
தன்னை கைது செய்த கோபிசெட்டிபாளையம் போலீஸ் அதிகாரி. சந்திராவை பற்றி தவறாக பேச, அவள் பெயர் என்ன? என்று மோசமாக கேட்க! துப்பாக்கியால் நாயகன் போட்டு தள்ளிவிட்டு, அவள் பெயர் சந்திரா என்று சொல்லும் இடம் தியேட்டரில் கரகோஷம் விண்ணை பிளக்கிறது.
அடுத்தடுத்து நடப்பதெல்லாம் ரத்த சரித்திரம்தான். பழிவாங்கலில் தனி ருசி கண்ட இயக்குனர் மெருகேற்றி இருக்கிறார்.
🔥இத்தனை ஆண்டுக்கால அனுபவமும்,கொண்ட தலைவாசல் விஜய் நடிப்பில் பட்டை தீட்டும் வைரமாக ஜொலிக்க, மோட்டார் மணியாக வரும் கஸ்தூரிராஜாவின் குரலும் அந்தக் கதாபாத்திரத்துக்கு அவ்வளவு வலு சேர்க்கிறது. சில காட்சிகளே வந்தாலும், குருதி படிந்த ஓவியமாய் மனதில் பதிக்கிறார் சஞ்சனா. படத்தில் வரும் சின்ன சின்ன கதாபாத்திரங்களும், கதையின் சுவாரஸ்யத்துக்குத் துணையாய் நிற்கிறார்கள்.
மற்றும் துணை கதாபாத்திரங்களாக வரும்
•☘️ கிட்டியாக வரும்
☘️அவினாஷ் ரகுதேவன் – நடிப்பில் அசத்தியிருக்கிறார் வில்லத்தனத்தில் மிரட்டி இருக்கிறார்.
☘️ஜவஹர் சக்தி – கருப்பன் கதாபாத்திரத்தில்
☘️ஷரத் ரவி – சுன்னிலால் வேடத்தில் கலக்கி இருக்கிறார்.
☘️பிரணவ் தியோஃபைன் –வேடத்திலும். 🔥செபாஸ்டியன் ஏ. ராஜரிஷி –யாகவும். 💥சிங்காரம் பாலாஜி யாகவும் ,
☘️தேவிபிரசாத் – அஷ்ரப் என்ற வேடத்தில் ஃபேமிலி சென்டிமென்ட் வேடத்தில் நடித்துள்ளார்.
☘️•அட்டுல் –
ராஜரிஷி வேடத்தில்,
•☘️மனோஜ் சஷி – மனோஜ் வேடத்தில்,
☘️கலையரசன் ஆர். – ராஜா மாணிக்கம்வேடத்திலும்,
•☘️ ஃபிராங்க்ளின் ஜேக்கப் – ஃபிராங்கி யாகவும்,
* ☘️திலீபன் கே. – திலீப் என்ற வேடத்தில்,
•☘️ கர்ணராஜா – டிஜிபி யாகவும்,
•☘️ பாஸ்கர் ஆர். – அங்காணி வேடத்தில்,
•☘️ விஜயலட்சுமி வீரமணி – வடிவு என்ற கதாபாத்திரத்தில்,
•☘️ நந்தீஸ் எம். – அங்காணியின் மகன் வேடத்தில்,
* ☘️தீபம் பிலிப்போஸ் – யுவராஜ் வேடத்தில்,
•☘️ பிரேம் கே. சேஷாத்ரி –யாகவும், 🔥சாமிக்கண்ணு
* பிகில் சிவா –கதாபாத்திரத்திலும்,
☘️மருத்துவர்
•அஷ்ரப் மல்லிசேரி – ☘️கர்வாச்சி கண்ணன்
•☘️ சமுண்டீஸ்வரி ஜே. – அமுலு
•☘️ கபில் வேலவன் – இ. கபில்
* ராஜா ரகுபதி – ஆரோக்கியராஜ்
•☘️ இதயகுமார் – யுவராஜ் அணி
* ☘️காக்கா கோபால் – கடை உரிமையாளர்
•☘️ ஆரா. அஜித் – விஜய்
* ☘️ஷோபன் பாபு – ஷோபன் பாபு
•☘️ விராஜ் – கிட்டியின் சகோதரர்
* ☘️நாகேஸ்வரி டி. – அரசுவின் மனைவி
•☘️ ஹரிஷ் – அரசுவின் மகன்
* ☘️மதேஷ் – இளம் தேவதாஸ்
* ☘️ஜெ. வைஷாலினி – அஷ்ரப்பின் மகள்
☘️• டி. நரேஷ் – யுவராஜின் உதவியாளர்
•☘️ ஏ. அஜித் குமார் – மாவத்தம்
* ஜான்சன் – ஜான்சன் டி
☘️• தேவா – தேவா
* ஹன்னா – அஷ்ரப்பின் மனைவி
* ☘️பி.எஸ். கௌதம் – காவல்துறை அதிகாரி
* ☘️கலை வேம்பு – காவல்துறை அதிகாரி
* தயாராம் – காவல்துறை அதிகாரி
•☘️ விகாஷ் ஜே. – காவல்துறை தகவலாளர்
•☘️ கிழக்குவாசி சந்திரன் – பாடகர்
* ☘️சசி குமார் பி.ஏ. – காவல்துறை அதிகாரி
* 🔥சாரா பிளாக் – பார்வதியின் தோழி
•🔥 சாலமன் – பார்வதியின் தோழர்
* 🔥நந்தினி உதயகுமார் – சாமிக்கண்ணுவின் மனைவி
🔥• வி.ஜி. ராஜேஷ் (வி.ஜி.ஆர்.) – காவல்துறை அதிகாரி
•🔥 சுப்ரமணியன் மாதவன் – லாட்ஜ் உரிமையாளர்
* 🔥தீபக் – கிடங்கு உரிமையாளர்
* 🔥சங்கீதா – விபச்சார விடுதி பெண்
* 🔥சி. பிரியா சண்முகம் – விபச்சார விடுதி பெண்
•🔥 நித்யா எஸ். – விபச்சார விடுதி பெண்
* 🔥சிவசங்கரி ஜி. – விபச்சார விடுதி பெண்
•☘️தமிழரசி – விபச்சார விடுதி பெண் என்று எல்லோரும் நடிப்பில் ஸ்கோர் செய்துள்ளார்கள்.
🌸நாயகி
வாமிகா கபி கதாபாத்திரத்திற்கு தேவையான தீவிரத்தையும் உணர்ச்சியையும் கொண்டு ஒரு புரட்சியான வேடத்தில் நடித்திருக்கிறார்
சுருதிஹாசன் குரலும் அதற்கு வலு சேர்க்கிறது.
☘️நாயகனை பிடிக்க வரும் போஜராஜன் ஆக நடிதத்திருக்கும்
கிரிஷ் தயாள் நடிப்பு சூப்பர்!!
🎥 தொழில்நுட்ப கலைஞர்கள்.
☘️இயக்கம் & கதை: அருண் மாதேஸ்வரன்
கூடுதல் திரைக்கதை: அருண் ரஞ்சன்
வசனம்: அருண் மாதேஸ்வரன், ஃபிராங்க்ளின்
ரசித்த வசனங்கள்
☘️ உன்னைத்தவிர இந்த உலகத்தில் எல்லோருமே என்னை தப்பா தான் பார்த்தாங்க
☘️தெரிஞ்சவங்க கிட்டே எதுவும் சொல்ல முடியாது,தெரியாதவங்க கிட்டே எது வேணாலும் சொல்லலாம்.
எப்படி?
இனிமேல் தெரிஞ்சுக்கப்போறதில்லை என்ற தைரியம் தான்.
☘️ தப்பு செஞ்சா தட்டிக்கேட்க போலீஸ் வரனும்,ஆனா அந்த போலீசே தப்பு செஞ்சா யார் வர்றது!?
☘️ போலீசையே போட்டுத்தள்ளும் அளவு அவன் பெரிய ஆளா?
☘️ நீ இங்கே வர்றதுக்கு முன்னாடி என் உயிர் போகாது
☘️மானத்துக்கும் விலை உண்டு.
☘️ உன் பேர் மட்டும் அரசு.பண்றதெல்லாம் அரசாங்கத்துக்கு எதிரான வேலை
இயக்குனர்
☘️வன்முறையும், கவிதையும் கலந்த ஒரு ரத்தக் கறையான பழிவாங்கும் கதையை அமைதியான மற்றும் தீவிரமான இயக்கி சண்டைக்காட்சிகளில் வன்முறை, வித்தியாசமான கதை சொல்லல் -,
என மிரட்டி இருக்கிறார்.
போலீஸ் ஸ்டேஷனில் தேவதாசை சந்திரா மீட்கும் காட்சி,
சந்திராவை பாலியல் தொழிலில் இருந்து தேவதாஸ் மீட்கும் காட்சி,
ஈரோடு திருமண மண்டபத்தில் நடக்கும் சண்டை காட்சி,
தேவதாஸ், சந்திரா இருவரும் தண்ணீரில் ஒரே ஷாட்டில் நின்று பேசும் காட்சி, அப்போது உதிக்கும் சூரியன் உதயம் கவிதை
தவறு செய்தவர்களுக்கு தண்டனை கொடுத்தே ஆக வேண்டும் என்ற போதனைக்காக செய்யும் வன்முறை ஏற்றுக்கொள்ள தக்கதாக இருக்கிறது.
ஆரம்ப காட்சியில்
ஏழை தன் மகன் கல்வி செலவுக்காக 7 லட்சம் ரூபாயை கொண்டு செல்லும் பொழுது ஈவு இறக்கமற்ற காவல்துறை அதிகாரி, சாமானியனை கொலை செய்து குப்பையில் வீச மனைவி, மகன், தந்தை நம்பிக்கையிழந்து கதறி அழும் காட்சி
அவர்கள் அழுகைக்கு பதிலளிக்க நாயகன் வெகுண்டுஎழுந்து அதற்குக் காரணமானவர்
களை துவம்சம் செய்யும்
.அந்தக் காட்சி உச்சகட்ட வன்முறை என்றாலும் அது படம் பார்ப்பவர்களுக்கு நியாயமாகப்படுகிறது..
உடல் வலிமை மிக்க
நாயகன், மனவலிமைமிக்க நாயகி
என இருவர் செய்வது மோசமான தொழிலாக இருந்தாலும் அவர்கள் பக்கம் நியாயம் இருக்கிறது என்பதை இயக்குனர் தெளிவுபடுத்தி இருக்கிறார்., பார்வையாளர்களின் வசதிக்காக இயக்குனர்
சந்திராவின் அந்தரங்க தொழில்அந்தக் காட்சியைபகிரவில்லை. ஏராளமான அதிரடிச் செயல்களுக்கு மத்தியில் ஒரு நிசப்தம்; வன்முறைக்கு முன்னால் ஒரு பெரும் அமைதி
காட்சிகள் சிறப்பாகப் படமாக்கப்பட்டு, சிறப்பாக நடிக்கப்பட்ட ஒரு படைப்பாக இருப்பதற்கும் இடையிலான கோடு மிகவும் மெல்லியதாக உள்ளது.
என அருண் மாதேஸ்வரன் வலியுறுத்துகிறார்
மொத்தத்தில் அவர் இயக்கிய ராக்கி, சாணிக்காயிதம், கேப்டன் மில்லர், ஆகியமூன்று படங்கள் சொன்ன நீதி போதனை இந்த படத்திலும் தொடர்கிறது.
பிளாஸ்டிக் பூ ஒரு கதாபாத்திரமாகவும் உயிருள்ள பொம்மையான துப்பாக்கி ஒரு கதாபாத்திரமும் இந்த படத்தில் இணைவது இயக்குனர் வித்தியாசமான சிந்தனை!!
☘️இண்ட்டர்வெல் பிளாக் சீன் ,மேரேஜ் ஹால் பைட் சீக்வன்ஸ் ,க்ளைமாக்ஸ் ஆக்சன் சீன்ஸ். குட்
☘️நாயகி. 16 வருடங்களுக்குப்பின் வெளி உலகைப்பார்ப்பது ,உற்சாகமாவது அருமை.அந்த சீனில் நாயகியின் நடிப்பு டாப்.
☘️நாயகனுக்கு இணையான ஒரு மாஸ் சீனில் போலீஸ் ஸ்டேஷனுக்குள் நாயகி துப்பாக்கியுடன் எண்ட்ரி ஆகும் சீன்
☘️பிளாஸ்டிக் ரோஜா சீன் ,ரெட் அண்ட் ப்ளூ கலர் காம்போவில் வரும் சீன் கவிதை
🎵 அனிருத் – மிகப்பெரிய பலம்
படத்தின் இசை மற்றும் பின்னணி இசை . குறிப்பாக ஆக்ஷன் காட்சிகளுக்கு பின்னணி இசை நல்ல வேகத்தை ஏற்படுத்தி உள்ளது
இசை படத்தைத் தூக்கி நிறுத்துகிறது.
☘️முகேஷ் G ஒளிப்பதிவைக் கவனித்துள்ளார்.
இரத்தம் மற்றும் சிறு சதைத்துண்டுகளால் சொட்டும் கொலை ஆயுதமான ரம்பத்தின் கத்தியை கேமரா பெரிதாக்கிக் காட்டுகிறது.
☘️G.K. பிரசன்னா படத்தொகுப்பை மேற்கொண்டுள்ளார்.
☘️S. கண்ணன் கலை இயக்குநராக பணியாற்றியுள்ளார்;
☘️PC Stunts சண்டைக் காட்சிகளுக்கான பணியை மேற்கொண்டுள்ளது.ரத்தம் தெறிக்க வைத்தது.
🔥ஆர்ட் டைரக்டர் கண்ணன்
☘️காஸ்ட்யூம் டிசைனர் :அருண் மாதேஸ்வரன்
☘️காஸ்ட்யூமர் பெருமாள் செல்வம்
☘️ஒப்பனை வினோத் சுகுமாரன்
☘️வி எப் எகஸ்
பிரவீன்
•☘️ ஒலிப்பதிவு : வினய் ஸ்ரீதர்
* அட்மாஸ் மிக்ஸ் உதவி: விக்னேஷ் குரு (நாக் ஸ்டுடியோஸ்)
* வண்ணச் சேர்க்கை (Colorist): ரங்கா
* டி.ஐ. லேப் : பிரசாத் ஃபிலிம் லேப்ஸ்
* விஷுவல் எஃபெக்ட்ஸ் (VFX) : பிரவீன் டி
* விளம்பர வடிவமைப்பு : கபிலன் செல்லையா
* தயாரிப்பு கட்டுப்பாட்டாளர்கள் : டி. ரமேஷ் குச்சிராயர், கே.டி.எஸ். சுவாமிநாதன்
☘️மக்கள் தொடர்பாளர்கள்
திரு.ரியாஷ்அஹமது அவர்கள்
.பாராஸ் ரியாஸ் அவர்கள்.
.
☘️மொத்தத்தில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் நடிப்பில் பாஸ்மார்க் வாங்கி இருக்கிறார்
தேவதாஸ் வெற்றி பெற்று ள்ளார
☘️தயாரிப்பு: சன் பிக்சர்ஸ்
தயாரிப்பாளர்: கலாநிதி மாறன்
☘️ வெற்றி பட்டியலில் தேவதாஸ் & சந்திரா.🌸
[
