👑இந்தியாவின் எடிசன்’ என்று அழைக்கப்படும் ஜி.டி.நாயுடுவின் பயோபிக் திரை படம் ‘ஜி.டி.என்’
ஜி.டி.நாயுடு கதாபாத்திரத்தில் மாதவன் நடித்திருக்கிறார். நடிகர் ‘பைவ் ஸ்டார்’ கிருஷ்ணா என்கிற கிருஷ்ணகுமார் ராம்குமார் இயக்கி இருக்கிறார்.
‘ராக்கெட்ரி’ படத்தைத் தயாரித்த வர்கீஸ் மூலன் பிக்சர்ஸ் சார்பில் விஜய் மூலன், வர்கீஸ் மூலன் மற்றும் ட்ரைகலர் பிலிம்ஸ் சார்பில் ஆர்.மாதவன், சரிதா மாதவன் இணைந்து தயாரித்துள்ளார்கள்
🔥ஜி.டி.நாயுடு வாழ்க்கை அவரது
முயற்சி அவர் கண்டுபிடித்த
தொழில்நுட்பம் இவைகளுடன்
அவரின் மதி நுட்பம்
மனித நேயம் என்று சொல்லி இருக்கிறது
ஜி.டி. நாயுடுவின் சாதனைகள் மற்றும் பிரிட்டிஷ் காலத்தில் அவர் எதிர்கொண்ட சவால்களை இப்படம் பேசுகிறது.மாதவனின் வித்தியாசமான தோற்ற மாற்றமும் நடிப்பும் இப்படத்தில்
மிகப்பெரிய பலம்
கதை களம்
👑 ஜி.டி. நாயுடு (Gopalswamy Doraiswamy Naidu) இந்தியாவின் “எடிசன்” என்று அழைக்கப்பட்ட மிகச் சிறந்த கண்டுபிடிப்பாளரும் தொழிலதிபரும் ஆவார்.: 23 மார்ச் 1893
கலங்கல்” என்ற கிராமத்தில் அவர் பிறந்ததில் இருந்து கதை ஆரம்பிக்கிறது.
ஜி.டி. நாயுடுவின் வாழ்க்கையில் நடந்த சுவாரசியமான சம்பவங்களாக
பள்ளிப் படிப்பு, மிகக் குறைவு
நான்காம் வகுப்புக்கு மேல் படிக்கவில்லை ஆனால், தனது ஆர்வத்தால் உலகப் புகழ்பெற்ற விஞ்ஞானியாக உயர்ந்தார்.
பேருந்து பேரரசசாக “ஜி டி என் என்கிற பேருந்து ஒருங்கிணைப்பு பயணத்தை மேற்கொண்டு 200 பேருந்துகளுக்கு அதிபதி ஆகி( யூ எம் எஸ்) என்ற பெயரில் ஒருங்கிணைக்கிறார்.
சில பேருந்துகளுடன் தொடங்கிய தொழிலை நூற்றுக்கணக்கான பேருந்துகளாக வளர்க்கிறார்.
நேரம் தவறாமல் இயக்கியதால் அவரது நிறுவனத்திற்கு பெரும் மதிப்பு கிடைக்கிறது.
இயந்திரங்களைப் பிரித்து மீண்டும் பொருத்தும் பழக்கத்தினால்
எந்த புதிய இயந்திரம் கிடைத்தாலும் அதை முழுவதும் பிரித்து, அதன் செயல்முறையை அறிந்து மீண்டும் பொருத்தி . உலக நாடுகளுக்கு பயணம் செய்து
ஐரோப்பா, ஜெர்மனி, இங்கிலாந்து, அமெரிக்கா போன்ற நாடுகளுக்குச் சென்று புதிய தொழில்நுட்பங்களை கற்று இந்தியாவுக்கு பெருமை சேர்க்கும் வகையில் முயற்சி செய்கிறார்
நீண்ட நாள் பயன்படுத்தக்கூடிய சேவிங் ரேசர் ,
விவசாயத்திலும் ஆர்வம்,
புதிய விதை முறைகள், பயிர் வளர்ப்பு, இயந்திரமயமான விவசாயம்,
பாலிடெக்னிக் ஆகியவற்றில் பல சோதனைகள் செய்து சாதனை செய்கிறார்.
மாணவர்களுக்கு இலவச பயிற்சி
ஏழை இளைஞர்களுக்கு தொழில்நுட்பப் பயிற்சி அளித்து வேலைவாய்ப்பை உருவாக்குகிறார்
அவருக்கு எதிராக ஆடம்ஸ்,பூபேந்தர்,
பெருங்கிள்ளி, வணிக வரித்துறை அதிகாரி ஆலம்பர கிருஷ்ணன் என்கிற பெருச்சாளிகள் அவருக்கு எதிராக சதி செய்கிறார்கள்.
அதற்கு பிறகு ரேசர் கண்டுபிடிக்க ஜெர்மன் செல்கிறார். அங்கு உலக யுத்தம் தொடங்கி அவரால் இந்தியா திரும்ப முடியாமல் போகிறது.
வருமான வரியுடன் ஏற்பட்ட பிரச்சினை
தனது கண்டுபிடிப்புகளுக்கு போதிய அரசு ஆதரவு இல்லை, என்று பலமுறை வருத்தப்படுகிறார் .
சில கண்டுபிடிப்புகளை வெளிநாடுகளில் வெளியிடும் வாய்ப்புகளையும் அவர் இழக்க,. பெரும்பாலும் தொழிற்கூடத்திலேயே நேரத்தை செலவிட்டு,
நூற்றுக்கும் மேற்பட்ட கண்டுபிடிப்புகள், தொழில் வளர்ச்சிக்கான முயற்சிகள் ஆகியவற்றால் இந்தியாவின் எடிசன் “என்று பட்டத்தைப் பெற்றாலும்
அவர் தயாரித்த மின்மோட்டார், விவசாயக் கருவிகள், ரேடியோ தொடர்பான சோதனைகள் அக்காலத்தில் பெரும் கவனத்தைப் பெற்றாலும்,
கோயம்புத்தூரை தொழில் நகரமாக வளரச் செய்த முன்னோடிகளில் ஜி.டி. நாயுடு முக்கியமானவராக இருந்தாலும்.
ஒழுக்கம், நேரம் தவறாமை, கடின உழைப்பு ஆகியவற்றை தனது வாழ்நாள் முழுவதும் கடைப்பிடித்தாலும், எந்திரவியல் மற்றும் விவசாயம் சார்ந்த துறைகளில் எண்ணற்ற ஆராய்ச்சிகளை செய்தாலும் ,
அவருக்கு தேசதுரோகி “என்று பட்டம் சூட்டி இந்திய அரசாங்கம் அவருக்கு 80/சதவிகிதம் வருமான வரி விதிப்பு செய்கிறது.
அந்த தேச துரோகி என்ற பட்டத்தில் இருந்து அவர் மீண்டாரா ?தனக்கு விதிக்கப்பட்ட 80/ சதவீத வருமான வருமானவரியை செலுத்தினாரா? பென்ஸ் என்ற நிறுவனத்தை இந்தியாவுக்கு கொண்டு வந்தாரா ? இப்படி பல காட்சிகள் படம் பார்க்கும் நம்மை அவரின் உலகத்திற்கு கொண்டு சென்று வியக்க வைக்கிறது படம்.
இந்த படம் ஒரு படம் அல்ல, மாமேதைகளை ஊக்குவிக்க தவறிய இந்த அரசாங்கத்திற்கு ஒரு பாடம் என்று சொல்ல வைத்திருக்கிறது. அவரை பாடத்திட்டத்தில் சேர்க்க நினைக்கும் ரமேஷ், மோகன், அதிதி, சுதர்சன், போன்ற பாட திட்ட நிபுணர்கள்
அவரின் பெருமையை கண்டு பாட திட்டத்தில் சேர்ப்பது சிறப்பு.
மாதவன்
👑இந்த படத்தில்
ஜி டி நாயுடுவாக, மாதவன் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். அவருடைய 1914 காலகட்டமும், 1936 கால கட்டமும் அவர் வாழ்ந்த காலகட்டங்களில், முழுமையான காலகட்டம் என பல கெட்டப்புகளில் சிறப்பான நடிப்பை வழங்கி இருக்கிறார்.
மாதவனின் உடல்மொழி, மற்றும் முகபாவனைகள் நிஜ ஜி டி நாயுடுவை,அப்படியே பிரதிபலிப்பதாக
உள்ளது.
பல கெட்டப்பில் வரும் மாதவன் தோற்றப் பொருத்தத்தை ; குரல் மாறும் விதம், நடக்கும் விதம் மற்றும் ஒரு கதாபாத்திரத்தின் வயது முதிர்ச்சியை முகத்தில் மட்டுமல்லாமல் உடல்மொழியிலும் காட்டுகிறார். அது நுட்பமான தேர்வுகள் மூலமாக ரசிகர்களின் மனதில் ஆழமாகப் பதிகிறது.
அவரது முந்தைய படங்களை விட இந்தத் திரைப்படத்தில் அவர் கூடுதல் உழைப்பை தந்திருக்கிறார் .
ஏனெனில், இதில் அவர் ஜி.டி. நாயுடுவின் ஒரு குறிப்பிட்ட வயதுப் பாத்திரத்தை மட்டும் ஏற்கவில்லை. மாறாக, கையில் எதுவும் இல்லாத ஒரு இளம் பொறியாளராகத் தொடங்கி, தமிழ்நாடு ‘இந்தியாவின் எடிசன்’ என்று போற்றும் ஒரு மூத்த தொழிலதிபராக மாறும் வரையிலான அவரது ஒட்டுமொத்த வாழ்க்கைப் பயணத்தையும் திரையில் கொண்டு வந்துள்ளார். மாதவனின் உருவம் அடையாளம் காண முடியாத அளவுக்கு மாறியிருப்பதைப் பார்க்க முடிகிறது. புரோஸ்தடிக் (prosthetic) ஒப்பனையின் உதவியுடன், வயது முதிர்வுக்குரிய உடல் வளைவு, நிதானமான அசைவுகள் என, ஒரு சாதனையாளரின் மிடுக்கை அவர் அசாத்தியமாகக் கையாண்டுள்ளார்.
கம்பீரமான நடிப்பு, ஏமாற்றம் கலந்து நடிப்பு, ஏழை எளிய மக்களுக்கு தன் சொத்துக்களை அர்ப்பணிக்கும் பொழுது இப்படி ஒவ்வொரு காட்சியிலும் உயர்ந்து நிற்கிறார். மாதவன்
படத்தின் இணை தயாரிப்பாளராக, திரைக்கதையில் ஒவ்வொரு காட்சிக்கும் மெனக் கெட்டிருக்கிறார்
விருது கள் குவியும் வாழ்த்துக்கள் சார்!
‘
🔥 சத்ய ராஜ்,
ராமையா பிள்ளை என்ற கதாபாத்திரத்தில், ஜிடி நாயுடுவுக்கு தோழனாக வந்து தன்னுடைய ஆர் பி பஸ் கம்பெனியை அவருக்கே கொடுத்துவிட்டு, அவரிடம் சேர்ந்து பணியாற்றி அவரின் சக துக்க நிகழ்வுகளில் பங்கேற்கும் ஒரு உற்ற தோழனாக நல்ல நடிப்பை வழங்கி இருக்கிறார் சத்யராஜின் கதாபாத்திரம் உயர்ந்து நிற்கிறது.
👑ஜெயராம், ஆலம்பர கிருஷ்ணன் என்ற வருமான வரித்துறை அதிகாரியாக சேலத்தில் இருந்து கோவைக்கு வந்து பிரிடங அதிகாரி ஆடம்ஸ் பேச்சைக் கேட்டு, ஜிடி நாயுடுவுக்கு வரிமேல் வரி சுமத்தி அவரை டார்ச்சர் செய்து, கடைசியில் நல்லவனாக மாறும் கதாபாத்திரத்தில் ஜெயராம் வெழுத்து வாங்கி இருக்கிறார்.
🌸 பிரியாமணி,
மாதவனின் முதல் மனைவி செல்லமாக வந்து அவருடைய கண்டுபிடிப்புக்கு தான் உறுதுணையாக இருக்க மாட்டேன் என்று அவரே ஒதுங்கிச் செல்லும் காட்சிகளில் கண்ணியமான நடிப்பை வழங்கி இருக்கிறார் பிரியாமணி.
🧶இளம் வயது ஜிடி நாயுடு வாக டிஜே, அவரது மனைவியாக சீலா, இருவரும் கச்சிதமாக பொருந்தி இருக்கிறார்கள்,
🔥துஷாரா விஜயன்,
மாதவனின் இரண்டாவது மனைவியாக ரங்க நாயகி,என்ற கதாபாத்திரத்தில்
மாதவனுக்கு அம்சமாக பொருந்தி போகிறார். வசதியாக இருந்து ஒரே வருடத்தில் ஏழ்மை நிலைக்கு வந்தததற்கு தான் ராசியில்லாத மனைவி என்று அழும் பொழுது, விவாகரத்து கேட்டு கணவனின் 98 சதவீத சொத்துக்களை வாங்கிக் கொண்டு அதற்கு சரியான விளக்கம் கொடுக்கும் பொழுது, துஷாராவின் கதாபாத்திரம் படத்தில் மிகப் பெரிய இமயமாக எழந்து நிற்கிறது .
🔥 தம்பி ராமையா,
ராமசாமி என்ற கதாபாத்திரத்தில் ஆரம்பத்தில் மாதவனுக்கு ஆலோசகராக வந்து பிறகு, துஷாரா அப்பாவாக, மாமனாராக, சரியான ஒரு நல்ல நடிப்பை வழங்கி இருக்கிறார் தம்பி ராமையா.
🔥வினய் ராய்,
பூபேந்திரன் என்ற கதாபாத்திரத்தில், மாதவனுக்கு போட்டியாக அவரும் சில கண்டுபிடிப்புகளை ஜெர்மன் வரை கொண்டு சென்று நிராகரிக்கப்பட்டு, பிறகு மாதவனுக்கு எதிராக சதி வலை பின்னும் வில்லனாக நடிப்பில் வெளுத்து வாங்கி இருக்கிறார்.
🧶மற்றும் பிரகிடா,
ஜான் விஜய், ஆடுகளம் நரேன்,
கருணாகரன்,
என அனைவரும் தங்கள் பங்குக்கு சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்கள்.
ஜி.டி. நாயுடுவின் பிறந்த இடமான கோயம்புத்தூரில் இப்படத்தின்
படபிடிப்பு நடத்தி இருக்கிறார்கள் .
ஒளிப்பதிவு அந்தந்த காலகட்ட களுக்கு ஏற்ப, கலர் கரெக்ஷன் உடன் கண்களுக்கு விருந்தாக அமைந்திருக்கிறது. ஜெர்மன் காட்சிகளை ஏ ஐ உதவியுடன் அற்புதமாக படமாக்கி இருக்கிறார்கள் பசுமையான வயல்வெளி, ஜிடிஎன் பேருந்து நிலையம், மாதவனின் வீடு, ஆரம்பகால காட்சிகள் என்று அசத்தலான ஒளிப்பதிவு கொடுத்திருக்கிறார் அரவிந்த் கோமள நாதன்.
☘️ இப்படத்திற்கு கோவிந்த் வசந்தாவின் இசை
அந்த கால இசையை படத்தின் பின்னணி இசையாக கொடுத்து மெய்மறக்க செய்திருக்கிறார். ஒவ்வொரு காட்சியிலும் இசை நம்மை ஊடுருவி செல்கிறது. பாடல்களும், கதையோடு ஒட்டி செல்வதால் ரசிக்க வைக்கிறது.
💥ஓஹோ எந்தன் பேபி’ பட இயக்குநர் கிருஷ்ணகுமார் ராம்குமார் இப்படத்தை எழுதி இயக்கியுள்ளார்
படத்தின் உயிர் நாடியான
ஜி டி நாயுடு அவர்களின் பயோபிக்கை பிரிட்டிஷ்காரர்களும் ,தமிழகத்தைச் சேர்ந்த அதிகாரிகளும், வருமான வரித்துறை அதிகாரிகளும், ஜிடி நாயுடு கதாபாத்திரத்திற்கு எவ்வளவு தொந்தர கொடுத்தார்கள் என்பதை அற்புதமாக சொல்லி இருக்கிறார். கிளைமாக்ஸ் காட்சியில் ,அந்த விவாகரத்து காட்சி பேசப்படுகிறது. ஒவ்வொரு காட்சிக்கும் இயக்குனர் தன்னுடைய கற்பனைகளாலும், ஜீடி நாயுடு அவர்களின் வாழ்க்கையில் இருந்து பெறப்பட்ட தகவல்களையும், சேர்த்து, ஒரு உயிரோட்டமான காவியத்தை கொடுத்திருக்கிறார் இயக்குனருக்கு வாழ்த்துக்கள்.
🔥: மேக்கப் துறை (Makeup): உள்ளிட்ட தனிப்பட்ட Chief Makeup Artist அனைவருக்கும் வாழ்த்துக்கள் ஒவ்வொரு காலகட்டத்திற்கும் மக்களுக்கும் மாதவனுக்கும் அந்தந்த கதாபாத்திரங்களுக்கு அற்புதமாக ஒப்பனை போட்டிருக்கிறார்கள்.ரஞ்சித் அம்பாடி அவர்களுக்கு பாராட்டுக்கள்.
🔥ஆர்ட் டைரக்டர் / புரொடக்ஷன் டிசைனர்: Cyril Kuruvilla (சிரில் குருவில்லா) – Production Designe
rஆர்ட் டிபார்ட்மெண்ட்
அருமையாக உழைத்திருக்கிறார்கள் 1914, காலகட்டத்தையும் 1936, காலகட்டத்தையும் 1947, காலகட்டத்தையும் கண் முன் நிறுத்தி இருக்கிறது ஆர்ட் டைரக்டர் பணி.
🍇காஸ்ட்யூம் டிசைனர்: Jishad Shamsudeen (ஜிஷாத் ஷம்சுதீன்).
ஒவ்வொருவருக்கும் காஸ்ட்யூம் கச்சிதமாக பொருந்தி இருக்கிறது.
👑 கிருஷ்ணகுமார் ராம்குமார் ,
மாதவன் ,
இருவரும் திரைக்கதையில் மாயாஜாலம் செய்து ஏற்படுத்தி இருக்கிறார்கள்.
🔥எக்ஸ்க்யூடிவ் ப்ரொடியூசர் முரளிதரன்
இவர் படத்தில் மோகன் என்ற அருமையான கதாபாத்திரத்தில் நடித்து கிளைமாக்ஸ் இல் ஜிடி நாயுடுவுக்கு உதவும் கதாபாத்திரத்தில் அற்புதமாக நடித்திருக்கிறார்.
👑படத்தொகுப்பாளர் பிஜீத்பாலா, கே . சசிகுமார்.இருவரும்
காட்சிகளை விறுவிறுப்பாக செதுக்கிய இருக்கிறார்கள்.
👑தயாரிப்பு நிர்வாகி
ஹக்கீம் சுலைமான்
👑வசனம் முகில்
படத்தில் வரும் வசனம் கதாபாத்திரங்களை தூக்கி நிறுத்துகிறது.
🔥போஸ்ட் புரொடக்ஷன்ஸ் சூப்பர் வைசர்
சதீஷ் சங்கு குட்டி.
மக்கள் தொடர்பாளர்கள்
திரு.சுரேஷ்சந்த்ராஅவர்கள்.
திரு. அப்துல் நாசர் அவர்கள்.
படத்தை நல்ல முறையில் மக்களிடம் கொண்டு சேர்த்து இருக்கிறார்கள் அவர்களுக்கும் வாழ்த்துக்கள்.
👑மொத்தத்தில் தமிழனாக பிறந்து, தனது முயற்சியால் பல கண்டுபிடிப்புகளை கண்டுபிடித்து, உலக அளவில்
உயர்ந்த ஒரு மாமேதையை இன்றைய இளைய தலைமுறையினர்
தெரிந்து கொள்ளவும், வரலாறு அவரைப் பற்றி நினைவு கூறவும், நல்ல படைப்பாக வந்திருக்கிறது,
இந்த படம்.வெற்றி பட்டியலில் இடம் பிடிக்கும் வாழ்த்துக்கள் கிளாசிக் சினிமா🙏
