போட்டோ கிராபர் “திரை விமர்சனம்

ரேட்டிங் 4-/5

🔥பிரபு யுவராஜ் இயக்கத்தில், அஷ்ரப் மற்றும் அதிதி செங்கப்பா நடிப்பில் கடந்த 2014ஆம் ஆண்டு வெளியான ஒரு தமிழ் பேய் மற்றும் ஃபேன்டசி திரைப்படம் “ரா
இது விமான பைலட்டுகளாகப் பணியாற்றிய சில இளைஞர்களால் திரைப்படத் துறையினரால ‘ உருவாக்க பட்டது.

🔥அப்படத்தை தயாரித்த அஷ்ரப் மீண்டும் நாயகனாக, இயக்கி நடித்திருக்கும் படம். போட்டோகிராபர்.
வித்தியாசமான முறையில் மதிகெட்டான் சோலை, ஒன்றில் சிக்கிக் கொள்ளும் ஒரு இளைஞனை பற்றிய கதை விறுவிறுப்பாக கொண்டு சென்றிருக்கிறார் இயக்குனர்.

கதை களம்

☘️ஒரு காட்டுயிர் போட்டோகிராபர் (Wildlife Photographer) மதிகெட்டான் சோலை காடுகளுக்குச் செல்கிறார்.
ஏன் அந்த காட்டுக்கு பிடிவாதமாக செல்கிறார் என்பதை இடைவேளைக்கு பிறகு முடிச்சுகளை அவிழ்கிறார் இயக்குனர்.
அங்கு அவரது கேமரா மூலம் சில மர்மங்கள் வெளிப்படுகின்றன. அது என்ன?, அந்தக் காட்டின் ரகசியங்களைத் தேடும் ஒரு தேடுதல் பயணம்
அழகான அம்மா,
அன்பான அப்பா
ஆடுகளம் நரேன் கன்ஸ்ட்ரக்ஷன் பிசினஸ் செய்து வருகிறார் .அவரது மகன் வீராவை, தன்னுடைய கம்பெனி யை பார்த்துக் கொள்ள அழைக்கிறார். ஆனால் வீரா காட்டுக்குச் சென்று புகைப்படங்கள் எடுக்க வேண்டும். கோல்டன் ட்ரீ “என்ற அதிசய மரத்தை கண்டடைய வேண்டும், அம்மா சொன்ன அந்த கனவுகளை நிறைவேற்ற வேண்டும் என்பது அவரது கனவு .

நண்பர் கபிலன் என்கிற கருணாகரன் எவ்வளவோ தடுத்தும், மதி கெட்டான் சோலை காட்டுக்குள் நுழைகிறார் வீரா.
அவருக்கு வழிகாட்டியாக வரும் மதி ,என்கிற (சிவா )அவருடன் போக முடியாத சூழ்நிலை ஏற்பட, தன்னந்தனியாக காட்டுக்குள் சிக்கிக் கொள்கிறார்.
மதிகெட்டான் சோலை காட்டுக்குள் சென்றால் உயிரோடு யாரும் திரும்பி வர முடியாது அந்த காடு அவர்களை பழிவாங்கி விடும் என்று அந்த ஊர் மக்கள் சொல்கிறார்கள்.
அதுபோல வீரா, அந்த காட்டுக்குள் பாதை தெரியாமல், நான்கு நாட்கள் குடிக்க தண்ணீர் கூட இல்லாமல், பல திடுக்கிடும் சம்பவங்களை சந்திக்கிறார். கஞ்சா செடி வளர்க்கும் இரண்டு ரவுடிகளுடன் மோதுகிறார். முடிவில் தன் அம்மா சொன்ன அந்த கோல்டன் ட்ரீ மரத்தை கண்டடைந்தாரா? இல்லையா? என்பதை பரபரப்புடன் விறுவிறுப்புடன் சொல்லி இருக்கிறது படம்.
படம் முழுவதும் அடுத்து என்ன? அடுத்து என்ன? என்ற ஆவலை தூண்டும் விதம், படம் பார்ப்பவர்களை சீட்டு நுணிக்கே கொண்டு வந்து விடுகிறது.
நாயகன் எப்படியாவது தப்பிப்பாரா? என்ற ஒருவித அச்சத்தையும், படம் பார்ப்பவர்களுக்கு ஏற்படுத்துகிறது.
ஹாரார் இல்லாமல் பயமுறுத்தி இருக்கிறார்கள் படக்குழுவினருக்கு பாராட்டுக்கள்

☘️படத்தை பற்றிய அலசல்

திரைப்படம் ஒரு காட்டுப் பின்னணியில் உருவாக்கப்பட்ட த்ரில்லர் படமாக எடுக்க பட்டுள்ளது.

🎬 நடிகர்கள்
அஷ்ரப் அலி (Ashraf Ali) – கதாநாயகனாக நடித்திருக்கிறார்,
பயம், அம்மாவைப் பற்றிய ஏக்கம்,
காட்டுக்குள் சிக்கிக் கொண்டு தவிப்பது,
ஆரம்பத்தில் மிகவும் சுத்தமாக இருக்க வேண்டும் என்று நினைப்பது,
பிறகு காட்டுக்குள் அழுக்கு படிந்த உடையுடன் சேற்றிலும் சகதியிலும் புரள்வது, என்று வித்தியாசமான நடிப்பை கொடுத்திருக்கிறார் .இயக்கமும் அவரே இயக்கத்திலும் பாஸ் மார்க் வாங்கி விடுகிறார்.

☘️ஜனனி
நாயகனின் காதலியாக வந்தாலும் இவருக்கு அதிக வேலையில்லை அவ்வப்போது தலை காட்டிவிட்டு கதாநாயகனுக்கு உபதேசம் செய்து விட்டு போகிறார்.

☘️கருணாகரன்
நாயகனின் நண்பனாக கபிலன் என்ற கதாபாத்திரத்தில் முக்கியமான திருப்புமுனை ஏற்படுத்துகிறார்.
ஆடுகளம் நரேன்
நாயகனின் அப்பாவாக மகன் மீது பாசம் கொண்ட அன்புள்ள அப்பாவாக அருமையான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்.
காட்சிகள் குறைவு என்றாலும் நடிப்பில் நிறைவு

☘️தேவி மகேஷ்
நாயகனின் அம்மாவாக அழகான தோற்றத்தில் வந்து அனைவரையும் கவருகிறார் இப்படி ஒரு அம்மா இருந்தால் எந்த மகன்தான் ஏக்கம் கொள்ள மாட்டார் சமையல் அறையில் ஸ்வீட் தருவதும், பள்ளிக்கூடம் விட்டு வந்தவுடன் மகனை பாராட்டுவதும், மகனை கொஞ்சுவது, என்று தாய் குலத்திற்கு பெருமை சேர்க்கும் நடிப்பில் சிறப்பாக வெளிப்படுத்தி இருக்கிறார் இவர் காட்சி வந்த பிறகு படம் இமயமலை அளவில் எழுந்து நிற்கிறது.
அவர் நோய்வாய்ப்பட்டு கிடக்கும் காட்சி மனதை நெருடுகிறது.

🎥 தொழில்நுட்பக் கலைஞர்கள்

இயக்கம் & கதை: அஷ்ரப் அலி
ஒரே காட்டுக்குள் படம் முழுக்க விறுவிறுப்பான கதைக்களமும் திகிலான அம்சங்களுடன் சிறப்பான கதை எழுதி இயக்கி இருக்கிறார் நடித்திருக்கிறார் அசரப் அவர்களுக்கு பாராட்டுக்கள்.

இந்தப் படத்தை இயக்கிய அஷ்ரப் அலி, கதாநாயகனாகவும் நடித்துள்ளார். இது அவருக்கு மிகவும் சவாலான முயற்சியாகக் கருதப்படுகிறது. ஒரே நேரத்தில் நடிப்பும், இயக்கமும் செய்ததால் ஒவ்வொரு காட்சியையும் மிகவும் திட்டமிட்டு படமாக்கியதாக கூறப்படுகிறது.
படத்தின் கதையின் முக்கிய அம்சம் காட்டுக்குள் நடக்கும் மர்ம சம்பவங்கள். அதனால் ஸ்டூடியோ செட்களை விட உண்மையான வனப்பகுதிகளில் அதிக காட்சிகள் எடுக்கப்பட்டுள்ள.
படப்பிடிப்பின்போது அதிகாலை மற்றும் மாலை நேரங்களில் இயற்கை வெளிச்சத்தை பயன்படுத்தி ஒளிப்பதிவாளர் ரயீஸ் அஹ்மது பல காட்சிகளை பதிவு செய்திருக்கிறார். இதனால் காட்சிகளுக்கு இயல்பான தோற்றம் கிடைத்துள்ளது.
காட்டு சூழலில் படமாக்கியதால் மழை, சேறு, பூச்சிகள், கடினமான நடைபாதைகள் போன்ற சிரமங்களை படக்குழு சந்தித்ததாகவும், இருந்தாலும் இயற்கைத்தன்மையை விட்டுக்கொடுக்காமல் பணியாற்றி இருக்கிறார்.

🌳 காட்டுக்குள் படமாக்கப்பட்ட விதம்
படத்தின் பெரும்பாலான முக்கியக் காட்சிகள் இயற்கையான காடு மற்றும் மலைப் பகுதிகளில் படமாக்கப்பட்டுள்ளது. செயற்கை செட்கள் அமைப்பதை விட உண்மையான வனப்பகுதிகளில் படமாக்கி, இயற்கை ஒளி, வனச் சூழல், விலங்குகளின் ஒலிகள் போன்றவற்றை பயன்படுத்தி தத்ரூபமான அனுபவத்தை உருவாக்க முயன்றுள்ளனர். இந்தக் காட்டு பின்னணியே படத்தின் முக்கிய பலமாக இருக்கிறது
.

☘️.
இசையமைப்பாளர் ராஜ்குமார் சந்திரசேகரன், காட்டு அமைதியையும் திடீர் பதற்றத்தையும் உணர வைக்கும் பின்னணி இசைக்கு முக்கியத்துவம் கொடுத்திருக்கிறார்.

🎞️ படத்தைப் பற்றிய சிறப்பு
சென்சார்: UA 13+
வகை: சஸ்பென்ஸ் / த்ரில்லர். �

☘️தயாரிப்பு: Abdul Basith Syed
☘️Co-Producer – Mohamed Feroz
☘️Creative Producer – Chandru KR

🤞Film Editor – RC Pranav
படத்தை விறுவிறுப்பாக செதுக்கியிருக்கிறார்.

🔥Stunt – Dinesh Subbarayan
காட்டுக்குள் நடக்கும் அந்த சண்டை காட்சிகளை அனல் தெறிக்க விட்டிருக்கிறார் தினேஷ் சுப்பராயன்.

☘️Art – P Saravanan MFA
வீடு ,மற்றும் அம்மா மகன் பாடல் காட்சி, இந்த இடங்களில் ஆர்ட் டைரக்டரின் பணி அற்புதமாக இருக்கிறது.

☘️Dialouges and Lyrics – Preman
வசனங்களும், பாடல் வரிகளும், உயிரோட்டமாக இருக்கிறது. பிரேமன் கை கொடுத்திருக்கிறார்.

☘️Costume designer – Monisha
சிறப்பான பணி வாழ்த்துக்கள்.

☘️Sound design – Sync cinemas
மிரட்டுகிறது. சவுண்ட் டிசைன்.

☘️Sound Mix – Aravind Menon
இவரது பணி சிறப்பாக இருந்தது.

🧶Makeup – Arun
நாயகனின் அம்மா நோய்வாய்ப்பட்ட பிறகு ,அவருக்கு போட்டு இருக்கும் மேக்கப், பயமுறுத்துகிறது நாயகன் முதல் பாதியில், மீசையில்லாமல் இளமை துள்ளலாகவும், காட்டுக்குள் சென்ற பிறகு வாடி வதங்கி அழுக்கு துணியோடு இருக்கும் அந்த ஒப்பனையும் சிறப்பாக இருந்தது.

🔥Stills – Komalam Ranjith

🔥VFX & Animation – Paperplane Sanath TG – Sathish CD

☘️DI – Mango Post
Colorist – Franklin V

🔥Dubbing Director – Rajesh Malarvannan

☘️ Promotional Designer – Clinton D

💥Pro – Sri Venkatesh

👑Production Executive – Chelladurai B
Production Manager – Power Pandi

☘️Social Media Promotions – Naveen Rajasekar

☘️Direction Team – Preman , Ugendran Muralidharan , Dhinu Akash , Ganesh Ragothaman

☘️Associate Editor – Beswanth

🔥என, அனைவரும் இந்த வெற்றி படத்துக்காக உழைத்திருக்கிறார்கள். படம் வித்தியாசமான முறையில், படமாக்கப்பட்டு இருக்கிறது. சிறந்த கதை அமைப்பு, சிறந்த சவுண்ட், சிறந்த ஒளிப்பதிவு ,சிறந்த இசையமைப்பு, சிறந்த நடிப்பு, என பல வகையிலும் பாராட்டுக்கு உரிய படம். வெற்றி பட்டியலில் இடம் பிடிக்கும் வாழ்த்துக்கள் உடன் கிளாசிக் சினிமா.☘️