பவர் ஹவுஸ் பிக்சர்ஸ் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் ஹரிஷ் துரைராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘கான் சிட்டி’. இதில், நாயகனாக அர்ஜூன் தாஸ் நடிக்க, நாயகியாக அன்னா பென் நடித்திருக்கிறார். இவர்களுடன் யோகி பாபு, அகிலன் வி டி வி கணேஷ், வடிவுக்கரசி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்..
கதை களம்
🧶கடனில் சிக்கித் தவிக்கும் நாயகன் வாழ்க்கையில், எதிர்பாராத விதமாக ஒரு பணம் அச்சிடும் மெஷின் போல மின்சார கணக்கீட்டை வைத்து
ஒரு வழி கண்டுபிடிக்க ,
நாயகி அண்ணா பென், ஒரு வீட்டை லீஸ் எடுத்து, ஏமாந்து விட, அதையே தனக்கு சாதகமாக்கி, பலரை ஏமாற்றி பணம் சம்பாதிக்கிறார்.
யோகி பாபு , வடிவுக்கரசிக்கு உடல்நிலை சரியில்லை, என்று பேஸ்புக்கில் பல பேரிடம் பணம் வாங்கி ஏமாற்றி சம்பாதிக்கிறார்கள்.
இப்படி பல பேரை ஏமாற்றிய பணம் அர்ஜுன் தாஸ்
ஒரு நண்பரிடம் 10 கோடியை கொடுத்து இழக்கிறார்.
அதன்பிறகு நடக்கும் சம்பவங்களை நகைச்சுவை, மற்றும் பரபரப்புடன் சொல்லும் படமாக வந்துள்ளது.
இந்த காலத்துக்கு ஏற்றப்படமாக
வந்திருக்கிறது. அவ்வளவு ரசிக்க வைக்கிறது.
அர்ஜுன் தாஸ்
🍩அர்ஜுன் தாஸ், நாயகனாக நடித்திருக்கிறார்.
சரவணன் ,என்னும் இளைஞன், தன் புத்திசாலித்தனத்தாலும் பேச்சுத் திறமையினாலும் பெரும் மோசடிப் பேர்வழியாக வலம்வரும் நடிப்பு நன்றாக இருக்கிறது சட்ட அமைப்பை சரிக்கட்டுவது .
காவல்துறை அதிகாரியை ஏமாற்றுவது, என அட்டகாசமான ரோலில் கலக்கி இருக்கிறார்.
தீவிரமான காட்சிகளில் கச்சிதமாகப் பொருந்துகிறார்.
சில துரோகங்களாலும் அரிதாக எதிர்கொள்ளும் அன்பினாலும் சில திருப்பங்கள் வருகின்றன. தன்னிடம் அன்பு காட்டும் பெண்ணை
ஐஸ்வர்யாவை
மணம் செய்துகொண்டு திருந்தி வாழ நினைக்கும் நேரத்தில் அவருடைய பழைய குற்றங்கள் துரத்துகின்றன. மீண்டும் மோசடியில் இறங்க வேண்டிய சூழலில் அவருடைய உயிரான ,ஜீவாவை பணயப் பொருள்களாகின்றன. அதிலிருந்து தப்பித்தாரா?
அர்ஜுன் தாஸ்க்கு கிடைத்த ஒரு லட்டு போன்ற கதாபாத்திரம் வெளுத்து வாங்கி இருக்கிறார்.
🧶 கதாநாயகியாக வரும் அண்ணா பெண், கர்ப்பிணியாக வரும் காட்சிகளில் கவனிக்கவைக்கிறார்.
🧶நாயகனின் கோஷ்டியில், ஒருவராக வரும் யோகி பாபு ,நன்றாக நடித்திருக் கிறார். வடிவுக்கரசி மருத்துவ மனைக்குக் கூட்டிச் செல்லும் காட்சியில் கவனம் ஈர்க்கிறார். ஏமாற்றுப் பேர் வழி சதானந்தா தான் படத்தில் ஆகச் சிறந்த நடிப்பை வழங்கியிருக்கிறார். பேராசை வழியும் அந்தப் பார்வையும் உதட்டுச் சுழிப்பும் அப்பாவித்தனமும் கள்ளத்தனமும் ஒரு சேரக் கொப்பளிக்கும் கண்களும்… பிரமாதம்.
🧶அரவிந்த் விஸ்வநாதன் ஒளிப்பதிவு
படத்தின் பலம்
🧶இப்படத்திற்கு அருள் மோசஸ் படத்தொகுப்பு செய்திருக்கிறார்.
படத்தொகுப்பு கச்சிதமாக இருக்கிறது.
🧶ராஜ் கமல் கலை இயக்குநராக பணியாற்றியுள்ளார்.அரங்க அமைப்பு சூப்பர்.
🧶சான் ரோல்டனின் பின்னணி இசை படத்தின் வேகத்துக்கு உதவுகிறது. டோல் கேட் உருவாக்கும் காட்சியின் துடிப்பைக் கூட்ட இசை உதவுகிறது
பெரும்பாலான பாடல்கள் திரைக் கதையின் ஓட்டத்தைக் கெடுக்காமல் கதையோட்டத்தை நகர்த்தும் விதத்தில் எடுக் கப்பட்டிருப்பது ஆறுதல். பின்னணி இசை படத்தின் வேகத்துக்கு உதவுகிறது. மோசடி உருவாக்கும் காட்சியின் துடிப்பைக் கூட்ட இசை உதவுகிறது.
இயக்குனர்
🧶மோசடி வலை மக்களை, எப்படி ஏமாற்றுகிறது என்பதைவிடவும், மக்களின் பேராசை எப்படி அவர்களை மோசடி வலையில் விழ வைக்கிறது என்பதைத்தான் இயக்குனர் காட்சிப்படுத்தியிருக்கிறார்.
.இந்தப் பேராசைதான், மோசடிக்காரர்களின் பிரதான ஆயுதம் என்பதை இயக்குநர் அழுத்தமாகக் காட்டுகிறார். அடுத்தபடியாக மோசடி செய்பவர்களின் சாமர்த்தியத்தையும் நன்றாக வெளிப்படுத்துகிறார். வசனங்கள் பெரிதும் துணை புரிகின்றன.
வீட்டு மோசடி, பேஸ்புக் மோசடி, மின்சாரத் துறையில் மோசடி ,டோல்கேட் மோசடி, குயிக் பிஸினஸ் என காசு பார்ப்பது, என்று பலவும் படத்தில் இருக்கின்றன. இதுபோன்ற திட்டங்களில் ஏமாந்த பலரும் இந்தப் படத்தைப் பார்த்து வெட்கமடைவார்கள். புதிதாக வேறு திட்டங்கள் கடைபரப்பப் பட்டால் அதில் ஏமாறாமல் ஒரு சிலராவது உஷாராக இருக்கக்கூடும். அந்த வகையில் இது வரவேற்கவேண்டிய படம்தான்.
நாயகன், அடிதடியில் இறங்குவதில்லை. தன் மூளையாலும் வாய் ஜாலத்தாலும் தப்பிக்கிறான். ஆனால் இதிலும் ஒரு பிரச்சினை இருக்கிறது. நூறு பேரை அடிப்பது மட்டும்தான் சூப்பர் ஹீரோயிஸம் என்றில்லை. யாரை வேண்டுமானாலும் எப்படி வேண்டுமானாலும் ஏமாற்றும் திறமை உள்ளவனாக ஒருவனைக் காட்டுவதும் சூப்பர் ஹீரோயிஸம்தான். நாயகனின் வெற்றிகள் பலவும் கிட்டத்தட்ட மந்திர வித்தைகள்போலவே இருக்கின்றன. டோல் கேட் வைத்துச் செய்யப்படும் மோசடியைச் சித்தரிப்பதில் இயக்குநர் அதிகமாக மெனக்கிட்டிருக்கிறார்.
படத்தை விறுவிறுப்பாக நகர்த்திச் செல்வதில் இயக்குநர் வெற்றி அடைகிறார்.
விறுவிறுப்பான திரைக்கதை, விழிப்பு ணர்வூட்டும் சித்தரிப்பு ஆகியவை படத்தின் பலம். .
🧶மக்கள் தொடர்பாளர்
யுவராஜ்.
