அங்கீகாரம்”திரை விமர்சனம்

ரேட்டிங் 3-7/5

ஸ்வஸ்திக் விஷன்ஸ் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் ஜே.பி. தென்பாதியான் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘அங்கீகாரம்’. இயக்குநர் பா. ரஞ்சித்தின் உதவி இயக்குநராக பணியாற்றிய ஜே.பி. தென்பாதியான், தடகள வீரர்களின் வாழ்க்கைச் சவால்கள் மற்றும் அவர்கள் எதிர்கொள்ளும் போராட்டங்களை உண்மை சம்பவங்களின் அடிப்படையில் இந்தப் படத்தில் பதிவு செய்துள்ளார்.
படம் சிறப்பாக வந்திருக்கிறது. விளையாட்டு வீரர்கள், படும் அவதி, துன்பம் ஏமாற்றம், இவைகளை உரக்க பேசி இருக்கிறது இந்த படம்.

இந்தப் படத்தின் மூலம் ‘அறம்’, ‘அயலான்’ உள்ளிட்ட படங்களை தயாரித்த தயாரிப்பாளர் கே.ஜே.ஆர் கதாநாயகனாக அறிமுகமாகிறார்.
அவர் ஓட்டப்பந்தயத்துக்காக, எடுத்துக் கொண்டு முயற்சிகள், அதற்காக தந்த உடல் உழைப்பு, சண்டை காட்சிகள், அம்மாப்படும் துன்பத்தைக் கண்டு கண்ணீர் வடிப்பது, இப்படி பல காட்சிகளில் நம்மை கவர்ந்து விடுகிறார்.
கோர்ட்டில் வாதாடும்போது வடசென்னை மக்களின் பிரதிநிதியாக உயர்ந்து நிற்கிறார்.

விளையாட்டு வீரராக பொருந்தி இருக்கிறார் கே.ஜே.ராஜேஷ், முடிந்தவரை தனது கதாபாத்திரத்துக்கு நியாயம் சேர்த்துள்ளார். அவரது கட்டுக்கோப்பான உடற்கட்டும் கதாபாத்திரத்துக்கு நியாயம் சேர்க்கிறது.
தன்னால் காமன்வெல்த் ஓட்டப்பந்தயத்தில் கலந்து கொள்ள முடியவில்லை என்ற கண்களின் இயக்கம் பேச்சில் விரக்தி சட்ட போராட்டத்தில் சோர்ந்து போக அதன் வாசப்படியிலே அமர்ந்திருக்கும் காட்சி கண் முன்னால் நிற்கிறது

அவருடன் சிந்தூரி விஸ்வநாத்,
சத்யா என்ற கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்திருக்கிறார்.

🧶 விஜி வெங்கடேஷ், ரங்கராஜ் பாண்டே, மன்சூர் அலிகான், அஜித் கோஷி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

கதைக்களம்

🧶விடிந்து எழுந்தால் வீடு எப்போது, இடிக்கப்படும் என்ற கேள்விகள்தான்
வட சென்னை வாழ்வாதாரம்
இதை ஏகப்பட்ட வலியோடு பதிவு செய்திருக்கிறது இந்த படம்.

கணவனை இழந்த ரமா, துப்புரவு பணியாளராக, மகனையும், மகளையும், காப்பாற்றுகிறார் படிக்க வைக்கிறார்.

இந்த குடும்ப பின்னணியிலுள்ள ஒரு தடகள வீரர், தனக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு எதிராக பொங்கி, தனக்கான அங்கீகாரத்துக்காக போராடுகிறார் .
அந்தப் போராட்டத்தில் வெற்றி பெற்றாரா இல்லையா என்பது தான் கதைக்களம்.

🧶சென்னையில் ஒடுக்கப்பட்ட சமுதாயத்தை சேர்ந்த நாயகன் கே.ஜே.ராஜேஷ், தடகளத்தில் பல சாதனைகள் புரிந்து முன்னேறுகிறார். இதற்கிடையில் காமன்வெல்த் போட்டியில் அவரது பெயர் நிராகரிக்கப்படுகிறது.

எல்லா தகுதிகளும் இருந்தும், சில சூழ்ச்சிகளால் அவரை புறக்கணிக்கிறது விளையாட்டு மேம்பாட்டு ஆணையம். இதற்கு விளையாட்டு அமைச்சர் மன்சூர் அலிகானும் உடந்தையாக இருக்கிறார்.

இதையடுத்து நீதி கேட்டு நீதிமன்றம் செல்லும் அவரை பிரச்சினைகள் சுழன்று அடிக்கிறது. அவரது உயிரை பறிக்கவும் முயற்சிகள் நடக்கிறது.
அவர் நடத்தும் சட்ட போராட்டம் இதுவரை தமிழ் சினிமாவில் இவ்வளவு அழுத்தமாக யாரும் பதிவு செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது
ஏழைகள் கோர்ட்டு படுகிற நாள் அவ்வளவு சீக்கிரம் ஜெயிக்க முடியுமா என்ற ஆதங்கத்தையும் வெளிப்படுத்துகிறது
அரசாங்கத்தை எதிர்த்து ஒரு தனி மனிதன் போராடி வெல்ல முடியுமா?
இதை ராஜேஷ் எப்படி சமாளித்தார்? அவருக்கான நியாயம் கிடைத்ததா? என்பது மீதி கதை.

🧶அவரது கோச் ஆக வரும் (வசுந்தரா) ருத்ரா அழுத்தமான நடிப்பால் கவர்கிறார்.
அவரின் கணீர் வாய்ஸ் ” நியாயம் பக்கத்தில் நிற்க்கும் நடிப்பும் நன்றாக இருக்கிறது.

🧶விஜி வெங்கடேஷ்,
சத்யா கதாபாத்திரத்தில் வெளுத்து வாங்கி இருக்கிறார்
மன்சூர் அலிகான்
விளையாட்டுத் துறை அமைச்சராக நன்றாக நடித்திருக்கிறார் அம்மாவாக வரும் ரமா சிறப்பாக நடித்திருக்கிறார். வழக்கறிஞராக வரும் குசாலாலம்பாள்.
அனைவரும் கொடுத்த வேலையைச் சரியாகச் செய்துள்ளனர்.

🧶ஜிப்ரான் இசையில் பாடல்கள் கவனிக்க வைக்கின்றன. பின்னணி, இசையும் அழுத்தம். ஒளிப்பதிவில் படத்துக்கு பலம் சேர்த்துள்ளார் விஸ்வநாத்.

அழுத்தமான காட்சிகள் படத்துக்கு பலம். பல காட்சிகள் யூகிக்க வைக்கின்றன.

🧶ஒரு ஒடுக்கப்பட்ட பின்னணி கொண்ட இளைஞன் திறமை இருந்தும் தனக்கான அங்கீகாரத்தைப் பெற எவ்வளவு போராட வேண்டியுள்ளது? என்பதை சமரசமின்றி படமாக காட்சிப்படுத்தியுள்ளார், இயக்குனர் தென்பாதியான். விளையாட்டு துறையில் நிலவும் உள்ளடி அரசியலை தைரியமாக சொன்னதற்கு பாராட்டலாம்.
வடசென்னையில் வாழும் அந்த ஏழை மக்களின் பாத்ரூம் பிரச்சனை, தினம் தினம் எங்கே வீடு இடிக்கப்படுமோ? என்ற பயந்து வாழும் அந்த அவல நிலை ,
திறமை இருந்தும் முன்னேற முடியாமல் சரியான அங்கீகாரம் இல்லாமல் வாழும் இளைஞர்கள்.
விளையாட்டுப் போட்டியில் பெண்கள் முன்னுக்கு வர வேண்டும் என்றால் அந்த பெண்களின் கற்பை பறிக்கும் நினைக்கும் ஹரி போன்ற கதாபாத்திரங்கள்
நாட்டில் ஏராளம் இருக்கிறார்கள். என்பதை இயக்குனர் துணிச்சலாக பதிவு செய்திருக்கிறார்.

🧶படத்தொகுப்பாளர்,
ஒப்பனையாளர்,
காஸ்ட்யூமர், அரங்க அமைப்பாளர்,
சண்டை பயிற்சியாளர்,
என அனைவரும் இந்த வெற்றி படத்துக்காக கடுமையாக உழைத்திருக்கிறார்கள் அவர்களுக்கு இந்த படம் ஒரு வெற்றியை கொடுக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.

மக்கள் தொடர்பாளர்
யுவராஜ்.