🧶இயக்குநர் சந்தேஷ் ராவணன் இயக்கத்தில், நடிகர் பிரஜின் மற்றும் இவானா வருண் நடிப்பில் உருவான ஒரு மர்மமான க்ரைம் திரில்லர் படம் தான் அந்தரன்.
ஒரு பெண் எதிர்கொள்ளும் தொடர்ச்சியான மர்ம மரணங்களும், அதை துப்பறியும் அதிகாரியும் படத்தின் மையக்கதை.
.:கதைக்களம்:
🧶 உண்மை நீதிமன்ற வழக்குகளைத் தழுவி எடுக்கப்பட்டுள்ள இப்படம், பார்வையாளர்களை சீட் நுனியில் உட்கார வைக்கும் விதமாக பரபரப்பான திரைக்கதையுடன் நகர்கிறது
யாரும் எதிர்பாராத கிளைமாக்ஸ் காட்சி, படத்தின் வெற்றிக்கு துணையாக இருக்கிறது.
கார்த்திகா, ஒரு அழகான தேவதை அவளை பார்த்தவுடன் காதலிக்கும் பிளஸ் டூ மாணவனை, அவளின் தந்தை பில்டர் ஆன சங்கர் அடித்து, உதைத்து ஊரை விட்டு அனுப்புகிறார்.
அதன் பிறகு, ஆட்டோ ஓட்டும் ஆதித்யா கார்த்திகாவை காதலிக்க, அவரும் மர்மமான முறையில் இறந்து போகிறார்.
அதற்குப் பிறகு கார்த்திகாவை, திருமணம் செய்ய நினைக்கும் சுரேஷ் அவரும் மொட்டை மாடியில் இருந்து கீழே விழுந்து இறந்து போகிறார்.
அதன் பிறகு கௌதம், அவரும் கார்த்திகாவை திருமணம் செய்ய நினைத்து ஆக்சிடெண்டில் அடிபட்டு இறந்து போகிறார்.
தொடர் மரணம் நாயகன், செழியன் இடம் வருகிறது. அவர் இந்த கொலையை செய்தது யார்? என்று துப்பறிகிறார்!! கான்ஸ்டபிள் கலைவாணி, தட இயல் ஆராய்ச்சியாளர் காயத்ரியுடன்
விசாரணையை முடுக்கி விடுகிறார்.
முடிவு நெருங்க, நெருங்க, அதிர்ச்சி படம் பார்ப்பவர்களுக்கு, ஏற்படுகிறது.
அந்தரன்’ என்றால் மறைந்திருந்து தாக்கும் வேட்டைக்காரன் (Hunter) என்று அர்த்தம்.
கதாபாத்திரங்கள்:
🧶 கதாநாயகனாக நடித்திருக்கும் பிரஜின் ஐ பி.எஸ் அதிகாரியாக
நடித்து இருக்கிறார். ஒரு வேடனாக, கொலையாளி யார்? என்று தன்னுடைய மூளையை கசக்கி! கண்டுபிடிக்கும் அந்த நடிப்பு அவருக்கு இயல்பாக வருகிறது. பாடல் காட்சிகளிலும், நன்றாக நடித்திருக்கிறார். புதுவிதமான தோற்றத்தில், ரசிகர்களை இந்த படத்தின் மூலம் ஆட்கொள்வார் என்பது உறுதி.
🧶 இவானா , கார்த்திகா என்ற கதாபாத்திரத்தில்,
ஒரு மர்மப் பெண்ணாக நடித்துள்ளார்.
இளமை துள்ளும் எழில் தோற்றம் .
தனக்கு நிச்சயிக்கப்பட்ட காதலர்கள், மனமகன்கள், கொல்லப்படுவது! வேதனை விளிம்புடன், கண்ணீர் வடிப்பது !
ஜாதி சங்க தலைவர் ஆன, தன் அப்பாவை எதிர்த்து பேசி ,தன் காதலுக்காக நியாயம் சேர்ப்பது என்று இவானா ஒரு புரட்சி பெண்ணாக நடித்திருக்கிறார். அவருடைய கதாபாத்திரம் வித்தியாசமாக இருக்கிறது.
மற்றும்….
ஆதிரன் , ரமேஷ்,
பத்மன், செந்தில்குமாரி,
அனுபமா குமார்,
எம் .கே .சாம்பசிவம்
பிரியங்கா செல்வி,
ஐஸ்வர்யா கண்ணன்,
ராஜீவ், சுந்தர், தனலட்சுமி,
லட்சுமி, தண்டபாணி,
சாரதி, கார்த்தி, சுமதி, கிரிதரன், மணிமேகலை,
அர்ஜுன் தேவ்,
அருவி பாலா
என அனைவரும் தங்கள் பங்குக்கு சிறப்பான நடிப்பை வழங்கி இருக்கிறார்கள்.
கதை ,வசனம், எழுதி இயக்கியிருக்கிறார் சந்தோஷ் இராவணன்.
சீரான திரை கதை,கண்டுபிடிக்க முடியாத மர்மம். யார் அந்த கொலைகாரன்? என்று ஆவலை படம் பார்ப்பவர்களுக்கு ஏற்படுத்தும் சிந்தனை, எல்லாமே ஒரு வெற்றிப்பட இயக்குனருக்கு உரித்தானதாக இருக்கிறது.
🧶Produced by : M.K. Sambasivam
Co-Producers : R. Sundharamoorthy, K. Kumar, S. Sudhakar
Creative Head
🧶கிஷோர் ராமச்சந்திரனின், ஒளிப்பதிவு அருமை
இரவு நேரத்தையும் கொலை நடக்கும் சம்பவங்களையும் திகில் உச்சத்துக்கு கொண்டு செல்கிறது.
🧶ஹரியின், இசை, பாடல்கள், பின்னணி இசை, மிரட்டலாக இருக்கிறது.
உயிரோட்டமான பாடல்களை தந்திருக்கிறார் இசையமைப்பாளர்.
🧶பாடல்களை எழுதி இருக்கிறார்கள் மோகன் ராஜா,
கார்த்திக் நேதா, ஹரிஹரன், சுபா பிரபு, பாடல் வரிகள் ரசிக்க வைக்கிறது.
🧶அஸ்வின், சதீஷ் கரசேவா இருவரும் படத்தொகுப்பில் சிறப்பாக செயல்பட்டு படத்தின் வெற்றிக்கு உதவியிருக்கிறார்கள்.
🧶ராம்குமாரின் சண்டை பயிற்சி கிளைமாக்ஸ் காட்சியில் தெரிக்கிறது.
🧶விஜய் சதீஷ் நடன பயிற்சி ரசிக்க வைக்கிறது
🧶காஸ்ட்யூம் டிசைனராக ரித்தேஷ் செல்வராஜ், பணி புரிந்திருக்கிறார்.
🧶ஆர்ட் டைரக்டராக
சசிகுமார், பணி புரிந்து இருக்கிறார் அரங்க அமைப்புகள் கண்களை கவர்கிறது.
🧶படத்தின் ஒப்பனையாளராக வினோத், பணி புரிந்து இருக்கிறார். அனைவருக்கும் சிறப்பான ஒப்பனை .
🧶Sound Design : Hari Haran (H Studios)
DI : Infinity Media
DI Colourist : Deepan
Production Manager : Selvavendran
Production Executives : Santhosh, Hariharan
Co-Director : Ramki Chidhabaram
Chief Associate Directors : Saravanan Easwaramoorthy, J. Ashok, Sajida
Associate Directors : Nirmal Kumar, Aakash, Diyan Salman
Assistant Directors : Giridharan Tamilvanan, Kathiresan Deva, A. Aditya, Shiva, Rahul Rizz
Associate Cinematographer : Sathish
Assistant Cinematographer : Sai
🧶மக்கள் தொடர்பாளர்:
திரு. நிகில் முருகன் அவர்கள். படத்தை மக்களிடம் நல்ல முறையில் ,கொண்டு போய் சேர்த்திருக்கிறார் அவருக்கு வாழ்த்துக்கள்.🌷
