🧶இயக்குனர் சிங்கீதம் சீனிவாச ராவ் இயக்கத்தில், வெளிவந்துள்ள படம் ‘சிங் கீதம்’.
இது ஒரு வித்யாசமான முயற்சி.
94 வயதாகும் இயக்குநர், ஒரு புதுமையான இசைப் பரிசோதனையாக இதை உருவாக்கியுள்ளார். நாக் அஸ்வின் தயாரித்துள்ள இந்தப் படம், வார்த்தைகளுக்குப் பதிலாக முழுக்க முழுக்க இசையையும், பாடல்களையும் மட்டுமே அடிப்படையாகக் கொண்டு பார்வையாளர்களை ஆச்சரியப்படுத்தியுள்ளது.
கதைக்களம்
🧶வறண்ட கிராமம் ஒன்றின் பின்னணியில், மனித உணர்வுகளையும், இசையின் சக்தியையும் மையமாக வைத்து கதை நகர்கிறது. சமூகத்தில் நடக்கும் மூடநம்பிக்கைகள் மற்றும் மருத்துவ மோசடிகளை எதார்த்தமாகப் பேசுகிறது
குபேரபுரம் என்கிற தங்கம் நிறைந்த கிராமத்திற்கு பிரதாப் (அயான்) வருகிறார். வந்த முதல் நாளே, பொட்டல் காடாக இருக்கும் கிராமத்தில் உள்ள ஒரு மரத்தை நேசிக்கும் கௌரியுடன் சண்டையிடுகிறார்.
அதே சமயம் பழைய சுரங்கம் மூடப்பட்ட நிலையில், புதிய சுரங்கத்தை வைத்து நைஜீரிய தொழிலதிபருடன் ஒப்பந்தம் போடுகிறார் ரேணு. ஆனால், அவரோ இன்னொரு பார்ட்னர் அல்லது அவரது வாரிசு வந்தால்தான் ஒப்பந்தம் செய்துகொள்வேன் என்று கூறுகிறார்.
அச்சமயம் தங்கச்சுரங்கத்தில் தனது அப்பாவிற்கும் பங்கு உள்ளதை கூறி பிரதாப் அங்கு வருகிறார். ஆனால், தற்போதைய சுரங்கத்தில் தங்கம் இல்லை என்கிற உண்மையை போட்டுடைக்கிறார். அதன்பின்னர் கௌரி நேசிக்கும் மரம் இருக்கும் இடத்தில் தான் தங்கம் இருப்பதாக அதனை அடியோடு வெட்டி சாய்கிறார்கள்.
அதனால் கோபமும், சோகமும் அடையும் கௌரி மலைக்குன்றில் இருக்கும் கடவுளிடம் முறையிட, அங்குள்ள குகைக்குள் தவறி விழுகிறார். அங்கு அவர் கிராம மக்களை சபிக்கும் வகையில் ஒரு விஷயம் கூறுகிறார். பின் அவர் மீட்கப்பட, கிராம மக்கள் அனைவரும் பேசினால் பாடலாக தான் கேட்கிறது.
அதாவது எதை பேசினாலும் ராகத்துடன் பாடலால் தான் அவர்களால் கூற முடியும். இதனால் அதிர்ச்சியடையும் கிராம மக்கள் இது எப்படி நடந்தது என்று கண்டுபிடித்தார்களா? அவர்களின் சாபம் எப்படி நீங்கியது? என்பதே மீதிக்கதை.
அருமையான இயற்கையை ஒவ்வொரு மனிதர்களும் நேசிக்க வேண்டும் மரங்களை வெட்டி சாய்த்தால், மனிதர்கள் நிலைமை என்னவாகும்? என்பதை இந்த வயதிலும், சமூக நலன் கருதி ஒரு நல்ல படைப்பை கொடுத்திருக்கிறார் இயக்குனருக்கு வாழ்த்துக்கள்.
.🧶இதில் புதுமுக நடிகர்களான அயன், அஹல்யா பாம்ரூ மற்றும் ஷாலினி கொண்டேபுடி ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்
இருவர் நடிப்பும் இயல்பாகவும் ரசிக்கும் படியும் இருந்தது.
.சிறப்பம்சங்கள்
🧶இசை (BGM): தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். படத்தின் கதாபாத்திரங்கள் பேசும் வசனங்களுக்குப் பதிலாக, பின்னணி இசையும் பாடல்களுமே கதையை நகர்த்திச் செல்கின்றன
படம் பார்த்தவர்கள் ஒரு இசை உலகில் வாழ்ந்து விட்டு வந்ததைப் போல உணர்வார்கள்.
.இயக்கம்:
🧶94 வயதிலும் சிங்கீதம் சீனிவாச ராவின் குழந்தைத்தனமான கற்பனைத் திறன் மற்றும் சினிமா மீதான காதல் பாராட்டத்தக்க வகையில் உள்ளது.
முழுக்க முழுக்க வசனங்கள் இன்றி பாடல்கள் மூலமாக மட்டுமே கதை சொல்லப்படுவதால
ஆரம்பத்தில் கொஞ்சம் மெலிந்தவர்கள் இடைவேளைக்கு பிறகு நிமிர்ந்து உட்காருகிறார்கள்.
தங்கத்திற்கான தேடல் என்றாலே விறுவிறுப்பான திரைக்கதையில் தான் படம் செல்ல வேண்டும். அதனை முடிந்தவரை சுவாரஸ்யமாக கொடுத்துள்ளார் இயக்குநர் . ஆரம்பத்தில் இப்படியொரு கிராமம் எங்கய்யா இருக்கும் என்பது போல் அந்நியமாக தான் தோன்றுகிறது. ஆனால், சாபம் தொடங்கியவுடன் நாமும் கதையுடன் ஒன்றிவிடுகிறோம்
பிளாஷ்பேக்கில் அதற்கு ஏற்ப நியாயம் சேர்த்திருக்கிறார் இயக்குநர்.
கிளைமேக்ஸ் கண்டிப்பாக நல்ல எமோஷனல் பீலிங் கொடுக்கும். என்றாலும் ஒட்டுமொத்தமாக ஜாலியான, வித்தியாசமான அனுபவமாக இப்படம் இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.
இயக்குநர் சிங்கீதம் ஸ்ரீனிவாஸ ராவ் தனக்கே உரித்தான காமெடி பாணியை சிறப்பாக கையாண்டுள்ளார்.
🧶வி.எஃப்.எக்ஸ் (VFX): கதைக்குத் தேவையான கற்பனை உலகத்தை உருவாக்க, கிராபிக்ஸ் காட்சிகள் நேர்த்தியாகப் பயன்படுத்தப்பட்டுள்ளன.
🧶துளசி உட்பட பிற கதாபாத்திரங்களும் தங்கள் வேலையை சரியாக செய்துள்ளார் .
🧶வித்தியாசமான முயற்சி
🧶திரைக்கதை விறுவிறுப்பு ரசிக்க வைக்கிறது
🧶இசை படத்தின் பலம்
🧶கிளைமேக்ஸ்
இயற்கையை நேசிக்க சொல்கிறது எல்லோரும் ஒவ்வொரு மரம் நட்டால் இந்த பூமி செழிக்கும். என்பதை இயக்குனர் இந்த 94 வது வயதிலும் சொல்லியிருப்பது படத்தின் மாண்பு.
🧶மொத்தத்தில் இந்த சிங் கீதம் அனைவரையும் கவரும் இனிய இசை. வித்தியாசமான திரை அனுபவத்தை
கொடுக்கும்.
நல்ல ஒரு மனிதநேயம் உள்ள கதை திரைக்கதை பசவம்மாவாக வரும்
துளசி நடிப்பு சிறப்பாக இருக்கிறது.
🧶தாஸ் என்ற கதாபாத்திரத்தில் வரும் குடிகாரன்.
🧶மாட்டுக்கு வைத்தியம் செய்யும் டாக்டர் மனிதர்களுக்கு வைத்தியம் செய்வது.
🧶கர்ப்பிணியாக இருக்கும் ஒரு பெண்ணை தீண்டத்தகாதவள் என்று ஊரே ஒதுக்கி வைப்பது.
🧶அவள் பிரசுவிக்கும் பொழுது ஊரே சேர்ந்து அவளுக்கு பாதுகாப்பு வளையம் அமைப்பது.
🧶உயிர் போகும் தருணத்தில் கூட தங்கத்தை சுமந்து கொண்டு ஊரார்கள் ஓடுவது.
🧶கௌரி மரத்தை கட்டிப்பிடித்துக் கொண்டு இதுதான் என் அம்மா” என்று சொல்லி அழுவது அந்த மரத்துக்குள் வாழ்வது.
🧶தங்கம் சுரண்டுபவர்களால் மரம் வெட்டப்பட்டவுடன் கடவுளிடம் நேருக்கு நேர் நின்று சாபம் விடுவது.
🧶சைலஜா அம்மா என்ற கதாபாத்திரம் இயற்கையின் மரங்களையும் நேசித்து தன் கணவர் இயற்கையை அழித்துவிட்டார் என்று இடுப்பாடுகளுக்குள் இடையில் விழுந்து மாள்வது.
இப்படி ஒவ்வொரு காட்சியும், உயிரோட்டமாக இயக்கி இருக்கிறார் இயக்குனர்.
🧶படத்தொகுப்பாளர், ஆர்ட் டைரக்டர், ஒப்பனையாளர், மற்றும் காஸ்ட்யூம் டிசைனர், அனைவரும் தங்கள் பங்குக்கு ஒரு சிறப்பான படத்தை கொடுத்து இருக்கிறார்கள்.
🧶மக்கள் தொடர்பாளர் யுவராஜ்
🧶நல்ல படங்களை வெளியிடும்
ஏ ஜி எஸ் சினிமா இந்த படத்தையும் வெளியிடுகிறது வாழ்த்துக்கள்.
