முதற் கனல்”திரை விமர்சனம்

ரேட்டிங் 4-/5

🌸இயக்குநர் R. வெங்கட்ரமணன் இயக்கி, குறைந்த பட்ஜெட்டில் வெளியான சமூக விழிப்புணர்வுத் திரைப்படம் ‘முதற் கனல்”

போதை தீய பழக்கத்தினால் ,ஒரு குடும்பம், இளைஞர்கள், எப்படிச் சீரழிகிறார்கள் என்பதை உணர்வுப்பூர்வமாக எடுத்துரைக்கும் இப்படம், பார்வையாளர்களின் மத்தியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும்.
ஏனென்றால் ஒவ்வொரு வீட்டிலும், இதுபோன்ற சம்பவங்கள் இப்போது, தெருவுக்கு தெரு அரங்கேறிக் கொண்டிருக்கிறது.

🔥நல்ல அழகான குடும்பத்தை சார்ந்த சூர்யா,
புகைபழக்கத்திற்கு அடிமையாகி, தன் படிப்பை ,மரியாதையை, குடும்பம் என அனைத்தையும் இழக்கிறான். கஞ்சா குடிப்பது நிறுத்த முடியாமல் அவதிப்படும் அவனது நிலையும், அதனால் அவனது அப்பா, அம்மா, மற்றும் தங்கை
படும் வேதனையுமே படத்தின் முக்கியக் கதையாகும். இப்படத்தின் கதை மிக எதார்த்தமாகவும், கஞ்சாப்பழக்கம் உள்ளவர்களின் உண்மை நிலையைப் பிரதிபலிப்பதாகவும் உள்ளது.

கஞ்சா பழக்கம் ஒரு தனிமனிதனை மட்டும் பாதிக்காமல், ஒட்டுமொத்த குடும்பத்தையும் எப்படி நடுத்தெருவுக்குக் கொண்டுவருகிறது என்பதை சமரசமின்றிப் பேசியுள்ளது.

எடுத்துக் கொண்ட சமூகக் கருத்துக்காகவும், புகைக்கும் எதிரான விழிப்புணர்வுக்காகவும் குடும்பங்கள் மற்றும் பெற்றோர்கள் அனைவரும் பார்க்க வேண்டிய ஒரு அவசியமான படமாக இது வந்து ள்ளது
எடுத்துக்கொண்ட கதைக்காக இயக்குனர் வெங்கட்ராமனுக்கு ஒரு சல்யூட் வைக்கலாம். இன்று இளைஞர்கள் போதை யால
எப்படி சீரழிந்து போகிறார்கள். அவர்கள் குடும்பத் தலைவர்கள் .
கதி என்ன ஆகிறது? நல்ல வாழ்க்கையை இழக்கிறார்கள். எதிர்கால இலக்கை தொலைக்கிறார்கள். கடைசியில் அந்த இளைஞர்கள் திருந்தினார்களா? இல்லையா? என்பது தான் கதை .
பல கோடி செலவு செய்து எடுக்கும் படங்களை விட இந்த படம் சிறப்பாக இருக்கிறது. சிகரெட்டை நண்பன் பாண்டி கற்றுக் கொடுக்க, சூர்யா ஆரம்பத்தில் முதற்கனலாக பற்ற வைப்பதும், பிறகு அது கஞ்சாவை புகைக்க வைப்பதும், உள்ளபடியான நிஜம் அளவுக்கு மீறிய கஞ்சா குடியால் அவர்களின் குடும்பம் மட்டுமல்ல அவனது வாழ்க்கையும் காவு வாங்குகிறது. குடிக்கு அடிமையானவர்கள் எப்படி மறுவாழ்வு இல்லங்களில் மீட்டெடுக்கிறார்கள் என்பதை டீடைலாக சொல்லி இருக்கிறார் இயக்குனர். என்னதான் நாயகனாக சூர்யா இருந்தாலும் அவர்கள் நண்பர்கள் போடும் ஆட்டம் அதிகமாக இருக்கிறது.
நண்பர்கள் நல்ல நண்பர்களாக இருந்தால் ,அவர்கள் வாழ்க்கை சீராக இருக்கும். மோசமான நண்பராக இருந்தால், எவ்வளவு நல்ல இளைஞனாக இருந்தாலும், அவன் வாழ்க்கை தறி கெட்டுப் போகும் என்பதற்கு, பாண்டி கதாபாத்திரமும், சூரியா கதாபாத்திரமும், தாஸ் கதாபாத்திரமும், அகமது கதாபாத்திரமும், ஜோசப் கதாபாத்திரமும், இன்றைய சமகால இளைஞர்களை ஞாபகப்படுத்துகிறது.

🔥 அஸ்வின் விஸ்வநாதன்-
சூரியா கதாபாத்திரத்தில்
தீய பழக்கத்துக்கு அடிமையான பள்ளி மாணவனாக, நன்றாக நடித்து இருக்கிறார். டாக்டருக்கு படிக்க வேண்டும் என்ற கனவில் இருக்கும் சூர்யாவுக்கு, பாண்டி என்கிற மோசமான நண்பனால் வாழ்க்கையை தொலைக்க வேண்டி இருக்கிறது. வித்யா என்ற பெண்ணின் மரணத்திற்கு ஆளாகிறான். அஸ்வின் நல்ல நடிப்பு.

🔥ராஜேஷ்- பாண்டி
கதாபாத்திரத்தில் இயல்பாக நடித்திருக்கிறார். நிஜ வாழ்க்கையில் ஒரு இளைஞனை அம்மாவுக்கு அடங்காத தறி கெட்டு திரியும், ஒரு நெறி கெட்டுப் போன இளைஞனை கண் முன் நிறுத்தி இருக்கிறார் பாண்டி.

🔥ராமசாமி,
சங்கர் என்ற கதாபாத்திரத்தில், சூர்யாவின் அப்பாவாக, தன் மகன் இப்படி கெட்டுப் போய் விட்டானே !என்று அவர் புலம்பும் காட்சிகள் இயல்பாக இருக்கிறது நல்ல நடிப்பு.
🍩தனுஜா -சரஸ்வதி என்ற கதாபாத்திரத்தில் சூர்யாவின் அம்மாவாக இயல்பாக நடித்திருக்கிறார்.

🌸இலக்கியா -சுமா என்ற வேடத்தில் சிறப்பாக நடித்திருக்கிறார்

🔥- அரி கரன் ஜோசப் என்ற கதாபாத்திரத்தில்
சிறப்பாக நடித்திருக்கிறார்.- யோகேஷ் _தாஸ் என்ற வேடத்தில்,
இயக்குனர்- ஆர்.வெங்கடரமணன் வழக்கறிஞர் ரமணாவாக, இளைஞர்களுக்கு நீதி கேட்டு போராடும், சமுதாய புரட்சி கொண்ட வழக்கறிஞராக நல்ல நடிப்பை வழங்கி இருக்கிறார்.மற்றும்
டி.ராஜேந்திரன்
ராஜேந்திரன் கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்திருக்கிறார்.

தொழில்நுட்ப வல்லுநர்கள்

🔥இயக்குனர் – ஆர்.வெங்கடரமணன்
இன்றைய இளைஞர்கள் எப்படி தீய பழக்கத்தினால், கெட்டுப் போகிறார்கள். என்பதை அற்புதமாக சொல்லி இருக்கிறார். சமுதாயத்திற்கு இன்று மிகவும் தேவைப்படும் ஒரு கதையை, எந்த ஒரு ஆபாசமும் இல்லாமல், மக்கள் விழிப்புணர்வு அடைய வேண்டும் என்று நல்ல படம் கொடுத்ததற்காக இயக்குனருக்கு பாராட்டுக்கள்.🌷

🔥தயாரிப்பாளர் – ஆர்.போத்திராஜ்
அவர்களுக்கு பாராட்டுக்கள். சமுதாய அக்கறையோடு, ஒரு நல்ல படத்தை தயாரித்திருக்கிறார். விருதுகள் நிச்சயம் கிடைக்கும், கிடைக்க வேண்டும்.

👑ஒளிப்பதிவாளர் – கந்தசுவாமியின்,
ஒளிப்பதிவு ஆரம்பத்தில் சூர்யாவும், அவனது அப்பாவும், சொந்த கிராமத்துக்கு வரும்போது அழகான பசுமையான காட்சிகளையும், அதன் பிறகு காஞ்சிபுரம் சென்ற பிறகு நகரத்தின் அழகையும், சென்னை வீதிகளையும், கோயம்பேடு மார்க்கெட்டையும், அழகாக படம் பிடித்திருக்கிறது.

🔥 மீரா லால் -பின்னணி இசை உருகவும் வைக்கிறது. காட்சிக்கு உயிரோட்டமாகவும் இருக்கிறது. பாடல்கள் அனைத்தும் ரசிக்கும்படி இருந்தது.

🧶 – திஸ்யன் சாரதியின், படத்தொகுப்பு இரண்டு மணி நேரம் கச்சிதமாக இருந்தது. சீராக இருந்தது. காட்சிகள் எந்த இடத்திலும் ஜம்ப் ஆகாமல் தெளிவான திரைக்கதைக்கு, படத்தொகுப்பு பொருந்தி, பார்ப்பதற்கு விறுவிறுப்பை கூட்டியது.

🌍இணை இயக்குனராக ஆர்.முத்துக்குமரன்
பணி புரிந்து இருக்கிறார் அவருக்கும் வாழ்த்துக்கள்.

🔥 மற்றும் படத்தில் பணி புரிந்த ஒப்பனையாளர்கள், ஆடை வடிவமைப்பாளர்,
டி ஐ, கலர் கரெக்ஷன் செய்தவர்கள்,
காஸ்ட்யூம் டிசைனர்,
சவுண்ட் டிசைனர்,
அனைவருக்கும் வாழ்த்துக்கள் .ஒரு நல்ல படத்திற்கு உழைத்த பெருமை அனைவரையும் சாரும்.

மக்கள் தொடர்பாளர் கே.எஸ்.கே.செல்வகுமார் இந்த படத்தை மக்களிடம் நல்ல முறையில் கொண்டு சேர்த்திருக்கிறார் அவருக்கும் வாழ்த்துக்கள்.

மொத்தத்தில் இந்த “முதற் கனல் மூவி
ஒரு அற்புதமான விழிப்புணர்வு மிக்க நல்ல படம். இந்த படத்தை பார்த்து ஒரு இளைஞனாவது, இனிமேல் புகைப்பழத்தை
விட்டுவிட்டேன் என்று சொன்னால் அது இந்த படத்துக்கு கிடைத்த தேசிய விருதுக்கு, சமம்
தமிழ் சினிமாவில் இந்த படம் ஒரு குறிஞ்சி மலர்💐