🧶பேனர்: மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ், நியோ கேசில் கிரியேஷன்ஸ் & Era Entertainment
தயாரிப்பாளர்கள்: சத்யா கரிகாலன், ஈரா சரவணன் & யுவராஜ் கணேசன்
🧶 கதை, வசனம் திரைக்கதை மற்றும் இயக்குனர் கதாநாயகன் –என
பல் வேறு பரிமாணங்களில் பங்காற்றி இருக்கும்,
பாரி இளவழகன்,
நாயகி – ரம்யா ரங்கநாதன்
முக்கிய வேடத்தில்இவர்கள் உடன் நீண்ட இடைவெளிக்குப் பிறகு ரோஜா நடித்துள்ள படம்
அன்பே டயானா”
❤️ கதை என்ன?
இந்தப் படம் சென்னை பெரம்பூரை பின்னணியாகக் கொண்ட காதல், மற்றும் குடும்ப உணர்வுகளை மையமாகக் கொண்டது. ஒரு தெலுங்கு இளைஞனுக்கும், ஒரு ஆங்கிலோ-இந்தியப் பெண்ணான டயானாவுக்கும் இடையிலான காதல், கலாச்சார வேறுபாடுகள் மற்றும் குடும்ப உறவுகள் ஆகியவை கதையின் மையமாக அமைந்துள்ளன. .
காதலுக்கு குறுக்கே மதம் வரும்போது அதைத் தூக்கி எறி” என்று மதத்தைப் பின்னுக்குத் தள்ளி காதலுக்கு முக்கியத்துவம் கொடுத்து ,இளைய தலைமுறை ரசிகர்கள் இதை ரசிக்கும் வண்ணம் எடுக்க பட்டுள்ளது.
கல்லூரி படிக்கும் போது நட்பில் இணையும் சிஎஸ்கே ,மற்றும் மேஜிக் இருவரும் பல இடங்களில் தங்கள் காதல் எண்ணங்களை வெளிப்படுத்த துடிக்கிறார்கள்.
ஆனால் அது ஒத்துப்போகாதால் நட்பாகவே வாழ்கிறார்கள்.
நாயகன் சி.எஸ்.கே தன்னுடைய காதலை பட்டாம்பூச்சிகள் பறக்க, ஒன்டர்லா என்னும் பெரம்பூர் ரயில்வே பகுதி இடத்தில் சொல்லும் பொழுது நாயகி மறுத்துவிட்டு நாயகனுக்கு டெஸ்ட் வைக்கிறார்.
அதில் நாயகன் பாஸாகி விட, நாயகி காதலை சொல்லும் பொழுது நாயகனுக்கு பயம் வந்து விடுகிறது. தன்னுடைய குடும்பத்திற்கு தன் அம்மா ரோஜாவுக்கு, ஏற்ற மருமகளாக இவர் வருவாரா? குட்டை பாவாடையில் வருகிறார். மது அருந்துகிறார். எந்த ஆண்களை கண்டாலும் நேராக கட்டி பிடிக்கிறார். என்று பயம் கொண்டு, இவர் அந்த காதலை ஏற்க மறுக்கிறார்.
அதன் பிறகு என்ன நடந்தது இருவரும் ஒன்று சேர்ந்தார்களா ஆச்சாரமான குடும்பத்தை சேர்ந்த ரோஜா நாயகி ரம்யாவை தன் மருமகளாக ஏற்றுக் கொண்டாரா? என்பது விறுவிறுப்பான திரைக்கதை .
.
🧶கதை,வசனம், எழுதி இயக்கி, நடித்திருக்கிறார் ஜமா புகழ் பாரி இளவழகன் .
ஒவ்வொரு காட்சியை உணர்ந்து படமாக்கி இருக்கிறார். கதாபாத்திரங்களை தேர்வு செய்த விதம், அருமையாக இருக்கிறது.
இந்த படத்தின் வெற்றிக்கு பாரியின் புத்துணர்ச்சியான கதை – வசனம், நாயகி பிரத்யேக அழகியல் பாணி அழகான இவர் நடிப்பு,ஒளிப்பதிவு, பரத் சங்கர் அற்புதமான இசை போன்றவை அடிப்படைக் காரணங்கள் என்று சொல்லலாம.
இயக்குனர் பாரி இயக்கிய படமான `
ஜமா” சரியான வரவேற்பைப் பெறாததால், அடுத்த படைப்பை எப்படியாவது வெற்றிப் படைப்பாக்கி விட வேண்டும் என்கிற நெருக்கடியை உருவாக்கிக் கொண்டாரோ… என்னமோ. இதன் காட்சிகளிலும் பாடல்களிலும் கவர்ச்சியான அம்சங்கள் கூடுதலாக இருந்தன. அதிலும் `விழியிலே பாடலில் `நாயகிகுட்டி டவுசர் உடை என, இளைஞர்களின் தூக்கத்தைக் கலைக்கும் காட்சியாக படைத்திருக்கிறார்.
🧶நாயகன் பாரி”
சி .எஸ் .கே வாக,
நடிப்பில் ஸ்கோர் செய்ய,
ஆதி நாராயணா பாஸ்கரா வாக,
சேத்தன், இன்னொரு பக்கம் சிக்ஸராக விலாசுகிறார்.
அவரின் இயல்பான நடிப்பு, எதார்த்தமாக இருக்கிறது. அவருடைய காமெடி பல இடங்களில் ரசிகர்களை கைதட்ட வைக்கிறது.
இந்த படத்தின் நாயகன், நாயகி என்று சொன்னால் அது ரோஜாவும், நடிகர் சேத்தனும் தான் ,அவ்வளவு சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்கள்.
.
🧶இளைஞர்கள் கொண்டாடும் அப்படியொரு பேரழகியாக, அனைத்துக் காட்சிகளிலும் தென்படும் (மேஜிக்) ரம்யா.
ஆங்கில இண்டியன்பெண்களுக்கே உரிய
விதம் விதமாய் ரசிக்க வைக்கிறது .
அவருடைய டயலாக் டெலிவரி, எமோஷனல், கலந்த நடிப்பு எல்லாம் ரசிக்க வைக்கிறது.
படம் பார்க்கும் இளைஞர்கள் தூக்கம் கலைவது உறுதி.
அந்த அளவுக்கு குட்டி டவுசரில் கவர்ச்சியாக வலம் வருகிறார் ரம்யா.
🧶சரளா வாக வரும்
ரோஜா, அவர் அடிக்கும் லூட்டி சேத்தன் அவருக்கு சரியான ஒரு ஜோடியாக இந்த படத்தில் இணைந்து இருக்கிறார் இருவரும் வரும் காட்சிகளில் அவ்வளவு கலகலப்பு.
பரிதாபங்கள் கோபி, பாபாவாக பெங்களூர் காராக படம் முழுக்க அதகலம் செய்து இருக்கிறார் ..அவர் வரும் காட்சிகள் அவ்வளவு சிறப்பாக இருக்கிறது.
🧶பாரி தம்பியாக (சுதர்சன்) வரும் சிரஞ்சீவி, கதாபாத்திரம் சிறப்பாக இருக்கிறது.
பொம்மி யாக வரும் அந்த குழந்தையின் நடிப்பும் நன்றாக இருக்கிறது.
பாரியின் அக்காவாக வரும் சத்யா(இஸ்மத் பானு)கதாபாத்திரம், கணவனுக்கும் மாமியாருக்கும் இடையில் சிக்கிக் கொண்டு விழிக்கும் அந்த கதாபாத்திரம் படத்திற்கு மிகப்பெரிய பலம் .
செல்முருகன் (மங்க பாபு வாக) அவரதுமகளாக வரும் தனிஷா(நிகிலா சங்கர்) கதாபாத்திரம் கிளைமாக்ஸ்சில் மிகப்பெரிய திருபத்தை ஏற்படுத்துகிறது.
🧶காதல் சொல்ல தேர்வான இடங்கள்,
ஆச்சாரமும ஆங்கில இண்டியன் ஃபேமிலியும் எப்படி சேரப் போகிறது என்ற திரைக்கதையின் மாயாஜாலம் செம அருமை.
🧶நாயகி மேஜிக், தன் வீட்டுக்கு வந்தால் என்ன நடக்கும்? என்று நாயகன் நினைத்துப் பார்க்கும் காட்சி
ரசிக்க வைக்கிறது.
கோயில்களில் ரோஜா காலில் விழ நாயகி வரும்பொழுது, சிரஞ்சீவி ,தன் காதலி வேத வல்லியுடன் காலில் விழும்போது திடீர் திருப்பம்.
🧶அப்பாவின் காது
போனதற்கு நாயகியின் அப்பாதான் காரணம் ,என்று நாயகன் அடித்து உதைக்கும் காட்சி ஆவேசம் இயல்பாக இருந்தது.
🧶மாவு கடை வச்சு கொடுத்தது நம்ம
ஜாதிக்காரன்
என்று ரோஜா சொல்ல,
அதற்கு நாயகன் மாவு வாங்கியவர்கள் நம்ம ஜாதிக்காரரா? என்று கேட்கும் இடம் பளீர் என்று அறையும் காட்சி.
பாரியின் அக்கா
சத்யவதி , அவரது கணவர் சங்கர் இருவருக்கும் பஞ்சாயத்து நடக்கும் காட்சி மிக சிறப்பாக இருந்தது
🧶கேரக்டர் தான்முக்கியம்
கேஸ்ட்டா? முக்கியம்
என்று ரோஜாவுக்கு உணர வைத்த தருணம் சிறப்பு!!
🧶திருமண
மண்டபத்தில், சேத்தன் ஆழ்ந்த உறக்கத்தில் இருக்க ,நாயகன் அப்பா இறந்து விட்டார் !!என்று அருகில் வந்து அதிர்ச்சியில் நிற்கும் போது!! திடீரென சேத்தன் எந்திரிப்பது தியேட்டரில் கலகலப்பு.
🧶சேத்தனின் கடந்த கால காதலி சாந்தியின் பெயரை உச்சரித்துக் கொண்டிருப்பது, ரோஜா தன்னுடைய நிலையை எண்ணி சொல்வது, அதன் பிறகு சேத்தன் ரோஜாவுக்கு காபி கொண்டு வந்து கொடுக்கும் காட்சி அற்புதம் .
இப்படி படம் முழுக்க ரசிப்பதற்கு நிறைய காட்சிகள் இருக்கிறது. அது எல்லாம் படத்தின் வெற்றிக்கு உதவி இருக்கிறது.
🧶ரோஜாவின் கணவர் மத்திய அரசாங்க வேலையில் இருக்கிறார். மகன் ஸ்டேட் கவர்மெண்ட் வேலையில் இருக்கிறார். இவருக்கு ஜாதி காரர்கள் தான் தான் மாவு கடை வைத்து கொடுத்தார்கள் என்று சொல்வது நம்பும் படி இல்லை!! மாவு கடை வைத்து கொடுப்பதற்கு என்ன அவ்வளவு பணம் தேவைப்படுமா என்ன?
🧶இனிமையான பாடல்களை, அருமையான பின்னணி இசை, கொடுத்திருக்கிறார் பரத் சங்கர்
இவரின் இசை க்கு,பாடல்கள் அற்புதமாக எழுதி இருக்கிறார்கள். மோகன ராஜன், பாக்கியம் சங்கர், முத்தமிழ் மூவரும்
பாடல் வரிகள் ரசிக்க வைக்கிறது.
🧶செல்லிகேலிஸ்ட்டி”
ன் ஒளிப்பதிவு, பெரம்பூர் அழகை ஒரு சுற்றுலாத்தலம் போல் காட்டி இருக்கிறது. காட்சிகளை கண்களுக்கு ரிச்சாக கொடுத்திருக்கிறது.
ஒன்டர்லேண்ட்”
அருகே நாயகன் காதலை சொல்லும் பொழுது பட்டாம்பூச்சி பறப்பது, அற்புதமான ஒளிப்பதிவு .
🧶பார்த்தா M.A அவர்களின், படத்தொகுப்பு கச்சிதமாக இருக்கிறது. காட்சிகளை சீராக செதுக்கி இருக்கிறார்.
🧶மகேந்திரன் ஆர்ட் டைரக்டராக பணிபுரிந்து இருக்கிறார். ரோஜாவின் வீடு, நாயகியின் வீடு, மற்றும் காதலர்கள் சந்திக்கும் இடம், எல்லாம் கட்சிதமாக அரங்கம் அமைத்திருக்கிறார்.
🧶சவுண்ட் மிக்சிங் உதயகுமார் ,
சவுண்ட் டிசைனர்
ரஞ்சித் வேணுகோபால், மற்றும் சரவணகுமார்
காஸ்ட்யூம் டிசைனர்
அபிநந்தினி.
ரகுவின் நடன பயிற்சி சூப்பராக இருக்கிறது .
டான் அசோக் அமைந்துள்ள சண்டை பயிற்சி
நன்றாக இருக்கிறது.
தொழில்நுட்ப கலைஞர்கள்
இணை தயாரிப்பாளர்: டி நரேன்
கிரியேட்டிவ் தயாரிப்பாளர்கள்: ஷாஜன் கவிதா, விவேக் சுவாமிநாதன் ஆர்
நிர்வாக தயாரிப்பாளர்: அஜித்குமார் நடராஜன்
தயாரிப்புக் கட்டுப்பாட்டாளர்: குட் நைட் ஆர் நாகராஜன்
தயாரிப்பு நிர்வாகி: எஸ் மணிகண்டன்
தயாரிப்பு ஒருங்கிணைப்பாளர்: பாபா மணி
தலைமை ஒப்பனை கலைஞர்: F. சசி குமார்
சண்டைக் காட்சி: டான் அசோக்
VFX: RENDERHOOD, ஆனந்தராஜ் ஆர்
டிரெய்லர் AI ஷாட்ஸ்: டிஜிபிரிக்ஸ் என்டர்டெயின்மென்ட்
வண்ணம்: கௌஷிக் கே எஸ் (ஸ்டுடியோ ஸ்பேஸ் மாங்க்)
இணை இயக்குனர்கள்:ராகுல் பாலாஜி, ராகேஷ்
இயக்கும் குழு: கார்த்திக் வீரபாகு, ஐ.ராஜன், தினேஷ், எம்.ராஜன், விஷ்ணு
ஸ்டில்ஸ்: வி பாலாஜி
விளம்பர ஸ்டில்ஸ்: பெனுநந்தா
விளம்பர வடிவமைப்பாளர்: கௌதம் ஜே
படைப்பு விளம்பரங்கள்: வெங்கட் ரமணன், ராஜசேகர்
தலைப்பு வடிவமைப்பு:
என்று ஒட்டுமொத்த தொழில்நுட்ப கலைஞர்கள், இந்த படத்திற்காக உழைத்திருக்கிறார்கள் .அவர்கள் அனைவருக்கும் இந்த படம் ஒரு வெற்றி படமாக அமையும்.
இவர்களின் உழைப்பு வீணாகாது.
🧶 மொத்தத்தில்
தமிழ் சினிமாக் கதைகளின் முக்கியமான கச்சாப்பொருளில் ஒன்று காதல். காதலின் குறுக்கே சாதி, மதம், வர்க்கம், சமூக அந்தஸ்து உள்ளிட்டவை குறுக்கே வந்து உக்கிரமாக மறித்து நிற்கும். காதலர்கள் அவற்றுடன் போராடுவார்கள். சில பல சம்பவங்களுக்குப் பிறகு காதலை மறித்தவர்கள் மனம் மாறுவார்கள். இதுவே அதுவரையான காதல் திரைப்படங்களின் பொதுவான அம்சம்.
இதில் வர்க்கம் என்பது கையாள்வதற்கு எளிதான விஷயம்.
காதலை உன்னதப்படுத்தி ஜாதி யைதிட்டி பல ஆவேசமான வசனங்களை எழுதிவிடலாம். ஆனால் சாதி, மதம் போன்றவை வரும்போது அவற்றில் கைவைப்பது எரிமலையில் கைவைப்பதுபோல.எந்தவொரு பேனாவும் நடுங்கும்.
ஆனால் இந்த படம் அப்படி பட்ட படம் அல்ல ஜாதி மதம் விஷயத்தில் மென்மையாகவே அணுகி இருக்கிறார்கள்.
அதற்கு பாராட்டுக்கள்.
சினிமா என்பது ஒரு சமூகத்தின் அனைத்து விதமான பார்வையாளர்களை நம்பி இயங்கும் ஒரு வணிக சமாசாரம் என்பதால் அவர்களின் ஆதாரமான உணர்வுகளை கையாள்வதில் மரபை காப்பாற்றி இருக்கிறார். இயக்குநர் பாரி .
“தெலுங்கு பேமிலி ஆங்கில இந்தியன் ஃபேமிலி என்ற இரு குடும்பத்தாரை காட்டியது. ஒருவகையில் இது விஷப் பரீட்சைதான். நல்ல முன்னேற்றம்தான். `அன்பே டயானா படத்தில் தொடக்க காட்சிகள் சிறப்பாக அமைந்திருந்தன. ஒரு தெலுங்கு குடும்ப சடங்கு ஒருபுறம். இன்னொரு புறம், கிறிஸ்துவ மதத்தைச் சார்ந்த குடும்பத்தைச் சேர்ந்த வர்களுக்கு அருளப்படும் காட்சி காண்பிக்கப்படும்.
ஆக… இந்தப் நாயகன் நாயகி இவர்கள் சார்ந்திருக்கும் மதமும் இந்தக் கதைக்கு முக்கியமான விஷயங்களாக அமையப் போகின்றன என்பதை தொடக்கத்திலேயே உணர்த்திவிடுவார்.இயக்குனர்
இயக்குநரின் திறமையையும் தன்னம்பிக்கையையும் காட்டுகிறது. அது பாரியிடம் ஏராளமாக இருந்தது.’ ..
அது போலவே
சேத்தன், பாரி இருவரும் பப்பில் அமர்ந்து கொண்டு ஆங்கில இந்திய பெண்களை சைட் அடிப்பது,
இன்னொரு காட்சியில் கோபி கமெண்ட் அடிப்பது, காதலர்களுக்கிடைபெரம்பலூர்பகுதியை, இந்தத் திரைப்படத்தில் அதற்காக ரயில்வே டிராக்பயன்படுத்திக் கொண்டது காதலர்களின் சந்திப்ப நடக்கும் பகுதி சூப்பர்!!
`
நடிகை ரோஜா தேர்வு
இந்தப் படத்தின் இனிய ஆச்சர்யம் என்று ` சொல்லலாம். இந்தத் திரைப்படத்துக்கு முன்னரும் அவரது இளமைக்காலத்தில் பெரும்பாலும் கவர்ச்சி பிம்பமாகவே அறியப்பட்ட ரோஜாவை குணச்சித்திர நடிகையாக சிந்திக்க ஒரு துணிச்சல் வேண்டும். அது இயக்குநர் பாரிக்கு இருந்தது.
இதில் அம்மாவாக நன்கு நடித்திருந்தார் . ரோஜா முதலில் கணவனுக்கு எதிராக வருபவர் காதலர்களுக்கு ஆதரவாக மாறுவது நல்ல திருப்பம்.
இது தொடர்பான காட்சிகள் மிக அருமையாக இயக்கப்பட்டிருந்தது.
ரோஜா.பல விதங்களில் சுட்டெரிக்கும். அந்தக் கோபத்தை கணவரிடம் சிறப்பாக வெளிப்படுத்துவார் ஜாதி சொல்லி புலம்புவதும் கதறுவதும் நல்ல நடிப்பு.
மக்கள் தொடர்பாளர் யுவராஜ்.
இந்த படத்தை மக்களிடம் கொண்டு போய் சேர்த்து இருக்கிறார் அவருக்கும் வாழ்த்துக்கள் 🌷
