ராம் அண்ட் லீலா திரை விமர்சனம்

ரேட்டிங் 4-/5

❤️நாயகன்: ரியோ ராஜ்
நாயகி: வர்திகா ஜெயின்
இயக்கம்: ராம்சந்திரன் கண்ணன்
ஒளிப்பதிவு: மல்லிகா அர்ஜுன்
இசை: அன்கிட் மேனன்
தயாரிப்பு: ட்ரைடன்ட் ஆர்ட்ஸ் மற்றும் ஒய்வா என்டர்டெயின்மென்ட்
வகை: காதல், நகைச்சுவை கலந்த பொழுதுபோக்கு திரைப்படமாக வந்துள்ளது

❤️ கதை களம்

ரியோ ராஜ் (ராம்) என்ற இளைஞராக வருகிறார். திருமணத்துக்காக பெண் பார்க்கும் போதெல்லாம் பல்வேறு காரணங்களால் நிராகரிக்கப்படும் அப்பாவியான இளைஞனாக அவரது கதாபாத்திரம் காட்டப்படுகிறது.
அவரது வாழ்க்கையில் லீலா வரும்போது கதை காதல் பாதைக்கு மாறுகிறது. ஆனால் லீலா, மாலை 6 மணிக்குப் பிறகு தன்னை ராம் பார்க்கக்கூடாது என்ற வித்தியாசமான நிபந்தனையை விதிக்கிறார். இதனால் ராமுக்கு ஏற்படும் காதல் குழப்பங்கள்தான் படத்தின் முக்கிய சுவாரசியமான
ஒரு நாளின் 12 மணி நேரம் பெண் ணாகவும்,
12 மணி நேரம்
வேறொரு உருவமாக என்று வாழும் இந்த குழப்பமான சூழலுக்கு மத்தியில் ரியோ காதல் கைகூடியதா? இல்லையா? ? என்பதுதான் இத்திரைப்படத்தின் கதை.
ஒரு வித்தியாசமான கதைக்களத்தை கையில் எடுத்துக் கொண்டு அதை எவ்வளவு கலகலப்பாக,
கொடுக்க முடியுமோ அந்தளவு கொடுக்க முயற்சித்திருக்கிறார் இயக்குனர் . மாறி வாழ்ந்து கொண்டிருக்கும் அந்தக் கதாபாத்திரத்தின் சுவாரசியம் குறையாமல் கொடுக்கப்பட்டிருப்பது படத்திற்கு பெரும்பலம்.

💥இந்தத் திரைப்படத்தில் நாயகனாக
ரியோ நாயகியாக வர்திகா நடித்துள்ளனர். ரியோ துள்ளல் மிகுந்த நடிப்பால் கவனம் ஈர்க்கிறார். அவருடைய உடல் மொழி, காதல் ரசனைமிக்க முகபாவனைகளும் கதாபாத்திரத்திற்கு அருமையாக பொருந்தி போய் உள்ளது. வர்திகாவிடம் அவர் செய்யும் காதல் சேட்டைகள் ரசிக்கும்படியாக அமைந்திருக்கிறது கோபப்படும் இடங்களிலும், வர்திகா மீதான, கோபம் அர்த்தமற்றது .என உணரும் தருணங்களிலும் மிகச் சிறந்த நடிப்பை கொடுத்திருக்கிறார் . காதல் கை நழுவும் இடங்களில் தவிப்புடன் அவர் வெளிப்படுத்தும் நடிப்பு, படத்திற்கு கைகொடுத்துள்ளது.
அவர் படங்களில் இந்த படம் அவரை ஒரு நவரச நாயகனாக காட்டியுள்ளது
ரியோ ராஜின் முந்தைய படங்களான ஜோ, ஆண்பாவம் பொல்லாதது ஆகியவற்றுக்குப் பிறகு, அவரை இன்னொரு வித்தியாசமான காதல்-காமெடி கதாபாத்திரத்தில் பார்க்கலாம் என்பதால் இப்படத்திற்கு இளைஞர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு இருந்தது அதை இந்த படத்தின் மூலம் நிறைவேற்றி இருக்கிறார்.
வாழ்த்துக்கள் சார்!

❤️கதாநாயகிக்கு இது முதல் தமிழ் படம்!
வர்திகா ஜெயின் இந்தப் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமாகிறார். ரியோவுடன், அவர் முதன்முறையாக ஜோடி சேர்த்துள்ளார் “மாலை 6 மணி”தான் கதையின் முக்கிய மர்மம்!
லீலா, ராமிடம் மாலை 6 மணிக்குப் பிறகு தன்னைப் பார்க்கக் கூடாது என்று ஒரு வித்தியாசமான நிபந்தனை விதிக்கிறார். இதற்குப் பின்னால் என்ன காரணம் என்பதுதான் படத்தின் முக்கிய சுவாரசியங்களில்
ஆறு மணிக்கு மேல் மாறிவிடும் வாய்ப்பு கொண்ட வர்திகா, தவிப்பு கலந்த நடிப்பு பார்வையாளர்களை கட்டிப்போடுவதில் சாதித்திருக்கிறது. தன்னுடைய இக்கட்டான நிலைமையை காதலன் ரியோ விடம் ,சொல்ல முடியாமல் தவிக்கும் சூழலும், அதற்காக பிரயத்தனப்படும் இடங்களும் ரசிக்கச் செய்கின்றன. இதற்கு மத்தியில் அழகாக வந்து செல்கிறார் வர்திகா. அழகான பெண்ணாக அவரது உடல் மொழி கச்சிதமாக பொருந்தியுள்ளது. அவர் காதலுக்காக உருகும் இடங்களில் ஸ்கோர் செய்கிறார். சின்ன வண்டுமாமியை,
காதலிக்கும்முனீஸ்காந்த், கதாபாத்திரம் நகைச்சுவையை அவ்வப்போது தூவுகிறது. இவர்களுக்கு மத்தியில் தன்னுடைய சிரிக்கச்செய்யும்
படியான வசனங்களால் திரையில் சிரிப்பொலியை ஏற்படுத்துகிறார்
காத்தாடி ராமமூர்த்தி இவர்களுடன் சேத்தன், மாளவிகா அருமையான நடிப்பை வழங்கியிருக்கிறார்.
தீபா வெங்கட் அழகான அம்மாவாக வந்து அம்சமாக நடித்திருக்கிறார்
சின்ன வண்டு வாக வரும் மா.பா.கா சிரிக்க வைக்க தவறவில்லை.
மற்றும் பாலாஜி தியாகராஜன்,
தயாளன் ,நயனா,
கண்ணன் என அனைவரும் தங்கள் பங்குக்கு சிறப்பான நடிப்பையும் கலகலப்பையும் ஏற்படுத்துகிறார்கள்.

☘️குறைவான, அளவான கதாபாத்திரங்கள், அடுத்தது என்ன? என எதிர்பார்க்கச் செய்யும் திரைக்கதை, பொருத்தமான இடங்களில் அமைந்த பின்னணி இசை என படத்திற்கு பலம் சேர்க்க பல காரணிகள் உள்ளன.
முதல் பாதி முழுக்க கலகலப்பாக செல்லும் திரைக்கதை இரண்டாம் பாதியில் ஒரே வட்டத்திற்குள் சுற்றுவதை போன்ற உணர்வு ஏற்படாமல் இருக்கவில்லை. சயின்ஸ் பிக்சன் படமாக காட்டி இருக்க வேண்டிய காட்சிகளை குறைவாக காட்டியது ஏன் என்பது புரியவில்லை.
கலகலப்பாக செல்லும்காட்சியில் வில்லனின் தேவை எதுவும் சரியாக சொல்லப்படவில்லை. கிளைமாக்ஸ் காட்சியில் வர்திகாவை ஆசையுடன் காணச் சென்று வில்லன் அலறிக்கொண்டு ஓடிவருவது சிரிப்பு .
மாலை 6:00 மணிக்கு மேல் ரிசப்ஷன் வைத்தே ஆக வேண்டும் என்று பெருசுகளின் பிரச்சனையை, ரியோ எப்படி சமாளிக்க போகிறார்? என்பது சஸ்பென்ஸ் ஆன திரைக்கதை.
எனினும் ஒரு புது கதைக்களத்தை எடுத்து விறுவிறுப்பாக கொண்டு சென்று நல்ல பொழுதுபோக்கு படமாக வென்று இருக்கிறது.
வழக்கமான காதல் கதையைவிட காமெடி + காதல் + சிறிய மர்மம் கலந்த விதத்தில் படத்தை சிறப்பாக காட்டுகிறது. குறிப்பாக ரியோ–வர்திகா ஜோடியின் கெமிஸ்ட்ரியும் ரசிகர்களிடம் கவனம் பெற்றது

🎵 🔥 தொழில் நுட்ப கலைஞர்கள்.

இசையில் அன்கிட் மேனனுக்கு முக்கிய பங்கு
பாடல்கள்
படத்தின் பலம் . முதல் பாடல்களில் ஒன்றை சித் ஸ்ரீராம் பாடியுள்ள
இசையில் அன்கிட் மேனன் சிறப்பாக இசை அமைத்துள்ளார் அந்தப் பாடலை அனிருத் வெளியிட்ட
“செப்பு சேல” பாடலும் கவனம் பெற்றது!
இப்படத்தின் மற்றொரு பாடலான “செப்பு சேல” பாடலை வி.எம். மகாலிங்கம் பாடியுள்ளார்; பாடலுக்கு உமாதேவி வரிகள் எழுதியுள்ளார

☘️ அறிமுக இயக்குநரின் படம்!
ராமசந்திரன் கண்ணன் இப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார். அவரே படத்தின் எழுத்துப் பணியையும் மேற்கொண்டுள்ளார்.. பெரிய நட்சத்திரக் கூட்டணி இல்லாமல் கதையை நம்பி
இது வழக்கமான காதல் கதை அல்ல”
இது வெறும் காதல் கதையாக இல்லாமல் காதல், நகைச்சுவை, நட்பு, குடும்பம், பயணம் ஆகியவற்றையும் இணைக்கும் படமாக உருவாகியுள்ளது. இயக்குநர் மட்டுமல்ல… முக்கிய தொழில்நுட்பக் குழுவே அறிமுகம்!
இந்தப் படத்தின் மிகப்பெரிய சிறப்புகளில் ஒன்று, இயக்குநர் ராமசந்திரன் கண்ணன், ஒளிப்பதிவாளர் மல்லிகா அர்ஜுன், எடிட்டர் ஆகியோர் தங்களது முதல் திரைப்படப் பணியில் இணைந்திருப்பதாநான்கு மாதங்களில் படப்பிடிப்பு முடிந்தது!
படப்பிடிப்பு தொடங்கி சுமார் நான்கு மாதங்களிலேயே
போஸ்ட் புரொடக்ஷன்ஸ் செய்துள்ளார்கள்.
ஒரு சுவாரசியமான விஷயம்
இந்தப் படத்தின் தொழில்நுட்பக் குழுவில் குறிப்பாக இயக்குநர் ராமசந்திரன் கண்ணன் அறிமுக இயக்குநர், கதாநாயகி வர்திகாவும் தமிழ் சினிமாவில் அறிமுகம். அதனால் புதிய முகங்கள் மற்றும் புதிய தொழில்நுட்பக் குழுவுடன் உருவாகும் படமாக இது அமைந்திருக்கிறத
இயக்குநர் – ராமசந்திரன் கண்ணன்
இப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார். கதையையும் அவரே எழுதியுள்ளார்; சில தகவல்களில் ஆகாஷ் பூஜித் இணைந்து கதை எழுதியதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

🎥 –ஒளிப்பதிவில் மல்லிகா அர்ஜுன்!
படத்தின் காட்சிகளை மல்லிகா அர்ஜுன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
ரயில் காட்சிகள், சிறப்பாக படம் ஆக்கப்பட்டிருக்கிறது .பிற்பகுதியில் வரும் தென்காசி திருமண மண்டபக் காட்சிகள் உயிரோட்டமாகவும், நகைச்சுவையாகவும், ரசிக்கும் படியும் இருக்கிறது ஆற்றின் கரையோரங்களில் படப்பிடிப்பு நடத்தி கண்களுக்கு குளிர்ச்சியை தந்துள்ளார் ஒளிப்பதிவாளர்.

✂️ எடிட்டர் – YNC சிவா
படத்தின் எடிட்டிங்கை YNC சிவா மேற்கொண்டுள்ளார்.
படத்தை சீராக செதுக்கி, விறுவிறுப்பாக கொண்டு சென்றுள்ளார்.

🎨 மற்ற முக்கிய தொழில்நுட்பப் பணிகள்
கலை இயக்கம்: G. துரைராஜ்
ஆடை வடிவமைப்பு: A. கீர்த்திவாசன்
சவுண்ட் டிசைன்: அருண் S. மணி – Oli Sound Labs
சவுண்ட் மிக்சிங்: விஷ்ணு சுஜாதன்
VFX மேற்பார்வை: அருண்ராஜ் V
நடன அமைப்பு: Abu & Chals
ஸ்டண்ட் அமைப்பு: அபிஷேக் ஸ்ரீனிவாஸ்

🏭 தயாரிப்பு
படத்தை R. ரவீந்திரன் மற்றும் சுதர்சன் தயாரிக்கின்றனர். Trident Arts மற்றும் EYWA Entertainment நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளன. சஞ்சய் விஜயராகவன் Creative Producer ஆகப் பணியாற்றுகிறார

💥சவுண்ட் டிசைனர்,💥 அருண் என்கிற மணி

💥நடனப் பயிற்சி அபி அண்ட் சால்ஸ்

☘️சவுண்ட் மிக்சிங் விஷ்ணு சுஜிதன்

☘️DI – kowsi ( Studio space monk)
VFX Supervisor – V arunraj
PRO – Sathish Kumar, S2 Media

☘️மொத்தத்தில், இந்த ராம் அண்ட் லீலா இளைஞர்களை கவரும் காதல் படமாகவும், வித்தியாசமான விஞ்ஞான படமாகவும், ரசிக்கும்படி வந்துள்ளது. வெற்றி பட்டியலில் ராம அண்ட் லீலா🔥