☘️கதையின் ஸ்பெஷல் என்ன?
மேக்கரை என்ற மலைக் கிராமத்தில் மர்மமான தொடர் கொலைகள் நடக்கின்றன. ஒரே மாதிரியான முறையில் ஐந்து கொலைகள் நடந்தும் எந்தத் தடயமும் கிடைக்கவில்லை என்பதிலிருந்து கதை தொடங்குகிறது.
மேலும் அந்தக் கிராமத்தில் ஒவ்வொரு ஏழு ஆண்டுகளுக்கும் ஜூன் மாதத்தில் ஆண்கள் இறப்பது ஒரு பழக்கமாக/நம்பிக்கையாக இருந்து வருகிறது என்ற மர்மமான பின்னணியும் , அந்த மர்மத்தை விசாரிக்க வரும் போலீஸ் அதிகாரியாக சித்து நடிக்கிறார் —
அதே சமயம் ஒரு சைக்கோ கொலைகாரன் இரவு நேரத்தில் வயலின் வாசித்துக் கொண்டு ஒவ்வொரு வரையாக கொலை செய்து வருகிறான் அவன் யார்?
☘️அந்த ஊரில் காலங்காலமாக பேசப்பட்டு வரும் ஏழு வருடங்களுக்கு ஒரு முறை ஜூன் மாதத்தில் ஆண்கள் மட்டும் கொல்லப்படுவது ஏன் ?இது அந்த ஊரின் சாத்தானின் சாபமா? என்பதை நாட்டார் கதையை மையமாக வைத்து ஒரு முழு நீள சஸ்பென்ஸ் க்ரைம் த்ரில்லராக உருவாகி இருக்கும் திரைப்படம் ‘தி டார்க் ஹெவன்’ . இப்படத்தை பாலாஜி இயக்கி உள்ளார்.இவர் ஏற்கெனவே ‘D3’ என்ற படத்தை இயக்கியவர்.
அவர் இயக்கியிருக்கும் இரண்டாவது படமான இந்த ‘தி டார்க் ஹெவன்’ படத்தில்
கொலையும் கொலை சார்ந்த ஒரு துப்பறியும் கதையாக உருவாகி இருக்கிறது .
படம் ஆரம்பத்தில் இருந்த விறுவிறுப்பு படம் முடியும் வரை கொஞ்சம் கூட குறையாமல் ,அதே டெம்போவோடு பயணித்திருப்பது படத்தின் வெற்றிக்கு மிகப்பெரிய சிறப்பு.
இடைவேளை கட்சிகளில், சைக்கோ கொலைகாரன் ஒருபுறம், பாதிரியாரை கொள்ளதுடிப்பதும், மறுபுறம் இன்ஸ்பெக்டர் பாரியின் மனைவியை கொல்ல துடிப்பது , இன்னொரு புறம் காவல் நிலையத்தில் அழகு என்ற கான்ஸ்டபிள் கொலை செய்ய துடிப்பது, என்று ஒரே நேரத்தில் பல இடங்களில் சைக்கோ கொலை காரணை காட்டி, இன்டர் வெல் பிளாக்கில் , இதய துடிப்பைஎகிற வைத்திருக்கிறார். அற்புதமான இன்டர் வெல் பிளாக்.
அதேபோல கிளைமாக்ஸ் காட்சி, யாரும் எதிர்பாராத வண்ணம். சரியான டிவிஸ்ட் வைத்து, படத்தை முடித்து இருக்கிறார். .
நடிகர் & நடிகைகள்
சித்து, தர்ஷிகா, ரித்விகா ஆகிய மூவரின் நடிப்பு எப்படி இருக்கிறது?
பாரி, என்ற துடிப்புள்ள காவல் துறை அதிகாரியாக சித்து சிறப்பாக நடித்திருக்கிறார். சண்டை காட்சிகளில் வெளுத்து வாங்குகிறார். அவரின் உடல் மொழி டயலாக், டெலிவரி ,மற்றும் கடமையை கண்ணாக எண்ணி அவர் போடும் திட்டம் எல்லாம் சிறப்பாக இருக்கிறது.
அடுத்து கனிமொழி என்ற கதாபாத்திரத்தில் ரித்விகா, அழகான தேவதையாக படத்தில் வருகிறார். அவர் வரும் காட்சிகள் சிறப்பாக இருக்கிறது .அவர் மீது வைத்திருக்கும் ட்விஸ்ட் எதிர்பாராதது!! படத்திற்கு அது மிகப்பெரிய பலமாக இருக்கிறது.
தர்ஷிகா சித்துவின் மனைவி உமையாள்” என்ற கதாபாத்திரத்தில் அம்சமாக பொருந்தி இருக்கிறார். அவர் வரும் காட்சிகள் சிறப்பாக இருக்கிறது. ஒரு குழந்தைக்கு அம்மாவாக, சித்துடன் சிறப்பாக நடித்திருக்கிறார்.
மற்றும் வேலா ராமமூர்த்தி ,நாடு காத்தான் என்ற கதாபாத்திரத்தில் நாட்டாமையாக வருகிறார். நிழல்கள் ரவி மருத்துவராகவும் ,
ஜெயக்குமார், ஆண்டனி என்ற காவல்துறை அதிகாரியாகவும், அருள் டி சங்கர்,
பாதிரியார் ஆகவும் , சத்தியா, சாப்ளின் பாலு, கோபால் மற்றும் பலர் சிறப்பாக நடித்துள்ளனர்.
தொழில்நுட்ப கலைஞர்கள்.
☘️ இப்படத்திற்கு ஒளிப்பதிவு: மணிகண்டன் படத்தின் வெற்றிக்கு ஒளிப்பதிவு மிகவும் பங்காற்றி இருக்கிறது இதன் படப்பிடிப்பு திருநெல்வேலி ,ராமநாதபுரம், குற்றாலம் ,முக்கூடல்,தென்காசி போன்ற பகுதிகளில் இதுவரை கேமரா வெளிச்சம் படாத இடங்களில் தேடிப் பிடித்துப் படப்பிடிப்பு செய்துள்ளார்கள்
– மணிகண்டன் : மலைப்பகுதிகளின் இயற்கைச் சூழலையும், த்ரில்லருக்குத் தேவையான இருண்ட/பதற்றமான காட்சிகளையும் பதிவு செய்வது இவரது முக்கியப் பணி. படப்பிடிப்பு வண்டிப்பெரியார், அச்சன்கோவில், தென்மலை, ஏற்காடு, பத்துகாணி, தென்காசி, முக்கூடல் உள்ளிட்ட சவாலான பகுதிகளில் படமாக்கி இருக்கிறார்.
,☘️படத்தொகுப்பு : ராஜா ஆறுமுகம்,
ஒரு கிரைம்திரில்லர் படத்திற்கு படத்தொகுப்பு எவ்வளவு முக்கியம் என்பதை இந்த படம் உணர்த்துகிறது ஒவ்வொரு காட்சியும், ராக்கெட் வேகத்தில் மின்னல் போல போகிறது .அதற்கு படத்தொகுப்பாளரின் பங்கு மிக அவசியம் என்பதை உணர்த்துகிறது.: கிரைம் த்ரில்லரில் முக்கியமானது காட்சிகளின் வேகம் மற்றும் சரியான இடத்தில் தகவலை வெளிப்படுத்துவது.அதனால் இவரது எடிட்டிங் படத்தின் சஸ்பென்ஸ் உருவாக்கத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது.
☘️சக்தி பாலாஜி, யின் இசை யில்,
பின்னணி இசை மிரட்டலாக இருக்கிறது. ஒவ்வொரு காட்சிக்கும் உயிர் கொடுத்திருக்கிறது இசை. நாட்டார் கதைகளை சொல்லும் பொழுது அதற்கு தனியாக இசையும், துப்பறியும் வேகத்துக்கு இணையாக இசையும் ,படம் முழுக்கமிரட்டுகிறது– சக்தி பாலாஜி: ஜாக்கி, உடன்பால் உள்ளிட்ட படங்களில் பணியாற்றியவர். த்ரில்லர் படத்துக்கு தேவையான பதற்றமான சூழலை உருவாக்குவது இவரது இசையின் முக்கியப் பங்கு.
☘️பாடல் வரிகள்: லாவர்தன்.எழுதியிருக்கிறார் சிறப்பாக இருக்கிறது.
இயக்கம் & கதை – பாலாஜி (S. Balaaji): D3 படத்தை இயக்கிய பாலாஜியின் இரண்டாவது படம். மலைக்கிராமத்தில் நடக்கும் மர்மத் தொடர் கொலைகளை மையமாக வைத்து கதையை உருவாக்கியுள்ளார்
இந்தப் படத்தின் பெரிய எதிர்பார்ப்பு “கொலைகளுக்குப் பின்னால் இருப்பது மனிதனா? நாட்டார் நம்பிக்கையா? அல்லது வேறு ஏதாவது மர்மமா?” என்பதுதான். படத்தின் தலைப்பான The Dark Heaven ஏன் வைக்கப்பட்டது என்பதும் இயக்குனர். கை வண்ணத்தில் மிரட்டி இருக்கிறார்.
இந்தப் படத்தின் படப்பிடிப்பு சாதாரண லொகேஷன் ஷூட் செய்யாமல் மலைப்பகுதிகளில் குறைந்தபட்ச வசதிகள்கூட இல்லாத இடங்களுக்கு 3–4 கி.மீ. நடந்தே சென்று படப்பிடிப்பை இயக்குநர் பாலாஜி சிரமப்பட்டு இருக்கிறார் அதன் பலன் படம் பார்க்கும் பொழுது நன்றாக நமக்கு தெரிகிறது.
படத்தின் வெற்றிக்காக எவ்வளவு கஷ்டப்பட்டு உழைத்திருக்கிறார் என்று புரிகிறது.
அதனால் பாஸ், இந்தப் படத்தில் கதைக்கு இணையாக “மலைப்பகுதி”யே ஒரு கதாபாத்திரம் போல செயல்படுகிறது படத்தில் ஒளிப்பதிவு + பின்னணி இசை + எடிட்டிங் ஆகிய மூன்றும் சேர்ந்து அந்த மர்மமான சூழலை உருவாக்குவது
இயக்குனரின் திரைக்கதை நடிகர்களின் பங்களிப்பு எல்லாமே படத்தின் முக்கிய பலமாக இருக்கிறது.
☘️சவுண்ட் டிசைன் – A. சதீஷ் குமார்: படத்தின் சூழல் ஒலிகள், த்ரில்லர் தருணங்களின் ஒலி தாக்கம் போன்றவற்றை வடிவமைக்கும் முக்கியப் பொறுப்பு
.☘️ஆடை வடிவமைப்பு – K.M. செந்தில் குமார்: கதாபாத்திரங்களின் தோற்றம், குறிப்பாக மலைக்கிராமம் மற்றும் போலீஸ் பின்னணிக்குப் பொருந்தும் உடைகள் ஆகியவற்றை வடிவமைத்துள்ளார்
☘️ கோதை என்டர்டெயின்மென்ட் மற்றும் எம்எஸ் ஸ்விஸ் ஃபிலிம் ஃபேக்டரி தயாரித்துள்ளனர்
Executive Producers – Manoj S. & Gopala Krishnan P.: தயாரிப்பு ஒருங்கிணைப்பில் முக்கியப் பொறுப்பு வகித்துள்ளனர்
மக்கள் தொடர்பாளர்: சக்தி சரவணன் அவர்கள். படத்தை நல்ல முறையில் மக்களிடம் கொண்டு போய் சேர்த்திருக்கிறார் அவருக்கும் வாழ்த்துக்கள்☘️
☘️இந்த படம் தமிழ் தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி, என எல்லா மொழி மக்களும் வரவேற்பார்கள். என்பது உறுதி ஓ .டி டி. தளங்களிலும்.
இப்படத்தின் வியாபாரம் வரவேற்பு குறியதாக இருக்கும். மொத்தத்தில் இந்த படம் வெற்றி பட்டியலில் இடம் பெறுகிறது வாழ்த்துக்களுடன் கிளாசிக் சினிமா🙏.
