: ஏழு கடல் ஏழு மலை– விமர்சனம்

மதிப்பீடு 4-/5

❤️இயக்குநர் ராமின் ‘ஏழு கடல் ஏழுமலை’ . இது சாதாரண காதல்/குடும்பப் படம் அல்ல; ஃபேன்டஸி, மனித உணர்வு, அன்பு, உயிரின் மதிப்பு ஆகியவற்றை இணைத்துப் பேசும் வித்தியாசமான படைப்பு

🎬 கதை என்ன?

ஒரு ரயில் பயணத்தில் சாதாரண மனிதரான சூரி, வித்தியாசமான ஒருவரான நிவின் பாலியை சந்திக்கிறார். தீபாவளி அன்று ரயிலில் இருவரும் ஒரு எலி மட்டுமே பயணிக்க, அங்கிருந்துதான் கதையின் மர்மம் விரிகிறது. நிவின் பாலி ஏற்றிருக்கும் கதாபாத்திரம் 8,822 ஆண்டுகளாக வாழ்ந்து வரும் மரணமற்ற மனிதர். ஆயிரக்கணக்கான ஆண்டுகளின் வாழ்க்கை அனுபவம் கொண்ட அவருக்கும், இன்றைய காலத்தில் வாழும் சூரிக்கும் இடையிலான சந்திப்பு, உரையாடல் மற்றும் பயணமே கதையின் முக்கிய அச்சு.

மனித வாழ்க்கையையும் மற்ற உயிரினங்களின் வாழ்க்கையையும் ஒரே பார்வையில் அணுக முயற்சிப்பதுதான் படத்தின் சுவாரஸ்யமான அம்சங்களில் ஒன்று.

அஞ்சலியின் அன்பு, நிவின் பாலியின் மனிதம், சூரியின் பயம் இந்த மூன்று அம்சங்கள் படத்தின் வெற்றிக்கு வழி வகுக்கிறது.

🎥 இயக்குனர்

இயக்குனர் ராமின், வழக்கமான படங்களிலிருந்து இது இன்னும் வித்தியாசமான முயற்சி. ‘கற்றது தமிழ்’, ‘தங்க மீன்கள்’, ‘பேரன்பு’ போன்ற படங்களில் மனிதர்களின் வாழ்க்கையை மையமாக வைத்த ராம், இந்த முறை அதே உணர்வுகளை ஃபேன்டஸி உலகத்துக்குள் எடுத்துச் சென்றிருக்கிறார்.

படத்தின் பலம் — காட்சியமைப்பு, ஒரு வழக்கமான கமர்ஷியல் படமாக இல்லாமல், ஃபேன்டஸி அம்சங்களும் காதல் கதையும் முழுமையாக ஒன்றிணைந்து உருவாக்கியிருக்கிறார்“உயிர் என்றால் என்ன? அன்பு என்றால் என்ன? காலம் மனிதனை எப்படி மாற்றுகிறது?” என்ற கேள்விகளோடு பார்க்க வேண்டிய வித்தியாசமான படைப்பு.

நிவின் பாலி – ஆழம்; சூரி – இயல்பான நகைச்சுவை; அஞ்சலி – உணர்வு; ராம் – வித்தியாசமான உலகம். பாஸ், இந்த நான்கு அம்சங்கள்தான் படத்தின் முக்கிய அடையாளம்.

குறிப்பாக, காட்டுப்பகுதியில் இடம்பெறும் காட்சிகள் அழகாகவும் ப்ரீ-இன்டர்வெல் முதல் இன்டர்வெல் வரையிலான காட்சிகள் சற்று விறுவிறுப்பாகவும் ஈர்ப்புடனும் இருக்கிறது .

❤️நிவின் பாலி

இவர் கதாபாத்திரம் படத்தின் பலம் — காட்சியமைப்பு, நிவின் பாலியின் வித்தியாசமான நடிப்பு, ஒரு எலி உயிர் வாழ, சூரியை வறுத்தெடுப்பது கிளைமாக்ஸ் காட்சியில், ரயில்வே துறை போலீஸுடன் மோதுவது , எலியின் குட்டிகளுக்காக ஓடும் ரயிலில் இருந்து குதித்து பாலுக்காக அலைவது, என்று மனிதநேயத்தின் உச்சத்தை தொட்டு இருக்கிறார். நிவின் பாலிக்கு நிச்சயம் விருதுகள் கிடைக்கும்.

❤️சூரி

சூரி தனது வழக்கமான நகைச்சுவை பாணியில் சில ஒன்-லைனர்களை பேசி கவனம் பெறுகிறார். குறிப்பாக, சூரியின் கதாபாத்திரம் நிவின் பாலியை தொடர்ந்து “ப்ரோ… ப்ரோ…” என்று அழைப்பது சுவராஸ்யமான பகுதி.
படத்தின் பிற்பகுதியில்,சூரி மனம் திருந்தி ஒரு ஏழை சிறுவனை அரவணைப்பில்
எடுத்து கொள்வது சிறப்பாக இருக்கிறது.

❤️ அஞ்சலி

அஞ்சலியின் கதாபாத்திரம் சற்று மாறுபட்டதாக உள்ளன. குறிப்பாக இது அவருக்கு வெறும் காதல் கதாநாயகி வேடமாக இல்லாமல், உணர்வுகளை வெளிப்படுத்த வேண்டிய கதாபாத்திரமாக அமைந்திருக்கிறது

உணர்ச்சிக் காட்சிகளில்: அஞ்சலி தனது வழக்கமான இயல்பான நடிப்பைத் தொடர்கிறார். அதிகப்படியான வசனத்தை விட முகபாவனை, பார்வை, அமைதியான ரியாக்ஷன் ஆகியவற்றில் கதாபாத்திரத்தின் உணர்வை வெளிப்படுத்துகிறார்.

நிவின் பாலியுடன் கெமிஸ்ட்ரி: இதுதான் கவனிக்க வேண்டிய விஷயம். அஞ்சலி சிறுசிறு எக்ஸ்பிரஷன்களிலேயே காட்சியை மாற்றி விடுகிறார்.

ராம்–அஞ்சலி கூட்டணி: ‘கற்றது தமிழ்’ முதல் ராமுடன் தொடர்ந்து பணியாற்றி வரும் அஞ்சலிக்கு, இந்தப் படம் அந்த கூட்டணியில் இன்னொரு முக்கியமான படியாக அமைந்திருக்கிறது

🎬 ‘ஏழு கடல் ஏழுமலை’ – தொழில்நுட்பக் குழு பிரிவு கலைஞர்கள்

🎵 யுவன் சங்கர் ராஜாவின் இசை

மிரட்டி இருக்கிறார். ராம்–யுவன் சங்கர் ராஜா கூட்டணியின் இன்னொரு படைப்பு.
யுவன் சங்கர் ராஜாவின் இசையும் காட்சிகளின் உணர்வை உயர்த்தகிறது அதேநேரத்தில், , யுவனின் பின்னணி இசை படத்தின் புதிய உலகத்தை உருவாக்குவதில் முக்கிய பங்கு வகிக்கிறது .

❤️ ஒளிப்பதிவாளர் N.K. ஏகாம்பரம் பங்களிப்பு குறிப்பாக கவனிக்கத்தக்கது. காட்டுப்பகுதி, ரயில் பயணம், இயற்கைக் காட்சிகள் என படத்தின் உலகத்தை உருவாக்குவதில் அவரது கேமரா முக்கியப் பங்கு வகிக்கிறது.

ரயிலுக்குள் படப்பிடிப்பு சவாலாக இருக்கும் மலை காட்சிகள் உயரத்தில் நிவின் பாலி உறங்குவது அடிக்கடி வரும் யானை ,பறவைகள் ,இப்படி எல்லா உயிரினங்களையும் அற்புதமாக படமாக்கி இருக்கிறார் ஒளிப்பதிவாளர்.

✂️ எடிட்டிங் – மதி V.S.

மதி V.S. படத்தொகுப்பைக் கவனித்திருக்கிறார். ரயில் பயணம், உரையாடல்கள், ஃபேன்டஸி அம்சங்கள் ஆகியவற்றை இணைக்கும் விதத்தில் எடிட்டிங் முக்கியமானதாக இருக்கிறது.

💄 ஒப்பனை

சந்திரகாந்த் சோனாவனே – ஆடை வடிவமைப்பு பட்டணம் ரஷீத் – ஒப்பனை இருவரின் பணியும் குறிப்பாக நிவின் பாலியின் காலத்தைக் கடந்த கதாபாத்திரத்துக்கு முக்கியமானது. படத்தின் ஃபேன்டஸி உலகத்துக்கும் கதாபாத்திரங்களின் தோற்றத்துக்கும் இவை துணை நிற்கின்றன.

🔥கலை இயக்கம் உமேஷ் யாதவ், தனுஷ்கோடி பீச் அங்கு இருக்கும் ஏசுநாதர் சிலை அங்கு இருக்கும் டீ கடை ,என ஆர்ட் டைரக்டர் அசத்தியிருக்கிறார்.
💄 ஒப்பனை பட்டணம் ரஷீத்
🥊 சண்டைப் பயிற்சி ஸ்டண்ட் சில்வா
✍️ பாடல்கள் மதன் கார்க்கி
🎚️ ரீ-ரெக்கார்டிங் மிக்சிங்
T. உதயகுமார்
🎞️ தயாரிப்பு
சுரேஷ் காமாட்சி – V House Productions

🖥️ VFX பற்றி ஒரு முக்கியமான குறிப்பு

VFX பிரிவுக்கான தனிப்பட்ட கலைஞர்கள் பாராட்டுக்கள் வருட கணக்கில் வி.எப்.எக்ஸ் பணிகள் நடைபெற்று படத்தின் வெற்றிக்கு வழி வகுத்தது என்று சொல்லும் அளவுக்கு வந்துள்ளது.

மொத்தத்தில்: இந்தப் படத்தின் தொழில்நுட்ப பலம் என்று பார்க்கும்போது ராமின் இயக்கம் + ஏகாம்பரத்தின் ஒளிப்பதிவு + யுவனின் இசை + மதி V.S. எடிட்டிங் + உமேஷ் யாதவின் கலை வடிவமைப்பு ஆகியவை சேர்ந்து படத்துக்கு தனி உலகத்தை உருவாக்கியிருக்கின்றன.

❤️மக்கள் தொடர்பாளர் A ஜான் அவர்கள்.

❤️ படத்தின் ப்ளஸ்

❤️நிவின் பாலி, சூரி, மற்றும் அஞ்சலி என அனைவரும் தங்களுடைய பங்களிப்பை சரியாக செய்துள்ளனர்.

❤️ இவர்களை தாண்டி அந்த எலியும் ஒரு கதாபாத்திரமாக மாறி நம்முடன் பயணிக்கிறது.

❤️ ஒளிப்பதிவு படத்திற்கு மிகவும் பலம். கிராஃபிக்ஸ், AI பயன்படுத்தி செய்த காட்சிகள் சிறப்பாக இருக்கிறது

❤️ பின்னணி இசையும் பாடல்களும் தான். படத்தின் ஆரம்பம் முதல் இறுதி வரை பாடல்கள் நம்மை தாலாட்டி அழைத்து செல்லும் விதம் நன்றாக இருந்தது.

❤️நடிகர்களின் பங்களிப்பு
இடைவேளை காட்சி
எலிக்காக நிவின் பாலி செய்த விஷயங்கள்
கதாபாத்திரங்கள் மூலம் அன்பை நமக்கு கடத்த இயக்குநர் ராம் செய்த முயற்சி
பாராட்டுக்குரியது

❤️இது ஒரு வித்தியாசமான கதை.படம் முழுக்க ஓடும் ரயிலில் நடக்கிறது. 32 வயது சாதா மனிதனுக்கும்,8000 ஆண்டுகள் பழமையான அமரர் ஒருவருக்கும் ,ஒரு எலிக்கும் நடக்கும் சந்திப்பில் அவர்கள் தலைவிதியே மாறுகிறது. காமெடியாக சொல்லப்பட்ட ஒரு feel குட் மூவி

❤️ரசித்த வசனங்கள்

1 பையனுக்கு வாங்கி வெச்சிருந்த பிஸ்கெட்டை எலிக்குக்கொடுக்கிறான் ,ராஸ்கல்.

❤️எலியோ ,யானையோ ,மரமோ ,புல்லோ எல்லாம் உயிர் தான்.மூத்தோரின் ஆன்மா தான்..

3 ஒரு சாதா நபர் ,மரணமற்ற மனிதர் இருவரும் சந்தித்தார்கள்

4 மாமழை போற்றுதும் மாமழை போற்றுதும்…. சொல்டா
மாமலை போற்றுதும்
ழ நல்லா சொல்லு
சார்.மதுரைக்காரனுக்கு ல அவ்ளோ தான் வரும்.

5 உனக்கு என்ன வயசு ?

32 சார்

எனக்கு 8822

6நாற்பது வயசு வரை வாழ்ந்தவங்களுக்கே மனசுக்குள்ளே என்னென்னெமோ ஓடுமில்ல?8000 வருசம் வாழ்ந்தவங்க மனசில் என்னென்ன ஓடுமோ?

போன்ற வசனங்கள் ரசிக்க வைத்தது.

மொத்தத்தில் இந்த படம் வெற்றி பட்டியலில் இடம் பிடிக்கும் வாழ்த்துக்கள் கிளாசிக் சினிமா 🔥