சுரேஷ் சங்கையா இயக்கிய ‘சத்திய சோதனை ‘ ஒரு சிறிய கதையை, மிகுந்த சுவாரஸ்யமாக, நகைச்சுவையுடன் அழகாக சொல்லி இருக்கிற திரைப்படம்.
மலையாளத் திரைப்படங்கள் குறித்து வியந்தும் , பாராட்டிக் கொண்டும் இருக்கிறோம். தமிழிலும் இப்போது அதற்கு இணையான படங்கள் வரத் துவங்கி இருக்கின்றன
.
சினிமா என்பது சுவாரஸ்யமான கதை சொல்லல், சொல்கிற விஷயத்தில் பார்வையாளனை ஒன்ற வைத்தால் அது நல்ல சினிமா. இந்த எளிய அடிப்படையில் சத்திய சோதனை ஒரு நல்ல சினிமா.
‘சத்திய சோதனை ‘காவல் துறையின் அடி மட்டத்தில் நிலவுகிற மனோபாவத்தை, சுயநலத்தை, பேராசையை, தன்னை மட்டுமே காப்பாற்றிக் கொள்ள விழைகிற அற்ப சிந்தனைகளை மிகவும் பகடியாக சித்தரித்து இருக்கிறது.
இவை எல்லாமே மனிதர்களின் இயல்புதான். ஆனால் அந்த மனிதர்கள் அதிகாரத்தில் இருக்கையில் அந்த இயல்புகள் ஏற்படுத்தும் பாதிப்புகளை சிரிக்கச் சிரிக்க சொல்லி இருக்கிறார்கள்.
திரைப்படத்தில் பங்கேற்றிருக்கும் அத்தனை நடிகர்களும் வெகு இயல்பாக பாத்திரங்களுக்குள் பொருந்தி இருக்கின்றனர். முதல் முறையாக பிரேம் ஜி எந்த வித உறுத்தலும், செயற்கைத் தனமும் இன்றி இந்தப் படத்தில் தன் பாத்திரத்தில் சிறப்பாக நடித்திருக்கிறார். ஆச்சரியம்… குபேரன், மகாதேவன் ( சோ.மாரி. முருகன்) பாட்டி ஆகிய அனைவரது பங்களிப்பும் சிறப்பாக இருக்கிறது.
இது போன்ற திரைப்படங்கள் திரையரங்கில் பார்க்கப் பட வேண்டும். கொண்டாடப் பட வேண்டும் . சுரேஷ் சங்கையாவுக்கும், குழுவினருக்கும் வாழ்த்துக்கள்.
‘ஒரு கிடாயின் கருணை மனு’ படத்தை போலவே சுரேஷ் சங்கையாவின் இந்த ப்படம் ‘சத்திய சோதனை பேசப்படும் என்பது உறுதி..
படம் துவங்கியது முதல் கடைசிவரையிலும் யாரும் செல்போனை கையில் எடுக்கவே இல்லை அதுவும் வெற்றி தான்
இயல்பான கதை.. சுவையான திரைக்கதை.. அதிலும் சுவையான வட்டார வழக்கு வசனங்கள்.. மிகைப்படுத்தாத நடிப்பு.. சிறந்த இயக்கம் என்று நகைச்சுவை ததும்ப.. சிரிப்பலையில் கட்டிப் போட்டுவிட்டார் இயக்குநர்.
முதல் படம் போலவே இந்தப் படமும் வெற்றி பெற வேண்டும். அப்போது தான் தமிழ் சினிமா தரம் உயரும
இப்படத்தில் பிரேம்ஜி அமரன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ஸ்வயம் சித்தா, ரேஸ்மா மற்றும் தமிழ்த் துறைப் பேராசிரியர் கு. ஞானசம்பந்தன் உள்ளிட்டோர் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர்.அனைவரின் நடிப்பு இயல்பாக இருக்கிறது
ஒரு காவல் நிலையத்தை மையமாக கொண்டு நடக்கும் கதையாக சத்திய சோதனை அமைந்தாலும் தொடக்கத்திலேயே பொதுவுடைமை மற்றும் தனியுடமை பற்றி பேசுகிறார் நீதிபதியாக வரும் ஞானசம்பந்தன். ரசிக்கும்படியாக அமைந்துள்ள இந்த வசனம் ஈர்த்துள்ளது.
2017ம் ஆண்டு வெளியான ஒரு கிடாயின் கருணை மனு திரைப்படம் பலரது கவனத்தையும் ஈர்த்திருந்தது. இப்படத்தில் இயக்குநராக அறிமுகமான சுரேஷ் சங்கையா, தற்போது நீண்ட இடைவேளைக்குப் பிறகு ரீ-என்ட்ரி கொடுத்துள்ளார். தனது முதல் படமான ‘ஒரு கிடாயின் கருணை மனு’ போலவே, ‘சத்திய சோதனை’ படத்தையும் வித்தியாசமான கதைக்களத்தில் இயக்கியுள்ளதற்காக
பாராட்டுகள் குவிகின்றன. இத்திரைப்படம் நமது பார்வையில்.
“சின்ன ப்ளாட்டை வச்சிட்டு என்னாமா மலையாளத்துல படம் பண்ணுறாங்க? என்று அங்கலாய்த்துக் கொண்டிருந்த வேளையில் குட் நைட் படம் வந்தது. இப்போது சுரேஷ் சங்கையாவின் சத்திய சோதனை” என்று சொல்லி பெருமை படலாம் “ஒரு கொலை, போலீஸ் ஸ்டேஷன். ஒரு அப்பாவி ஹீரோ, ஒரு பாட்டி, நாலு கொலைகாரர்கள் என சப்டிலான ஒரு ப்ளாக் காமெடி. குறிப்பாக நம்ம சுப்ரமணியபுரம் ஸ்பீக்கர் கடைக்காரரும், கூடவே வரும் இன்னொரு கான்ஸ்டபிள் கேரக்டரும் செம்ம
அதேபோல், “அந்த பாட்டி… அத்தனை கேஷுவல். கூடவே ப்ரேம்ஜிக்கு அளவெடுத்தது போல அட்டகாசமான கேரக்டர். எந்த இடத்திலும் கதை அதன் நேர்கோட்டில் இருந்து விலகாமல் செல்வது படத்தின் சிறப்பு
எந்த ஒரு காட்சியும் படத்திற்கு இடையூறு இல்லாமல் செல்வது படத்திற்கு சிறப்பு
வெட்டியான காமெடி தேவையில்லாத கிளாமர் என கமர்சியல் மசாலாக்களை தவிர்த்து ஒரு தரமான படம் கொடுத்துள்ளார் இயக்குனர் சுரேஷ் தங்கையா இந்த ஆண்டின் மிகச்சிறந்த படங்களில் இப்படமும் இருக்கும் இந்த படத்திற்கு முதலில் இயக்குனர் வைத்திருந்த பெயர் நகைச்சுவை இன்னொரு பெயர் தங்கப்ப்தக்கம் என்று குறிப்பிட்டு இருந்தார் சத்திய சோதனை நிச்சயமாக ரசிகர்களை சத்திய சோதனை செய்யாது ஒரு இயல்பான கிராமத்து போலீஸ் ஸ்டேஷனில் இருந்து வந்தது போல் படம் இருக்கிறது இயக்குனருக்கும் படக்குழுவுக்கும் கிளாசிக் சினிமாவின் வாழ்த்துக்கள்
