கேங் வார்… கோலிவுட்டுக்கு மற்றுமொரு ‘வட சென்னை’ வரவு… ’டைனோசர்ஸ்’ திரைப்பட விமர்சனம
எம்.ஆர்.மாதவன் இயக்கத்தில் உதய் கார்த்திக், ரிஷி, மாறா, சாய் ப்ரியா தேவா, மனேக்ஷா உள்ளிட்ட பல புதுமுகங்கள் நடித்திருக்கும் திரைப்படம் தன் டைனோசர்ஸ் (Die No Sirs)
ஸ்ரீநிவாஸ் சம்பந்தம் தயாரித்துள்ள இப்படத்தை ரோமியோ பிச்சர்ஸ் வெளியிடுகிறது. போபோ சசி இப்படத்துக்கு இசையமைத்துள்ள நிலையில், ஜோன்ஸ் வி ஆனந்த் ஒளிப்பதிவு செய்துள்ளார். வெளியீட்டுக்கு முன்பே கோலிவுட் வட்டாரத்தினரின் பாராட்டுகளை அள்ளி ய படம்
கதைக்கரு
வடசென்னை என்றாலே வெட்டு குத்து அடிதடி பழிக்கு பலி ரத்தத்துக்கு ரத்தம் என தமிழ் சினிமா காட்டப்பட்டு வருகிறது இதில் நாயகன் இடைவேளைக்கு பிறகு எடுக்கும்முடிவு தான் படத்தின் ஹைலைட்
‘கத்தி பிடிக்காதீங்க’ என சொல்லும் மற்றுமொரு கேங்ஸ்டர் பாணி கதை. சென்னை தமிழும் லந்துமாக அலையும் ஏரியா இளைஞர்கள் லோக்கல் ரவுடியான ‘சாலையார்’ கேங்குக்காக வேலை செய்யும் சூழலுக்கு தள்ளப்படுகிறார்கள். இவர்களில் வயதுக்குரிய சேட்டைகள், அட்டாகசங்கள் செய்வதுடன் நிறுத்திக் கொண்டு சம்பவக் காரர்களிடம் இருந்து கவனமாக தப்பி வாழ்ந்து வருகிறார் ‘டைனோசர்ஸ்’ – ‘Die No Sirs’ எனும் வாலிபர் சங்கத்தைச் சேர்ந்த நாயகன் மண்ணு என்கிற ‘ஆற்றல் மண்’ (உதய் கார்த்திக்). எப்படி அந்த கேங்ஸ்டர்களுக் குள்ளிருந்து தப்பிக்கிறார் என்பது படத்தின் பிளஸ் பாயிண்ட்
, ‘புது மாப்பிள்ளை’ நண்பனுக்காக ஜெயிலுக்கு போவது வரை நட்புக்கு இலக்கணமாய் வாழும் மண்ணுவின் அண்ணன் தனா (ரிஷி).
சாலையார் கேங் என்றோ செய்த கொலைக்காக போலியாக ‘ஏரியா பசங்க’ சரண்டராகும் சூழல் ஏற்பட, நட்புக்கு எடுத்துக்காட்டாய் வாழும் மண்ணுவின் அண்ணன் தனா, புதிதாக திருமணமான தன் நண்பன் துரைக்கு பதிலாக ஜெயிலுக்கு போக நேர்கிறது.
இந்நிலையில் போலீஸிடமே லந்து பேசி சுத்தமான கைகளுடன் ஏரியாவில் வலம் வரும் மண்ணுவையும், புதிதாக திருமணமான துரையையும் கேங் வாருக்குள் கொண்டு வர சாலையார் கோஷ்டி நினைக்கிறது. முதல் பாதி முழுவதுமே துரை என்கிற கதாபாத்திரத்தை சுற்றிய கதை நகர்கிறது அதை விறுவிறுப்பாக இருக்கிறது நாயகன் உதய் நாயகி யிடம் காதல் சொல்லும் பாணி ரசிக்க வைக்கிறது இந்த கேங்ஸ்டர் கதைக்குள் இந்த காதல் நிலவும் பஞ்சாக மிதமாக இருக்கிறதுஇதனை அடுத்து நடப்பது என்ன? ஜாலி இளைஞனாக ஏரியாவுக்குள் வலம் வரும் நாயகன் மண்ணு சந்திக்கும் பின் விளைவுகள் என்ன என்பதை விறுவிறு பாணியில், தெறிக்கும் வசனங்களுடன் கமர்ஷியல் படமாக தந்திருக்கிறார்கள
அந்த கிள்ளியூரான் நடிப்பும் அந்த சம்பவங்களும் செம பரபரப்பு
தமிழ் சினிமாவில் வட சென்னை பேக் ட்ராப்பில் வாள் பிடித்த கேங்ஸ்டர் கதைகளை பல படங்கள் பேசியிருக்கின்றன. ஆனால் இது நிச்சயம் ஒரு புது அனுபவம். வட சென்னை, மெட்ராஸ் போன்ற படங்களுக்குப் பிறகு, அத்தனை புதுமுகங்களுடன், சென்னை தமிழும் லந்தும் வசனத்துக்கு வசனம் தெறிக்க, நிச்சயம் தவற விடக்கூடாத ராவான அனுபவம்!
“என் கையிலேயே பொருள கொடுக்கப் பாக்கறீங்களா” என எந்த கேங்கிலும் சிக்காமல் அட்ராசிட்டி செய்தபடி, உஷாராக வலம் வரும் நாயகன் மண்ணுவாக நடித்திருக்கும் உதய் கார்த்திக். தொடக்கத்தில் ‘இவர் ஓகேவா’ என கொஞ்சம் சந்தேகம் வரவழைத்தாலும், சென்னைபூர்வக் குடி நபராகவே மாறி தன் கதாபாத்திரத்துக்கு நியாயம் செய்து கதையையும் தாங்கி இருக்கிறார்.
மிகப்பெரிய பலமாக இருப்பவர்
புதுமாப்பிள்ளை துரையாக மாறா. இவர் தான் தூண் . மண்ணுவின் அண்ணன் தனாவாக நடித்திருக்கும் ரிஷி, சாலையாறாக நடித்திருக்கும் மணேக்ஷா ஆகியோர் தங்கள் பாத்திரங்களில் சரியாகப் பொருந்தியிருக்கிறார்கள் அவ்வளவு வேறுபாடு நடிப்பு அவ்வளவு இயல்பாக இருக்கிறது
நாயகி வேடத்தில் சாய் ப்ரியா. ரசிகர்களை ஈர்ப்பதற்காக ஸ்கோப் இல்லை. என்றாலும் அழகாக வந்து போகிறார். மண்ணுவின் அம்மாவாக வரும் ஜானகி கதைக்கு தேவையான நடிப்பை வழங்கி இருக்கிறார். வீட்டுக்குள் வரும் ரவுடி இடம் உதார் விடும் சீன் கைதட்ட வைக்கிறது
மகன்கள் கெட்டுப் போய் விடக்கூடாது ரவுடியாக விடக்கூடாது என்று தன் கணவன் போன பின்னும் பாசத்தை கொட்டி வளர்க்கும் ஜானகி அம்மாவின் நடிப்பு சிறப்பு
ஆரம்பத்தில் வரும் அந்த கேஸ்டரும் சாலை யாரும் விறுவிறுப்பு அதன்பின் இடைவேளைக்கு முன் வரும் அந்த காட்சிகள் பரபரப்பு அந்த மர்டர் ஸ்கெட்ச் காட்சி பரபரப்பின் உச்சம்! கோலிவுட்டின் தரமான இண்டர்வெல் ப்ளாக்
கேங் வார் வெடிக்கும் முதல் பாதியை கடந்த திரைக்கதை நம்மை திணறடிக்கிறது. துக்க வீட்டில் நாயகன் செய்யும் அலப்பறைகள் நம்மை சிரிக்க வைத்து வித்தியாசமான அனுபவத்தைத் தந்தாலும், கதையின் ஓட்டத்தை பாதிக்கிறது
படத்தில் வரும் ஒவ்வொரு கதாபாத்திரமும் இயல்பாக வடசென்னை மக்களாகவே வாழ்ந்திருக்கிறார்கள்.
படத்துக்கு மிகப்பெரும் பக்க பலமாய் அமைந்து தூணாய் தாங்குவது படத்தின் வசனங்கள்! ‘ஒவ்வொரு ரவுடிக்கும் அவன் உயிர் ஆஸ்கார் அவார்டு’ , என்றும்‘ ‘மதுரைல எங்க சுனாமி வந்துச்சு, ஸ்விம்மிங்க போட்டீங்க’ என தன் துடுக்கான வசனங்கள் பலே
போபோ சசி இசையில் டாலி டாலி, மெரினா பாடல் என பாடல்கள் ஈர்க்கின்றன. பின்னணி இசையும் படத்துக்கு பலம் சேர்க்கிறது. குடிசைப் பகுதிகள், கிணற்றுக்குள் இருக்கும் ஹீத் லெட்ஜர் படம், ‘காக்கா நகர்’ ஏரியா என ஜோன்ஸ் வி ஆனந்தின் கேமரா விளையாடி இருக்கிறார்
வட சென்னையில் குடி, புகை, கஞ்சா, ரவுடியிசம் மேலோங்கி இருக்கும் ஸ்டீரியோடைப் காட்சிப்படுத்தல் இருந்தாலும், கெட்ட வார்த்தைகளை பயன்படுத்தி இருந்தால் இது மாமூல் படமாக இருந்திருக்கும்
வழக்கத்தை உடைத்து இடைவேளைக்கு பிறகு சீரியஸ்னஸ் குறைத்து வித்தியாசமான படமாக தந்திருக்கிறார் இயக்குனர் மாதவன் இவர் சுராஜ் இன் உதவியாளர் அதனால்தான் காமெடி கைவந்த கலையாக இருக்கிறது. படத்தில் விறுவிறுப்புக்கு எந்த இடத்திலும் கொஞ்சமும் குறைவில்லை இடைவேளைக்கு பிறகு ஒரு பத்து நிமிடம் காட்சியை எடிட்டர் கட் பண்ணி இருக்க வேண்டும் நாயகன் பிணத்தின் முன் அலப்பறை செய்யும் காட்சி தேவையா என்று வெளியவைக்கிறது படத்தை முடித்திருக்கும் விதம் காதலை சொன்ன விதம் நட்பை சொன்ன விதம் வன்முறை கூடாது என்று சொன்ன விதம் வடசென்னை இளைஞர்கள் ஒரு கனவோடு இருக்கிறார்கள் அவர்களுக்கு வன்முறையும் வேண்டாம் அகிம் சையும்வேண்டாம் ஒரு பொறுப்போடு நடந்து கொண்டாலே போதும் காலம் அவர்களை கை தூக்கி விடும் என்று ன்று நல்ல கருத்தோடு வெளிவந்துள்ள இப்படம் நிச்சயம் அனைவரையும் கவரும் வெற்றி பட்டியலில் இடம் பெறும் வாழ்த்துக்கள்
