ஹர்ஹாரா விமர்சனம்

சுதந்திரப் போராட்டத்திற்கு முன் வெள்ளையனுக்கு வேலை செய்து வைத்த மாதேஸ்வரன் என்கிற ஒரு வீரனின் கதை அவன் நாட்டுக்காகவும் தான் வாழ்ந்த ஊருக்காகவும் தன்னையே தியாகம் செய்த அந்த மாவீரனை அந்த ஊர் மக்கள் குலசாமியாக கொண்டாடுகிறார்கள் அப்படி என்னதான் நடந்தது வாங்க இந்த திரைவிமர்சனத்தில் பார்க்கலாம்

: தினமும் மக்கள் சேவைக்காக பயன்பாட்டு வந்த அஞ்சல் துறை 150 வருடங்களுக்கு முன். என்ன நடந்தது தெரியுமா

நவீன தகவல் தொடர்பு சாதனங்கள் வருவதற்கு முன்பு பெரிய அளவில் பயன்பட்டது கடிதங்கள்தான். இந்த கடிதங்களை கொண்டு வரும் தபால்காரர் சென்ற தலைமுறை வரை மிக முக்கியமாக பார்க்கப்பட்டார்.
ஆனால் இன்று செல்போன் சேவையால் whatsapp twitter போன்ற நவீன வசதிகள் தபால்காரர் என்றதுறையை மறக்கடித்து விட்டது

நம் வாழ்வில் தவிர்க்க முடியாத மனிதராக இருந்த தபால்காரரை பற்றிய படமாக வந்துள்ளது ஹர்காரா.

ஹர்காரா என்றால் தபால்காரர் என்று பொருள்.
இதை தமிழில் பெயர் வைத்திருக்கலாம் எத்தனை பேருக்கு புரியுமோ

சரி இந்த படத்தின் கதை என்ன

தேனி மாவட்டத்தில் மலைகிராமத்தில் உள்ள தபால் நிலையத்தில் புதிய போஸ்ட் மேனாக வேலைக்கு சேருக்கிறார் காளி. (காளி வெங்கட் )

மக்கள் இவர் மீது அன்பு வைத்திருந்தாலும் இந்த கிராமத்தில் பணி செய்ய இவருக்கு விருப்பமில்லை. தபால் நிலையத்தை மூட கலெக்டருக்கு மனு போடுகிறார்

.இந்த சூழ்நிலையில் ஊர் பெரியவர் ஒருவர் மூலம் 150 ஆண்டுகளுக்கு முன்பு இந்த மலைகிராமத்தின் முதன் முதலில் வாழ்ந்த மாதேஷ்வரன் என்ற ஹர்காராவை (தபால் காரர் ) பற்றி தெரிந்து கொள்கிறார்.
அந்த பெரியவர் இயக்குனர் மூர்த்தி

இவர் யார்? இந்த முதல் ஹர்காரா செய்த விஷயம் என்ன என்பது பற்றி படம் சொல்கிறது.
இந்த பிளாஷ்பேக் காட்சிகள் வந்த பிறகு படம் உயிரோட்டமாக இருக்கிறது புதிய பரிமாணம் படத்தில் தலை தூக்குகிறது

அதிகம் சினிமாவில் சொல்லப்படாத தபால்காரரை பற்றி சொல்லியதற்காக டைரக்டர் ராம் அருண் காஸ்ட்ரோவை பாராட்டலாம்.
அவர் இந்தப் படத்திற்காக எடுத்துக் கொண்ட ஆராய்ச்சி மலை கிராமத்தில் நடத்திய படப்பிடிப்பு எல்லாமே வியக்க வைக்கிறது

போஸ்ட் மேன் என்பவர் கடிதம் மட்டும் தருபவர் இல்லை. மக்கள் தங்கள் வீட்டின் ஒரு ஆளாக பார்க்கிறார்கள் என்பதை அழுத்தமாக பதிவு செய்துள்ளார் டைரக்டர்.

திரைக்கதை மெதுவாக சென்றாலும் ரசிக்க முடிகிறது. காட்சிகள் அனைத்தும் சினிமாவுக்காகான மிகைப்படுத்தல் இல்லாமல் எதார்த்தமாக உள்ளது.

நாயகன் காளி வெங்கட்

காளி வெங்கட் தமிழ் சினிமாவிற்கு கிடைத்த திறமையான நடிகர்

. நடிப்பில் நம் வீட்டிற்கு வரும் தபால் காரரை நினைவுப்படுத்துகிறார். டைரக்டர் ராம் அருண் காஸ்ட்ரோ 19ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த ஹர்காராவாக நடித்துளார்

.எடுத்துக்கொண்ட கதைக்கான நியாயத்தை சேர்த்திருக்கிறது பிலிப். R. சுந்தர் மற்றும் லோகேஷ் இளங்கோவனின் ஒளிப்பதிவு. கிராமத்தின் அழகும், மலையின் பிரம்மாண்டமும் கலந்து ஒரு காட்சி மேஜிக் செய்திருக்கிறார்கள். மலை கிராமத்தில் வளைந்து நெளிந்து செல்லும் அந்த அழகான பாதை அழகான ராஜகுமாரியை ஞாபகப்படுத்துகிறார். அங்கு கயிற்று கட்டில் மாரியம்மா என்ற கதாபாத்திரம் யார் இந்த சஸ்பென்ஷன் வைத்து கடைசி கட்சியில் உருக செய்து விடுகிறார் இயக்குனர்

சினிமாவுக்கான எந்த ஒரு பூச்சுகளும் இல்லாமல் ஒரு அழகியல் படமாக வந்துள்ளது ஹர்காரா.” 4 ஜி,5ஜி நுழையாத இடங்களில் கூட இந்த போஸ்ட் மேன் நுழைவான் “என்று காளி வெங்கட் சொல்லும் வசனம் இந்திய அஞ்சல் துறையின் வலிமையை காட்டுகிறது.
மாதேஸ்வரன் யார் அவரைஏன் மக்கள் வழிபடுகிறார்கள்
இந்த சஸ்பென்சுக்கும் அருமையான கதை ஒன்றை திரைக்கதையாக்கி சுதந்திர போராட்டம் அதில் உள்ளே புகுத்தி சுதந்திர போராட்ட முன் மக்கள் எவ்வளவு சிரமம் போட்டார்கள் எவ்வளவு வழி அனுப்பி வைத்தார்கள் கண்காணி என்ற பெயரில் வெள்ளைக்காரனுக்கு அடிமையாக இருந்து கொண்டு சொந்த மக்களையே கொடுமைப்படுத்தும் மனிதர்களை காணும் பொழுது தான் இந்த நாட்டின் சுதந்திரம் எவ்வளவு முக்கியம் என்பது படம் பார்க்கும் ஒவ்வொருவருக்கும் தெரிந்தது சந்திராயன் விண்ணில் சென்று வெற்றிக்கொடி நாட்டியதையும் மார் தட்டி கொள்ள லாம் சுதந்திர இந்தியாவை எல்லோரும் போற்றுவோம்

ஹர்காரா படம் பார்த்தால் “சார் போஸ்ட்” என்று தபால்காரர் அழைக்கும் குரல் நம் நினைவுகளில் வந்து கொண்டிருக்கும். இந்தியாவின் பெருமை மிகு கம்பீரமான அடையாளம் அஞ்சல் துறை. இந்த அஞ்சல் துறையின் முகமாக உள்ள அஞ்சல்காரர்களுக்கு இப்படம் சமர்ப்பணம். இன்றும் கூட அஞ்சல் துறை சேமிப்புக்கு உதவுகிறது மக்கள் இரவு நேரத்தில் கூட அஞ்சல் துறைக்கு சென்று உதவி கேட்கும் நிலை மலை கிராமத்தில் இருக்கிறது என்பதையும் இயக்குனர் அருமையாக படம் பிடித்துள்ளார்

கணேசன் என்ற கதாபாத்திரம் கிராமத்தில் படுத்து விட்டு சென்னை சென்று இங்கு மக்கள் படும் துன்பத்தைக் கண்டு அமைதியாக வாழ அந்த மலை கிராமத்துக்கு வந்து விட்டேன் என்று சொல்லும் பொழுது இன்றைய சூழ்நிலையை அற்புதமாக படம் பிடித்துள்ளார் இயக்குனர்

மாதேஸ்வரனின் காதலியாக வரும்
அந்த அழகான நடிகையின் கண்கள் கவிதை பேசுகிறது வீரம் தமிழச்சியின் உணர்வை பேசுகிறது

கங்காணியாக நடித்திருக்கும் அந்த நடிகரின் நடிப்பு சிறப்பு

மாதேஸ்வரன் ஆக நடித்திருக்கும் நாயகன் வீரத்திலும் காதலிலும் போராட்ட சந்தையிலும் ஊருக்காகவும் ஊர் மக்களுக்காகவும் வெள்ளனையை எதிர்த்து போராடி கிளைமாக்ஸ் இல் படும் துன்பத்தை அற்புதமாக வெளிப்படுத்தி படத்தின் வெற்றிக்கு உயிர் கொடுத்திருக்கிறார் வாழ்த்துக்கள்

இசை ராம் சங்கர் அருமையான இசை அருமையான பின்னணி இசை பாடல்கள் ரசிக்க வைக்கிறது

மொத்தத்தில் இருந்த ஹர்ஹரா
தமிழ் சினிமாவின் படத்தை உயர்த்திப் பிடிக்கிறது இமயம் தொட வைத்திருக்கிறது படத்தில் வரும் அந்த மலையைப் போலவே உயர்ந்து

நிற்கிறது ஒவ்வொரவ.ரும் காண வேண்டிய அற்புதமான படைப்பு