லக்கி மேன் விமர்சனம் பார்க்கலாம் வாங்க

தமிழ் திரையுலகில் பிரபல நகைச்சுவை நடிகராக இருந்து வருபவர் யோகி பாபு. பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ள யோகி பாபு, தற்போது தமிழ் திரையுலகில் தவிர்க்க முடியாத நகைச்சுவை நடிகராக வலம் வருகிறார்.
இப்படத்தில் கதையின் நாயகனாக மனதை தொடும் கதாபாத்திரத்தில் அற்புதமாக நடித்திருக்கிறார்

இந்த படத்தை இயக்குனர் பாலாஜி வேணுகோபால் இயக்க யோகிபாபு மற்றும்’. வீரா, ரேச்சல் ரெபேக்கா, அப்துல் லீ, ஆர்.எஸ். சிவாஜி, அமித் பார்கவ், சாத்விக் மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்

லக்கிமேன். படத்தை. திங்க் ஸ்டூடியோஸ் தயாரித்து ள்ளது. இப்படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார். படத்தின் கதை என்ன

படத்தின் கதை மிகவும் எதார்த்தமானது நமது பக்கத்து வீட்டில் நடக்கும் சக மனிதர்கள் வாழ்க்கையில் பார்ப்பது போல் கதைக்களம் அமைத்திருக்கிறார் இயக்குனர்.

அதிர்ஷ்டமே இல்லாதவர் யோகி பாபு சின்ன வயது முதல் இந்த இன்னல்களை அனுபவித்து வருகிறார் கிரிக்கெட் டீமில் கூட இவரை சேர்க்க மாட்டார்கள் அவ்வளவு ராசியானவர். யோகி பாபு வளர்ந்த பிறகும் இதே பிரச்சினை தொடர்கிறது வீட்டிலே வறுமை வாடகை கூட கொடுக்க முடியாத சூழ்நிலை ரியல் எஸ்டேட் புரோக்கராக வேலை செய்யும் இவர் சரியான நேரத்தில் கஸ்டமர் ஐ பிக்கப் செய்ய முடியாமல் கோட்டை விட எதற்குமே லாயக்கு இல்லை என்று மேலதிகாரி திட்டு யோகி பாபு மனைவியிடம் திட்டு நண்பர்களிடம் திட்டு வேலை செய்யும் இடத்தில் திட்டு இப்படி அதிர்ஷ்ட கட்டை இல்லாத யோகி பாபுவுக்கு எப்படி அதிர்ஷ்டம் அடித்தது என்பதை சுவையாக சொல்லியிருக்கிறார் இயக்குனர்.

சிட் பண்ட் கட்டி வரும் யோகி பாபு க்கு அதிர்ஷ்டத்தின் மூலம் ஒரு கார் பரிசாக கிடைக்கிறது
மகிழ்ச்சியடைகிறார் யோகி பாபு யோகி பாபு மட்டுமல்ல படம் பார்க்கும் நமக்கும் அப்பாடா யோகி பாபு பிரச்சனையை தீர்ந்துவிடும் என்ற எண்ணம் ஏற்படுகிறது அதுதான் திரைக்கதைக்கு கிடைத்த வெற்றி.

அந்த காரை விற்று கடனை அடைத்து விடலாம் என்கிறார்யோகிபாபு மனைவி

யோகி பாபுவோ அதிர்ஷ்டமான கார் நான் விற்க மாட்டேன் என்கிறார் சரி ஒரு மாதம் பார்க்கலாம் இந்த காரின் அதிர்ஷ்டத்தை அதற்குள் இந்த கார் நமக்கு என்ன நன்மையை வழங்க போகிறது என்று மனைவி சவால் விடுகிறார் அப்போதுதான் கதை சூடு பிடிக்கிறது

அந்த ஒரு மாதத்திற்குள் யோகி பாபு வேலை செய்யும் இடத்தில் ப்ரோமோஷன் மனைவியிடம் மகிழ்ச்சி நண்பர்களிடம் பாராட்டு இப்படி எல்லாமே நல்லபடியாக அமைகிறது அதிர்ஷ்டமே இல்லாத யோகி பாபு லக்கி மேன் ஆகிறார். ஆனால் இது சிவா என்கிற போலிஸ் அதிகாரி மூலம் யோகிபாவுக்கு தடைக்கல்லாக வந்து அமைகிறது ரோட்டிலே கார் பார்க் பண்ணி வைத்துள்ள இடத்தில் சிவா ரவுண்டுக்காக வருகிறார் அப்போது யோகி பாபுவுக்கு அவருக்கும் வாக்குவாதம் ஏற்படமன்னிப்பு கேட்க வைத்து விடுகிறார்

இதற்கு அந்த ஏரியா இன்ஸ்பெக்டர் சிவா யோகியைஎந்த மாதிரியாக பழி வாங்கினார் இருவருக்குள் என்ன நடந்தது. இதுதான் கதைக்களம்
வித்தியாசமான கதைக்களம் தமிழ் சினிமாவுக்கு இந்த கதை புதிது எந்த ஹீரோவும் ஏற்று நடிக்க தயங்கும் கதாபாத்திரம் யோகி பாபுவுக்கு கச்சிதமாக அமைந்திருக்கிறது மகனுடன் அவர் பேசும்போதும் சரி மனைவியுடன் பேசும் போதும் சரி வீட்டுக்கார ஓனரை கிண்டல் அடிக்கும் போதும் சரி கார் ஓட்ட கற்றுக் கொடுக்கும் சிவாஜியிடம் பேசும் போதும் சரி இன்ஸ்பெக்டர் சிவாவிடம் பேசும்போதும் சரி வசனங்களை உள்வாங்கி அலட்டில் இல்லாமல் பேசி நடித்திருக்கிறார் யோகி பாபு இதே போல அவருக்கு ஏற்ற கதைகளை தேர்வு செய்து நடித்தால் நிச்சயம் யோகி பாபு நாயகனாகவும் உயரம் தொடுவார்

எந்த இடத்திலும் அலட்டவில்லை அமைதியாக கவுண்டர் கொடுத்துகொணடு நடித்திருக்கிறார்

அவர் மனைவியாக வரும் ரேச்சல் நடிப்பு நன்றாக இருக்கிறது சராசரியாக குடும்பத்தை நடத்த முடியாமல் தவிக்கும் ஒரு ஏழை தாயாக விரக்தியில் விளிம்பிற்கு சென்று அல்லல்படும் நாயகியின் நடிப்பு பாராட்டத்தக்கது அதற்கு அடுத்து சிவாவாக நடித்துள்ள வீரா அவர்களின் நடிப்பு இதுவரை தமிழ் சினிமாவில் சொல்லப்படாத பாத்திரம் அவர் வரும் காட்சிகளில் அவ்வளவு விறுவிறுப்பு. நீதி நேர்மைக்காக அவர் என்கவுண்டர் செய்து விட்டு. நடந்த ஒரு தவறுக்காக மன உறுத்தலில் வாழ்ந்து வரும் அவருக்கு யோகி பாபு வின் செயல் சரியில்லை என்று பட்டவுடன் நடவடிக்கை எடுக்க அது அவருக்கு எதிராகவே திரும்புகிறது இந்த ஆடு புலி ஆட்டம் தான் கதையில் மிக விறுவிறுப்பான கட்டம்
இசையமைப்பாளர் சான்ரோல்டன் பாடல்களை இதமாக கொடுத்திருக்கிறார் மென்மையாக இதயத்தை வருடி செல்கிறது பின்னணி காதுக்கு இரைச்சல் இல்லாத இசை வித்தியாசமான குரலை தேடிப் பிடித்து பாட வைத்திருக்கிறார் வாழ்த்துக்கள் ஒளிப்பதிவு படத்தொகுப்பு எல்லாமே கச்சிதமாக இருக்கிறது. யோகி பாபு நண்பராக வரும் அப்துல் கதாபாத்திரம் மிக நன்றாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இக்கட்டில் உதவுவதற்கு சரியான நண்பர் குழந்தை சாத்விக் யோகி பாபு மகனாக அச்சு அசலாக பொருந்தி திருக்கிறார்

அவர் நடிப்பு நன்றாக இருக்கிறது இயல்பாக இருக்கிறது கேமராவுக்கு பயந்தபடி இல்லாமல் மிகவும் துணிச்சலாக நடித்து இருக்கிறார். அந்த சிறுவன் யோகி பாபு கார் ஓற்ற கற்றுக் கொடுக்கும் சிவாஜி அவர் நடிப்பு நன்றாக இருக்கிறது அவர் வரும் காட்சிகளில் சிரிப்பு

இயக்குனர் பாலாஜி வேணுகோபால் இதற்கு முன் பானி பூரி என்ற வெப்தொடரைஎடுத்து இருந்தார் அருமையாக இருந்தது மக்களால் பேசப்பட்டது தற்போது வெள்ளி திரையில் முதன்முதலாக லக்கி மேன் என்ற படத்தை இயக்கி உள்ளார் அவருக்கு லக் அடித்துள்ளது என்றே சொல்லலாம் சீரான திரைகளை கதை மக்களுக்கு நெருக்கமான திரைக்கதை மக்கள் விரும்புகின்ற கதை மக்களால் ஏற்றுக் கொள்ளப்படும் கதை இப்படி கதையை வைத்து அவர் கேரக்டரை தேர்வு செய்துள்ளது அவருக்கு கை கொடுத்துள்ளது நிச்சயம் பார்க்க வேண்டிய படம் லக்கி மேன் யோகி பாபு எதார்த்தமான நடிப்பு ரெபோக்காவின் எதார்த்தமான நடிப்பு அப்துல் எதார்த்தமான நடிப்பு சிவாவின் எதார்த்தமான நடிப்பு பாலாஜி வேணுகோபாலின் திறமையான இயக்கம் மனதை மயக்கும் இசை என படத்திற்கு பக்க பலமாக இருக்கிறது லக்கி மேன் உண்மையிலேயே அதிஷ்டக்காரன் தான்