கருமேகங்கள் கலைகின்றன திரை விமர்சனம்

(பாரதிராஜா) (யோகிபாபு) ஒரு பேருந்துப் பயணத்தில் சந்திக்கிறார்கள். சமூகத்தின் வெவ்வேறு அடுக்குகள், வெவ்வேறு தலைமுறைகளைச் சேர்ந்த இருவரும் தொலைத்துவிட்ட உறவைத் தேடி, அதை மீட்டுக்கொள்ள மேற்கொள்ளும் அந்தப் பயணத்தின் முடிவு என்னவானது என்பது கதை. அந்த ஓய்வு பெற்ற நீதிபதி ஏன் வீட்டை விட்டு வந்தார் என்பதற்கு அவரது மகன் கௌதமேனும் காரணம் பத்து வருடம் ஒரே வீட்டில் இருந்து கொண்டு பேசாமல் இருப்பது எந்த தந்தைக்கும் வழிக்கத்தானே செய்யும் அந்த வலியோடு வாழ்ந்து வருகிறார் பாரதிராஜா வெளிநாட்டில் இருக்கும் மகனும் மகளும் போனில் மட்டும் பேசுகிறார்கள் தனிமையில் தவிக்கும் பாரதிராஜாவுக்கு 13 வருடத்திற்கு முன் எழுதிய ஒரு தபால் கைக்கு கிடைக்கிறது அந்த தபால் எழுதியிருக்கும் அமிர்தவல்லி யார் அமிர்தவல்லி ஏன் தேடிப் புறப்பட்டார் என்பதற்கு விடை சொல்கிறது இந்த படம்

ராமநாதன், வீரமணி இருவரது தேடலின் பயணம் வழியே தற்காலத் தமிழ்ச் சமூகத்தில் குடும்ப உறவுகளில் மண்டிக்கிடக்கும் அகச் சிக்கல்களை, அதனால் விளைந்த இழப்புக்களை வாழ்க்கைக்கு நெருக்கமாகக் காட்டுகிறது இப்படம்.
அத்தோடு வீரமணி ஏன் மகளைத் தேடி அலைகிறார் தனக்கு பிறக்காத அந்த மகள் மீது ஏன் உரிமை கொள்கிறார் ஐந்து வருடமாக வளர்த்த அந்த பிஞ்சு குழந்தை அவரை எப்படி ஆட்கொண்டது தாலி கட்டாத மனைவி இப்படி வெவ்வேறு உறவு சிக்கல்களை சொல்கிறது இந்த படம்

தன்னைப்போல் அறத்தின் பக்கம் நிற்பவனாக மகன் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கும் ஒரு தந்தை, பணம் மற்றும் புகழுக்காக அறம் தொலைத்துவிட்ட மகன், உருவாக்கி வளர்த்த தந்தைக்கு விலை உயர்ந்த காரை பிறந்த நாள் பரிசாக வாங்கி அனுப்பிவிட்டு, அவரது 75-வது பிறந்தநாள் விழாவை ‘லைவ்’ காணொலியாகக் கண்டு, ‘வெர்ச்சுவல் கண்ணீர்’ வடிக்கும் அயலகப் பிள்ளைகள், அவருடன் பேச மறந்துவிட்ட மகனின் ‘ஈகோ’வை நிர்வகிக்கும் குடும்ப வடிகாலாக மருமகள், ‘பெத்தாதான் பிள்ளையா?’ எனப் பிறந்தது முதல் தூக்கி வளர்த்து அழகுப் பார்த்த குழந்தையின் மீது, பாசப்பித்து கொண்டு வாழும் உறவுகளற்ற ஓர் எளியவன், காதலின் பின்னால் ஒளிந்திருந்த கள்வனை அறியாமல்போய், வாழ வேண்டிய வாழ்கையை இழந்த ஓர் இளம்பெண், எத்தனை வருடம் கழித்துத் திரும்ப வந்தாலும், எந்தச் சூழ்நிலையில் கைவிட்டுவிட்டுப் போயிருந்தாலும், கைவிடப்பட்டவளின் வலியைவிட, மன்னிப்புக் கோரி நிற்பவனின் வலி பெரிதல்ல என ஏற்க மறுக்கும் மற்றொரு இளம் பெண் என, முதன்மை, துணைக் கதாபாத்திரங்களை முழுமையுடன் வார்த்திருக்கிறார் தங்கர் பச்சன்.
பொதுவாகவே தங்கர் பச்சான் படங்களில் மண் சார்ந்த கதைகளும் பெண் சார்ந்த கதைகளும் அழுத்தமாக இருக்கும் இந்த படத்தில் வழிநடத்தபவரும் ஒரு பெண்தான் அந்த பெண் தான் அமிர்தவல்லி அமிர்தவல்லி யார் இதுதான் படத்தின் கிளை கதை

குறிப்பாக, சிறுமி சாரல், அவளது அம்மா மீனா குமாரி, அத்தை, கண்மணி, ராமநாதனின் மருமகள் எனப் பெண் கதாபாத்திரங்கள் இப்படத்தில் படும் பாடுகள், ஆண்வர்க்கம் பெண்களை எப்படி நடத்திக் கொண்டிருக்கிறது என்பதற்கான தமிழ்ச் சமூகத்தின் அப்பட்டமான பிரதிநிதித்துவம். ஒவ்வொரு காட்சியிலும் தனித்துவமாக பணத்தை கொடுத்து இருக்கிறார் தங்கர் பச்சான் நல்ல படப்பை தர வேண்டும் என்பது இவரது நோக்கம் சமுதாய மேம்பட வேண்டும் வன்முறை ஈடுபட வேண்டும் ஆபாசம் தலை தூக்கக் கூடாது இரட்டையத்த காமெடியை கூடவே கூடாது என்பதெல்லாம் இவரது கொள்கை ஆனால் சினிமா இன்றைக்கு ஜெயிலர் பக்கமும் விக்ரம் பக்கமும் போய்க்கொண்டிருக்கிறது

தனது சிறுகதை என்றபோதும், அதைத்திரைக்குத் தழுவும்போது சுற்றிவளைக்காமல் விரல் பிடித்துக் கூட்டிக்கொண்டுபோய் நேரடியாகக் கதைச்சொல்லியிருக்கும் தங்கர் பச்சானின் திரைக்கதை வடிவம் இறுதிவரை இதம்.

பிரெஞ்சு புதிய அலை சினிமாவின் முன்னோடித் திரைப்பட மேதையான ஜான் லூக் கோதார்த்துக்குப் படத்தை அர்ப்பணித்திருக்கிறார் தங்கர் பச்சான். உறவுநிலைகள் சார்ந்து, மனித மனத்தின் ஊடாட்டத்தை தனது தொடக்கக் காலப் படங்களில் உலகம் வியந்த படத்தொகுப்பு உத்திகள் மூலம் தந்தவர் கோதார்த். அதேபோல், காட்சிகளின் நீளம், தொடர்ச்சி ஆகியவற்றில் பிரெஞ்சு புதிய அலை திரைப்படங்களை நினைவூட்டும் ‘செவ்வியல்’ தன்மையை இந்தப் படத்துக்குத் தனது படத்தொகுப்பு மூலம் கொடுத்து அழகு பார்த்திருக்கிறார் எடிட்டர் பி.லெனின்.
படத்தொகுப்பு இன்னும் கொஞ்சம் குறைவாக இருந்திருக்கலாம் என்று என்ன தோன்றுகிறது ஆரம்பம் முதலே அழுதுகொடி முகத்தோடு சோகத்தோடு இருக்கும் பாரதிராஜா படத்தின் ஆரம்பத்திலிருந்து மகளை தேடி ஓடிக் கொண்டிருக்கும் யோகி பாபு கலகலப்பான பகுதிகள் இந்த படத்தில் கற்று குறைவு என்பது சொல்லியே ஆக வேண்டும் தன் மகளோடு செவ்வந்தி பூவை என்று பாடும் அந்த பாடல் காட்சி படத்திற்கு இடம்

கௌதம் மேனன் படத்தின் மேலும் ஒரு பக்க பலம் அவர் கண்களும் பேசுகிறது அவர் முகபாவம் அப்பாவோடு பேச துடிக்கும் போதெல்லாம் ஏதோ ஒன்று தடையாக வர மனுஷன் விலகி விலகி போகிறார் தன் மனைவியிடம் மனக்குமுறலை கொட்டி தீர்க்கிறார் தன் அப்பாவிடம் பேசுவதற்கு எவ்வளவு நேரம் ஆகிவிடும் ஒரே வீட்டில்

அருவி படத்தில் நடித்த அதிதி இந்த படத்தில் அற்புதமான நடிப்பை வழங்கியிருக்கிறார் காலில் விழும் அந்த பெரியவரை உதாசீன படித்தி கண்ணியமான நடிப்பு கருணை என்பது கண்ணில் இருந்தாலும் நெஞ்சில் ஈவும் இரக்கமில்லாமல் நடந்து கொள்ளும் அந்த மகளின் வலி அற்புதமாக கடத்தி இருக்கிறார். இனி நாம் நால்வர் என்று சொல்லிக் கொண்டு விசிட்டிங் கார்டை கொடுக்கும் போது அதை வாங்கிக் கொள்கிறார் அந்த இடத்தில் படத்தில் கைதட்டல்

யோகி பாபுவின் தாலி கட்டாத மனைவியும் அவரது முன்னாள் கணவனும் நடிப்பை அற்புதமாக வாரி வழங்கி இருக்கிறார்கள் எல்லா காட்சிகளிலும் இவர்கள் வரும் காட்சிகள் சிறப்பாக இருக்கிறது பாரதிராஜாவிடம் யோகி பாபு தன் பிளாஸ்பேக் காட்சியை கூறும்போது பாரதிராஜா அவர்களின் கண்கள் மட்டும் கண்ணீர் வரவில்லை படம் பார்க்கும் இதயத்தில் அனைவருமே கண்ணீரைத் துடைத்து கொள்கிறார்கள் இப்படி ஒரு மனிதன் இந்த உலகத்தில் இருப்பானா என்று அப்படி ஒரு அற்புதமான கதாபாத்திரம் யோகி பாபு. மனுஷன் இந்த கதாபாத்திரத்தில் வாழ்ந்து இருக்கிறார்

இயக்குநர் இமயம் பாரதிராஜா நடிப்பை நாம் பாராட்டி சொல்ல வேண்டியது இல்லை மனுஷன் நடிப்பேன் என்று இந்த வயதிலும் இப்படி நடித்திருக்கிறார் அருமையான நடிப்பு அந்த ஏக்கம் தவறு செய்து விட்டோமோ என்ற குற்ற உணர்வு நீதிபதியாக இருந்தும் கூட நெஞ்சை நிமித்தி நடக்க முடியாத அந்த பழைய கால நினைவுகள் இப்படி ஒரு கதாபாத்திரமாக வாழ்ந்திருக்கிறார் நிச்சயம் அவருக்கு இந்த படத்தை தேசிய விருது கிடைக்கும்

பாடலாசிரியர்கள் இந்த படத்தில் சிறப்பான அம்சத்தை புரிந்து இருக்கிறார்கள் சபலம் ஏற்பட்டால் சகலமும் போய்விடும் என்ற கவிஞர் எழுதி இருக்கிறார் வைரமுத்து பாடல் அருமையாக இருக்கிறது இசை நன்றாக இருக்கிறது ஒளிப்பதிவு கண்களுக்கு குழுமையாக இருக்கிறது மொத்தத்தில் இந்த கருமேகங்கள் கலைகின்றன வெளிச்சமாக தெரிகிறது படத்திற்கு மிகப்பெரிய வெற்றியைத் தேடித் தரும் வசனங்களும் காட்சிகளின் உயிரோட்டமும் கவிதைத்தனமான காட்சி அமைப்பும் படத்தை ரசிக்க வைக்கிறது நிச்சயம் பாராட்டலாம் இயக்குனர் ஒளி ஓவியர் தங்கர்பச்சான் அவர்களை தமிழ் சினிமாவில் கமர்சியல் படங்கள் வரலாம் போகலாம் ஆனால் இது போன்ற குறிஞ்சி பூ போன்ற படங்கள் எப்போதாவது தான் வரும் அதை தமிழ் சினிமா மட்டுமல்ல தமிழ் ரசிகர்களும் கொண்டாட வேண்டும் என்பதே நமது ஆசை