விஜய் தேவரகொண்டா அசத்தினாரா? அசந்து போணாரா?
.பி எஸ்என்.எல். அலுவலகத்தில் வேலை செய்பவர் விப்லவ்(விஜய் தேவரகொண்டா). மணிரத்னம் படத்தில் வருவது போன்று வாழ வேண்டும் என காஷ்மீருக்கு டிரான்ஸ்ஃபர் கேட்கிறார். மலைப் பிரதேசம், பனி படர்ந்த இடங்கள், ஏ.ஆர். ரஹ்மான் இசை, ரொமான்ஸ் என்று வாழ ஆசைப்படுகிறார் விப்லவ். ஆனால் அங்கு சென்ற பிறகு தான் சினிமா வேறு நிஜம் வேறு என்பது அவருக்கு புரிகிறது. காஷ்மீர் மாநிலத்தில் நுழையும் போதே துப்பாக்கி சூடு வெடிகுண்டு வெடித்தல் என பயத்தை வரவழைக்கிறது விஜய் தேவரகொண்டாவுக்கு நமக்கும் கூட அடடே இது என்ன தீவிரவாதிகள் பற்றிய கதையா விஜய் தேவரகொண்டாவை தீவிரவாதிகள் கடத்தி விடுவார்களா அங்கிருந்து ஒரு தப்பிப்பாரா இல்லையா என்பதை சொல்லப் போகிறார்களோ என்ற அச்சமும் ஏற்படுகிறது ஆனால் போக போக தெரிகிறது இது ஒரு மென்மையான மனதை வருடும் அழகான இனிமையான காதல் கதை என்று சரி வாங்க மீதி பார்க்கலாம்
ஒரு நாள் ஆராத்யாவை(சமந்தா) பார்த்ததும் விப்லவுக்கு காதல் ஏற்படுகிறது. அதன் பிறகு என்ன நடக்கும் என்பதை நீங்கள் பல படங்களில் பார்த்திருப்பீர்கள். ஆராத்யா யாராக இருந்தாலும் கவலை இல்லை என்று அவரை பின்தொடர்ந்து காதலிக்கிறார். அதை பார்த்து விப்லவ் மீது ஆராத்யாவுக்கு காதல் வந்துவிடுகிறது. அதற்காக மனுஷன் அங்குள்ள சண்டை போடுகிறார் ஒவ்வொரு இடமாக சம்பந்தமாக காப்பாத்திட்டு வராரு இதெல்லாம் படத்துல புதுமையா இருக்கு
சமந்தாவின் தம்பி காணாமல் போய்விட்டார் என்று சமந்தா கதை விட அந்த இல்லாத தம்பியை தேடி விஜய் தேவர் கொண்டார் அலைவது நகைச்சுவை அடுத்து காஷ்மீரில் ஹோட்டலில் மூடி கிடக்க ஒவ்வொரு வீடாக சென்று விஜய் தேவர் கொண்ட சாப்பாடு கேட்க ஒவ்வொருவரும் ஒரு ஆப்பிளை தூக்கி போடுவது செம காமெடி அதே நேரம் ரோகிணி ஃபோன் செய்து ஆப்பிள்இங்கே 250 ரூபாய் விலை அங்கே எப்படி என்று கேட்க செம காமெடி தான் போங்க அப்புறம் என்ன நடந்தது வாங்க பார்க்கலாம்
இடை வேளை சீக்வென்ஷனில் கடவுள் நம்பிக்கை இல்லாத லெனின் சத்யமின்(சச்சின் கெகேத்கர்) மகன் விப்லவ். கடவுள் பக்தி கொண்ட முக்கியமாக லெனினின் பரம எதிரியான ஸ்ரீவாஸ் ராவின்(முரள் சர்மா) மகள் ஆராத்யா. ஒரு சிக்கலை கொண்டு வந்து முடிச்சு போடுகிறார் இயக்குனர்
தங்கள் காதலால் எல்லாவற்றையும் சமாளித்துவிடலாம் என விப்லவும், ஆராத்யாவும் நினைக்கிறார்கள். ஆனால் காதல் மட்டும் போதுமா?. யார் உதவியும் இல்லாமல் விப்லவும், ஆராத்யாவும் தங்களுக்கு இடையேயான வேறுபாடுகளை தாண்டி உறவை காப்பார்களா? என்று கதை போகிறது இடைவேளை வரை சமந்தாவும் விஜய் தேவர் கொண்டாவும் சைவமாக ஒருவரை ஒருவர் தொடாமல் நெருங்காமல் நடித்திருக்கிறார்கள் ஆனால் விஜய் தேவர் கொண்டாவின் மனைவியாக சம்பந்தமாக மாறிய பிறகு அந்த முதலிரவு காட்சிகள் இருந்து தொடங்குகிறது அந்த பாடல் முழுவதும் அவ்வளவு அசைவம் சமந்தாவின் கழுத்தில் முகம் புதைப்பது இடுப்பை கட்டி அணைப்பது இருவரும் கட்டிலில் படுத்து உறங்குவது முத்தமழை பொழிவது என அரச கணவன் மனைவியாக மாறி ரசிகர்களை ரொமான்டிக் மூடிக் கொண்டு வந்துள்ளார் செம கிளுகிளுப்பான காட்சிகள்
அப்படியே ஜாலியாக ஒரு படம் பார்க்க ஆசைப்படுபவர்களுக்கு ஏற்றது குஷி. . அடுத்து என்ன நடக்கும் என்பதை எளிதில் கணிக்க முடிகிறது. ஆனால் தங்கள் திருமண வாழ்க்கைக்கு என்னவாகிறது என்பதை நம்மை கவலைப்பட வைத்திருக்கிறார்கள் விஜய் தேவரகொண்டாவும், சமந்தாவும்.
இருவரும் பிரிய கூடாது சண்டை போடக்கூடாது சேர்ந்து இருக்க வேண்டும் என்று படம் பார்ப்பவர்களை நினைக்க வைப்பது திரைக்கதைக்கு வெற்றி. சமந்தாவின் கண்ணில் கண்ணீர் வரும்போது எல்லாம் ரசிகர்களும் உச் கொட்டுகிறார்கள்
விப்லவாகவே மாறியிருக்கிறார் விஜய் தேவரகொண்டா. எப்பொழுதும் சந்தோஷமாக இருக்க விரும்பும் ஆராத்யாவாக வாழ்ந்திருக்கிறார் சமந்தா. காதல் காட்சிகளாகட்டும், சண்டை காட்சிகளாகட்டும் சிறப்பாக நடித்திருக்கிறார் விஜய் தேவரகொண்டா.
விஜய் தேவர் கொண்ட மது அருந்திக் கொண்டிருக்கும் போது அந்த வேலை செய்யும் பெண் அவரை பார்த்து பயந்து ஓட அய்யய்யோ நான் அப்படிப்பட்டவன் அல்ல நான் பெண்கள் மீது மரியாதை வைத்திருப்பவன் என்று விஜய் தேவர் கொண்ட அலறுவது செம காமெடி
இயக்குநர் சிவா நிர்வாணா. சம்பவம் பெரிய விஷயமே இல்லை என்று நினைக்கிறார் விப்லவ். அது பற்றி ஆராத்யா எப்படி ஃபீல் பண்ணுகிறார் என்பதை காட்டவே இல்லை. எல்லாவற்றுக்கும் சேர்த்து கிளைமாக்ஸ் காட்சி திருப்திகரமாக இருக்கிறது.
மைனஸ் பாயிண்டுகள் இருந்தாலும் நம்மை கவரும் படமாக இருக்கிறது குஷி. எதுவாக இருந்தாலும் காதல் போதும் என்கிற மெசேஜ் கொடுத்திருக்கிறார்கள்.
அந்த மெட்ரோ ரயில் நடக்கும் சண்டை காட்சிகள் காஷ்மீரில் நடக்கும் சண்டை காட்சிகள் படத்திற்கு பலம். இவர்கள் காதல் காட்சி மிகவும் ரசிக்க வைக்கிறது
அடுத்து படத்தில் ஒரு நிகழ்ச்சியான சம்பவம் என்றால் ரோகிணியும் மலையாள நடிகர் ஜெயராமன் ஆலப்பியில் தன் மகளுக்கு தங்கள் மகளுக்கு இரண்டாம் ஆண்டு பிறந்தநாள் கொண்டாடுகிறார்கள் அங்கு செல்லும் தேவர் கொண்டாவும் சமந்தாவும் அதிர்ச்சி கொள்வதுஅது ஏன் என்ன நடந்தது அவர்கள் இருவரின் வாழ்க்கையை இந்த சம்பவம் திருப்பி போட்டதாஇதுதான் படத்தின் சரியான கிளைமாக்ஸ்
படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் சமந்தாவுக்காக விஜய் தேவர் கொண்ட கோமம் நடத்த ஒப்புக் கொள்வதும் மகனுக்காக விஜய் தேவர் கொண்டாவின் தந்தை ஹோமத்தில் கலந்து கொள்ள ஒப்புக் கொள்வதும் சரியான தீர்ப்பு அந்த ஹோமம் நின்று போய்விட சாமி இருக்கிறாரா இல்லையா என்பதற்கு பதில் சொல்லாமல் முடித்திருக்கிறார் இயக்குனர் அன்பே சிவம் அன்பே காதல் என்று புரிய வைக்க அற்புதமான காட்சி சுகமான முடிவு பிரமானந்தம் ஒரே ஒரு காட்சியில் வந்தாலும் கடைசியில் கல கலக்க வைத்து விடுகிறார் யார் அந்த குஷி என்ற எதிர்பார்ப்போடு படத்தை முடித்து இருப்பது ரசிகர்களுக்கும் குஷி
