மிஸ் ஷெட்டி மிஸ்டர் பொலி ஷெட்டி படத்தின் விமர்சனம்

அனுஷ்கா வெளிநாட்டில் இருக்கும் நட்சத்திர ஓட்டலில் சமையல் கலைஞராக இருக்கிறார். இவரது தாய் ஜெயசுதா, அனுஷ்காவிற்கு திருமணம் செய்து வைக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறார். ஆனால், அனுஷ்கா திருமணத்தின் மீது விருப்பம் இல்லாமல் இருக்கிறார்.
அப்போது எதிர்பாராதமாக ஜெயசுதா இரந்து விடுகிறார் அனுஷ்கா இனி என்ன செய்யப் போகிறார் என்று எதிர்பார்ப்போடு படம் தொடங்குகிறது. அதற்கு முன்னே ஜெயசுதாவும் அனுஷ்காவும, வெளிநாட்டில் இருந்து சென்னைக்கு வருகிறார்கள். வந்த இடத்தில் தாய் ஜெயசுதா இறந்து விடுகிறார். ஆதரவற்ற நிலையில் இருக்கும் அனுஷ்கா, திருமணம் செய்துகொள்ளாமல் தாயாக வேண்டும் என்று ஆசைப்படுகிறார். இதற்காக விந்து டோனர் தர ஒருவரை தேடுகிறார். இந்நிலையில், நாயகன் நவீன் பொலிஷெட்டியை சந்திக்கும் அனுஷ்கா, அவரை ஏமாற்றி விந்து டோனர் வாங்க முயற்சி செய்கிறார். இறுதியில் அனுஷ்காவின் ஆசை நிறைவேறியதா? இல்லையா? என்பதே படத்தின் மீதிக்கதை.

அம்மாவை இழந்த பிறகு அம்மாவாக தனக்கு ஒரு துணை வேண்டும் என்று அனுஷ்கா நினைக்கிறார் அது தவறா சரியா படம் பார்ப்பவர்களுக்கு புரியும்

படத்தில் நாயகியாக நடித்திருக்கும் அனுஷ்கா, அழகாக நடித்து இருக்கிறார். தாய் இறந்த பின் சோகம், நவீன் பொலிஷெட்டியை பற்றி தெரிந்து கொள்ளும் முயற்சியில் யதார்த்தமாக நடித்து பளிச்சிடுகிறார்.
அவர் வரும் காட்சிகள் அவ்வளவு நேர்த்தியாக இருக்கிறது இயல்பாக இருக்கிறது நடிப்பு என்று சொல்ல முடியாத அளவுக்கு எதார்த்தமாக இருக்கிறது அனுஷ்கா நடிப்பில் கொடி கட்டி பறக்கிறார்

நாயகனாக நடித்திருக்கும் நவீன் பொலிஷெட்டி, துறுதுறு நடிப்பால் ரசிகர்களை கவனிக்க வைத்து இருக்கிறார். அனுஷ்காவை காதலிப்பது, உண்மை தெரிந்தவுடன் கோபப்படுவது, வருந்துவது என கலகலப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். பல இடங்களில் காமெடியால் கலக்கி இருக்கிறார்.

அவர் வரும் காட்சிகளில் அவர் மீது ரசிகர்களை ஈர்க்க வைக்கிறார் அவரை எந்த இடத்திலும் படம் பார்ப்பவர்கள் மிஸ் பண்ண முடியாது அந்த அளவுக்கு ஸ்டாண்ட் அப் காமெடியனாக வெளுத்து வாங்கி இருக்கிறார் நவீன்

காமெடி கலந்து படத்தை இயக்கி இருக்கிறார் இயக்குனர் மகேஷ் பாபு. முதல் பாதி மெதுவாகவும், இரண்டாம் பாதி இளைஞர்கள் ரசிக்கும் படி கலகலப்பாகவும் திரைக்கதையை நகர்த்தி இருக்கிறார்.

ஒரு தரமான படம் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு இந்த இயக்குனர் தான் சாட்சி அனுஷ்கா வரும் காட்சிகளிலும் நாயகன் வரும் காட்சிகளும் நாசர் வரும் காட்சிகளும் அவ்வளோ அற்புதமாக இயக்கியிருக்கிறார்

ரதன் இசையில் ஒரு சில பாடல்களை ரசிக்கலாம். பின்னணி இசை ஓகே

நீரவ் ஷா ஒளிப்பதிவு கண்களுக்கு விருந்து படைத்து இருக்கிறார்
இந்த படத்தின் வெற்றிக்கு மிகவும் உறுதுணையாக இருந்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் நீரவ்ஷா வெளிநாட்டு காட்சிகள் ஆகட்டும் சென்னையில் நடக்கும் காட்சிகள் மட்டும் அவ்வளவு குழுமையாக இருக்கிறது அற்புதமான ஒளிப்பதிவு

மிஸ் ஷெட்டி மிஸ்டர் பொலி ஷெட்டி – கலகலப்பு

படத்தை எந்த விதத்திலும் போர் அடிக்காமல் கொண்டு சென்று இருக்கிறார் நாயகன் ஆஸ்பத்திரிக்கு வந்து விந்து தானம் செய்வதற்கு முயலும் போது அங்கு ஒரு பெரிய பாட்டில் இருக்க அதை அவர் எடுக்க அங்கு இருக்கும் நிர்வாகி இது இல்ல சின்ன பாட்டில் என்று சொல்லும்போது செம கலகலப்பு அதேபோல டொனார் செய்யும் போது அனுஷ்காவை நினைக்காமல் நாம் செய்வேன் என்று நாயகன் சொல்லும் பொழுது செம காமெடி இடைவேளைக்கு பிறகு ஒவ்வொரு காட்சியிலும் காமெடியும் காம நெடியும் கொடிகட்டி பறக்கிறது ஆனால் எந்த விதத்திலும் குடும்பத்தோடு படம் பார்க்க வரும் ரசிகர்களை டிஸ்டர்ப் பண்ணவில்லை எனவே இந்த படம் எல்லோரும் ரசிக்க வைக்கும் எல்லோரும் சிந்திக்க வைக்கும் எல்லோரையும் பாராட்ட வைக்கும் அனுஷ்காவின் நடிப்பு நாயகன் நடிப்பு துளசியின் நடிப்பு எல்லாமே ரசிக்க வைக்கிறது