ஜவான் திரைவிமர்சனம்

அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் நடிப்பில் வெளிவந்துள்ள படம் ஜவான்.

பிரம்மாண்ட பொருட்செலவில் எடுக்கப்பட்டுள்ள இப்படத்தில் நயன்தாரா, விஜய் சேதுபதி, தீபிகா படுகோன், பிரியாமணி என பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.

இயக்குனர் அட்லீ, முதல் முறையாக ஷாருக்கானை வைத்து எப்படி இயக்கியுள்ளார், அதுவும் ஹிந்தியில் தமிழ் இயக்குனர் அட்லியின் கை வண்ணத்தில் இப்படம் எப்படி எதிர்பார்ப்பை ஜவான் பூர்த்தி செய்ததா இல்லையா நாட்டு நடப்பை பேசியது அட்லீ சொல்ல வந்தது என்ன வாங்க பார்க்கலாம்

கதைக்களம் என்ன?
முதல் காட்சிலேயே சாருக் கான் மெட்ரோ ரயில் கடத்தி 300க்கும் மேற்பட்ட பயணிகளை பயன வைக்கிறார்
அது ஏன் அரசாங்கத்திடம் 40 ஆயிரம் கோடி உடனடியாக வேண்டும் என டிமாண்ட் வைக்கிறார் அது ஏன் ஷாருக்கான் இடம் பேச்சுவார்த்தை நடத்த நயன்தாரா வருகிறார் சாருக் கான் கேட்ட பணத்தை நயன்தாரா விஜய் சேதுபதியிடம் இருந்து வாங்கி சாருக் கான் சொல்லும் அக்கவுண்டில் போட்டு அது ஏழரை லட்சம் விவசாயிகளின் கடனை அடைக்கிறார் இந்த முதல் காட்சியிலேயே ரசிகர்களை சீட்டு நுனியில் நிமிர்ந்து உட்கார வைக்கிறார் அட்லி சாருக் கான் அடுத்த காட்சியில்

பெண் கைதிகளின் ஜெயிலராக இருக்கும் ஷாருக்கான் [ஆசாத்] தன்னுடைய சிறைச்சாலையில் இருக்கும் 6 பெண்களை வைத்து மக்களுக்கு எதிராக நடக்கும் தீமைகளை ஒலிக்கும் விதமாக அரசாங்கத்தை எதிர்த்து போராடுகிறார்.

அந்த ஜெயில்ல இருக்கும் பெண்களுடன் முதல் ஓப்பனிங் சாங் தூள் கிளப்ப ஆட்டம் போடுகிறார்

இதில் தன்னுடைய ஆசாத் என்ற பெயரை மறைத்து ’விக்ரம் ரத்தோர்’ என்ற அடையாளத்துடன் அரசாங்கத்தை எதிர்க்கிறார். ஷாருக்கான் மற்றும் இந்த 6 பெண்களும் இப்படி மாறுவதற்கு காரணமாக இருப்பவர் வில்லன் விஜய் சேதுபதி [காளி
அடுத்து சுகாதாரத்துறை அமைச்சர் கூறப்பட்டு கவர்மெண்ட் மருத்துவமனையில் படுக்க வைத்து சிகிச்சை நடத்தப்படுகிறது யோகி பாபு அமைச்சரின் உதவியாளராக வருகிறார் அரசாங்கத்தில் சிகிச்சை நடந்தால் சுகாதாரத்துறை அமைச்சர் பிழைக்க மாட்டார் என்று தனியார் துறையில் உள்ள ஆஸ்பத்திரிக்கு கொண்டு போக வேண்டுகிறார் அதற்கு சாருக் கான் டிமாண்ட் வைக்கிறார் இந்தியாவில் உள்ள அத்தனை ஆஸ்பத்திரிகளுக்கும் 5 மணி நேரத்தில் ஆக்சிஜன் சிலிண்டர் சுகாதாரம் மற்றும் ஏசி எல்லாம் தரப்பட வேண்டும் என்று அதுவும் நயன்தாராவால் நிறைவேற்றப்படுகிறது
இதன் பின்னணியில் விஜய் சேதுபதி கடுப்பாகி றார்

வில்லன் விஜய் சேதுபதிக்கும் ஹீரோ ஷாருக்கானுக்கும் இடையே உள்ள பகை என்ன? மக்களுக்காக போராடிய ஷாருக்கான் மற்றும் 6 பெண்களும் அதில் வெற்றி பெற்றார்களா இல்லையா? என்பதே படத்தின் மீதி கதை..

பாலிவுட் கிங் கான் ஷாருக்கானின் நடிப்பு படத்தை ஒட்டுமொத்தமாக தாங்கி நிற்கிறது. குறிப்பாக ஆக்ஷன் காட்சிகளில் பின்னி பெடலெடுத்து விட்டார். மேலும் எமோஷனல் காட்சிகளில் அருமையாக நடித்துள்ளார்.
அப்பாவாக வரும் ஷாருக் கான் நடிப்பு அருமை யதார்த்தம் எல்லாம் மறந்த நிலையில் எதுவும் தெரியாதபோல் நின்று கொண்டு எதிரிகளை துவசம் செய்யும் அந்த நடிப்பு அருமை

அவருக்கு எந்த வகையிலும் குறை வைக்காத அளவுக்கு வில்லத்தனத்தில் பட்டையை கிளப்பியுள்ளார் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி. நயன்தாராவின் பங்கு படத்திற்கு மிகப்பெரிய பலம். ஹீரோயின் என்றால் ரொமான்ஸ் மற்றும் பாடல்கள் காட்சிகளில் மட்டுமே கமர்ஷியல் திரைப்படங்களில் பயன்படுத்தப் படுவார்கள் என் பாதை உடைத்து இந்த படத்தில் ஒரு குழந்தைக்கு அம்மாவாக
காவல்துறை அதிகாரியாக நயன்தாரா நல்ல நடிப்பை வழங்கியிருக்கிறார்

ஷாருக்கானுக்கு நிகரான ஆக்ஷன் காட்சிகளில் நடித்து அசத்தியுள்ளார் நயன்தாரா.
நிச்சயம் இந்தி பட உலகில் நயன்தாரா ஒரு ரவுண்டு வருவார்

தீபிகா படுகோன் கேமியோ என்பது எதிர்பார்த்தது தான், ஆனால் சர்ப்ரைஸ் கொடுக்கும் விதமாக என்ட்ரி கொடுத்த சஞ்சய் தத் கேமியோ தீபிகாவை மிஞ்சிவிட்டது.
தீபிகா படுகோனே வரும் காட்சிகள் அசத்தலாக இருக்கிறது ரொமான்ஸ் ஆக இருக்கட்டும் ஜெயிலுக்குள் மகனை வளர்ப்பதாக இருக்கட்டும் அந்த பாசம் உள்ள தாயாக மக்கள் மனதில் ஜம்மென்று உட்கார்ந்து கொள்கிறார்

பிரியாமணி,
ஆக்சன் காட்சியில் அஸ்திகிரர் ஷாருக்கானுக்கு துணை நிற்கிறார்

சன்யா மல்ஹோத்ரா, லெகர் கான் மற்றும் ஷாருக்கான் குரூப்பில் இருந்த மற்ற பெண்களின் நடிப்பும் பக்கா. எல்லோரும் சுறுசுறுப்பாக விறுவிறுப்பாக சேசிங் காட்சிகளில் அசத்தியிருக்கிறார்கள்

படத்தில் எதிர்பார்த்த கதாபாத்திரங்களில் யோகி பாபுவும் ஒருவர். ஆனால், யோகிபாபுவிற்கு சுத்தமாக ஸ்கோப் இல்லை. எதோ பயன்படுத்த வேண்டும் என்பதற்காக பயன்படுத்தியது போல் இருந்தது.

இயக்குனர் அட்லீ மீண்டும் தன்னுடைய வழக்கமான ரிவெஞ்ச் திரைக்கதையை தான் இப்படத்திலும் பயன்படுத்தியுள்ளார். ஆனால், இதில் சற்று சுவாரஸ்யத்தை கூட்டி கைதட்டல்களை அள்ளியுள்ளார். மாஸ், சென்டிமென்ட், ஆக்ஷன் என அனைத்து விஷயங்களையும் அட்லீக்கு உரித்தான பாணியில் தான் படம் இருக்கிறது. முதல் பாதி திரைக்கதை செம மாஸ்.

திரைக்கதைக்காக நிறைய மனக்கட்டு இருக்கிறார் நிறைய ஆய்வு செய்துள்ளார் இந்தியாவில் இருக்கும் பிரச்சனைகளை அலசி ஆராய ஒரு டீம் வைத்து அதை கவனமாக கையாண்டுள்ளார் விஜய் சேதுபதியின் பித்தலாட்டம் ராணுவத்தில் இருக்கும் அதிகாரிகளுக்கு எந்த அளவுக்கு போர் செய்யும் பொழுது மைனஸ் ஆக இருக்கிறது என்பதை நினைக்கும் போது பகீர் என்று இருக்கிறது

இரண்டாம் பாதி சற்று விறுவிறுப்பாக இருக்கிறது
டெக்கனிகள் விஷயங்களில் பட்டையை கிளப்பியுள்ளார் என்று தான் சொல்ல வேண்டும். குறிப்பாக ஆக்ஷன் காட்சிகளை படமாக்கிய விதம் அருமையாக இருந்தது. அதற்கு ஸ்டண்ட் மாஸ்டர் அனல் அரசு, ஒளிப்பதிவாளர் விஷ்ணு மற்றும் எடிட்டர் ரூபனை தான் பாராட்ட வேண்டும்.

மேலும் அட்லீ சொல்ல வந்த விஷயங்கள் பாராட்டுக்குரியது. குறிப்பாக அரசியல் குறித்து பேசியது நன்றாக இருந்தது. ஆனால், அது எந்த அளவிற்கு சாத்தியம் என்று தெரியவில்லை. அனிருத்தின் பின்னணி இசை படத்தின் மிகப்பெரிய பலம். ஆக்ஷன் காட்சிகளில் ஷாருக்கான் ஒரு பக்கம் சண்டை போட்டால் தன்னுடைய பின்னணி இசையின் மூலம் மற்றொரு பக்கம் மாஸ் காட்டிவிட்டார் அனிருத்.
அனிருத் ஆக்சன் காட்சிகளில் பின்னணியில் பக்காவாக பொருந்தி இருக்கிறார் இந்த தாய்மை பாச பாடல் காட்சிகளும் நன்றாக இருக்கிறது

படத்தின் ப்ளஸ்

ஷாருக்கான் நடிப்பு அருமை

விஜய் சேதுபதி, நடிப்பு பக்கா
நயன்தாரா அதிரடி

அனல் அரசின் ஆக்ஷன் காட்சிகள் அனல் பறக்கும்

ஒளிப்பதிவு மற்றும் எடிட்டிங்

லாஜிக் இல்லாத மேஜிக் இந்த ஜவான்
வெற்றி படமாக அமைந்தது என்று சொல்லலாம். இந்திய சினிமா வில் இது வரை சொல்லப்படாத கிளைமாக்ஸ் கைதட்டல் அரங்கம் நிறைந்த கைதட்டல்