துடிக்கும் கரங்கள் – விமர்சனம்.

ஓடியன் டாக்கீஸ்’ சார்பாக கே.அண்ணாத்துரை தயாரிப்பில் விமல் கதாநாயகனாக நடித்து உருவாகியுள்ள படம் ‘துடிக்கும் கரங்கள்’.( Thudikkum Karangal ) மும்பையை சேர்ந்த மனிஷா கதாநாயகியாக அறிமுகமாகியுள்ளார். இவர் ஏற்கனவே இரண்டு தெலுங்கு படங்களில் நடித்துள்ளதுடன், கன்னடத்திலும் ஒரு படத்தில் நடித்து வருகிறார். இவர்களுடன் சுரேஷ் மேனன், சதீஷ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இந்தப்படத்தை இயக்குனர் வேலுதாஸ் இயக்கியுள்ளதுடன், இணை தயாரிப்பாளராகவும் பொறுப்பேற்றுளார்.. இவர் எஸ்.எஸ்.ஸ்டான்லி, நந்தா பெரியசாமி, ‘வெற்றிவேல்’ இயக்குனர் வசந்தமணி ஆகிய இயக்குனர்களிடம் பணிபுரிந்தவர். கனவு என்கிற குறும்படத்தை இயக்கியதற்காக கனடா சர்வதேச திரைப்பட விருது பெற்றவர்.

இந்தப்படத்தில் விமல் யூடியூப் சேனல் நடத்தும் நிருபராக நடித்துள்ளார். அவரது நண்பராக சதீஷ் நடித்துள்ளார்.. ஒரு நிருபர் தன் வேலையை செய்கிறார். அதனால் அவருக்கு மிகப்பெரிய இடத்தில் இருந்து ஏற்படும் எதிர்ப்பு மற்றும் பிரச்சனைகளை எப்படி தைரியமாக எதிர்கொள்கிறார் என்பதுதான் இந்தப்படத்தின் கதை.

பெரும்பாலும் காமெடி கலந்த சாதுவான பாத்திரங்களிலேயே நடித்து வந்த விமல் ‘மாஸ்’ ஆக்‌ஷன் ஹீரோவாக களமிறங்கியுள்ளார். காதலியை துரத்தி துரத்தி காதலிக்கும் லவ்வர் பாய் ஆக காட்டப்படும் விமல், சூழல் நிர்பந்தத்தால் ஆக்‌ஷன் அவதாரம் எடுக்கிறார். மாஸ் மசாலா படங்களுக்கே உரிய புழுதி பறக்கும் காட்சிகள், ஈர்ப்பு விசையை எதிர்த்து ஆட்கள் பறப்பது, ஹீரோயின் உடனான ரொமான்ஸ் பாடல் என அனைத்து அம்சங்களும் இன்று சென்னைக்கு வந்து செல்வோரின் எண்ணிக்கை அதிகம். அதனாலேயே இங்கே ஆரோக்கியம் இல்லாத உணவு, குறிப்பாக பிரியாணி அதிகப்படியாக பயன்பாட்டில் இருக்கிறது. அதன் பின்னணியில் இருக்கும் சென்சிட்டிவான விஷயத்தை பொழுதுபோக்கு அம்சத்துடன் இயக்குனர் வேலுதாஸ் கூறியுள்ளார்.பாராட்டுக்கள்.

படம் சமுதாய நோக்கியத்திற்காக எடுக்கப்படும் போது அனைவரும் அதற்கு ஆதரவும் ஊக்கமும் தர வேண்டும் அப்படிப்பட்ட சமுதாய நோக்கத்திற்காக எடுக்கப்பட்ட இந்த திரைப்படம் துடிக்கும் கரங்கள் நிச்சயம் படம் பார்ப்பவர்கள் மனதில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும் பிரியாணி சாப்பிடுபவர்கள் இதை யோசித்து தான் சாப்பிட வேண்டும் அதில் என்ன கலக்குகிறார்கள்? எப்படி தயாரிக்கப்படுகிறது சுகாதாரமான உணவா என்பதெல்லாம் யோசிக்க வேண்டும். அதேபோல படத்தில் நடித்துள்ள அனைவரின் நடிப்பு சிறப்பாக இருக்கிறது பாடல்கள் ரசிக்க வைக்கிறது ஒளிப்பதிவு நன்றாக இருக்கிறது படத்தொகுப்பு கச்சிதமாக இருக்கிறது சூப்பர் ஸ்டார் ரஜினி சாருக்கு எப்படி துடிக்கும் கரங்கள் வெற்றி படமாக அமைந்தது அதேபோல உங்களுக்கு மீண்டும் ஒரு மாஸ் ஆக்சன் வெற்றிபெறும் மைனஸ் இல்லையா என்று கேட்பவர்களுக்கு நிச்சயம் இருக்கிறது டிராபிக் போலீஸ் வீடு புகுந்து நாயகன் அடித்தால் அவர் மீது சட்டம் பாயாதா டிராபிக் போலீஸ் யாரை வேண்டுமானாலும் அடிக்கலாம். ஆனால் ஒரு சாமானியன் ஒரு போலீஸ் அதிகாரி மீது கை வைத்தால் சட்டம் தரும் தண்டனை கடுமையானதாக இருக்கும் அதை இயக்குனர் ஏன் கண்டு கொண்டுள்ளவில்லை. அதேபோல காவல்துறையின் உயர் அதிகாரி ஐஜி அவருக்கு இருக்கும் பணியில் இது போன்ற செயல்களில் பகிரங்கமாக இப்படி ஈடுபடுவாரா என்ற கேள்வியும் எழுகிறது எனவே இது எல்லாம் அடுத்த படத்தில் இயக்குனர் சரி செய்து கொள்ளலாம் துடிக்கும் கரங்கள் பார்க்க வேண்டிய படம்