அங்ககாரகன் படத்தின் விமர்சனம்

இயக்குனர் மோகன் டச்சு இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘அங்காரகன்’.
இந்த படத்தில் ஸ்ரீபதி கதாநாயகனாக நடித்துள்ளார். மற்றும் இப்படத்தை ஜூலியன் மற்றி, ஜெரோமா இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரித்துள்ளது இந்த படத்தில் ஸ்ரீபதி கதாநாயகனாக நடித்துள்ளார். இவர் திரைக்கதையை எழுதியுள்ளதுடன் கிரியேட்டிவ் இயக்குனராகவும் பணியாற்றியுள்ளார்.

இந்த படத்தில் டெரர் போலீஸ் அதிகாரி கதாபாத்திரத்தில் சத்யராஜ் நடித்துள்ளார். மலையாள நடிகை நியா இந்த படத்தில் கதாநாயகியாக நடிப்பதன் மூலம் தமிழில் அறிமுகமாகிறார். மேலும் இதில் அங்காடித்தெரு மகேஷ், ரெய்னா காரத், ரோஷன், அப்புக்குட்டி, தியா, நேகா ரோஸ், குரு சந்திரன், கேசிபி பிரபாத் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
: பீஸ்ட் படத்தில் இடம்பெற்ற பாடலான ‘ஜாலியோ ஜிம்கானா’ உள்ளிட்ட 125-க்கும் மேற்பட்ட பாடல்களை எழுதிய கு.கார்த்திக் இந்த படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார். கருந்தேள் ராஜேஷ் இந்த படத்தின் வசனங்களை எழுதியுள்ளார்.

இந்த படத்தின் கதை என்ன

தமிழ்நாட்டில் உள்ள பாரஸ்ட் ஏரியாவான குறிஞ்சி மலை என்ற பகுதியில் ஒரு ரிசார்ட் உள்ளது அதில் மூன்று இளம் ஜோடிகள் வந்து தங்குகிறார்கள் வயதான ஆர்மியும் அவர் மனைவியும் தங்குகிறார்கள் இதில் ஆகாஷ் என்ற இளைஞன் பிளேபாயாக இருக்கிறான் அங்கு பேய் நடமாடும் பகுதி என்று அங்கு இருப்பவர்கள் பேசிக் கொள்கிறார்கள் அங்காடித்தெரு மகேஷ் அந்த ரிசார்ட் மேனேஜராக இருக்கிறார் அந்த இளம் ஜோடிகளில் ஒருவர் காணாமல் போக அதை கண்டுபிடிக்க அந்த ஏரியா காவல்துறை அதிகாரி சத்யராஜ் அங்கு வருகிறார் அவருடன் இரண்டு போலீசும் ஒரு துணை ஆய்வாளரும் ஒரு இன்ஸ்பெக்டரும் கூட வருகிறார்கள் காணாமல் போன பெண்ணை கண்டுபிடித்தார்களா? பேய் நடமாடும் அந்த பகுதியில் நடந்தது என்ன. இதெல்லாம் சத்யராஜ் கண்டுபிடித்தாரா? இதற்கு முன் நடந்த பிரிட்டிஷ் இளவரசி அந்த குறிஞ்சிமலை பகுதியை பிடிப்பதற்கு 100 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த அங்காரகனுக்கும் அந்த பகுதியில் உள்ள மக்களுக்கும்செய்த துரோகம் என்ன அந்த அங்காரகன் ஏன் எல்லோரையும் பழி வாங்க நினைக்கிறான் ? ரிசார்ட் அடைவதற்கு
நடத்தப்படும் சூழ்ச்சிகள் என்ன இதையெல்லாம் மிகவும் யதார்த்தத்தோடு இயல்பாக சொல்லி இருக்கும் படம் தான் அங்காரகன்

சத்யராஜ் நடிப்பில் மிகப்பெரிய மாற்றம் அலட்டல் இல்லாமல் பார்வையாலேயே ஒவ்வொரு குற்றவாளியும் கிடுக்கி பிடி போட்டு விசாரிக்கும் பாணி செம அவரின் பஞ்ச் டயலாக் ” என்னம்மா கண்ணு என்ன புரிஞ்சிக்க மாட்டேங்கிறியே” என்ற வசனம் பேசி கலாய்ப்பது ரசிக்க வைக்கிறது மொட்டை தலை அந்த குறுந்தாடியும் அவருக்கு அவ்வளவு பொருத்தமாக இருக்கிறது.

நாயகன் நாயகி குளத்தில் குளிக்கும் காட்சி கிளுகிளுப்பான காட்சி நாயகன் எந்நேரமும் போதையில் இருந்தாலும் அவர்தான் படத்தை தூக்கி நிறுத்தும் கிளைமாக்ஸ் காட்சி அவர் யார் என்று தெரிய வரும் பொழுது படம் பார்ப்பவர்களுக்கு மகிழ்ச்சி

ஆகாஷாக நடித்திருக்கும் அந்த இளைஞரின் நடிப்பில் துள்ளல்

இயக்குனர் மோகன் டச்சு ஒரு ஒரு கிரைம் திரில்லர் படத்தை
சுவையாக ரசிக்கும்படியாக கொடுக்க முடியுமோ அதை நன்றாக செய்திருக்கிறார் படத்தில் நடித்துள்ள அனைவரும் இயல்பாக நடித்துள்ளனர் .

கிளைமாக்ஸ் காட்சி எதிர்பாராத வண்ணம் எடுத்து இருக்கிறார் இயக்குனர்.

பூஜிதா தான் பிரிட்டிஷ் இளவரசி அந்த ரிசார்டை யார் ஆக்கிரமிக்க வந்தாலும் அவர் மீண்டும் வருவார் என்று சொல்லி இருப்பது வித்தியாசம் அதேபோல படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் சத்யராஜ் வைத்து முடித்திருப்பது வித்தியாசம் இளைஞர்களின் எதிர்பார்ப்பு ஏற்றபடி வந்துள்ளது இந்த அங்காரகன் நிச்சயம் ஒரு முறை பார்க்கலாம். ரிசார்ட் பகுதி மலை சூழ்ந்த பகுதி என்பதால் கேமரா கைவண்ணம் நன்றாக இருக்கிறது இரவு காட்சிகள் திகிலூட்டும் வண்ணம் இருக்கிறது இந்தப் படம் எல்லா மொழிகளுக்கும் ஏற்ற படமாக இருப்பது சிறப்பு