சாட் பூட் திரி திரை விமர்சனம்

குழந்தைகள் உலகத்தைச் சொல்லும் ‘சாட் பூட் த்ரி’ – அருண் வைத்தியநாதன்
இயக்கி உள்ளார்

பிரசன்னா, சினேகா நடித்த ‘அச்சமுண்டு அச்சமுண்டு’, மோகன்லால் நடித்த ‘பெருச்சாழி’ , அர்ஜுன் நடித்த ‘நிபுணன்’ படங்களை இயக்கிய அருண் வைத்தியநாதன், ‘சாட் பூட் த்ரி’ என்ற குழந்தைகளுக்கானப் படத்தை இயக்கி இருக்கிறார். அவரிடம்..

திடீர்னு ஏன் குழந்தைகளுக்கான படம்?

கோவிட் காலகட்டத்துலதான், குழந்தைகளுக்குன்னு தமிழ்ல அதிக படங்கள் இல்லைன்னு தோணுச்சு. அவங்களுக்கான வாழ்க்கையை அவங்க உலகத்தைச் சொல்ற மாதிரியான ஒரு படம் பண்ணணும்னு அப்பதான் நினைச்சேன். பொதுவா பெரும்பாலான பெரிய இயக்குநர்கள் எல்லோருமே குழந்தைகளுக்கான படம் பண்ணியிருக்காங்க. எனக்கும் அப்படி பண்ணணும்னு தோணுச்சு. அதனால உருவான படம்தான் இது. இயக்குநரா இல்லாம குழந்தைகளின் தந்தையா எனக்கு மன நிறைவைக் கொடுத்திருக்கிற படம். எனறார் இந்த விமர்சனத்தில்.

இந்த படத்தின் கதை என்ன வாங்க பார்க்கலாம்

குழந்தைகளுக்கான உலகம் வேற உலகம். அவங்க வாழ்க்கையை, அவங்க ஸ்டைல்ல சொல்ற படம் இது. நான்கு பசங்க. அதில் ஒருத்தன், நாய் வளர்க்கிறான். அந்த நாய், ஒருநாள் காணாமல் போக. அதைத் தாங்க முடியலை. வீட்டுல சொல்லாம அந்த 4 பேரும் அதைத் தேடிப் போறாங்க. அந்த தேடல்ல அவங்கக் கத்துக்கிட்டது என்ன? என்பதுதான கதை,

ஆனால்
திரைக்கதை வேற மாதிரி இருக்கிறது
தீபாவளி இரவு காணாமல் போன மேக்ஸ் அதை தேடி அலையும் நான்கு பேர் அந்த நான்கு பேருக்கும் ஏற்படும் விபரீதம் இவர்களுக்கு நடுவே ஆட்டோ ஓட்டுனர் யோகி பாபு நாய்களை வாங்கி விற்கும் வட சென்னை சார்ந்த தீனா விலங்கு நல ஆர்வலர் சிவாங்கி இப்படி பல கதாபாத்திரங்கள் திரைக்கதையில் வந்து போகிறார்கள் நியாயமான போலீஸ் அதிகாரி அவரும் இந்த கதையில் வந்து போகிறார் வட சென்னை சேர்ந்த இளைஞர்கள் நல்லவர்களாக சித்தரிக்கப்பட்டு இருக்கிறார்கள். பூவையர் இந்த படத்திற்கு ஹீரோவாக பில்டப் காட்சிகளுடன்வந்து கடைசி காட்சியில் பள்ளிக்கு செல்லும் அவரது கதாபாத்திரம் சிறப்பாக இருக்கிறது வெங்கட் பிரபு சினேகா இன்றைய ஐடி ஊழியர்களின் மனநிலையில் அற்புதமாக சித்தரிக்கிறார்கள் இப்படி திரைக்கதையில் இயக்குனர் மெனக்கிட்டிருக்கிறார் அதுவே படத்துக்கு பலமாக இருக்கிறது
ஒரு நல்ல சினிமா பார்த்த திருப்தியும் ஏற்படுகிறது

இந்த படத்தில் நடித்த குழந்தை நட்சத்திரங்கள் கைலாஷ், காணாமல் போன மேக்ஸ்மீது பாசம் கொண்டு தெருத்தெருவாக அலையும் போது பரிதாபப்பட வைக்கிறார்கள்
செல்லக் குழந்தையாக வந்து கொழு கொழு பெட் டாக்காக வளர்ந்து நிற்கும் மேக்ஸ். இந்த படத்தில் 28 நாள் கால் சீட்டு கொடுத்து நன்றாக உழைத்து இருக்கிறார் என்று சொல்லலாம் மற்றும்

பிரணதி,
சிங்காரவேலனே வா என்று கர்நாடக சங்கீதத்தை பாடி மனதில் இடம் பிடித்துகொள்கிறார் இவர் சக நண்பன் கைலாசுக்காக தெருவில் இறங்கி இரவில் மேக்ஸை தேடும் காட்சிகளில் சபாஷ் போட வைக்கிறார் இவரது சுறுசுறுப்பும் நடிப்பும் பாராட்ட லாம்

பூவையார்,
அவர் தான் இந்த படத்தின் மிகப்பெரிய பலம் பள்ளிக்கு செல்லாமலே கணக்கை புட்டு புட்டு வைக்கிறார்
திருவண்ணாமலையில் மளிகை கடை வைத்திருந்தோம் அங்கு வாழ முடியவில்லை சென்னை வந்து விட்டோம் அதோடு என் படிப்பு போச்சு என்று அவர் சொல்லும் இடம் வருத்த பட வைக்கிறது நண்பர்களுக்காக வட சென்னை இளைஞர்களை தேடி பிடித்து செல்போன் வாங்குவதும் மேக்சை கண்டுபிடிக்க உதவுவதும் இந்த படத்திற்கு பெரிய பலமாக இருக்கிறார் சிறந்த நடிப்பை தந்திருக்கிறார் அவர் வரும் காட்சிகள் அப்படி ரசிக்க வைக்கிறது

வேதாந்த்.
தலையில் கொண்டை பஞ்சாப் குழந்தை இவரது அப்பா வித்தியாசமான மனிதர் திருக்குறளில் ஆர்வம் கொண்டவர் இப்படி இவர்கள் குடும்பத்தை காட்டும் பொழுது ஒரு வித்தியாசமாக இருக்கிறது. வேதாந்த நடிப்பும் நன்றாக இருக்கிறது தன் தோழிக்கு பிரச்சனை என்று வந்தவுடன் ஓங்கி ஒரு குத்து விட்டு அல்க் சூப்பர் மேன் என்று இவர் செய்யும் சாகசம் ரசிக்க வைக்கிறது

.. இவர்களை தவிர யோகி பாப நடித்திருக்கிறார்
உண்மையில் இந்த படத்தில் யோகி பாபு சிரிக்க வைக்கிறார்

தல ரசிகராக வந்து ஆட்டோ ஓட்டிக்கொண்டு சிறுவர்களுக்கு உதவி செய்யும் கதாபாத்திரத்திலும் தவனை கட்ட முடியாமல் தீனாவிடம் கெஞ்சும் போதும்” மேக்ஸ் ஆட்டோவில் ஏறிக்கொள்ள அதை வீட்டுக்கு கொண்டு சென்று மனைவிடமும்அந்த பாட்டியிடமும் மாட்டிக் கொள்ளும் யோகி பாபு உண்மையிலேயே சிரிக்க வைக்கிறார் அவர் வரும் காட்சிகள் செம…
பணத்துக்கு ஆசைப்பட்டு மேக்சை தீனாவிடம் ஒப்படைக்க துடிக்கும் யோகி பாபு. துடிக்க அதிர்ஷ்டம் அடித்தது போல் தீனாவிடம் ஒரு தெரு நாய் கிடைக்க அந்த நாயால் அதிர்ஷ்டம் அடிக்க தீனா யோகி பாபு வைதேடி வந்து தீபாவளி அன்று யோகி பாபு க்குபணம் கொடுத்து விட்டு போவது உண்மையில் ரசிக்க வைக்கும் காட்சி
திரிஷா நாய் காணாமல் போயிடுச்சு என்று சோசியல் மீடியாவில் அறிமுகப்படுத்த அதற்கு இரண்டு பேர் ஒரு லட்சம் கொண்டு வந்து கொடுக்க செம இன்ட்ரஸ்டிங்கான திரைக்கதை இது திரிஷாவுக்கு தெரியுமா பாஸ்.
இப்படி படம் முழுக்க ரசிக்க வைக்க ஏராளமான காட்சிகள் இருக்கு இந்த படம் சர்வதேச விழாக்களில் நிறைய பதக்கங்களை கொண்டு வந்திருக்கு இது பற்றி இயக்குனர் இடம் கேட்டபோது

திரைப்பட விழாக்களுக்கு படத்தை அனுப்பி இருந்தீங்களே?

ஆமா. இது குழந்தைகளை வச்சு குழந்தைகளுக்காக எடுக்கப்பட்ட படம். ஆனா பெரியவங்களும் பார்க்கலாம். படம் பார்த்த சிலபிரபலங்கள் ரொம்ப நெகிழ்ச்சியா பாராட்டியிருக்காங்க. இது சென்னையில நடக்கிற கதை. நிறைய படவிழாக்கள்ல இந்தப் படத்துக்கு பாசிட்டிவான விமர்சனங்கள் வந்திருக்கு. 11 விருதுகளை வாங்கியிருக்கு. அது எங்களுக்கு பெரிய நம்பிக்கையையும், மகிழ்ச்சியையும் தந்திருக்கு.
என்றார் உண்மைதான் இந்த படம் சிறியவர்களை மட்டுமல்ல பெரியவர்களையும் பார்க்க வைத்து சிந்திக்க வைக்கும் படம் குழந்தைகள் ஆசைப்படுவதை பெரியவர்கள் நிறைவேற்றி தர வேண்டும் அப்படி ஆசைப்படுவதை நிறைவேற்றாமல் போனால் அந்த குழந்தைகள் தங்களுக்கான உலகத்தை தேடிச் செல்லும் அப்போது நடக்கும் விபரீதங்களை யாராலும் தடுக்க முடியாது அதற்கு பின் பெற்றவர்கள் அழுது என்ன ஆக போகிறது. நான்கு குழந்தைகளும் இரவில் தெருத்தெருவாக மேக்ஸ் ஐ தேடும் போது இந்த படத்தில் அவர்களுக்கு ஏற்படும் பிரச்சனைகளை மிகவும் குறைவாகவும் மேலோட்டமாக சொல்லி இருக்கிறார் இயக்குனர். ஆனால் அப்படி அல்ல இன்றைய உலகம் குழந்தைகள் தனியாக இருப்பதை கண்டால் கடத்தி செல்வதற்கு ஒரு கும்பலே காத்திருக்கு அதுவும் பெண் குழந்தை என்றால் சொல்லவே வேண்டியது இல்லை அப்படிப்பட்ட அபாயகரமான சூழ்நிலையை உருவாக்குவது பெற்றோர்கள்தான் பெற்றோர்கள் குழந்தைகள் ஆசைகளை அவர்கள் எண்ணங்களை கேட்டு தெரிந்து அதை நிறைவேற்றி தர வேண்டும் என்ற உயர்தரமான நல்ல கருத்தை சொல்லி இருக்கிறார் இயக்குனர்.

சினேகா வை எப்படி நடிக்க சம்மதித்தார் என்று இயக்குனரை கேட்ட போது ?

சினேகாகிட்ட ஒரு நண்பரா கதையை கேளுங்கங்கன்னு சொன்னேன். அவங்க நான் நடிக்கப் போறதில்லை, ஏன் கேட்கணும்னு சொன்னாங்க. சும்மா கேளுங்கன்னு அவங்களை வற்புறுத்தி கதையைச் சொன்னேன். ஒரு 20 பக்கம் கதையை வாசிச்சேன். அவ்வளவுதான் கேட்டுட்டு, போதும் இதுல நடிக்கிறேன்னு சொல்லிட்டாங்க.
என்றார் இயக்குனர்
உண்மையில் படத்திற்கு பலமாக இருக்கிறது ஒரு கண்டிப்பான தாயாக ஐடியில் வேலை செய்யும் பெண்ணாக நன்றாக நடித்து இருக்கிறார் சினேகா
வீட்டில் நாய் கொண்டு வந்து வளர்ப்பதற்கு அவர் சொல்லும் காரணம் சரியாக இருக்கிறது அதை பராமரிக்க முடியாது எல்லோரும் பிஸியாக இருக்கிறோம் என்று மகன் கைலாசுக்கு கண்டிஷன் போடுவதும் பிறகு மகனின் பாசத்தை கண்டு ஏற்றுக்கொள்ளும் ஒரு தாயாக நன்றாக நடிப்பை வழங்கி இருக்கிறார்

ஜாலியான ஒரு அப்பா கேரக்டர் என்றாலே வெங்கட் பிரபு.
மகன் மீது பாசம் மனைவியிடம் பயம் இப்படி ஒரு நிஜ அப்பாவாக வாழ்ந்து காட்டி இருக்கிறார் வெங்கட் பிரபு
மகன் கேட்பதெல்லாம்
அமேசானில் வாங்கித் தரும் அப்பா மகன் எனக்கு இன்னொரு தம்பி வேண்டும் என்று கேட்பதும் சினேகாவை திருதிறுவென்று பார்த்து அசடு வழிவதும் ரசிக்க வைக்கும் காட்சிகள்
வெல்டன் வெங்கட் பிரபு
இயக்குனரும் மருத்துவராக ஒரு சில காட்சிகள் வந்து நல்ல நடிப்பை வழங்கி இருக்கிறார்

வீணை ராஜேஷ் வைத்யாவை இசை அமைப்பாளர்
படத்தின் பலம் பின்னணி இசை அற்புதமாக கொடுத்திருக்கிறார் இசையை எங்கு எதற்கு பயன்படுத்த வேண்டும் அதை நன்றாக கொடுத்து இருக்கிறார் பெரிய இசையமைப்பாளராக வருவதற்கு அவருக்கு நிறைய வாய்ப்புகள் இனி பிரகாசிக்கும்.
இவரைப் பற்றி இயக்குனர் உடன் கேட்டபோது…

ஆமா. அவர் எப்பவும் சினிமா பற்றி பேசிட்டு இருப்பார். நாங்களும் அடிக்கடி பேசுவோம். நீங்க ஏன் சினிமாவுல இசை அமைக்கக் கூடாதுன்னு ஒருமுறை கேட்டேன். நீங்க ஏன் எனக்கு வாய்ப்புக் கொடுக்கக் கூடாது?ன்னு சொன்னார். இந்தப் படத்துலயே பண்ணுங்கன்னு சொல்லிட்டேன். படத்துல ரெண்டு பாடல்கள்தான். பின்னணி இசையையும் மிரட்டலா பண்ணியிருக்கார்
என்றார் அவர் சொன்னது மிகை அல்ல படத்திற்கு இசையை மிகப்பெரிய பலமாக இருக்கிறது காட்சிகளை உயிரோடு இருக்கிறது ரசிக்க வைக்கிறது

இப்படம் பற்றி…
வணிகரீதியான
சினிமாக்கள் தமிழ் சினிமாவில் வலம் வந்து கொண்டிருக்கிறது கத்தி ரத்தம் டபுள் மீனிங் என தமிழ் ரசிகர்களை படம் பார்த்துக் கொண்டிருக்கிறது இந்த சமயத்தில் இது போன்ற ஆறுதலான படங்கள் வருவது ஆரோக்கியமாக இருக்கும் குழந்தைகளுக்கான சினிமா குறைவாக இருக்கிறது இயக்குனர் மணிரத்தினம் இயக்கிய அஞ்சலி படத்திற்கு பிறகு இப்படம் ஒரு நல்ல தரமான படமாக இருக்கிறது மனிதநேயத்தை சொல்கிறது விலங்குகள் மீது இருக்கும் பாசத்தை சொல்கிறது நண்பர்களுக்கும் நட்பை சொல்கிறது குழந்தைகள் வீட்டை விட்டு வெளியே வந்து என்னென்ன அபாயங்களை சந்திப்பார்களோ அதையும் சொல்கிறது ஒரு அற்புதமான படத்தை கொடுத்த இயக்குனருக்கு பாராட்டுக்கள் தமிழ் ரசிகர்கள் இது போன்ற படங்களை வெற்றி பெற செய்வதன் மூலம் தமிழ் சினிமா மீண்டும் ஒரு நல்ல ஆரோக்கியமான பாதைக்கு திரும்ப வாய்ப்பு இருக்கிறது
குழந்தைகளுக்கான படத்தை எடுத்து மீண்டும் இந்திய சினிமாவில் முத்திரைப்பதித்த இயக்குனராக
சாட் பூட் திரி படத்தின்

இயக்குனர் அருணாச்சலம் வைத்யநாதன் மிளிர்வார். என்பது குறிப்பிடத்தக்கது.
படத்தொகுப்பு இசையும் ஒளிப்பதிவும் கச்சிதமாக இருக்கிறது இரவு நேரத்தில் தீபாவளி நேரத்தில் குழந்தைகள் மேகஸை தேடி செல்லும்போது என்ன நடக்கும் என்ற திகிலையும் காட்டி இருக்கிறார் ஒளிப்பதிவாளர்.படத்
தொகுப்பு கச்சிதமாக இருக்கிறது இரண்டு மணி நேரம் மட்டும் என்பதால் எந்த இடத்திலும் படம் லேக் ஆகவில்லை விறுவிறுப்பாக போகிறது இடைவேளைக்கு பிறகு காட்சிகள் ரெக்கை கட்டி பறக்கிறது அடுத்து என்ன நடக்கும் குழந்தைகள் என்ன ஆவார்கள் பெட் மேக்ஸ் நகராட்சி ஊழியர்களிடம் சிக்கி அதை கொன்று விடுவார்களோ யோகி பாபு கையில் கிடைத்து தீனா விடம் கையில் விற்று விடுவாரோ என்று செம விரு விருப்பாக போகிறது படம்

இயக்குனர் புத்திசாலித்தனமாக கதையை கொண்டு சென்றுள்ளார் முதல் பாதி முழுவதும் அப்பார்ட்மெண்டுக்குள் நான்கு நண்பர்கள் ஒரு நாய்க்குட்டி என்று காட்டினாலும் இடைவேளைக்கு பிறகு தெருவுக்கு வந்து. அலையும் அந்த நான்கு சிறுவர்களும் பத்திரமாக இருக்க வேண்டுமே என்ற பரிதவிப்பை ஏற்படுத்துகிறது திரைக்கதை அதுதான் வெற்றிக்கான பார்ஃமுலா நிட்சயம் தமிழ் சினிமாவுக்கு வித்தியாசமான படமாக வந்திருக்கிறது. சாட் பூட் திரி இயக்குனருக்கு வாழ்த்துக்கள்
.
வெளிநாட்டு படங்களை பார்த்து பாராட்டும் தமிழ் ரசிகர்கள் நம் தமிழ் சினிமாவுக்காக குழந்தைகளுக்காக ஒரு நல்ல கதையை உருவாக்கி ரசிக்கும் வகையில் தந்த இயக்குனரையும் பாராட்டினால். தமிழ் சினிமா நிச்சயம் தரமான படைப்புகளால் மேலே வரும் சமீபகாலமாக வரும் கத்திக்குத்து அடிதடி வெட்டு குத்து போன்ற படங்களுக்கு மாற்று மருந்தாக வந்திருக்கிறது இந்த சாட் பூட் திரி
கொண்டாடுங்கள் உங்கள் குழந்தைகளுடன் திரையரங்கம் நிறையட்டும் குழந்தைகளின் கும்மாளத்துடன்