இந்த கிரைம் தப்பில்ல” பட விமர்சனம்

இப்படத்தை எழுதி இயக்குனர் தேவகுமார் இயக்கியிருக்கிறார். இப்படத்தில் நடிகர்கள் ஆடுகளம் நரேன், சின்னத்திரை நடிகர் பாண்டி கமல் மற்றும் கதாநாயகி மேக்னா எலன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

குணச்சித்திர வேடங்களில் காமெடி நடிகர் வெங்கால்ராவ், முத்துக்காளை ஆகியோர் நடித்திருக்கின்றனர்.

இந்த படத்திற்கு பரிமளவாசன் இசையமைத்திருக்கிறார். ஏ.எம்.எம்.கார்த்திகேயன் ஒளிப்பதிவு செய்து இருக்கிறார். முன்னணி பாடகர்களான பாடகர் பிரசன்னா, பாடகர் வேல்முருகன் ஆகியோர் பாடல்களை பாடி இருக்கின்றனர்.

இந்த படத்தின் கதை என்ன வாங்க பார்க்கலாம்

நரேன் ராணுவத்தில் பணிபுரிந்தவர் அவர் ஒரு ஆபரேஷனில் ஈடுபடுகிறார் . .

பெண்களுக்கு இன்று இன்று எல்லாபுரத்திலும் எல்லா பக்கத்திலும் பாலியல் தொல்லைகள்

சட்டம் தன் கடமையை செய்தாலும் அதிலிருந்து தப்பித்து விடுகின்றனர்

ஊட்டியில் ஒரு பெண்ணை கெடுத்து விட்டு தப்பித்து விட்ட மூன்று குற்றவாளிகளை நாயகியும் அவரது கூட்டாளிகளும் எப்படி மடக்கிப் பிடித்தனர் அவர்களுக்கு என்ன தண்டனை கொடுத்தார்கள் என்பது ஒன் லைன்

பெண்களை பாலியல் தொல்லை கொடுப்பவர்களுக்கு சட்டம் ஒருபுறம் தண்டனை கொடுத்தாலும் இன்றைய இளைஞர்களின் தட்டிக் கேட்க வேண்டும் என்ற அற்புதமான கருத்தால் நல்ல படத்தை கொடுத்திருக்கிறது இந்த படக்குழு

இன்று நாடு முழுவதும் பெண்களுக்கு எதிராக பாலியல் தொல்லைகள் அதிகரித்து வருகிறது இந்த படம் மூலம் சமூக நீதியை நிலைநாட்டி இருக்கிறார் இயக்குனர்

தமிழின தலைவர் பிரபாகரன் படத்தை காட்டிவிட்டு நரேனை காட்டும் போது ஏதோ ஒன்று நீதிக்காக போராடுகிறார்கள் என்ற எண்ணம் ஏற்படுகிறது பரிமள வாசனின்இசை படத்திற்கு மிகவும் பக்கபலமாக இருக்கிறது சண்டைக் காட்சிகளும் பாடல் காட்சிகளும் இசை ரசிக்க வைக்கிறது

கார்த்திகேயனின் ஒளிப்பதிவு கண்களுக்கு குழுமையாக இருக்கிறது சண்டைக் காட்சிகளில் புகுந்து விளையாடுகிறது ஊட்டியின் அழகை அற்புதமாக படம் பிடித்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் காதல் காட்சிகளும் ஒளிப்பதிவு புகுந்து விளையாடுகிறது

சின்னத்திரை நடிகர் பாண்டி கமல் இவருக்கு இது முதல் படமாக இருந்தாலும் நிறைய படங்களில் நடித்த அனுபவம் போல் நன்றாக நடித்திருக்கிறார் அழகாகவும் இருக்கிறார் இவருக்கு நிறைய பட வாய்ப்புகள் வரும் பிரகாசமான எதிர்காலம் இருக்கிறது

நாயகி மேக்னா எளன் அழகாக இருக்கிறார் பாடல் காட்சிகள் அற்புதமாக நடித்திருக்கிறார் சண்டை காட்சிகள் புகுந்து விளையாடுகிறார் பெண்ணியம் பேசும் வித்தியாசமான கதாபாத்திரத்தில் வெழுத்து வாங்கி இருக்கிறார்

தன் சகோதரிக்கு நடந்த அந்த துயர சம்பவத்திற்கு பழி வாங்க புறப்பட்டு வந்து மூன்று இளைஞர்களை மயக்கி அவர்களை கொடூரமான முறையில் தண்டனைவாங்கி கொடுக்கிறார் சபாஷ்.

காமெடிக்கு வெங்கல் ராவ் முத்துக்காளை கலகலப்பூட்டூகிறார்கள்

இயக்குனர் தேவகுமாரன் இன்றைய காலகட்டத்திற்கு தேவையான கதையை படமாக எடுத்துள்ளார் இந்த கிரைம் தப்பில்லை நியாத்திற்காக இளைஞர்கள் ஒன்று சேர்ந்து அநியாயத்தை தட்டி கேட்டால் அது தப்பில்லை என்று சொல்கிறது படம் படத்தொகுப்பு கச்சிதமாக இருக்கிறது இரண்டு மணிக்கு குறைவாக இருப்பதால் படம் ஜெட் வேகத்தில் போகிறது நிச்சயமாக பார்க்கக்கூடிய படம் இந்த கிரைம் தப்பில்லை
இந்த படம் தப்பில்லாத படம் நிச்சயம் பார்க்கலா