த்ரில்லராக உருவாகியுள்ள எனக்கு என்டே கிடையாது’ படத்தின் விமர்சனம் பார்க்கலாம் வாங்க.
இது ஒரு வித்தியாசமான படம் ரசிக்க வைக்கிறது. விறுவிறுப்பாக இருக்கிறது. வித்தியாசமான படம்
ஹங்க்ரி வுல்ஃப் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் சார்பில் கார்த்திக் வெங்கட்ராமன் தயாரித்துள்ள படம், ‘எனக்கு என்டே கிடையாது’. விக்ரம் ரமேஷ் கதை, திரைக்கதை, வசனம் எழுதி முதன்மை கதாபாத்திரங்களில்ஒருவராக நடித்துள்ளார். டாக்ஸி டிரைவர் சேகர் என்ற கதாபாத்திரத்தில் தனி ராஜாங்கம் நடத்தி இருக்கிறார். அழகாக இருக்கிறார் இயல்பாக நடிக்கிறார் மிகையில்லாத நடிப்பு எல்லாமே ரசிக்க வைக்கிறது. ஆரம்பக் கட்சியிலிருந்து படம் முடியும் வரை நன்கு நடித்திருக்கிறார்.
சில பேர் நடிக்கிறேன் என்று சொல்லி ஓவர் ஆக்டிங் செய்து நம்மை இம்சை படுத்துவார்கள் அந்த ரகமாக இல்லாமல் அமைதியாக சாந்தமாக பயந்தபடி எல்லா அம்சங்களையும் ஒன்று சேர கொடுத்திருக்கிறார் அவருடைய இயக்கமும் சரி நடிப்பும் சரி திரைக்கதையும் வசனமும் எல்லாம் இவருக்கு மிகப்பெரிய பலம் . இவருக்கு எதிர்காலம் இருக்கிறது. தமிழ் சினிமாவிற்கு இப்படி தரமான படம் கொடுக்கும் புதிய மூளை புதிய முயற்சி புதிய இயக்குனர்கள் தேவை
அந்த வகையில் இவர் வரவேற்கப்படுவார்
குறைந்த பட்ஜெட்டில் விறுவிறுப்பான படம் எப்படி கொடுக்கலாம் என்பதற்கு இந்த டீம் ஒரு உதாரணம் தயாரிப்பாளரான கார்த்திக் வெங்கட்ராமன் இன்னொரு முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். திருடனாக வந்து ஒரு வீட்டுக்குள் மாட்டிக்கொள்ளும் கதாபாத்திரம் இவருக்கு டேவிட் என்ற கதாபாத்திரத்தை இயல்பாக சித்தரிக்கிறார்
கதாநாயகியாக ஸ்வயம் சித்தா நடித்துள்ளார். பிஸினஸ் மேன் ஊர்வசியாக வந்து உயரமாக ஜம்மென்று மனதில் இடம் பிடித்துக் கொள்கிறார். சேகருக்கு கம்பெனி கொடுப்பதாகட்டும் மதுபாட்டில் கையில் பிடித்துக் கொண்டு எலுமிச்சம்பழத்தை சாப்பிடுவதாகட்டும் கணவனுக்காக கீழ் இறங்கி வந்து போராடுவதாக இருக்கட்டும் பாஸ்மார்க் வாங்குகிறார்
இன்னும் கொஞ்சம் படத்தில் வர மாட்டாரா என்று ஏங்க வைப்பது அவரது காட்சியும் அழகும் நடிப்பு வெல்டன் சித்தா சிவகுமார் ராஜு, முரளி சீனிவாசன், சக்திவேல்உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
அனைவரும் நடிப்பும் சிறப்பாக இருக்கிறது பாராட்டத்தக்கது. மஸ்தான் பாய் ஆக வ அவரின் நடிப்பு ரசிக்க வைக்கிறது போதையில் தள்ளாடிக்கொண்டு சண்டை போடுவது பின் தோழமை காட்டுவது என மனுஷன் பிச்சு மேஞ்சு இருக்கிறார்.
தளபதி ரத்னம் ஒளிப்பதிவு ஒரே பங்களா வில் அதுவும் இரவு நேர ஒளிப்பதிவு செய்துள்ளார் எல்லாம் ரிச்சாக இருக்கிறது திகில் ஆகவும் இருக்கிறது. மற்றும் ஆர்ட் டைரக்டர் பங்கு அஸ்த்துகிறது காஸ்ட்யூம் மேக்கப் எல்லாமே ரசிக்க வைக்கிறது
இந்த படத்திற்கு, கலாச்சரண் இசையமைத்துள்ளார். பின்னணி இசை படத்திற்கு மிகப்பெரிய பலம் படம் விறுவிறுப்பாக செல்வதற்கு இசையும் கைகோர்த்து போகிறது.
இப்படத்தின் இயக்குநர் நடிப்பில் மட்டுமல்ல திரைக்கதைகளும் அதைக் கொண்டு செல்வதிலும் சிறப்பாக செயல்பட்டு இருக்கிறார்
இவர்,அமெரிக்கா, சீனா போன்ற நாடுகளில் ஐடி துறையில் பணியாற்றியவர். அந்த அனுபவம் நன்றாக கை கொடுத்திருக்கிறது. ஹாலிவுட் பாணியில் விறுவிறுப்பான தரமான படம் தர முயற்சி செய்துள்ளார் இந்த முயற்சி வெற்றி பெற்றிருக்கிறது அவருக்கு வாழ்த்துக்கள்
படத்தில் நடித்துள்ளவர்களும் பணியாற்றியவர்களும் அனுபவசாலிகள். என்பதை ஒவ்வொரு காட்சியும் உணர்த்துகிறது.
சரி படத்தின் கதை என்ன,
தேவையில்லாத விஷயத்தில் தலையிட்டு சிக்கலில் மாட்டிக் கொள்ளக் கூடாது என்கிற கருத்தை மையப்படுத்தி இந்தப் படத்தை உருவாக்கியுள்ளார் கள்
ஹாலிவுட் படமான ‘ஹேங்க் ஓவர்’ மாதிரி இதுவும் விறுவிறுப்பாக இருக்கிறது. ஆரம்பித்த 5-வது நிமிடமே படம் பார்ப்பவர்களைக் கதைக்குள் இழுத்து சென்றுவிடுகிறது. டார்க் காமெடி கலந்த க்ரைம் திரில்லராக உருவாகி உள்ளது.
டாக்ஸி டிரைவர் ஆன சேகர் ஊர்வசி என்ற பிசினஸ் உமனை அடையாறில் பிக்கப் செய்வதற்காக காரில் ஏற்றுக்கொண்டு போகிறார். இறக்கி விடும்போது ஊர்வசி சேகரை எனக்கு கம்பெனி கொடு வீட்டுக்குள் வா என்று அந்த ஆடம்பரமான பங்களாவுக்கு அழைத்துச் செல்கிறார். அங்கு இருவரும் நட்பில் இருக்க சில விபரீதங்கள் நடக்கிறது.
அதன் பிறகு ஊர்வசி மயங்கி விழ சேகர் தடுமாறுகிறார் அந்த வீட்டை விட்டு வெளியே செல்வதற்கு கதவுக்கு பாஸ்வேர்டு எண் பொருத்தி இருக்கிறது. ஊர்வசி மயக்கம் தெளிந்து எழுந்தால் தான் அந்த பாஸ்வேர்ட் எண்ணை போட முடியும் அப்போது திடீரென அந்த வீட்டுக்குள் ஒரு திருடன் நுழைகிறான்
இப்பொழுது சேகர் ஒரு ரூமில் உள்ளே நுழைந்து பார்க்கும் போது அங்கு ஒரு டெட் பாடி இருக்கிறது மீண்டும் குழப்பத்தில் ஆழ்ந்து பாத்ரூமில் மறைந்து கொள்கிறான். திருட வந்த அந்த திருடன் எதுவும் இல்லாததால் ஊர்வசிக்கு மயக்கம் மருந்து கொடுத்து அவள் கழுத்தில் காதில் கிடந்த வைர நகைகளை திருடிக் கொண்டு புறப்படும் போது பாஸ்வேர்டு என்னை மறந்து விடுகிறான்
அப்போது திடீரென மஸ்தான் பாய் உள்ளே வருகிறார் அதன் பின் என்ன நடந்தது உள்ளே இருக்கும் டெட் பாடியும் சேகரும் அந்த திருடனும் மஸ்தான் பாயும் என்ன நிலைமைக்கு ஆளாகிறார்கள் இதுதான் கதை. ஒரே பங்களாவில் படம் அடுத்து என்ன செய்வது என்று தருமாறுவார்கள் திரை கதையாசிரியர்கள் ஆனால் இந்த படத்தின் திரைக்கதையும் அதற்காக மெனக்கெட்டு உழைத்ததும் தெளிவாக கதையை கொண்டு சென்றிருக்கிறார்கள் ஒவ்வொரு காட்சியும் அடுத்து என்ன நடக்கும் என்ற பரபரப்பையும் திகிலையும் ஊட்டுகிறது ஊர்வசி யார் இந்த டெட் பாடி யார் மஸ்தான் பாய் யார் திருடன் யார் இவர்களுக்கு நடுவே சிக்கிக் கொண்டு விழிக்கும் டாக்ஸி டிரைவர் சேகர் நிலைமை என்ன ஆகிறது இது எல்லாம் வித்தியாசமான முறையில் சொல்கிறது எனக்கு என்டே கிடையாது.
நல்ல தமிழ் சினிமாக்களை ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள் குறைந்த பட்ஜெட்டில் எடுக்கும் தரமான படங்கள் வெற்றி பெற்று வருகிறது அந்த வரிசையில் புதியவர்கள் வித்தியாசமான முறையில் விறுவிறுப்பான திரைக்கதையுடன் எடுத்திருக்கும் இந்த எனக்கு என்டே கிடையாது படமும் வெற்றி அமைந்துள்ளது. பட குழுவுக்கு வாழ்த்துக்கள்
