கிரிக்கெட் உலகின் ஜாம்பவான் வீரரான முத்தையா முரளிதரனின் பயோபிக் ‘800’ என்ற பெயரில் உருவாகி உள்ளது. ஸ்லம்டாக் மில்லியனர் படத்தில் வில்லனாக நடித்த மதுர் மிட்டல் இந்த படத்தில் முரளிதரன் வேடத்தில் நடித்துள்ளார் செம கச்சிதமாக இருக்கிறது வாழ்த்துக்கள்
இந்த படத்தின் ஷூட்டிங் 90/ சதவீதம் இலங்கையில் நடத்தி உள்ளார் கள். படத்தில் முக்கிய வேடத்தில் மகிமா நம்பியார், நரேன், நாசர், வேல ராமமூர்த்தி, ரித்விகா, வடிவுக்கரசி, அருள் தாஸ் ஆகியோர் நடிக்க இயக்குனர் ஸ்ரீபதி இயக்கியுள்ளார். ஜிப்ரான் இசையமைத்துள்ளார
முரளிதரனின் பாட்டி அம்மா ‘அப்பா மனைவி என உறவுகள் மற்றும் அவரின் கிரிக்கெட் வாழ்க்கை. புலிகள் உடன் என்ன கருத்து வேறுபாடு, இலங்கை கிரிக்கெட் அணியில் சேர எவ்வளவு தடைகள், சோதனை, பந்து வீச்சு எரிவதாக அம்பயர் குற்றச்சாட்டு இப்படி பல விதமான விஷயங்கள் பேசும் படம் “800”
முரளியின் குடும்பம், குடும்ப உறவுகளில் நெருக்கமாக பிணைந்து ஒன்றுபட்டுள்ளது அதுவும் இப்படத்தில் காட்டப்படுகிறது
முரளிதரன் மார்ச் 21, 2005 அன்று சென்னையினைச் சேர்ந்த மதிமலர் ராமமூர்த்தி என்பவரை மணந்தார் . இந்த கதாபாத்திரத்தில் மகிமா நம்பியார் ஓரிரு காட்சிகள் வந்தாலும் சிறப்பாக நடித்திருக்கிறார். அதுவும் இந்த படத்தின் மையமாக காட்டப்படுகிறது.
இவர் மறைந்த டாக்டர் எஸ்.ராமமூர்த்தி மற்றும் இவரது மனைவி டாக்டர் நித்யா ராமமூர்த்தி ஆகியோரின் மகள் அந்த திருமணக் காட்சியில் முத்தையா முரளிதரன் குஷியில் ஆடுவதை போல் ஒரு காட்சியில் செமையாக நடித்திருக்கிறார் நாயகன் மதுர்மிட்டல்
முத்தையா முரளிதரன் இந்தியாவின் வெளிநாட்டு குடியுரிமை (OCI) வைத்திருக்கிறார் மேலும் இவருக்கு இந்தியாவிற்கு பயணம் செய்ய நுழைவுச் சீட்டு தேவையில்லை. என்பது போல இவரது கிரிக்கெட் பயணம் ஆஸ்திரேலியாவிலும் இங்கிலாந்திலும் இந்தியாவிலும் நடப்பது போல காட்டப்படுகிறது.
முரளிதரன் குடும்பம் இந்தியாவில் இருந்துதான் வந்துள்ளதாக கதை ஆரம்பிக்கிறது: தமிழகத்தில் இருந்து தேயிலைத் தோட்டக் கூலியாளர்களாக இலங்கைக்குக் குடிபெயர்ந்த ஒரு சமூகத்திலிருந்து வந்த முரளிதரன் எப்படி பல தடைகளைத் தாண்டி உலக அளவில் சிறந்த பந்து வீச்சாளராக உயர்ந்தார் என்பது தான் இத்திரைப்படத்தின் கதையம்சம். இத்திரைப்படம் இளைய சமுதாயத்துக்கும் வருங்கால விளையாட்டு வீரர்களுக்கும் தங்கள் வாழ்க்கைப் பயணத்தில் எவ்வளவு தடைகள் வந்தாலும் தடைகளைக் கடந்து சாதிக்க முடியும் என்கிற நம்பிக்கையை ஏற்படுத்தும் படமாக இருக்கும்.
இத்திரைப்படத்தில் ஈழத்தமிழர்களின் போராட்டத்தை சிறுமைப்படுத்தும் விதத்திலான காட்சியமைப்புகள் கிடையாது. கூடுதலாக இத்திரைப்படத்தில் இலங்கையைச் சேர்ந்த பல தமிழ் திரைத்துறை கலைஞர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் பங்குபெற்ற இருக்கின்றனர். அதனால் இப்படம் மூலம் இலங்கை தமிழ் திரைத்துறை கலைஞர்களுக்கு தங்கள் திறமையை உலக அரங்கில் வெளிக் காட்ட இந்த படம் நிச்சயமாக ஒரு அடித்தளமிட்டுள்ளது.
கலைக்கும் கலைஞர்களுக்கும் எல்லைகள் கிடையாது . எல்லைகளைக் கடந்து மக்களையும் மனிதத்தையும் இணைப்பது தான் கலை. அன்பையும் நம்பிக்கையும் மட்டுமே விதைத்து உள்ளது இப்படம்
:
இயக்குநர் வெங்கட்பிரபுவிடம் அசோசியேட் இயக்குநராக இருந்தவரும், ‘கனிமொழி’ (2010) படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவருமான ஸ்ரீபதி, ‘800’ படத்தின் மூலம் மீண்டும் இயக்கத்திற்கு திரும்பி உள்ளார். ஸ்ரீபதியின் இயக்கம் படத்திற்கு மிகப்பெரிய பலமாக இருக்கிறது அற்புதமான இயக்கம் ஒரு படத்தை எவ்வளவு கமர்சியலாக சொல்ல முடியுமோ அதே சமயம் கருத்தாலமிக்க படமாக சொல்ல முடியுமோ எல்லாம் கலந்து அற்புதமான
படைப்பை தந்திருக்கிறார் இயக்குனர்.
தமிழில் எடுத்துள்ள இப்படத்தை இந்தி, வங்காளம், சிங்களம் என டப்பிங் செய்யது வெளியிடப்பட்டது. உண்மையில் இந்த படம் தான் ஃபான் இந்திய படம்
இந்த படத்தில் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள், இலங்கைத் தமிழர்கள், பலரும் நடித்துள்ளனர்.
நாசர் நடிப்பு சிறப்பாக இருக்கிறது முழு படத்தையும் அவரே சொல்வது போல முத்தையா முரளிதரன் பக்கம் எவ்வளவு நியாயம் இருக்கிறது வலிகள் இரண்டு பக்கமும் இருக்கிறது என்பது போல காட்சி அமைக்கப்பட்டிருக்கிறது அவருடைய மகன் குண்டுவெடிப்பில் கால்களை இழந்து தன்னம்பிக்கையோடு வாழ்வது போல் காட்சி அளிக்கப்பட்டு இருக்கிறது இதில் எந்த சமரசமும் இல்லாமல் திரைக்கதை எழுதியிருக்கிறார் இயக்குனர். படத்தின் ஹைலைட்ஸ் காட்சிகள் நிறைய இருக்கிறது மாஸ்டர் என்று சொல்லப்படும் நிறையுடன் முத்தையா முரளிதரன் சந்திக்கும் காட்சியில் அவ்வளவு எதார்த்தமாக எடுத்திருக்கிறார்
மாஸ்டரிடம் முத்தையா முரளிதரன் இளைஞர்கள் மருத்துவராக வழக்கறிஞராக இன்ஜினியராக வர வேண்டியவர்கள் அவளிடம் எதற்கு ஆயுதம் கொடுக்கிறீர்கள் என்று கேட்கிறார் அதற்கு மாஸ்டர் இந்த கேள்விக்கு என் தம்பிகளே பதில் சொல்வார்கள் என்று தம்பிகளை பதில் சொல்ல வைக்கிறார்கள் அந்த தம்பிகள் என்னுடைய அக்கா தங்கைகளை கற்பழித்தவர்களை ஆயுதம் எடுக்க வைத்தது என்று சொல்வது திரையரங்கில் கைதட்டல்
அதேபோல் இன்னொரு கேள்விக்கு எதற்கு அடிக்கிறீர்கள் என்று முத்தையா அவர்களிடம் கேட்க அடிப்பவரை போல் கேளுங்கள் நாங்கள் திருப்பி அடிப்பவர்கள் எங்களிடம் கேட்காதீர்கள் என்று சொல்ல அந்த காட்சியை அந்த வசனத்திற்கும் கைதட்டல்
முத்தையா முரளிதரன் அவர் மனைவி மதிய மலரும் விமான நிலையத்திலிருந்து வெளியே வரும் போது நிருபர்கள் கேள்வி கேட்கிறார்கள் நீங்கள் இந்தியா இலங்கை கிரிக்கெட் விளையாட்டின் போது யாருக்கு ஆதரவு கொடுப்பீர்கள் என்று அதற்கு முத்தையா முரளிதரன் மனைவி சோகமாக வெளியே வந்து பீல் செய்ய முத்தையா முரளிதரன் அவரை தட்டிக் கொடுத்து நீ ஆசிரியரை கூட ஆதரவு கொடு அது போதும் அது கவலை இல்லை என்கிறார் இந்த காட்சிகள் நெகிழ வைத்தது
அதேபோல சிங்களவர்கள் வந்து பயிற்சி கூட்டத்தில் வந்து தமிழர்களை வெளியே போக சொல்ல அப்பொழுது முத்தையா முரளிதரன் ஒரு கேள்வி வைக்கப்படுகிறது தமிழனா என்று அதற்கு அவர் சொல்கிறார் நான் இரண்டும் இல்லை ஒரு கிரிக்கெட்டர் என்று அந்த வசனம் கச்சிதமாக இருக்கிறது
பயிற்சியின் போது ஒவ்வொரு தடவையும் அவருக்கு ஏற்படும் சோதனையும் வலியும் படம் பார்க்கும் நமக்கும் ஏற்படுகிறது அது நடித்திருக்கும் அந்த நடிகருக்கும் இயக்குனருக்கும் எப்படி படத்தை ரசிகர்களிடம் கடத்திச் செல்வது என்பதை புரிந்து கொடுத்திருக்கிறார்கள் வாழ்த்துக்கள்
படத்தின் உயிர்நாடி சுப்ரனின் இசைதான் அந்த அளவுக்கு ஒவ்வொரு காட்சிக்கும் கஷ்டப்பட்டு உழைத்திருக்கிறார் இசை பின்னணி இசை படத்தின் மிகப்பெரிய பலம் ஜிப்ரனுக்கு வாழ்த்துக்கள்
ஒளிப்பதிவு யுத்த களத்தையும் வெளிநாடுகளில் நடக்கும் படப்பிடிப்பையும் அருமையாக படம் ம் பிடித்திருக்கிறார்
இலங்கை வீரர்கள் பாகிஸ்தானில் விளையாட போன போது அங்கே நடந்த துப்பாக்கி சூட்டையும் மிகப் படுத்தாமல் காட்டி இருக்கிறார்கள்
இப்படி படம் முழுக்க எந்த வகையிலும் முத்தையா முரளிதரனுக்கு ஆதரவாக காட்சிகளை வைக்காமல் நடந்தது என்னவோ அதையே உண்மை சம்பவமாக காட்டியிருப்பதால் இந்த படத்தின் மீது மிகப்பெரிய ஒரு மரியாதை ஏற்படுகிறது முத்தையா முரளிதரன் வாழ்க்கையில் நடந்த கசப்பான உணர்வுகளை புரிந்து கொள்ள முடிகிறது அவரின் குடும்பமே கிரிக்கெட்டுக்கு ஆதரவாக இல்லை என்றாலும் பாட்டி ஆதரவாக இருக்கிறார் அது ஒரு பெரிய பலம்
அர்ஜுனன் ரணதுங்க வாக நடித்த வரின் நடிப்பு சிறப்பாக இருக்கிறது மொத்தத்தில் இந்த பயோ ரசிக்க வைக்கிறது உருக வைக்கிறது நெகிழ வைக்கிறது எதார்த்தங்களை புரிய வைக்கிறது படம் பார்த்துவிட்டு வெளியே வரும் போது மனம் கலங்க வைக்கிறது அந்த எண்ணுராவது விக்கெட்டை விக்கெட்டை எடுக்கும் போது கிரிக்கெட் மைதானமே ஆரவாரம் செய்கிறது சக தோழர்கள் தூக்கி கொண்டாடுகிறார்கள் அதுபோல நாமும் இந்த படத்தை கொண்டாடுவோம்
மதுர் மிட்டல் நடிப்புக்கு ஸ்ரீபதியின் இயக்கத்துக்கு தயாரிப்புக்கு இசைக்கு ஏதாவது ஒரு வகையில் ஆஸ்கார் விருது காத்திருக்கிறது
முத்தையா முரளிதரனின் வாழ்க்கையில் அவரை துரத்திக் கொண்டே இருக்கும் ஒரு கேள்வி அவர் யார் என்கிற அடையாளம் தான்.
கிரிக்கெட் மைதானத்திற்கு வெளியே அவர் தன்னை ஒரு சிங்களர் என்றா இல்லை தமிழரா எப்படி வெளிப்படுத்துகிறார்
இந்த கேள்விகளுக்கு எல்லாம் பதில் அளிக்க முயற்சி செய்திருக்கிறது . டைட்டில் கிரெடிட் ஓடும்போதே கிரிக்கெட்டின் வரலாறு, ஆங்கிலேயர்களால் இலங்கைக்கு கொத்தடிமைகளாக அழைத்துச் செல்லப்பட்ட தமிழ் மக்களுக்கு கிரிக்கெட் எப்படி உதவுகிறது என்பதை விளக்கியிருக்கிறார்கள்.
முத்தையா முரளிதரனின் வாழ்க்கையை அப்படியே படமாக்கியிருக்கிறார் இயக்குநர். சிறுவனாக இருந்தபோதே முத்தையாவுக்கு கிரிக்கெட் மீது ஆர்வம் ஏற்பட்டது, இலங்கையில் இருந்த தமிழர்களின் உயிருக்கு ஆபத்து ஏற்படுத்திய 1977ம் ஆண்டு நடந்த பிரச்சனைக்கு பிறகு கிரிக்கெட் மீதான ஆசையால் அவர் உறைவிட பள்ளிக்கு சென்றது, பள்ளி, கல்லூரியில் முத்தையா சாதித்தது, இங்கிலாந்தில் அறிமுகமான தொடரில் அதிருப்தி அளித்தது, மீண்டு வந்தது, உலகக் கோப்பை வெற்றி, சட்டவிரோதமாக பந்தை வீசுவதாக எழுந்த சர்ச்சை, டெஸ்ட் போட்டிகளில் அதிக விக்கெட்டுகளை எடுத்தது, பாகிஸ்தான் டூரில் இலங்கை அணி சென்ற பேருந்து மீது நடந்த தாக்குதல், இறுதி போட்டியில் 800 டெஸ்ட் விக்கெட்டுகள் என்கிற சாதனை படைத்ததை காட்டியிருக்கிறார்கள்.
இரண்டாம் பாதியில் ஈழப் போராளிகளின் தலைவரை முத்தையா முரளிதரன் சந்திப்பதை காட்டுகிறார்கள். மாஸ்டர் என்று அழைக்கப்படும் அந்த தலைவராக நடித்திருக்கிறார் நரேன். எல்.டி.டி.இ. தலைவர் பிரபாகரனை மாஸ்டர் என்று தான் அழைத்தார்கள். அந்த சந்திப்பு தான் டென்ஷனே. தன் தாய் மண்ணாக பார்க்கும் நாட்டில் அமைதி நிலவ வேண்டும் என விரும்பும் ஒருவர். மற்றொருவரோ தன் ஆயுத போராட்டத்தால் தான் தன் மக்கள் பாதுகாப்பாக இருக்கிறார்கள் என நம்புகிறார். இப்படி வெவ்வேறு கருத்து உடையவர்கள் சந்திக்கிறார்கள். இப்படி 800 படம் பல கேள்விகளை எழுப்பி முத்தையா முரளிதரன் கிரிக்கெட்டர் மட்டுமே மைதானத்தில் மட்டுமே சிறந்த வீரர் என்ற பதிலை சொல்லி படம் நிறைவு பெறுகிறது மொத்த டீமுக்கும் வாழ்த்துக்கள்
