ரத்தம் விமர்சனம

விஜய் ஆண்டனிநடிப்பில் இயக்குநர் சி எஸ் அமுதன் இயக்கி வெளிவந்தl ரத்தம் படம் எப்படி இருக்கு வாங்க பார்க்கலாம்

இப் ப்படத்தில் கதை, நடிகர்கள், இயக்கம், ஒளிப்பதிவு, எடிட்டிங், இசை, தரமாக வந்து உள்ளது

Infiniti Film Ventures நிறுவனம் சார்பில் தயாரிக்கபட்ட. இந்த படத்தில் விஜய் ஆண்டனி, மஹிமா நம்பியார், நந்திதா, ரம்யா நம்பீசன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள்

கண்ணன் நாராயணன் இசையில் இந்த திரைப்படத்தின் பாடல்கள் அனைத்தும் வேற லெவலுக்கு இருக்கிறது
பின்னணி இசையும் மிரட்டலாக இருந்தது: இந்த ரத்தம் திரைப்படம் முற்றிலும் வித்தியாசமான கதைகளம் கொண்ட படமாக வந்து உள்ளது ஊடகவியலாளர்கள் என்னென்ன கஷ்டங்களை அனுபவிக்கிறார்கள் என்றும் முழுக்க முழுக்க பத்திரிக்கையாளர்கள் பெருமைப்படும் அளவிற்கு இந்தப் படம் அமைந்துள்ளது

கிரைம் த்ரில்லர் கதைக்களத்தில் உருவாகியுள்ள உள்ள ரத்தம் படத்தில் பெரும்பாலான சூழ்நிலைகள், திருப்பங்களும் கணிக்க முடியாதவை.

தற்போதைய அரசியல் சூழ்நிலையில் நடக்கும் சம்பவங்களையே இயக்குனர் அமுதன் படத்தில் வைத்துள்ளதால் குற்றங்கள் மிகவும் தொடர்பு படுத்த முடிகிறது.

படத்தில் விஜய் ஆண்டனி அருமையாக நடித்துள்ளார். அவரின் நடிப்பு மிகவும் இயல்பாகவும் செயற்கை தனம் இல்லாமல்

மனைவி இழந்து ஒரு குழந்தையை காப்பாற்றும் குடும்ப தலைவனாக மனைவி இழந்த இழப்பை தாங்க முடியாமல் மதுவுக்கு அடிமையாகி அள்ளல் படும் கதாபாத்திரத்தில் நன்றாக நடித்திருக்கிறார் அதன் பிறகு இன்வெஸ்டிகேஷன் ஜர்னலீஸ்டாக களத்தில் இறங்கி வானம் பத்திரிகையின் சீப் எடிட்டரை கொன்றது யார் என்று கண்டுபிடிக்கும் மூளை திறன் மிக்க ஹீரோவாக வலம் வருகிறார் ஆரம்பத்தில் மெல்ல மெல்ல நகரும் கதை கல்கத்தாவில் தள்ளாடும் கதை சென்னை வந்தவுடன் ரெக்க கட்டி பறக்கிறது
இந்த கொலைகள் யார் செய்கிறார்கள் இதை ஆட்டி வைப்பது யார் அவர்கள் மோட்டிவேஷன் என்ன ஜாதி மதத்துக்காக கொலை செய்கிறார்களா சினிமா நடிகர்களுக்காக கொலை செய்கிறார்களா இதெல்லாம் எப்படி சாத்தியம்
ஒரு குழுவாக வைத்து இதை இயக்குவது யார் என டெக்னாலஜி மூலம் அதை கண்டுபிடிப்பது புத்திசாலித்தனம்

படம் இன்வெஸ்டிகேஷன் செய்ய செய்ய நாமும் அதற்குள் நுழைந்து விடுகிறோம் ஒவ்வொரு விஷயமாக விஜய் ஆண்டனி கண்டுபிடிக்க சபாஷ் போட வைக்கிறது மகிமை நம்பியார் வந்த பிறகு இன்னும் கதையில் விறுவிறுப்பு அவர் யார் அவர் சுற்றுலா துறை ஆபிஸ் நடத்தி வருகிறார் அதன் பின்னணி என்ன என்ற கோணத்தில் கதையை அணுகி இருக்கிறார்கள்
அவர் மீது பரிதாபம் தான் ஏற்படுகிறது அதன் பிறகு ரம்யா நம்பீசன் கணவனை இழந்த மனைவியாக வந்து அவர் சொல்லும் உருக்கமான கதையில் நம் மனதும் பரிதாபப்பட வைக்கிறது

ரம்யா நம்பீசன் மீது விஜய் அஆண்டனி தப்பான கண்ணோட்டத்தில் அணுக கதை இந்த கோணத்தில் போகிறதோ என்று யோசிக்கும் போது இயக்குனர் அப்படி எல்லாம் இல்லை இது வேற கோணம் என்று கதையை திருப்பி விடுகிறார் .
விஜய் ஆண்டனி ஆரம்பக் காட்சிகளில் குதிரை மேய்ப்பவராக வருகிறார் அது இறுதிக் காட்சிக்கு எவ்வளவு பொருத்தமாக ஒத்துப் போகிறது என்பது இயக்குனரின் புத்திசாலித்தனம் அவர் மதுவுக்கு அடிமையானவராக வருகிறார் ஆனால் அந்த மது கடை தான் கதையின் மிக திருப்பமாக அமைகிறது

விஜய் ஆண்டனி இந்த படத்திலும் அவரின் சோகக் காட்சிகள் அதிகமாக இருந்தாலும் ததுரூபமாக நடித்தி ருக்கிறார்

விஜய் ஆண்டனியின் கைகட்டு இடைவேளை வரை வந்தாலும் அந்த இடைவேளை காட்சியின் போது கைக்கட்டுகளை அவர் அவிழ்க்க இனி மர்மம் முடிச்சுகளை அழிக்கப் போகிறார் என்று உதாரணப்படுத்தி இருக்கிறார் இயக்குனர்.

அழகு பதுமைகளாக மகிமா நம்பியார் நந்திதா
ரம்யா நம்பீசன் படத்திற்கு செம பொருத்தமாக இருக்கிறது.

அதுவும் கிளைமாக்ஸ் காட்சியில் விஜய் ஆண்டனி உடன் நடத்தும் அந்த யுத்தத்தில் யார் ஜெயிப்பார்கள் என்று போராட்டம் ரசிக்க வைக்கிறது விறுவிறுப்பாக போகிறது படத்தை தரமான படம் என்று சொல்ல வைக்கிறது எல்லா கோணங்களும் சிறப்பாக இருக்கிறது படத்தொகுப்பு கச்சிதமாக இருக்கிறது ஆரம்பத்தில் சில காட்சிகள் லாஜிக் மீறலாக இருக்கிறது சின்ன சின்ன குறைகள் இருந்தாலும் நிறைவான படம் பார்த்து திருப்தி ஏற்படுகிறது வெற்றிக்காக எல்லா அம்சங்களையும் பார்த்து பார்த்து செதுக்கி இருக்கிறார்கள். ரத்தம் புது விதமான கண்ணோட்டத்தில் புதுவிதமான சிந்தனையில் புதிய முயற்சியில் இப்படி எல்லாம் நடக்கிறதா என யோசிக்க வைக்கிறது.

அரசியல்வாதிகள் பத்திரிகைகளைஎப்படி பயன்படுத்துகிறார்கள் என்பதையும் இந்த படம் சொல்கிறது மத்திய மந்திரியிலிருந்து போலீஸ் துறையில் உயர்அதிகாரிகள் வரை எல்லாருமே பணத்துக்காக தான் நாடு எங்கே போகிறது ? என்ற கேள்வியும் எழுகிறது முழு கதையும் சொல்ல முடியாத சூழ்நிலையால் ஒன்றை மட்டுமே சொல்லுகிறோம் இந்த படம் துப்பறியும் நாவல் படிப்பது போல் இருக்கிறது விஜய் ஆண்டனியின் மகளாக வரும் மானசியின் நடிப்பு நன்றாக இருக்கிறது மொத்தத்தில் இந்த ரத்தம் சிந்திக்க வைக்கிறது ரசிக்க வைக்கிறது விறுவிறுப்பாக போகிறது
தமிழ் படம் இயக்கிய முற்றிலும் புதிய கோணத்தில்
படத்தை இயக்கிய தெற்கு பாராட்டுக்கள்.

படம்
பார்த்துவிட்டு வெளியே வரும் ரசிகர்களுக்கு 100 சதவீதம் நல்ல படத்தை பார்த்த திருப்தி தரும். ஏனென்றால் இதில் வரும் ஒவ்வொரு கதாபாத்திரமும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கிறது. விஜய் ஆண்டனி நடிப்பு திரைக்கதை இயக்கமும் மகிமா நம்பியாரின் நடிப்பும் இந்த படத்திற்கு மிகப்பெரிய பலமாக அமைந்திருக்கிறது

போலீசால் சாதிக்க முடியாததை பத்திரிக்கை யாளர்
சாதிக்கலாம் என்ற தன்னம்பிக்கை பத்திரிகையாளர்களுக்கு உணர்த்துகிறது இதை பார்க்கும் பத்திரிகையாளர்கள் நிச்சயம் காலரை தூக்கி விட்டுக் கொள்ளலாம்